Home > 2016 > November

‘அபாயம்’ என்று வந்தவனுக்கு கிடைத்த ‘அபயம்’ – உங்களுக்கும் கிடைக்கும்!!

"கடந்த காலத் தவறுகள் என் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. நானும் மற்றவர்கள் போல நிம்மதியாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறேன். அனைவர் முன்னிலையிலும் ஜெயித்துக் காட்ட விரும்புகிறேன்... எனக்கு வாய்ப்பிருக்கிறதா? என்னால் முடியுமா?" இந்த சந்தேகம், பரிதவிப்பு பலருக்கு உண்டு. அவர்களுக்குத் தான் இந்தப் பதிவு. மாற்றான் மனைவியை கவர்ந்து வந்து சிறை வைத்தான் இலங்கை வேந்தன் இராவணன். அவன் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை எடுத்துக் கூற துணிவின்றி அவனது ராஜசபையில்

Read More

அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

இன்று ஆங்கிலத் தேதிப்படி நம் பிறந்தநாள். பொதுவாக தமிழ் மாதத்தில் ஜென்ம நட்சத்திரப்படி வரும் பிறந்தநாளைத் தான் நாம் கொண்டாடுவது வழக்கம். அது ஆன்மாவுக்கு. இது ஊர் உலகிற்கும் உங்களைப் போன்ற நண்பர்களுக்கும். உங்கள் வாழ்த்துகள் மேன்மேலும் இந்த எளியோனின் பணியை சிறக்க செய்யவேண்டும். அதுவே நம் பிரார்த்தனை. இன்று பெற்றோரிடம் ஆசி, ஆலய தரிசனம், பின்னர் நம் கடமை - இவை தான் நமது ஷெட்யூல். மாலை விழித்திறன் சவால்

Read More

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

உ.வே.சா. என்னும் தமிழ்க் கடலில் நீந்தி வருகிறோம். எண்ணற்ற விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக சென்ற நூற்றாண்டை சேர்ந்தவர் யாருடைய எழுத்தையும் அத்தனை சீக்கிரம் நம்மால் கிரகித்துக்கொள்ள முடியாது. மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் தமிழ்த் தாத்தாவிடம் அந்த பிரச்சனை இல்லை. தெளிந்த நீரோடை போன்ற அவருடைய எழுத்தை எந்தக் காலத்தில் எந்த யுகத்தில் வாசித்தாலும் புரியும். அந்தக் காலத்திற்கே நம்மை இட்டுச் செல்லும். எந்த வித வசதிகளும் இல்லாத காலத்தில்

Read More

அமங்கலமான சொற்களா? விளையாட்டுக்கு கூட வேண்டாமே!

வாழ்க்கைக்கு பிரயோஜனம் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ் ஆப் / ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன. விரும்பியோ விரும்பாமலோ எத்தனையோ பேரின் கருத்துக்களை நாம் பார்க்க பார்க்க நேரிடுகிறது. அமங்கலச் சொற்கள் நெகடிவ்வான வார்த்தைகள் அவற்றில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன. எந்த சூழ்நிலையிலும் அவற்றை நீங்கள் பகிரக்கூடாது உச்சரிக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம். அமங்கலச் சொற்களை மறந்தும் கூட கூறக்கூடாது என்பது குறித்து நாம் சில ஆண்டுகளுக்கு

Read More

உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!

எத்தனையோ கஷ்டப்பட்டு பல தியாகங்களை செய்து, நம் மன்னர்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கட்டியவை நமது திருக்கோவில்கள். ஒவ்வொரு திருக்கோவிலின் வரலாற்றின் பின்னனியிலும் பலருடைய தியாகமும் உழைப்பும் ஒளிந்திருக்கின்றன. இவற்றில் வெளியுலகம் அறிந்தவை கடலில் ஒரு துளி போல கொஞ்சம் தான். பாடல் பெற்ற தலங்களும் சரி திவ்யதேசங்களும் சரி எந்தக் கோவிலும் பொருளிருக்கிறது, ஆள்பலம் இருக்கிறது என்று சுலபமாக கட்டப்படவில்லை. பலவித சோதனைகளை சம்பந்தப்பட்டவர்கள் தாங்கித் தான் கட்டினார்கள். காரணம் 'தியாகமில்லாத

Read More

சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

'கோவில் சொத்து குல நாசம்' என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியை பலர் கூறக் கேட்டிருப்போம். அதன் பொருள் என்ன? ஏன் அவ்வாறு சொன்னார்கள் தெரியுமா? ஒரு கதையையும் ஒரு உண்மை சம்பவத்தையும் பார்ப்போம். அம்பாளின் முத்துமாலை....  ஒரு கோவிலின் தர்மகார்த்தாவாக இருக்கும் ஒருவருக்கு அம்பாளின் முத்தாரம் மீது ஆசை ஏற்பட்டுவிடுகிறது. அதை எப்படியாவது அடையவேண்டும் என்று துடித்தவர் அதைப் போன்றே ஒரு போலி முத்துமாலையை தயார் செய்து வைத்துக்கொண்டு பொக்கிஷ அதிகாரியை தனது வீட்டுக்கு விருந்துக்கு

Read More

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

நமக்கு என்ன நடக்கிறது என்பது வாழ்க்கை அல்ல. நடப்பவற்றுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதே வாழ்க்கை. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. விரும்பியவற்றை எல்லாம் அடையவும் முடியாது. விரும்பியபடி ஒன்று அமையும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட விரும்பாத ஒன்று அமையும் போது கற்றுக்கொள்ளும் பாடம் பல நேரங்களில் வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நாம் ஏற்கனவே சொன்னது போல, கற்றுக்கொள்ள தயார் என்றால் நாம் ஒரு புழுவிடமிருந்து கூட

Read More

பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! Rightmantra Prayer Club

மகாராஷ்டிரத்தில் கோமாபாய் என்ற ஆதரவற்ற இளம்விதவை ஒருத்தி வாழ்ந்து வந்தாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தனக்கு எல்லாமுமாக கொண்டு பக்தி செய்து வந்தாள். பிழைக்க வழி எதுவும் இல்லாததால் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்து கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தாள். இப்படியாகப்பட்ட நாட்களில் ஒரு நாள் ஆஷாட சுத்த ஏகாதசி திருநாள் வந்தது. பண்டரிநாதன் உறையும் பண்டரிபுரத்தில் அதையொட்டி வெகு விமரிசையாக உற்சவம் துவங்கியது. அதைக் காண கோமாபாய் பண்டரிபுரத்திற்கு

Read More

சுவாமியின் குறை தீர்ப்பு முகாம்!

நாட்டில் போதிய மழை பெய்து உயிர்கள் இன்புற்று வாழ திருக்கோவில்களில் பல்வேறு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் மிக மிக முக்கியமானது பிரம்மோற்சவம். பெயரே குறிப்பிடுவது போல படைப்புக் கடவுளான பிரம்மாவே, தான் படைத்த உயிர்கள் நலமோடு வாழ இறைவனுக்கு எடுக்கும் விழாவே பிரம்மோற்சம். எனவே மற்ற எந்த விழாக்களையும் விட பிரம்மோற்சவம் மிக அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பெரிய, புராதனமான சைவ, வைணவ ஆலயங்கள் அனைத்திலும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறும். சமீபத்தில்

Read More

திருடனை துரத்திய துறவி….!

இன்றைக்கு துறவிகளின் இலக்கணமே மாறிவிட்டது. அடுத்த வேளை உணவைப் பற்றி ஒரு சந்நியாசி யோசிக்கக்கூடாது என்கிறார் யாக்ஞ வல்கியர். ஆனால் இன்று ? ஏதோ ஒரு மலையடிவாரத்தில் பல நூறு ஏக்கர்களில் ஆஸ்ரமம். ஹை-டெக் அறைகள், நீச்சல் குளம் என்று நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக இருக்கின்றன சந்நியாசிகளின் ஆசிரமங்கள். அருளைத் தவிர அங்கு அனைத்தும் கிடைக்கின்றன. அக்காலங்களில் துறவிகள் எப்படி இருந்தார்கள்? துறவின் இலக்கணம் என்ன? அவர்களின் குண நலன்கள் என்ன?

Read More

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? சில விளக்கங்கள்!

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா?  Part 1 அடுத்து வரவிருக்கும் சனிப்பெயர்ச்சியை பற்றி ஒரு சார்ட் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வலம் வருகிறது. இந்த ராசிக்கு சுமார், இந்த ராசிக்கு மிகவும் தீமை, இவர்களுக்கு மிக மிகத் தீமை என்றெல்லாம் சார்ட் போட்டு சுற்றிக்கொண்டிருக்கிறது. இதைவிட அபத்தம் வேறு எதுவும் இல்லை. இவர்கள் கிரகங்களையும் புரிந்துகொள்ளவில்லை... தெய்வத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் புரிந்துகொண்டது - மக்களின் அறியாமை மற்றும் கிரகங்கள்

Read More

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

சிவபுண்ணியக் கதைகள் இத்துடன் 15 வது அத்தியாயத்தை எட்டிவிட்டது. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நேற்று ஆரம்பித்தது போலிருக்கிறது. நம் தளத்திற்கு நாம் எழுதும் பதிவுகள் ஒவ்வொன்றையுமே ஒரு வேள்வி போலக் கருதி எழுதி தயாரித்து வந்தாலும் சிவபுண்ணியக் கதைகள் எனும்போது அது ஒரு தவமாகவே மாறிவிடுகிறது. மேலோட்டமாக இந்தக் கதைகளை கூறாமல் ஒரு வரலாற்று சான்றேனும் கூறவேண்டும் என்று ஒரு உறுதி பூண்டுள்ளோம். இந்தக் கதைகள் எல்லாம் ஒரு

Read More

உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லையா?

நென்மேலி சிரார்த்த சம்ரக்ஷன பெருமாள் கோவில் பட்டர் திரு.சம்பத் பட்டாச்சாரியார் அவர்களை நமது தளத்தின் பேட்டிக்காக சமீபத்தில் சந்தித்தபோது, பல விஷயங்களை நம்மிட பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பேசியிருக்கிறோம் என்றால் எத்தனை விஷயங்களை அவர் கூறியிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அவருடைய வித்தையும், சாஸ்திர சம்பிரதாய அறிவும் நம்மை வியக்க வைத்தன. அப்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தை கேட்டோம். "குலதெய்வ வழிபாடு நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு

Read More

ஒரு பிரார்த்தனை பதிவும் சில கோவில்களும்!

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு. இறைவன் என்னும் மாபெரும் ஆற்றலை நம்பி, அவரது அருளைச் சார்ந்து வாழும் யாரும் எந்த சூழ்நிலையிலும் கைவிடப்பட்டதில்லை. ஆனால் அந்த அருள் எப்படி செயல்படும், எந்த வழியில் நம்மை காக்கும் என்று இறைவன் ஒருவனுக்கே தெரியும். அற்புதமானவை அவரது வழிகள். சாதாரணமான மனிதனின் வாழ்க்கையிலேயே இது உண்மை என்றால் சுவாமி விவேகானந்தர் போன்ற அருளாளர்களின் வாழ்க்கையில் அது இன்னும் எவ்வளவு உண்மையாக

Read More