“கடந்த காலத் தவறுகள் என் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. நானும் மற்றவர்கள் போல நிம்மதியாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறேன். அனைவர் முன்னிலையிலும் ஜெயித்துக் காட்ட விரும்புகிறேன்… எனக்கு வாய்ப்பிருக்கிறதா? என்னால் முடியுமா?” இந்த சந்தேகம், பரிதவிப்பு பலருக்கு உண்டு. அவர்களுக்குத் தான் இந்தப் பதிவு.
மாற்றான் மனைவியை கவர்ந்து வந்து சிறை வைத்தான் இலங்கை வேந்தன் இராவணன். அவன் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை எடுத்துக் கூற துணிவின்றி அவனது ராஜசபையில் அனைவரும் அவனது செயலுக்கு ஆதரவு தெரிவித்தபோது, விபீஷணன் ஒருவன் தான் “இராவணா நீ செய்வது மாபெரும் தவறு” என்று இடித்துக் கூறினான்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, தவறு செய்யும்போது இடித்துரைத்து நல்வழிப்படுத்த யாரும் இல்லை என்றால், அவனை அழிப்பதற்கும் யாரும் வேண்டாம். அவனே அவனை அழித்துக்கொள்வான்.
“போனது போகட்டும். சீதையை மீண்டும் ராமனிடம் கொண்டு போய் சேர்த்துவிடு” என்று விபீஷணன் எத்தனையோ மன்றாடிக் கேட்டுக்கொண்ட பிறகு கூட, ராவணனின் கர்வம் அதை அலட்சியம் செய்ய வைத்தது. நல்லது சொன்ன தம்பியையே ‘துரோகி’ என்று முத்திரையும் குத்த வைத்தது. அதுமட்டுமல்லாமல் சபையோர் அத்தனை பேர் முன்னிலையிலும் விபீஷணனை தன் காலால் எட்டி வேறு உதைத்தான்.
இந்த அவமதிப்பையும் சுடுசொற்களையும் சற்றும் எதிர்பாராத விபீஷணன், அவமானத்தால் கூனிக்குறுகி, இனி இங்கே இவனிடம் இருப்பதில் அர்த்தமில்லை இவனோடு சேர்த்து நம்மையும் அதர்மம் அழித்துவிடும் என்று கருதி ராவணனை உதறிவிட்டு வெளியேறினான்.
திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை?
ராமனை சந்தித்து சரணாகதி அடைவதே நமக்கிருக்கும் ஒரே வழி என்று தீர்மானித்து தென்கடற்கரையில் முகாமிட்டிருந்த ராமரை அனலன், அனிலன், சம்பாதி, அரன் என்ற நால்வருடன் சந்திக்க சென்றான். வரும்போதே “அபயம் ராமா அபயம்” என்று கூறியபடி தான் வந்தான்.
ஆனால் அவர்களை பார்த்த வானரர்கள் பயந்தனர். “இவர்கள் ஏதோ திட்டத்துடன் வந்திருக்கின்றனர்… ராவணன் ஏதோ சூழ்ச்சி செய்து அனுப்பியிருக்கிறான். இல்லையெனில் இவர்கள் ஏன் இங்கே வரப்போகிறார்கள்?” என்று அவர்களை மேற்கொண்டு உள்ளே விடாமல் சூழ்ந்துகொண்டனர்.
சுக்ரீவன், அங்கதன், நீலன் போன்ற வானர தலைவர்கள் யாவரும் விபீஷணனை நம்பக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தனர்.
ஆனால் ஸ்ரீராமரோ அனுமனின் கருத்தை அறிய விரும்பினார். பரமஞானியான அனுமனின் கணிப்பு ஒருபோதும் தப்பாது என்பது ராமரின் கருத்து.
அனுமன் கூறினார் : “ராகவா விபீஷணர் நீதி நெறி அறிந்தவர். அதன் வழி நிற்பவர். இலங்கையில் லங்கேஸ்வரனின் படையினர் என்னை கட்டி எழுத்துச் சென்றபோது தூதனைக் கொல்லக்கூடாது என்று எனக்காக குரல் கொடுத்தவர். மேலும் அசோகவனத்தில் சீதாதேவிக்கு இவர் மகள் திரிசடை தான் அங்கு உற்ற துணையாக இருந்து வருகிறாள். தர்மத்தின் பக்கம் நின்றதால் இரு சகோதரனையே பகைத்துக்கொண்டு அனைத்தையும் நமக்காக இழந்து நிற்கிறார். இவரை சந்தேகிக்காமல் அரவணைப்பதே நம் கடமை!” என்று உண்மையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்.
“அபயம் என்று அலறியதால் கஜேந்திரனைக் காக்க மஹாவிஷ்ணு கருடன் மீதேறி பறந்து வந்தார். பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தைக் கண்டு அனைவரும் பதறி சிவபெருமானிடம் தஞ்சமடைந்ததும் அவர் அதை தான் விழுங்கி அனைவரையும் காப்பாற்றினார். எனவே ‘அபயம்’ என்று யார் வந்தாலும் காப்பதே தர்மத்தின் வழி நிற்பவர்கள் செய்யக்கூடியது. விபீஷணன் என்ன, அந்த இராவணனே என்னிடம் அபயம் கேட்டு வந்தாலும் நான் கொடுக்கத் தான் செய்வேன். என் விரதம் அது தான். உடனே விபீஷணனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று வானரர்களிடம் கட்டளையிட்டார் ராமர்.
தொடர்ந்து ஒரு புறாவின் தியாகம் பற்றி அனைவருக்கும் கூறலானார்.
ராமர் கூறிய புறாவின் தியாகம்!
ஒரு வனத்தில் ஒரு ஜோடிப்புறாக்கள் வசித்து வந்தன. அம்மரத்தின் கீழ் வேடன் ஒருவன் இதர விலங்குகள் பறவைகளுக்காக வலையை விரித்துவிட்டு, இதர கனி மற்றும் கிழங்கு வகை உணவுகளை தேடி காட்டிற்குள் சென்றான். இங்கே வேடன் விரித்த வலையில் எப்படியோ பெண் புறா சிக்கிக்கொண்டுவிட்டது.
காட்டிற்குள் உணவு தேடச் சென்ற வேடன் எத்தனையோ அலைந்து திரிந்தும் உணவு எதுவும் கிடைக்காமல் மீண்டும் இம்மரத்தின் கீழேயே வந்து மயங்கி விழுந்துவிட்டான்.
வலையில் சிக்கிய பெண் புறா மேலே இருந்த ஆண் புறாவை பார்த்து “இந்த வேடன் நமக்கு அதிதி. நம் இடத்திற்கு வந்து பசி மயக்கத்தால் விழுந்திருக்கிறார். நீ என்னை
**************************************************************
இந்தப் பதிவு தொடர்புடைய பிற பதிவுகள்… (MUST READ)
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
**************************************************************
பற்றி கவலைப்படாதே. எப்படியாவது இவரது பசியை போக்கவேண்டும்” என்று கூறியது. தொடர்ந்து புறா அங்கே இங்கே அலைந்து திரிந்து சுள்ளிகளை பொறுக்கி வந்து தீமூட்டி அவனது குளிரை போக்க முயன்றது. தன்னால் இயன்ற கனி வகைகளை சேகரித்துக்கொண்டு வந்தது. என்ன செய்தும் அவன் பசி யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது போல அடங்கவேயில்லை.
இறுதியில் எரியும் நெருப்பில் தானே விழ தீர்மானித்தது.
ஆண் புறா வேடனிடம், “வேடன் இந்த தீயில் விழுந்து நான் உயிர் துறக்கிறேன். நீ என்னைத் தின்று பசியாறுவாயாக” என்று கூறி அத்தீயில் விழுந்து உயிர் நீத்தது.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் புறா, “நம்மைத் தேடி வந்த அதிதியின் பசி தீர்க்க உங்களுக்கு கிடைத்த அரும்பாக்கியம் எனக்கும் கிடைக்கவேண்டும்” என்றது.
விபீஷணன் மேல் சந்தேகங்கொண்ட சுக்ரீவன் உள்ளிட்ட வானரர்களுக்கு இக்கதையை கூறிய ராமர், “புறா ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை. இருப்பினும் தன்னை அண்டினோரை காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்தது. நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் எனும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும்?”
“விபீஷணன் நமது எதிரியின் சகோதரன் என்றாலும் நம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்தவன். அடைக்கலம் கேட்டு வந்தவர்களை காப்பது தானே தர்மம். ‘தர்மமே வடிவம் எடுத்து வந்தவன்’ என்று என்னைக் கூறுகிறார்கள். அந்த புகழுரைகளை கேட்டுக்கொண்டிருந்தால் போதுமா? செயற்படுத்த வேண்டாமா? எனவே விபீஷணன் மீது கொண்ட ஐயத்தை இப்போதே ஒழியுங்கள்” என்றார்.
இவ்விதமாக விபீஷணனுக்கு ராமர் அபயமளித்ததும் ராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரை பலவாறாக போற்றித் துதித்தான்.
ராமர் விபீஷணனை நோக்கி, “விபீஷணா நாங்கள் நால்வராக பிறந்தோம். குகனை சகோதரனாக பெற்று ஐவரானோம். சுக்ரீவனை சந்தித்தபோது அறுவரானோம். உன்னோடு சேர்ந்து எழுவரானோம்!” என்று கூறி அடைக்கலம் கேட்டு வந்த விபீஷணனுக்கு சகோதரனின் அந்தஸ்தை கொடுத்தார்.
இதைக் கண்ட வானரரர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவர்கள்.
பின்னர் வானரர்களை நோக்கி, “விபீஷணனை இலங்கைக்கு முடிசூட்டும் பெரும் பொறுப்பு நமக்கிருக்கிறது!” என்றார்.
விபீஷணன் அதை பணிவோடு மறுத்தான். “ராமா உன் நல்ல உள்ளத்தை எப்படி பாராட்டுவேன். நீ என் மீது கொண்ட நம்பிக்கை என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது. உன் சகோதரன் பரதன் எப்படி உன் பாதுகையை கொண்டு முடிசூட்டிக்கொண்டானோ அதன்படி ராவணன் என்னுடைய சகோதரன் என்கிற பந்தம் நீங்கும் வரை உன் பாதுகையை முடியாக சூடிக்கொள்ள விரும்புகிறேன்” என்றான்.
ராமரும் உள்ள நெகிழ்ந்து விபீஷணனுக்கு அவன் கேட்டுக்கொண்டபடி தன் பாதுகையை அளித்தார். பரதனுக்கு பிறகு ராமரின் பாதுகையை பெற்ற பாக்கியசாலி விபீஷணனே ஆவான்.
இருப்பினும் விபீஷணனே இலங்கைக்கு அரசாள உரியவன் என்பதை உணர்த்த விரும்பிய ராமர் அனுமனை நோக்கி, “சமுத்திர ஜலத்தைக் கொண்டு விபீஷணனுக்கு இங்கேயே இப்போதே இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்” என்று கூறினார். தொடர்ந்து லக்ஷ்மணன் அவருக்கு சமுத்திர ஜலத்தைக் கொண்டு பட்டாபிஷேகம் செய்தான்.
மேலும் அவனை புஷ்பக விமானத்தில் ஏற்றி வலம் வரச் செய்தனர். வானரர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
அபாயம் என்று வந்தவனுக்கு அபயம்!
பார்த்தீர்களா “அபாயம்” என்று ஓடிவந்தவனுக்கு ‘அபயம்’ அளித்து அவனை முடிசூட்டி விமானத்திலும் ஏற்றினான் ராமன்.
ஆக, ‘அபாயம்’ வந்தால் உடனே ஓடிச்சென்று ‘அபயம்’ என்று இறைவனை சரணாகதி அடைந்துவிடவேண்டும். எனவே தான் ‘அபாயம்’ என்கிற வார்த்தையில் இருக்கும் துணைக்கால் அபயத்தில் இல்லை.
“இதுவரை தவறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். தலைக்கு மேல் எல்லாம் போய்விட்டது. நான் உய்வு பெற, காப்பாற்றப்பட வழியே இல்லையா?” என்று கலங்குபவர்கள் கவலைப்படவேண்டா.
உடனே அருகில் உள்ள ஆலயம் செல்லுங்கள் அது சிவாலயமாக இருந்தாலும் சரி வைணவ ஆலயமாக இருந்தாலும் சரி… இறைவன் முன்பு உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றுக்கு மன்னிப்பு கேட்டு இனி அவற்றை செய்யமாட்டேன் என்று உறுதிமொழி கூறுங்கள். உங்கள் பெயரில் சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்யுங்கள்.
“இந்த நொடி முதல் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். என்னை பார்த்துக்கொள்ளவேண்டியது உன் பொறுப்பு” என்று கூறி உங்கள் கடமையையே பொறுமையாக நம்பிக்கையுடன் செய்து வாருங்கள்.
அதாவது நாம் சொல்வது TOTAL SURRENDER. முழு சரணாகதி. உங்கள் ஆணவம், நம்பிக்கையின்மை, தற்பெருமை, செல்வம், பதவி, என அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு எளியோனுக்கு எளியோனாக உங்களை கருதி இறைவனிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்துவிடவேண்டும். சரணாகதியின் முதல் படியே கர்வத்தை ஒழிப்பது தான். தீயவற்றிலிருந்து உங்களை விலக்கிக்கொள்வது தான்.
கடந்த காலத்தை அது எத்தகையதாக இருந்தாலும் மறந்துவிட்டு புது வாழ்க்கையை துவங்குங்கள். அதற்கு பிறகு இறைவனுக்கு பிடித்தது போல உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். தூக்கு தண்டனைக் கைதி கடைசி நேரத்தில் மன்னித்து விடுவிக்கப்பட்டது போல, நீங்கள் மறுபிறவி எடுத்திருப்பதாக கருதி, உங்கள் நட்பு வட்டம் முதல் அனைத்தையும் மறுபரிசீலனை செய்யவேண்டும். உங்கள் பழக்க வழக்கங்கள் மாறவேண்டும். நல்லதையே நினைக்கவேண்டும். பேசவேண்டும். செய்யவேண்டும். மொத்தத்தில் நீங்கள் மீண்டும் பிறந்ததாக கருதி உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் சரணாகதி பெற்ற பின்பு மீண்டும் ராவணனுடன் சென்று விபீஷணன் வசிப்பது போலாகிவிடும்.
இப்படி செய்து வந்தால் நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் வாழ்க்கை உயர்வதை உணர்வீர்கள். இது அனுபவப்பூர்வமான உண்மை.
இன்னும் என்ன தயக்கம்?
வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்!!
* ராமாயணத்தில் வரும் இந்த ‘விபீஷன சரணாகதி படலம்’ சக்தி வாய்ந்தது. ஒருவகையில் THERAPEUTIC MYTH. (கதையே பிணி தீர்க்கும் மருந்து!).
* ராமாயணம் படித்தால் எல்லா தானங்களையும் செய்ததற்கு ஒப்பானதாகும்.
* ராம = என்றால் எல்லாரையும் மகிழ்விப்பவன் என்று பொருள். இந்த ஒரு திருநாமத்தை சொன்னாலே மஹாவிஷ்ணுவின் ஓராயிரம் நாமங்களை சொன்ன பலன் கிட்டும்.
**************************************************************
கன்னியாகுமரி & வேதாரண்யம் பயணம்!
நண்பர் அம்மன் சத்தியநாதன் அவர்களின் ‘ராகவேந்திர மகிமை – 10 ஆம் பாகம்’ நூலின் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 1 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடிவீஸ்வரத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் கலந்துகொள்ள திரு.சத்தியநாதன் நமக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதையொட்டி திருவருள் துணைக்கொண்டு நாளை (நவம்பர் 30) மாலை கன்னியாகுமரி புறப்படுகிறோம். நிகழ்ச்சியை முடித்துவிட்டு கன்னியாகுமரி அம்மன் உள்ளிட்ட குமரி மாவட்ட கோவில்கள் சிலவற்றை தரிசித்துவிட்டு கன்னியாகுமாரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் பின்னர் நேரமிருப்பின் வேதாரண்யம் சென்று வேதாரண்யேஸ்வரரை தரிசித்துவிட்டு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளோம். இது மூன்று நாள் பயணம். மீண்டும் ஞாயிறு சென்னை திரும்புவதாக திட்டம்.
திருவருளும் குருவருளும் உடனிருந்து பயணத்தை நல்லமுறையில் நடத்தித் தரவேண்டும்.
– ரைட்மந்த்ரா சுந்தர் | M : 98401 69215 | E : editor@rightmantra.com
**************************************************************
உங்கள் உதவியை எதிர்நோக்கி…
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Also check :
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?
மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ
தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
==========================================================
[END]