Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 25, 2024
Please specify the group
Home > Featured > சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

print

சிவபுண்ணியக் கதைகள் இத்துடன் 15 வது அத்தியாயத்தை எட்டிவிட்டது. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நேற்று ஆரம்பித்தது போலிருக்கிறது. நம் தளத்திற்கு நாம் எழுதும் பதிவுகள் ஒவ்வொன்றையுமே ஒரு வேள்வி போலக் கருதி எழுதி தயாரித்து வந்தாலும் சிவபுண்ணியக் கதைகள் எனும்போது அது ஒரு தவமாகவே மாறிவிடுகிறது. மேலோட்டமாக இந்தக் கதைகளை கூறாமல் ஒரு வரலாற்று சான்றேனும் கூறவேண்டும் என்று ஒரு உறுதி பூண்டுள்ளோம். இந்தக் கதைகள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் நடந்தவை. அதாவது பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர். அக்கால மனித தர்மங்கள் வாழ்வியல் முறைகள் இவை முற்றிலும் வேறுபட்டவை என்பது நீங்கள் அறிந்ததே.

இந்தக் கதைகளை உங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதியச் செய்யவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமான ஓவியம் அளிக்கவேண்டியது அவசியம். எனவே இந்த அத்தியாயத்திலும் நமது தளத்தின் ஓவியரைக் கொண்டு பிரத்யேக வண்ண ஓவியம் ஒன்றை வரைந்து தந்திருக்கிறோம்.

பொதுவாக ரிஷிகள் அளிக்கும் சாபத்திற்கு விமோச்சனங்களை அவர்களாக சொன்னால் தான் உண்டு. வேறு யாராலும் எதனாலும் அவற்றை போக்க முடியாது – சிவபுண்ணியம் ஒன்றை தவிர. அந்தளவு மகத்துவம் மிக்கது சிவபுண்ணியம். பெட்டியிலும் பீரோக்களிலும் சேர்க்கும் பணம் கூட ஒரு கட்டத்தில் செல்லாக்காசாகி விடுவதை இன்று பார்க்கிறோம். ஆனால், சிவபுண்ணியம் இவ்வுலகில் மட்டுமல்ல எவ்வுலகிலும் செல்லுபடியாகத்தக்க ஒன்று. எனவே பொருளைத் தேடி ஓடும் நேரத்தில் இடையே அவன் அருளைத் தேடியும் ஓடுவோம். சிவபுண்ணியத்தை நம் தலைமுறைக்கு சேர்ப்போம். மெய்ப்பொருள் இது ஒன்றே.

இந்த சிவபுண்ணியக் கதைகளின் ஊடே திருமுறைகளில் இருந்து சில பாடல் வரிகளை அளித்துள்ளோம். அவற்றை அவசியம் படிக்கவேண்டும். சிவபுண்ணியக் கதையின் முக்கிய அம்சம் அப்பாடல்கள் உங்கள் உதடுகள் உச்சரிப்பது தான்.

அடுத்த அத்தியாயத்தில் ஈசனருளால் மேலும் ஒரு அற்புதமான கதையோடு சந்திப்போம்.

இத்தளத்திற்கு புதிதாய் வரும் வாசக அன்பர்கள் தளத்தின் பணிகளில் உதவவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விபரங்கள் இறுதியில் தரப்பட்டுள்ளன.

ஓம் நமச்சிவாய!

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை!

கோசல நாட்டை சேர்ந்த அஜன் என்னும் அரசன் தனது நான்கு புத்திரிகளுக்கு தகுந்த வரனை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வெகு விமரிசையாக சுயம்வரம் நடத்தினான். திருமணம் முடிந்ததும் தனது மகள்களையும் மருமகன்களையும் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள், சைன்யங்கள், ஆடை ஆபரணங்கள் இவற்றோடு ஒரு ஊர்வலமாக வழியனுப்பி வைத்தான். இதையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

அவர்கள் சென்ற அந்த ஊர்வலத்தில் நாட்டுபுற கலைஞர்கள் அரண்மனை வாத்தியக்காரர்கள் என பலர் பல்வேறு வாத்தியக் கருவிகள் இசைத்தபடி சென்றனர். எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் ஒரே கொண்டாட்டம் தான்.

sivalayam

நான்கு இளவரசிகளும் அவர்கள் கணவன்மார்களும் இவ்விதமாக கூடி சிரித்துப் பேசிக்கொண்டு தாங்கள் புதுவாழ்க்கை துவங்கப்போவதைப் பற்றியும் வேறு பல விஷயங்களைப் பற்றியும் விவாதித்துக்கொண்டும் தேர்களில் சென்றுகொண்டிருந்தார்கள்.

அப்போது பிரம்மரிஷி என்றழைக்கப்படும் விஸ்வாமித்ர மகரிஷி எதிரே வந்தார். உடனே நான்கு இளவரசர்களையும் அவர்கள் பெயர் கூறி அழைத்தார். நான்கு மாப்பிள்ளைகளும் ஒருவித குதூகலமான மனநிலையில் இருந்தபடியால் இவர் கூப்பிட்டதை கவனிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார். ஹூம்… ஹூம்…  பலனில்லை. வாத்தியங்களின் இரைச்சல் வேறு. ஒன்றும் கேட்கவில்லை.

வரலாற்று தகவல் : கோசல நாடு என்பது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த ஒரு பகுதியாகும். இதன் தலைநகரம் அயோத்தி ஆகும். கோசல நாட்டு மன்னர்கள் சூரிய குலத்தின் மன்னர் இச்வாகுவின்வழித்தோன்றல்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர்கள் தசரதன், இராமன், இலக்குவன், பரதன் ஆவர். இப் பிரதேசம் இன்றைய இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள ‘அவாத்’ பிரதேசத்தில் அமைந்திருந்தது.

வெகுண்டெழுந்தார் விஸ்வாமித்திரர். “என்ன ஆணவம்… மங்கல வாழ்வு தந்த மமதையில் என்னை அவமதிக்கிறீர்களா? உங்களைத் தவிர இந்த நாடும் சைன்யங்களும் திரவியங்களும் அனைத்தும் இக்கணமே எரிந்து சாம்பலாகட்டும்” என்று சபித்துவிடுகிறார்.

அரசகுமாரிகளும் அவர்களின் கணவன்மார்களும் அஞ்சி நடுங்கினர். செய்வதறியாது திகைத்தனர்.

“என்னை கவனிக்காமலும் என் அழைப்பை செவிமெடுக்காமலும் இருந்தபடியால் நீங்கள் நால்வரும் உடனே கண், காது, வாய் உள்ளிட்ட புலன்கள் செயலிழந்து கானகத்தில் அலைந்து திரிவீர்களாக. உங்கள் மனைவியரோடு கூடிக் குலவ நீங்கள் துணிந்தால் அக்கணமே உங்கள் தலைவெடித்துச் சிதறிவிடும்….” என்று சபித்துவிட்டு ஒருக் கணம் கூட நில்லாமல் உடனே அங்கிருந்து போய்விட்டார்.

விஸ்வாமித்திரரின் சாபம் உடனே பலித்தது. இவர்கள் எட்டுபேரைத் தவிர நாடு நகரம் சைன்யங்கள் உட்பட அனைத்தும் ஒரு கணத்தில் தீப்பற்றி எரிந்து பஸ்பமானது.

இவர்களுக்கும் கண் பார்வை பறிபோய், காதுகள் கேட்கும் தன்மையற்றுப் போயின. வாயினின்று பேச்சு வரவில்லை. அரச வாழ்வு அடியோடு பறிபோனது. வாழ்க்கை ஒரு நொடியில் தலைகீழானது. விதியை நொந்தபடி தங்கள் மனைவிகளோடு காட்டில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். சுகபோகங்களில் திளைக்கவேண்டியவர்கள் ஆதிவாசிகள் போல காட்டில் கிடைத்ததை உண்டு காலத்தை கழித்து வந்தார்கள்.

இப்படியே இவர்கள் காலம் சென்றுகொண்டிருந்த தருணத்தில் இவர்களின் நல்வினைப் பயனாக ஒரு நாள் அகஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டவுடன் அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, கைகூப்பி நின்றார்கள். கண்களில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடியது. பேச நா எழவில்லை.

நடந்த அனைத்தையும் தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்த அகஸ்தியப் பெருமான் அவர்கள் மீது இரக்கப்பட்டு தனது கமண்டலத்திலிருந்து சிறிது நீரை எடுத்து உமாமகேஸ்வரனை மனதுக்குள் ஜபித்து அவர்கள் மீது தெளித்தார். பின்னர் அவர்களை நோக்கி, “இந்த சாபத்திலிருந்து உங்களை விடுவிக்க வல்லமை கொண்டது…….

==========================================================

Don’t miss these articles :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

==========================================================

சிவபுண்ணியம் ஒன்றே ஆகும். சிவபுண்ணியச் செயலில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக்கொண்டால் சகல சௌபாக்கியங்களும் கைகூடி, இழந்தவை அனைத்தும் மீண்டும் உங்களுக்கு பன்மடங்கு கிடைக்கும். இறுதியில் சிவப்பதமும் கிடைக்கும். உலகில் வாழும் உயிர்கள் நற்கதியை பெற விரும்பினால் அதற்கு ஒரே வழி சிவபுண்ணியம் ஈட்டுவதே ஆகும். இதை உங்களுக்கு விளக்கும் விதமாக ஒரு கதை சொல்கிறேன்” என்று கூறி சிவபுண்ணியக் கதை ஒன்றை கூறத் தொடங்கினார்.

குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
-திருநாவுக்கரசர் (ஐந்தாம் திருமுறை)

இழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம்!

கீசகபுரம் என்றொரு நாட்டில் சாதாரணன் என்கிற மன்னன் ஒருவன் இருந்தான். சுகபோகங்களில் மிகுந்த நாட்டம் கொண்ட அவன் எப்போதும் தனது மனைவியோடு கூடியிருப்பதையே பெரிதும் விரும்புவான்.

ஒரு நாள் வசிஷ்ட மகரிஷி அவனை காண வந்தார். இவன் அந்தப்புரத்தில் இருந்தபடியால் உடனே வரமுடியவில்லை. அவர் இதன் பொருட்டு சில நாழிகைகள் காக்க நேர்ந்தது. பின்னர் அந்தப்புரத்திலிருந்து வெளியே வந்தவன் வசிஷ்டரைக் கண்டவுடன் அவரை வணங்கி நின்றார்.

கட்டுக்கடங்காத கோபத்துடன் இருந்த வசிஷ்டர் “அடேய் மூடனே இங்கே நான் உனக்காக காத்திருக்க, நீயோ உன் மனைவியுடன் கூடிக்களித்துக்கொண்டிருக்கிறாய்.. இந்தக் கணமே நீயம் உன் மனைவியும் காட்டில் வேடர்களாக அலைவீர்களாக. இந்நகரம் காடாகவும், இந்நகர மக்கள் காட்டில் திரியும் கொடிய மிருகங்களாவும் மாறக் கடவது” என்று சபித்துவிட்டு போய்விட்டார்.

அடுத்தநொடி வசிஷ்டரின் சாபத்தின் காரணமாக அந்நாடும் அம்மக்களும் அடர்ந்த காடாகவும் அதில் வசிக்கும் மிருகங்களாகவும் மாறினர். இவர்கள் வேடுவத் தம்பதிகளின் உருவம் எய்தினர்.

தம்பதிகள் இருவரும் கணநேரத்தில் நடந்ததை எண்ணி வருந்தியபடி காட்டில் அலைந்து திரிந்து தங்கள் நாட்களை கழித்து வந்தனர். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் திருணபிந்து என்னும் முனிவரை கண்டனர்.

அவரைக் கண்டவுடன் அவரது பாதம் பணிந்து அவருக்கு வேண்டிய நீர், காய், கனிகள் முதலியவற்றை கொடுத்து உபசரித்தனர்.

அவரிடம் தங்களுக்கு நடந்த துயரத்தை கண்ணீர் மல்க கூறி, தாங்கள் உய்யும் வழியை கேட்டனர்.

திருணபிந்து முனிவர் அவர்கள் கூறியதைப் பொறுமையாக கேட்டுக்கொண்டார். பின்னர் பேசலானார்… “உங்களை இந்த சாபத்திலிருந்து மீட்கவல்லது சிவபுண்ணியம் ஒன்றே ஆகும். இங்கே அருகே சிவாலயம் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“இருக்கிறது சுவாமி. இங்கே அருகே ப்ரும்மேஸ்வரம் என்னும் ஒரு ஆலயம் இருக்கிறது”

“நீங்கள் பாக்கியசாலிகள்… சிவபுண்ணியம் ஈட்டவேண்டும் என்றாலும் அதற்கும் ப்ராப்தம் வேண்டும். இந்த ஆலயத்தில் தங்கி, அதை தினசரி துப்புரவு செய்து, இங்கு முளைத்திருக்கும் புல், பூண்டு, படர்ந்திருக்கும் செடி கொடி முதலானவற்றை அகற்றி, இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமியையும் அம்பாளையும் தினசரி வலம்வந்து வணங்கி வாருங்கள். உங்களுக்கு விரைவில் நல்வழி பிறக்கும்!” என்று ஆசி கூறிவிட்டு சென்றார்.

sivapunniyam-by-king

வேட்டுவத் தம்பதிகளாக மாறியிருக்கும் அந்த அரசத் தம்பதிகள் அன்று முதல் அம்முனிவர் சொன்னபடியே செய்து வந்தார்கள்.

இருவரும் காலை எழுந்து அருகே உள்ள ஓடையில் நீராடி, நீரைக் கொண்டு வந்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து காட்டில் கிடைத்த மலர் வகைகளை கொண்டு அவர்களுக்கு தெரிந்த அலங்காரங்களை செய்து அர்ச்சனைகள் செய்து வந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் அந்தக் கோவிலில் பணி செய்தார்கள்.

கணவன் மண்வெட்டியுடன் செடி கொடிகளை அகற்றும் பணி செய்ய, அவன் பத்தினியானவள் எங்கோ அலைந்து திரிந்து பசுஞ்சாணம் கொண்டு வந்து அதைக் கரைத்து நீர் தெளித்து கோவிலின் வாயிலை மெழுகினாள். இப்படியாக இவர்களின் சிவப்பணி சுமார் பதினோரு நாட்கள் தொடர்ந்தது.

பதினோரு நாட்கள் கழிந்ததும் இவர்கள் சேர்த்துக்கொண்டிருந்த சிவபுண்ணியமானது மலையளவு பெருகி, வசிஷ்டரின் சாபத்தை நீக்கியது. அதைத் தொடர்ந்து அந்தக் கானகம் முன்னைப் போல நகரமானது. இவர்களுக்கும் இழந்த அனைத்தும் திரும்ப கிடைத்தது. மக்களும் தங்கள் விலங்கு, பறவை தோற்றங்கள் நீங்கி தங்கள் சுயவுருவை பெற்றனர்.

சிவாலயத்தில் பணி செய்த சிவபுண்ணியமும் சிவாலய புனருத்தாரனமும் தந்த பலனின் மகிமையால் தான் இது நடந்தது என்பதை அறிந்த இருவரும் அதுமுதல் பல சிவபுண்ணியங்களை செய்து வரலானார்கள். தம்பதிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து இறுதியில் பெறுதற்கரிய சிவப்பதத்தை அடைந்தனர்.

சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை விளக்கும் இந்தக் கதையை அப்புதிய மணமக்களிடம் கூறிய அகஸ்திய மாமுனிவர்… “கேட்டீர்கள் அல்லவா? எப்பேற்ப்பட்ட சாபத்தையும் போக்கவல்லது சிவபுண்ணியம் ஒன்றே ஆகும். நீங்களும் உங்களை சிவபுண்ணியச் செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டால், உங்கள் சாபம் நீங்கி நல்வாழ்வு பெறுவீர்கள்.”

“அதை எவ்விடம் எப்படி செய்வது?” என்று இவர்கள் எண்ண அதை உணர்ந்துகொண்ட அகஸ்தியர் அந்நேரம் அங்கு வந்த ஒரு சிவபக்தரை அழைத்து, அரசகுமாரிகளையும் அவர்கள் கணவன்மார்களையும் நோக்கி, “இதோ இவர் ஒரு சிறந்த சிவனடியார். தினமும் சிவபூஜை செய்து வருபவர். இவருக்கு நீங்கள் அவரது சிவபூஜையில் துணையாயிருந்து ஏவல் செய்து வாருங்கள். அதுவே நீங்கள் உய்வு பெற ஒரே வழி!” என்று கூறி அந்த சிவபக்தரிடம் “இவர்கள் அனைவரும் சிவத்தொண்டு செய்யும் வண்ணம் இவர்களை உங்கள் சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்டு நீங்கள் வணங்கி வரும் ஈஸ்வரனை இவர்களும் வணங்கி சேவைகள் செய்யும் வண்ணம் பார்த்துக்கொள்வாயாக!” என்று கூறிவிட்டு கயிலை நோக்கி புறப்பட்டார்.

இவர்களும் அதன்படி அந்த அடியவருக்கு சேவைகள் செய்து முன்னர் கூறிய கதையில் காணப்பட்ட சம்பவத்தைப் போல சிவபுண்ணியத்தின் மகிமையால் தங்கள் சாபங்கள் நீங்கப்பெற்று தங்கள் நாட்டையும் இழந்த செல்வங்களையும் முன்னைவிட பொலிவுடன் பெற்றார்கள்.

அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே!
– சுந்தரர் (ஏழாம் திருமுறை)

* அந்த அடியவருக்கு இவர்கள் செய்த பணிவிடைகள் யாது? அது அடுத்த அத்தியாயத்தில் இடம்பெறும்…

==========================================================

உழவாரப்பணி அறிவிப்பு! 

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு 20/11/2016 அன்று மயிலை பஜார் வீதியில் அமைந்துள்ள பொற்கொடி அம்பாள் உடனுறை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும். கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல், ஒட்டடை அடித்தல், நந்தவனத்தை திருத்துதல், புற்களை வெட்டுதல், கோவில் பாத்திரங்கள் மற்றும் திருவிளக்குகளை தேய்த்துக் கொடுத்தல் போன்ற பணிகள் நடைபெறும். பணிக்கு வரவிரும்பும் அன்பர்கள் காலை 7.30 க்குள் கோவிலில் இருக்கவேண்டும். ஆண்கள் வேஷ்டி துண்டு எடுத்து வரவும்.

மயிலை காரணீஸ்வரர் திருக்கோவில், பஜார் வீதி, மயிலாப்பூர், சென்னை - 600004
மயிலை காரணீஸ்வரர் திருக்கோவில், பஜார் வீதி, மயிலாப்பூர், சென்னை – 600004

பணி பிற்பகல் 1.00 pm வரை நடைபெறும். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ அவசியம் பதிவு செய்யவேண்டும்.

பணிக்கு வரவிரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட பதிவில் உள்ள RULES & REGULATIONS களை அவசியம் படிக்கவும்: உழவாரப்பணிக்கு வர விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு…!

– ரைட்மந்த்ரா சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *