Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

print
த்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டேப் ரெக்கார்டர் கேசட் புழக்கத்தில் இருந்த காலத்தில் நம் வீட்டில் தினமும் காலை வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒலிக்கும். ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்’ என்று தொடங்கும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை கேட்டாலே ஒரு வித பரவசம் ஏற்படும். விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒலிக்கும் இடத்தில் மங்களம் உண்டாகும். துர்தேவதைகள் அலறியடித்து ஓடும். நோய்நொடிகள் விலகும். செல்வம் கொழிக்கும். இதை பலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் விஷ்ணு சஹஸ்ர நாமதிற்கு பதில் அமங்கல வார்த்தைகளை அள்ளி தெளிக்கும் டி.வி. சீரியல்கள் தான் ஒலிக்கின்றன. எப்படி மங்களம் பெருகும்? சுபிக்ஷம் ஏற்படும்? நாம் மாறாதவரை எதுவும் மாறப்போவதில்லை. (விட்டுப்போன இந்த வழக்கத்தை வீட்டில் நாம் மீண்டும் கொண்டுவந்துவிட்டோம்!)

காஞ்சி மகா பெரியவா பல சந்தர்ப்பங்களில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை நமது இல்லங்களில் பாராயணம் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

Bhaja Govindam album cover page copyவெளியே வர முடியாத சுழல் போல பல பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள், ஒரு மாற்றத்திற்கு தினமும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை படித்தோ கேட்டோ வாருங்களேன்… பிரச்னைகள் எப்படி விலகி ஓடுகின்றன என்று பாருங்கள்.

அருமறை ஒரு நான்கும் அருளிய நாமம்
அணுவுக்குள் அணுவாக நிறைந்துள்ள நாமம்
நறுமலர் தேனாக நாத மயமாக
திருவருள் புரிகின்ற நாமம்
அது ‘நாராயணா’ என்னும் நாமம்
தினம் நாவால் சொன்னால் வரும் ஷேமம் 

ஒரு நாமத்திற்கே பெருமை இப்படி என்றால் சஹஸ்ரநாமத்திற்கு? (சஹஸ்ரஎன்றால் ஆயிரம் என்று பொருள்!)

விஷ்ணு சஹஸ்ர நாமம் முழுதும் சமஸ்கிருதம் ஆயிற்றே எப்படி படிப்பது என்று கலங்கவேண்டாம். சமஸ்கிருதம் படிக்க சிரமப்டுபவர்கள், சி.டி. வாங்கி வந்து அதை ஒலிக்கவிட்டு கூடவே சேர்ந்து படிக்கலாம். நாளடைவில் பழகிவிடும். அப்படியும் படிக்கமுடியாதவர்கள் கேட்டு வந்தாலே போதும்.

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய வெர்ஷன் மிகவும் பிரமாதம். ஒரே சி.டி.யில் வெங்கடேச சுப்ரபாதமும், பஜ கோவிந்தமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும் கிடைக்கும்.

பத்திரிகை ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பு நாம் படித்த விஷ்ணு சஹஸ்ர நாமம் தொடர்பான வியக்கவைக்கும் தகவல் ஒன்றை பார்ப்போம்.

==============================================================================

‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்று பழமொழியே உள்ள நிலையில், ஐந்து பெண் பெற்ற சாமானியர் ஒருவர் தனது மகள்கள் அனைவருக்கும் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்திய அதிசயத்தை பார்ப்போம்.

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்திய கதை !

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண்மணி தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைப் பற்றி பத்திரிகை ஒன்றில் எழுதி இருந்தார்.

“”என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு  வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்தனர். நான் ஐந்தாவது பெண். “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியா வான்’ என்பது பழமொழி. என் தந்தை ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமல்லாது, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்காவுக்கு  திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். “அக்கா விற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார்- பணம் வேண்டாமா’ என்று கவலைப்பட்டோம்.

திடீரென்று ஒருநாள், வசதியான குடும் பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார். “அவ்வளவு வசதியும், பெரிய வேலையிலிருக்கும் பிள்ளைக்கு அதிக வரதட்ச ணையும், நகைகளும் கேட்க மாட்டார்களா- நம்மால் எப்படி முடியும்’ என்று நினைத்த போதே, பிள்ளையைப் பெற்ற தாயும் தந்தையும், “எங்களுக்கு  நிறைய பணமும், நகைகளும் இருக்கு. வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களால் முடிந்த அளவிற்கு திருமணத்தை நடத்தினால் போதும்’ என்றார்கள். எங்களுக்கோ வியப்பு. ஆனால் அந்த வரனே முடிந்தது.

இப்படியே ஒவ்வொரு பெண் ணிற்கும் நல்ல இடமாய், பெரிய உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள் ளைகளே கிடைத்தார்கள். எனக்கும் அப்படியே அமைந்தது. இன்று ஐந்து பெண்களும் அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட எழுபத் தைந்து வயதை எட்டிவிட்ட என் அப்பா விடம் நான், “இது எப்படியப்பா சாத்திய மாயிற்று’ என்று கேட்டேன். அவர் சொன்னார்: “நான், என்னுடைய பதினைந்தாவது வயதில் விஷ்ணு சஹஸ்த்ர நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். இதோ, எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை ஒருநாள்கூட சஹஸ்த்ர நாம பாராயணத்தை நான் நிறுத்தியதில்லை. உங்கள் ஐந்து பேருடைய கல்யாணத்தையும் அமோகமாக நடத்தியவன் இந்த வாத்தியார் இல்லையம்மா. சாக்ஷாத் அந்த எம்பெருமான் நாராயணனே நடத்தி வைத்தான்!’ என்றார்.

என்ன அற்புதம் பாருங்கள். ஓர் ஏழை ஆசிரியரின் ஐந்து பெண்களுக்கும் பெரிய இடத்திலிருந்து பிள்ளைகள் வந்து, அவர் களாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டு அமோக வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்மையான இறை நம்பிக்கையே. அதனினும் பெரிய உண்மை விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தின் மகிமையே!

Vishnu Sahasra Namam

சுமார் 1,300 ஆண்டுகளுக்குமுன் அவதரித்த ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்  இளம் வயதிலேயே துறவு பூண்டு, பல அறநெறிகளை மக்களுக்கு போதித்து, அத்வைதம் என்னுமொரு சிறப் பான பேருண்மையைத் தோற்றுவித்தார். “ஜீவாத்மா வேறு- பரமாத்மா வேறு’ என்ப தல்ல அவர் கொள்கை. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. அந்த பரமாத்மாவை உனக்குள்ளேயே காணலாம். அதனை அறிந்து வாழ்வதுதான் அத்வைத தத்துவம். கணக்கற்ற துறவிகள் அவருடைய சீடரானார் கள். ஆதிசங்கர பகவத்பாதரும் ஒரு ஸஹஸ்த்ர நாமத்தை எழுதினார். அது அம்பாளைப் பற்றியது. ஆயிரம் திருநாமங்களுடைய அம்பாளைத் துதிக்கும் அந்த ஸ்லோகத்திற்கு “லலிதா சஹஸ்த்ர நாமம்’ எனப் பெயரிட்டார். உமா மகேஸ்வரியின் அண்ணனான ஸ்ரீவிஷ்ணு விற்கு எப்படி சஹஸ்த்ர நாமம் உண்டா யிற்றோ அதைப்போல அம்பிகையையும் ஆயிரம் நாமங்களோடு துதித்தார் சங்கரர்.

ஒருநாள் காலை, ஒரு சந்நியாசிக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்துவிட்டு, ஆசிரம வாயிலிலுள்ள திண்ணையில் உட் கார்ந்தார் சங்கரர். அப்போது பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்த்ர நாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார்.  உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத் தார்.

சீடன் சங்கரரை வணங்கி நின்றான்.

“சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்ர நாம ஓலைச் சுவடி இருக்கும். அதை எடுத்து வா” என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்த்ர நாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், “”சீடனே… நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்த்ர நாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்… நன்றா கப் பார்…” என்றார். சீடன் படித்துப் பார்த்த போது “விஷ்ணு சஹஸ்த்ர நாமம்’ என்றிருந் தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடியும் உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்த்ர நாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.

“”உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தையே கொண்டு வருகிறாயே?” என்று கடிந்து கொண்டார் சங்கரர்.

அதற்கு அவன் சொன்னான்:

“”சுவாமி, நான் தாங்கள் இயற்றிய லலிதா சஹஸ்த்ர நாமத்தைத்தான் எடுத்தேன். ஆனால் ஒரு சிறுமி, மறுபடியும் மறுபடியும் என் கையில் இதைக் கொடுத்து அவரிடம் கொடு என்று கட்டளை இடுகிறாள். பார்த் தால் விஷ்ணு சஹஸ்த்ர நாமம். நான் என்ன செய்வது? தவறு என் மீதல்ல. அந்தச் சிறுமியின் விஷமம் இது…”

வியப்படைந்த ஆதிசங்கரர் ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தார். தன் சீடனுடைய கையில் லலிதா சஹஸ்த்ர நாமத்திற்கு பதிலாக விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தைக் கொடுத்து, “இதற்கு உரை எழுதச் சொல்’ என்றது அந்த அம்பாளே என்பதை அறிந்து மகிழ்ந்தார். அம்பாள் தன்னுடைய சீடனுக்கு காட்சியளித்த தைத் கண்டு மகிழ்ந்தாலும், தனக்கு அவள் தரிசனம் தரவில்லையே என்று வருந்தினார். இருப்பினும் அம்பாளுடைய கட்டளைக்கேற்ப விஷ்ணு சஹஸ்த்ர நாமத்திற்கு உரை எழுதி, அது இன்றளவும் பகவத்பாதருடைய பெருமையைப் பேசுகிறது.

பார்வதிதேவி சிவபெருமானிடம் கேட்கிறா ளாம்:

கேனோபாயேன லகுனோ
விஷ்ணூர் நாம ஸஹஸ்த்ரம்/
பட்யதே பண்டிதைர் நித்யம்
ச்ரோது மிச்யாம்யஹம் ப்ரபோ//

அதாவது, “”விஷ்ணுவின் ஆயிரம் பெயர் களை நினைவில் வைத்துக் கொண்டு வழிபட பண்டிதர்களாலும் படித்தவர்களாலும், மட்டுமே முடியும். சாதாரண பாமரர்களால் முடியுமா சுவாமி?” என்கிறாள் பார்வதிதேவி. அதற்கு சிவபெருமான் பதில் சொல்கிறார்:

ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே//
ஸஹ்ஸ்த்ர நாம தந்துல்யம்
ராம நாம வரானனே//

“”படிக்காத பாமரர்கள் “ஸ்ரீராம ராம ராம என்று சொன்னாலே போதும்; சஹஸ்ர நாம பாராயணம் செய்த புண்ணியம் கிடைக்கும்” என்றாராம் சிவபெருமான்.

உண்மைதான். ராம நாமத்திற்கும் நாராயண ஜெபத்திற்கும் அத்தனை மகிமை உண்டு. காலஞ்சென்ற என்னுடைய பாட்டனார் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் புலமை பெற்றவர். தினமும் இரவு படுக்கப்போகும்போது சில கதை களை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும். பிறகு அப் படியே தூங்கிவிடுவோம். அவர் சொன்ன ஒரு கதை…

ஒரு பெரியவர் இருந்தார். பக்திமான்.

அவருக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன் பின்னாளில் நாத்திகனாக இருந்தான்.

அவனுக்குத் திருமணமானவுடன் ஒரு குழந்தை பிறந்ததாம். குழந்தைக்கு தாத்தாவானவர், “நாராயணன்’ என்று பெயரிட்டார். குழந்தையின் தந்தையான நாத்திகனுக்கோ அந்தப் பெயர் பிடிக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய தந்தை வைத்த பெயராயிற்றே என்று சுருக்கமாக “நாணா… நாணா’ என்றுதான் தன் குழந்தையைக் கூப்பிடுவானாம். பல வருடங்கள் கழித்து

அந்த நாத்திகனுக்கு அந்திமக் காலம் நெருங்கி யது. அப்போது ஊரிலிருந்து வந்த மகன் நாராயணன், “அப்பா, என்ன ஆச்சு உங்க ளுக்கு?’ என்றானாம். நாக்கு குழற, “நாணா வந்துட்டியா?’ என்று கேட்பதற்கு பதிலாக, “நாராயணா வந்துட்டியா’ என்று சொன்ன அடுத்த கணம் அவன் உயிர் பிரிந்தது.

எம கிங்கரர்கள் அவனை மகாவிஷ்ணு விடம் அழைத்துச் சென்றார்களாம். “”இவனை மோட்சத்துக்கு அனுப்புங்கள்” என்றாராம் விஷ்ணு. “”என்ன சுவாமி இது. இவன் பெரிய பாவி. உங்களுடைய பெயரையே உச்சரிக்கக் கூடாது என்று தன் பிள்ளையையே “நாணா’ என்றுதானே கூப்பிட்டான். இவனை மோட்சத்துக்கு அனுப்புகிறீர்களே?” என்று கேட்டாளாம் மகாலட்சுமி. அதற்கு விஷ்ணு, “”கடைசியில் உயிர் பிரியும் முன்னர் நாராயணா என்று ஒருமுறை என் பெயரைச் சொல்லிவிட்டான். அதனாலேயே மோட்சம்” என்றா ராம்.

அதைப்போல “ஓம் நமோ நாராயணா’ என்றால் விஷ்ணு பக்தர்களும், “ஓம் நம சிவாய’ என்றால் சிவ பக்தர்களும் மோட்சத்தையும் கைலாயத்தையும் அடையலாம்.

(நன்றி : பா.சி.இராமச்சந்திரன் | நாமங்கள் ஆயிரம் நல்குவது பல்லாயிரம் | நக்கீரன்)

=======================================================================

Also check :

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!

=======================================================================

 

[END]

5 thoughts on “ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

  1. விஷ்ணு சகஸ்ர நாமத்தை பற்றிய பதிவு மிக அருமை,. விஷ்ணு சகஸ்ர நாம மகிமையை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். நம் வீட்டில் தினமும் காலையில் ருத்ரமும், மாலையில் விஷ்ணு சகஸ்ர நாமமும் casette மூலம் கேட்கும் வழக்கத்தை கடந்த இரண்டு வருடங்களாக continue பண்ணுகிறோம். தினமும் கனகதாராவும் சொல்வோம். இதனால் எவ்வளவோ பண நெருக்கடியையும் மன அழுததத்தையும் சமாளித்திருக்கிறோம்.

    ஒரு பள்ளிகூட ஆசிரியர் தனது 5 பெண் குழந்தைகளையும் நல்ல இடத்தில திருமணம் செய்து கொடுத்தது கண்டிப்பாக விஷ்ணு சகஸ்ர நாம மகிமையால் தான்.

    பூலோக வைகுண்ட போட்டோ அருமை

    ஆதி சங்கர பகவத் பாதாள் விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு உரை எழுதியதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்.நாம் அந்திம காலத்தில் விஷ்ணுவின் பெயரையோ சிவனின் பெயரையோ உச்சரித்தால் கண்டிப்பாக மோட்சம் உண்டு. அதற்கு நாம் வ வாழும் காலத்திலேயே பகவன் நாமாவை சொல்ல பழகி கொள்ள வேண்டும்

    ராம் ராம் ராம்

    நன்றி

  2. ‘நாராயணா’ என்னும் நாமம்…அதை

    நாவால் சொன்னால் வரும் ஷேமம்…….”

    நாராயண ஹரி ….நாராயண ஹரி ….

    சிவாய சிவ …….

  3. விஷ்ணு சகஸ்ர நாமம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை
    நன்றி

  4. இந்த பதிவை படித்துவிட்டு MS அவர்களின் CD வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். மதியம் உணவு இடைவேளை நேரத்தில் என் நண்பர் ஒருவர் இன்னொருவரிடம் ஒரு பென்டிரைவ் கொடுத்து இதில் நீங்கள் கேட்ட விஷ்ணு சகஸ்ரநாமம் லலிதா சகஸ்ரநாமம் திருமந்திரம் ருத்ரம் எல்லாம் இருக்கிறது. காபி செய்துவிட்டு என்னிடம் திருப்பிக்கொடுங்கள் என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் வாங்க நினைத்தது ஒரு CD தான். ஆனால் கடவுள் என்னை அவரது எல்லா நாமங்களையும் கேக்டவேண்டும் என்று கட்டளையிடுவதுபோல் நண்பர்மூலம் பென் டிரைவ் கிடைத்துள்ளது. விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுக்கொண்டேதான் என் கமெண்டை எழுதுகிறேன். CD வேண்டும் என்று கேட்டது என் நண்பர் சங்கரராமன் கொடுத்தது நண்பர் கோமதிராமன், ஆனால் கிடைத்தது ஸ்ரீராமன் எனக்கு.

    என்னை நோக்கி நீ ஒரு அடி எடுத்துவைத்தால் நான் உன்னை நோக்கி ஓடி வருவேன் – பாபா
    மனமார்ந்த நன்றி சுந்தர்.

    1. இதை படிக்கும் மாந்தர்கள்
      எல்லாம் பெற்று என்புருவோர்களாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *