அப்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தை கேட்டோம்.
“குலதெய்வ வழிபாடு நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். ஆனால், சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அவர்கள் குலதெய்வமே எது என்று தெரிவதில்லை. அவர்கள் தங்கள் குலதெய்வத்தை எப்படி அறிந்துகொள்வது? அவர்கள் என்ன செய்யவேண்டும்?”
திரு.சம்பத் பட்டாச்சாரியா : குலதெய்வம் இன்னதென்று தெரியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய இராகு காலத்தில் 4.30 – 6.00 வீட்டில் ஜலம் புழங்கும் இடத்தில் (தோட்டம், கிணற்றடி, குழாயடி, சம்ப், போர்வெல் போன்ற இடங்கள்) மூன்று செங்கற்களை கொண்டு அடுப்பு வைத்து அதில் பசுஞ்சாணத்தால் செய்த வறட்டியை கொண்டு தீ மூட்டி, மண் பானையில் பொங்கல் வைக்கவேண்டும். மண் பானைக்கு அவரவர் வழக்கப்படி மஞ்சள் குங்குமம் வைத்து பின்னர் திருநீறோ அல்லது திருமண்ணோ (நாமம்) இடலாம். செங்கல்களுக்கும் மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.
பின்னர் அதில் பச்சரிசி, மிளகு, சீரகம் போட்டு வெண்பொங்கல் செய்யவேண்டும். பசு நெய் தான் பயன்படுத்தவேண்டும். (அம்மன் கோவில்களில் பெண்கள் செய்வது போல!)
இதை சம்பந்தப்பட்டவர்கள் செய்யாமல் அவர்கள் வீட்டு பணிப்பெண்ணோ அல்லது வேலைக்காரர்கள் ஆகியோரை வைத்து தான் செய்யவேண்டும். செய்த பின்னர் அதை மேற்கு நோக்கி சூரியனுக்கு அர்ப்பணம் செய்து (நிவேதனம்) அதை யார்………..
==========================================================
குலதெய்வ வழிபாடு பற்றி நம் தளத்தில் வந்த பதிவுகளுக்கு :
குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?
குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!
குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?
ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!
==========================================================
………செய்தார்களோ அவர்களிடமே கொடுத்துவிடவேண்டும். இதை பரிகாரம் செய்கிறவர் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் சாப்பிடக்கூடாது.
பணிப்பெண் செய்தால் அவருக்கு புடவை + ரவிக்கை பிட்டும், வேலைக்காரர் (ஆடவர்) செய்தால் அவருக்கு வேட்டியும் துண்டும் வெற்றிலைப் பாக்கு, பழம் ரொக்கம் கொஞ்சம் அடங்கிய தாம்பூலத்துடன் வைத்து தரவேண்டும்.
இவர்கள் செய்யவேண்டியது எல்லாம் அந்த வறட்டி சாம்பலை எடுத்து திருமண் அல்லது திருநீறு போல, நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும். அவர்கள் குடும்பத்தினரும் இட்டுக்கொள்ளலாம்.
இந்த வழிபாடு முழுக்க அமைதியான மனதுடன் நம்பிக்கையாக குலதெய்வத்தை மனதார நினைத்துக்கொண்டு செய்யவேண்டும்.
இதை ஒரு முறை செய்தால் கூட போதும் உங்கள் குலதெய்வம் எது என்று கனவில் தெரிந்துவிடும். அதாவது நேரிடையாகவோ மறைமுகமாகவோ உங்களிடம் உங்கள் குலதெய்வம் வெளிப்பட்டுவிடும்.
அப்படி தெரியவில்லை என்றாலும் கவலையில்லை. மாதந்தோறும் இதை செய்து வாருங்கள். உங்கள் குலதெய்வத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய அற்புதமான வழிபாடாக இது அமைந்துவிடும்.
இதற்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம் என்றால், நீங்கள் படைக்கும் நிவேதனத்தை சூரியபகவான் சரியாக உங்கள் குலதெய்வத்திடம் கொண்டு போய் சேர்த்துவிடுவார். அவர் தான் BENEFIT TRANSFERRING AGENT.
இந்த வழிபாடு செய்த பின்னர் ஆதித்த ஹ்ருதயம் படிப்பதோ கேட்பதோ இன்னும் விஷேஷம்.
Please check : ‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்னும் ஆபத்பாந்தவன்!
==========================================================
Like our website? Kindly extend your support!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. | IFSC Code : UTIB0001182
==========================================================
நம் தளத்தில் வெளியான பரிகாரம் குறித்த பல்வேறு பதிவுகளுக்கு :
எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு?
பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ
பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ
சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ
ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம்
ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?
சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)
==========================================================
[END]
Sundar, thanks for the extremely useful information on kuladeivam. Sincere pranams to Shri Sampath Bhattacharya.