Home > 2015

‘கலியுகத்தில் கடைத்தேற ஒரே வழி!’ – Rightmantra Prayer Club

பரமனை நாமங்களால் துதிக்கின்ற வழிபாடே மற்ற சாதனைகளை விட சிறந்தது என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு எழுதிய பாஷ்யத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் குறிப்பிடுகிறார். "இதில் (யாகத்தில் உள்ளது போல) ஹிம்சையில்லை, (பூஜை முதலியவைகளில் உள்ளது போல) இதர திரவியங்களில் அபேட்சையில்ல; தேச-கால நியமம் இல்லை" என்று விசேஷித்து கூறுகிறார். கலியுகத்தில் கடைத்தேற ஒரே வழி - "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |

Read More

வேதத்திற்கு ஒரு வேங்கட நரசிம்மன்!

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்து அது நிறைவேறிய அனுபவங்கள் மேலும் சில கிடைத்திருக்கின்றன. அதை ஒரு தனிப் பதிவில் அளிக்கிறோம். இதற்கிடையே பிரார்த்தனை பதிவு அளிக்கும் நாளான வெள்ளிக்கிழமை Jan 1 விடுமுறை நாள் என்பதால் ஒரு நாள் முன்கூட்டியே (அதாவது நாளை 31/12/2015 வியாழன்) பதிவை அளிக்க தீர்மானித்தோம். யாரை பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க கேட்டுகொள்வது என்று யோசித்தபோது, ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்பவர்களை பொருத்தவரை அந்தந்த

Read More

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!

தீபாவளியன்று குன்றத்தூர் அடிவாரத்தில் உள்ள திருமுறை விநாயகருக்கு நமது தளம் சார்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பற்றிய பதிவு இது. வறண்ட பிள்ளையாரை (வறண்ட பிள்ளையார் - நீண்ட நாட்கள் பூஜை காணாத பிள்ளையார்) தேடி புறப்பட்ட நம் பயணத்தின் பிள்ளையார் சுழியாக முதலில் இவருக்கு தான் அபிஷேக ஆராதனைகள் செய்ய திட்டமிட்டோம். இவர் வறண்ட பிள்ளையார் அல்ல. இவருக்கு தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. இருப்பினும் இவரிடம் உள்ள தனிச்சிறப்பு காரணமாக

Read More

மலையென வந்ததை பனியென நீக்கிய அஸ்திவாரம் – 2015 புத்தாண்டு ஆலய தரிசன அனுபவம்!

"நாம் ஏன் ஆலயம் செல்லவேண்டும்? இறைவன் தான் எல்லா இடங்களிலும் இருக்கிறானே?" என்ற புளித்துப் போன கேள்வியை சிலர் அடிக்கடி கேட்டு வருகிறார்கள் அல்லது கேட்க நினைக்கிறார்கள். இதற்கு ஒரே பதில் : "ஆலயம் தொழுவது சாலவும் நன்று!" என்பது தான். (* கிட்டத்தட்ட 60 புகைப்படங்கள் இந்த பதிவில் உள்ளன. எனவே உங்கள் கணினியிலோ அல்லது மொபைலிலோ இந்த பதிவு LOAD ஆவதற்கு சற்று அவகாசம் பிடிக்கும். சற்று பொறுமையாக இருந்து

Read More

21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி!

இந்திய விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்த ஒவ்வொரு வீரனும் நமக்கு கடவுள் போல என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு சிலிரிப்பூட்டும் ஒன்றாகும். இப்படியெல்லாம் கூட ஒருவர் இருந்திருக்க முடியுமா? இப்படியெல்லாம் கூட ஒருவர் தாய்நாட்டுக்காக தியாகங்களை செய்ய முடியுமா? வாழ்க்கை என்றால் இதுவல்லவா வாழ்க்கை என்று நெகிழ்ந்து போவோம். அப்படிப்பட்ட ஒருவர் தான் தியாகி உதம்சிங். டிசம்பர் 26, அவரின் பிறந்தநாள். ஆன்மீக பதிவுகளை அளிப்பதைவிட,

Read More

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

தீபாவளியன்று குன்றத்தூர் அடிவாரத்தில் உள்ள திருமுறை விநாயகருக்கு நமது தளம் சார்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது நினைவிருக்கலாம். அது பற்றிய பதிவை அளிக்க நினைத்து, எழுத ஆரம்பித்தோம். பிள்ளையாரின் பெருமையை விளக்கும் புராணக் கதை ஒன்றை அளித்துவிட்டு அதன் பிறகு விநாயகருக்கு நடந்த அபிஷேகத்தை விளக்கலாமே என்று இந்த கதையை எழுத ஆரம்பித்தோம். கதை சற்று பெரிதாக வந்துவிட்டதால் இதை தனிப்பதிவாக அளிக்கிறோம். திருமுறை விநாயகருக்கு நடைபெற்ற அபிஷேகம் தனிப்பதிவாக அடுத்து

Read More

சுவாமியே சரணம் ஏசப்பா…!

நாம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட நமது நூல்களில் ஒன்றான 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர்களில் ஒருவர் மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி பாலன் அவர்கள். அது மட்டுமல்ல நம் 2013 ஆம் ஆண்டு பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரும் கூட. திரு.வீ.கே.டி பாலன் அவர்கள் தனது 'சொல்ல துடிக்குது மனசு' நூலில் எழுதியுள்ள அருமையான சம்பவம் இது. (இதை ஏற்கனவே ஒரு முறை நமது தளத்தில் பகிர்ந்திருக்கிறோம்.) இறைவனையும் இறைவனது

Read More

பஞ்சாங்கமும் முன்னெச்சரிக்கை முத்தப்பாக்களும்!

சுனாமி குறித்து ஒரு வதந்தி இன்று சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. அதற்கு பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். அறிவியல் வளர்ச்சியோ இன்றைய தொழில்நுட்பங்களோ இல்லாத காலங்களில் நம் முன்னோர்கள் கிரகங்களின் சஞ்சாரத்தை கணக்கிட்டு அதை வைத்து போருக்கு செல்பவர்கள், திருத்தல யாத்திரை செல்பவர்கள். வியாபாரத்துக்காக தூரதேசத்துக்கு செல்பவர்கள், கடல் கடந்து வாணிபம் செய்யச் செல்பவர்கள், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஆகியவர்களை எச்சரிக்க கூறியவை இவை. அந்த அளவில் இதை

Read More

நண்பா… நீ மனிதனல்ல தெய்வம்!

நம் தளத்திற்காக எழுதுவது என்பது பல நேரங்களில் நமக்கு ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவது போலத் தான். அது ஆன்மீக பதிவுகளானாலும் சரி, சுயமுன்னேற்ற பதிவுகளானாலும் சரி. ஆனால் சில பதிவுகள் 'தவம்' போல. அத்தகைய பதிவுகளில் ஒன்று இது. ஒரு வரி விடாமல் படியுங்கள். ஒன்றல்ல இரண்டல்ல... பல பாடங்கள் இதில் ஒளிந்துள்ளன! FORTUNE FAVOURS ONLY THE BOLD! "உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம்

Read More

வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!

ஆங்கில புத்தாண்டு தினத்தை பொருத்தவரை உலகமே கொண்டாடுகிறது. நாமும் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் பப்புகளிலும், கிளப்புகளிலும் மதுக்கோப்பைகளை கையில் வைத்துக்கொண்டு 'சியர்ஸ்' சொல்லி புத்தாண்டை வரவேற்பவர்கள் ஒருவிதம். நட்டநடு ராத்திரி கடற்கரையில் கூடி, பின்னர் பைக்குகளில் அசுரத்தனமான ஆபத்தான வேகத்தில் "ஆ... ஊ..." என்று கூச்சலிட்டபடி  சாலைகளில் "ஹாப்பி நியூ இயர்" என்று கத்திக்கொண்டே புத்தாண்டை வரவேற்பவர் ஒருவிதம். தனியார் தொலைக்காட்சிகளில் அரைகுறை

Read More

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலை ஒட்டியுள்ள லிங்கப்பன் தெருவில், ஒரு வீட்டு  புழக்கடையில் கழிவறைக்கு கீழே சிவலிங்கமும், ரங்கநாதர் திருவுருவச் சிலைகளும் பெரியவாவின் அருளால் மீட்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோமல்லவா? (பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் - சிலிர்க்க வைக்கும் நிகழ்வு) அதன் புகைப்படங்கள் அடங்கிய பிரத்யேகப் பதிவு இது. சென்ற பதிவிலேயே புகைப்படங்களை அளித்திருக்கவேண்டியது. மகத்தான விஷயங்களுக்கு காத்திருப்பதில் ஒரு தனி சுகம் உண்டு. எனவே அடுத்த நாள் அளிக்க

Read More

வைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்!

மார்கழி மாதம் வந்த  உடனே   நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது  வைகுண்ட ஏகாதசி. ‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். நாளை 21/12/2015 திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி. நாளை அதிகாலை அனைத்து வைணவ ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு என்னும் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறும். வைகுண்ட ஏகாதேசி அன்று

Read More

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் ஒரு சங்கமமாக கோவில் நகரான குன்றத்தூர் விளங்குகிறது. இங்கு சுப்ரமணிய சுவாமியின் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் அடிவாரத்தில் மகாவிஷ்ணு ஊரகப் பெருமாள் என்ற பெயரில் ஒரு அழகிய கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். தாயார் பெயர் திருவிருந்தவல்லி தாயார். (செல்வம் மிகுந்த என்று பொருள்!). இந்தக் கோயிலுக்கும் காஞ்சிக் கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. குலோத்துங்க சோழன் இந்தப் பகுதியை ஆண்டு வந்த காலத்தில் அவனை ஒரு தோஷம் பற்றிக்

Read More

மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ? Rightmantra Prayer Club

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அளவில்லா செல்வம் இருந்தாலும் அவனிடத்தே வினயம் (அடக்கம்) சிறிதும் இல்லை. ஞானிகளையும் மகான்களையும் தூஷனை செய்து வந்தான். "மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? கடவுளுக்கும் நமக்கும் இடையே தரகர்கள் போல இவர்கள் எதற்கு? என் தெய்வத்திடம் வேண்டியதை நானே பெற்றுக்கொள்வேன்" என்பதே அவனது வாதம். அந்த ஊருக்கு ஒரு மிகப் பெரிய சாது ஒருவர் வந்தார். அந்த செல்வந்தனிடம் இருந்த அகம்பாவத்தை

Read More