Home > 2017 > February

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

ஆண்டுதோறும் பருவ மழைகள் பொய்த்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுக்க கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேள்விக்குறியாகி உள்ளது. தென்மாவட்டங்களில் 2012ல் நீடித்த கடும் வறட்சி 2016 மற்றும் 2017 துவக்கத்திலும் தொடர்கிறது. கிணற்று நீர்

Read More

அன்புள்ள அப்பாவிற்கு நமஸ்காரம்…! (தவறவிடக்கூடாத ஒரு பதிவு)

அண்மையில் நாம் படித்து வியந்த சிலிர்த்த அழுத கதை இது. ஒரு கதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். படிக்கத் துவங்கினால் முடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பீர்கள் அங்கே இங்கே பார்வையோ சிந்தனையோ திரும்பாது என்பது உறுதி. இந்த கதை கொடுக்கும் மெஸ்ஸேஜ் இன்றைய சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் கூட பரவாயில்லை. சில்லறைகளை அல்லவா இன்றைய சமூகம் வாங்கிக்கொண்டிருக்கிறது. யாருக்கு இழப்பு? சிந்திக்கவேண்டிய வேளை;

Read More

நாம் வேண்டியதை தருவான்; தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வான்!

தமிழகம் முழுக்க எண்ணற்ற தொன்மை வாய்ந்த தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தலத்தின் பின்னேயும் அந்த தல வரலாற்றை தவிர வேறு சில சுவையான வரலாறுகளும் உண்டு. அதே போல ஒவ்வொரு தலத்திற்கும் தல ரகசியம் என்று ஒன்று உண்டு. அவை ஈசனருள் பெற்ற சைவ சமயக் குரவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களும் அந்த ரகசியங்களை தங்களிடையே மட்டும் வைத்து பூட்டிக்கொள்ளாமல், தங்களது பதிகங்களில் மறைப்பொருளாக வைத்து பாடிவிட்டு சென்றிருக்கின்றனர். சில சமயங்களில்

Read More

தீர்க்க முடியாத கணக்கு!

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ் டாண்ட்ஸ்ஜிக் என்கிற ஆராய்ச்சி மாணவர் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்தார். ஒரு நாள் அவர் வகுப்புக்கு வர தாமதமாகிவிட்டது. அவர் வருவதற்குள் அன்றைய வகுப்புக்கள் முடிந்து எல்லாரும் கிளம்பிவிட்டிருந்தார்கள். கரும்பலைகையில் இரண்டு பெரிய கணித வினாக்கள் (Maths Problems) காணப்பட்டன. அவை தான் அன்றைய தினத்தின் ஹோம் ஒர்க் அசைன்மென்ட் என்று

Read More

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை!

'திருவிளையாடல்' படத்தில் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை என்னும் பாட்டில் சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?" என்றொரு வரியை கவியரசர் எழுதியிருப்பார். சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன? கண்ணதாசன் ஒரு பக்தி திரைப்படத்தில் பக்தி பாடலில் இப்படி ஒரு வரியை சும்மா எழுதுவாரா?

Read More

ஹரிஹர கிருபா கடாக்ஷம்!

இந்த சிவராத்திரிக்கு (24/02/2017 வெள்ளிக்கிழமை) மற்றுமொரு விசேஷமும் உண்டு. பிரதோஷம், சிவராத்திரி, திருவோணம் மூன்றும் சேர்ந்து வருவதே அது. எனவே நாளைய தினம் விரதம் இருப்பவர்கள் பிரதோஷம், சிவராத்திரி, திருவோண விரதம் மூன்று விரதமும் இருந்த பலன் கிடைத்துவிடும். எனவே மும்மடங்கு பலன் உண்டு. நாளை சிவாலயத்துடன் முடிந்தால் வைணவ ஆலயத்தையும் நாளை தரிசிக்கவும். ஹரிஹர கிருபா கடாக்ஷம் கிடைக்கும். "அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயில் மண்ணு" — இந்த

Read More

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன் என்ன? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை! வேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை. முன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு

Read More

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

எந்த ஜென்மத்தில் அடியேன் செய்த புண்ணியமோ தெரியாது. ரைட்மந்த்ரா தளம் துவக்கப்பட்ட இந்த ஐந்தாண்டுகளில் பல சிவாலயங்களை பாடல் பெற்ற தலங்களை தரிசித்துவிட்டோம். ஒவ்வொரு தலமும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் சிறப்பை பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? இந்த ஆலயங்கள் எல்லாம் ஏதோ பொருளால் கட்டப்பட்டவை என்று பலர் கருதுகிறார்கள். இல்லை. இவை அருளால் கட்டப்பட்டவை. பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களை ஒப்பந்தம் செய்தாலும்

Read More

முட்டாளின் அடையாளம் எது?

தென்கச்சி கோ.சாமிநாதன் அவர்களை அனைவருக்கும் தெரிந்திருக்கும். "இன்று ஒரு தகவல்" என்று வானொலியில் தினந்தோறும் அற்புதமான கருத்துக்களை கதைகளை எளிமையாக பாமரருக்கும் புரியும் வண்ணம் சொல்லி வந்தவர். சுயமுன்னேற்றம் மற்றும் ஆளுமை குறித்து அவர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார். தினமணியில் அவர் அப்படி எழுதிய நம்மைக் கவர்ந்த கட்டுரை ஒன்றை இங்கே தருகிறோம். முட்டாளின் அடையாளம் எது? "சார் இந்த உலகத்திலே அறிவாளிகளைவிட முட்டாள்கள்கிட்டதான் அதிக எச்சரிக்கையா நடந்துக்க வேண்டியிருக்கு" என்றார் அனுபவப்பட்ட ஒருத்தர். "அப்படிங்களா?"

Read More

புளிய மரப் பொந்தில் மறைக்கப்பட்ட அம்பலப் புளி!

ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி சமயத்தில் நம் தளத்தில் சிவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் வெளிவந்தாலும், அண்மைக் காலங்களில் நாம் ஈஸ்வரன் குறித்து பல பதிவுகள் அளித்து வருவதால் தனியாக தொடர் ஏதும் இந்த ஆண்டு அளிக்கவில்லை. இது போன்ற பதிவுகளே சிந்தைக்கு சிவானந்தம் அளிப்பதால் தனியாக சிவராத்திரி சிறப்பு தொடர் தேவையில்லை என்று கருதுகிறோம். சிவராத்திரி விரதம் முதன்முதலாக இருக்க ஆசைப்படுபவர்கள் மற்றும் இன்னும் சிறப்பாக விரதமிருக்க ஆசைப்படுபவர்கள் நலனுக்காக இந்தப் பதிவின் இறுதியில்

Read More

“மீனை வாயில் வைத்து பாடு, வாதம் தீரும்” – இது குருவாயூரப்பன் லீலை!

ஆங்கில வைத்தியம் எனப்படும் அலோபதி கடந்த எழுபது எழுபத்தைந்து ஆண்டுகளாகத் தான் நடைமுறையில் உள்ளது. அதற்கு முன்பு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நாட்டு வைத்தியம் தான். மந்திரத்தால் வியாதி குணமானவர்கள் கூட பலர் உண்டு. அதைத்தான் 'மணி மந்திர ஔஷதம்' என்றார்கள். கோவில்களில் பஜனம் என்று சொல்லக்கூடிய விரத முறையை அனுஷ்டித்து சுவாமி பிரசாதத்தையே மருந்தாக உட்கொண்டு வியாதிகள் நீங்கப் பெற்றவர்கள் பலர் உண்டு. கி.பி.1560 வது ஆண்டு.

Read More

பசுவுக்கும் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் கதை + புகைப்படங்கள் – Rightmantra Prayer Club

பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பை சொல்ல முற்பட்ட சேக்கிழார் "நீதி நெறி தவறாத மனுநீதி சோழன் ஆண்ட பூமி இது!" என்று அடைமொழி கொடுத்து மனுநீதி சோழன் கதையை சொல்லி பின்னர் தான் பெரிய புராணத்தையே தொடங்குகிறார். அப்படியெனில் மனுநீதிச் சோழனின் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள். திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுநீதிச் சோழன் என்பவனும் ஒருவன். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினான். எல்லா உயிர்களுக்கும்

Read More

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா…?

சிவபுண்ணியக் கதைகள் தொடரில் ஒரு அத்தியாயத்தில் ருத்திராட்சம் அணிந்ததால் அனைத்தும் திரும்பக் கிடைத்த ஒரு சிறுவனைப் பற்றிய கதையை பகிர்ந்தது நினைவிருக்கலாம். (ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு - சிவபுண்ணியக் கதைகள் (7)) அது முதலே வாசகர்கள் ருத்திராக்ஷம் பற்றி ஒரு விரிவான பதிவை அளிக்கும்படி கேட்டுவந்தார்கள். சிவசின்னங்களில் தலையாயது திருநீறும் ருத்திராட்சமும். சிவமஹா புராணம், கந்த புராணம், ருத்திராட்ச மகாத்மியம் போன்ற பல நூல்களில் ருத்திராட்சம் பற்றிய குறிப்புக்கள், விதிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒன்று

Read More

திரிதிராஷ்டிரன் ஏன் நூறு பிள்ளைகளையும் இழந்தான்?

குருசேஷத்திர போர் முடிந்து தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?" என்றார். அதற்கு கிருஷ்ணர் நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில்

Read More