Home > 2013 > November

பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! – Rightmantra Prayer Club

அந்த பள்ளியில் மாணவர்கள் நன்கு கல்வி கற்றாலும் ஒருவர் மீது மற்றவர் துவேஷத்துடனும் பொறாமையுடனும் இருப்பதை ஆசிரியர் கவனிக்கிறார். பிஞ்சு உள்ளங்களில் உள்ள இந்த நஞ்சை ஆரம்பத்திலேயே போக்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வெள்ளியும் நீதி போதனை வகுப்புகள் நடைபெறுவதுண்டு. ஒரு வெள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போது, வகுப்பில் பெஞ்சுக்கு முன்னே ஒரு பெரிய மரப்பலகையில் வெள்ளை காகிதம் ஒட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறார்கள். அருகே ஒரு டேபிளில் கூர்மையான

Read More

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

பிறந்தநாளன்று நங்கநல்லூர் நிலாச்சாரலில் உள்ள பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு உணவு ஸ்பான்சர் செய்து நாமும் அவர்களுடன் சாப்பிடவேண்டும் என்று ஆசை இருந்தது. காலை ஹோமம் முதலானவைகளை ஏற்பாடு செய்திருந்தபடியாலும் மதியம் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததாலும் இரவு டின்னர் அவர்களுடன் சாப்பிடுவது என்று முடிவானது. அது தான் எனக்கும் சௌகரியம். அலுவலகம் முடிந்து நேரே நங்கநல்லூர் செல்வதற்கு சௌகரியாமாய் இருக்கும். இதையடுத்து நிலாச்சாரலில் 26 நவம்பர் செவ்வாய் இரவு டின்னர் ஸ்பான்ஸர்

Read More

அன்னமிட்ட அண்ணல்!

இதுவரை எத்தனையோ முறை என் பிறந்த நாள் சென்றிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தான் அது அர்த்தமுள்ள வகையில் சென்றது என்று கருதுகிறேன். முன்னதாக கூறியபடி, நான் என்னை உணர்ந்த பிறகு, என் கடமையும் பாதையும் எதுவென்று தெளிந்த பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் இது ஒருவகையில் முதல் பிறந்தநாள். பிறந்தநாளின் முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் நான் அளித்த பதிவுகளில் கூறப்பட்டிருந்தது எனக்கு முன்பே தெரியுமென்றாலும் ஒரு பதிவாக அதை அளித்து

Read More

திருடனுக்கும் மோட்சமளித்த செருப்பு, குடை தானம்!

பிறந்த நாளை முன்னிட்டு தளத்திலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தன்னலமற்ற  சேவையை உங்களுக்கு தொடர்ந்து அளிப்பதே உங்கள் அன்புக்கு நான் செய்யும் கைமாறாக இருக்க முடியும். நேற்று காலை நான் எழுந்தது முதல் மறுபடியும் உறங்கச் சென்றது வரை நெகிழ்ச்சியான அனுபவங்களுக்கு குறைவில்லை. குருவருளும் திருவருளும் குறைவின்றி பொழிந்ததை உணர்ந்தேன். அனைத்தையும் எழுதி வருகிறேன். அடுத்து வடலூர் பயண அனுபவங்கள். வடலூரில் நான் சந்தித்த அந்த முக்கிய

Read More

இந்த உலகம் யாருக்கு சொந்தம் ? Monday Morning Spl 21

அவர் ஒரு சமூக  சேவகர். ஒரு நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரு சுரங்கபாதையை கடக்கும்போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, "உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்" என்று மிரட்டுகிறான். திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன்

Read More

“ஊசிக்கு பின்னாலே நூல்!” – அம்மையப்பனிடம் வரம் கேட்ட முனிவர் – Rightmantra Prayer Club

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,"மரத்தடியில் பார்த்தீர்களா?" என்றாள். "பார்த்தேன்" என்றார் பரமன். "பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்" என்றாள் அம்மை. "அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம்

Read More

வீடு தேடி வர ஸ்ரீராமன் தயார்… வரவேற்க நீங்கள் தயாரா?

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் & எழுத்தாளர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக தொண்டு நிறுவனமான கிஞ்சிட்காரம் டிரஸ்ட் சார்பாக சென்ற ஆண்டு ஒரு காலண்டர் வெளியிடப்பட்டது நம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அன்னை மகாலக்ஷ்மியின் பல்வேறு வடிவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, 'லக்ஷ்மீ கடாக்ஷம்' என்கிற பெயர் கொண்ட அந்த அழகிய காலண்டரை திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களே முன்னின்று வடிவமைத்து சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து அதை வெளியிட்டார். சுமார் ஒரு லட்சம்

Read More

ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!

என்ன தான் பரபரப்பான வாழ்க்கையில் உழன்றாலும் வாழ்வின் உன்னதமான விஷயங்கள் குறித்து எப்போதும் என்னிடம் ஒரு தேடல் இருந்தபடி இருக்கும். ஒரு நாள் அலுவலகத்துக்கு செல்லும்போது, மவுண்ட் பூவிருந்தவல்லி சாலையில் எனக்கு முன்னே சென்ற ஷேர் ஆட்டோவில் கரும்பலைகையில், 'தினம் ஒரு திருக்குறள்' என்ற தலைப்பில் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் அதற்கு கீழே ஆங்கில விளக்கமும் தரப்பட்டிருந்தது. இது போன்ற ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களின் பின்புறம் குடும்ப கட்டுப்பாடு

Read More

குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி!

மஹா பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பற்றிய படிக்கும்போது நம்மையுமறியாமல் கண்களில் நீர் கசிந்துவிடுவதுண்டு. எனக்கு பலமுறை அது போல ஏற்பட்டிருக்கிறது. நம் வாசகர்களுக்கும் அப்படியே. ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் அந்த கருணைக் கடல் அருள் மழை பொழிந்தது, பொழிந்துவருகிறது. அவரையே கதி என்று சரணடைந்த பக்தர்களுக்காக பல நேரங்களில் இறைவனிடம் மன்றாடி பல மகத்தான விஷயங்களை சாதித்து தந்துள்ளார். இத்தனைக்கும் அந்த மகான் தனக்கென்று இறைவனிடம்

Read More

பாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா?

"நிறைய நல்ல காரியம் பண்றேன் சார்... தர்மம் பண்றேன்... கோவில்களுக்கு நிறைய செஞ்சிகிட்டு வர்றேன். நான் செய்யலேன்னா கூட எனக்காக எங்கப்பாம்மா நிறைய நல்ல விஷயம் பண்றாங்க. ஆனா அப்படி இருந்தும் எதுவும் பலனளிக்கவில்லை... நோ யூஸ் சார்.... " என்று சொல்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் உட்பட அனைவரும் அவசியம் இதை தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு பக்கம் புண்ணியம் சேர்த்துக்கொண்டே சென்றாலும் மறு பக்கம்  அந்த புண்ணியம் பலனற்று போகும் விதம்

Read More

கார்த்திகையன்று ஏற்றப்பட்ட மூன்று விளக்குகள் – ஒரு நேரடி அனுபவம்!

இந்த வார பிரார்த்தனை கிளப், கார்த்திகை தீபத்தன்று வந்தபடியால் அந்த நேரம் குன்றத்தூர் கோவிலில் இருக்கவேண்டும் என்பது தான் நமது விருப்பமாக இருந்தது. ஆனால் மனமெங்கும் திருவண்ணாமலையில் தான் இருந்தது. சரி... அடுத்த முறை நிச்சயம் அண்ணாமலையில் இருக்கவேண்டும். இம்முறை குன்றத்தூர் குமரனிடம் இருப்போம் என்று முடிவு செய்தேன். நங்கநல்லூர் நிலாச்சாரல் ராதாகிருஷ்ணன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு வசதியற்ற பெண்ணின் திருமணத்திற்கு

Read More

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

"என்ன வாழ்க்கை இது? நித்தம் நித்தம் போராட்டமாக இருக்கிறது...! கண்ணீரை துடைக்க கூட எவரும் இல்லையே" என்று மனம் வெதும்பும் பெண்கள் அநேகம் உண்டு. பிறந்த வீட்டில் தான் எந்த சுகமும் இல்லை... புகுந்த வீட்டிலாவது சற்று நிம்மதியாக இருப்போம் என்றால் சிங்கத்திடம் இருந்து தப்பித்து புலியிடம் சிக்கிக்கொண்ட கதையாக சிலரின் (பலரின்) கதை அமைந்து விடுகிறது. அலுவலகம், வீடு, உறவு, நட்பு என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சூழ்ச்சி, சூது

Read More

திருமலை வெங்கடேச பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர் !

நேற்று கார்த்திகை தீபத்தின் போது குன்றத்தூரில் இருந்தோம். கார்த்திகை தீப தரிசன அனுபவத்தை எழுதி வருகிறேன். நேரடி புகைப்படங்களுடன் ஒரு விரிவான பதிவு வரவிருக்கிறது. தவிர உங்களை நெகிழ வைக்கும் வேறு சில விஷயங்களும் நம் தளம் சார்பாக (நேற்று) கார்த்திகை தீபத்தன்று நடைபெற்றது. நம் நண்பர்கள் & தள வாசகர்கள் சிலர் தங்களை கவர்ந்த செய்திகளையோ கட்டுரைகளையோ இணையத்தில் படிக்க நேர்ந்தால் அதை நமக்கு அனுப்புவதுண்டு. நாமும் அவற்றை நேரமும்

Read More

அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் ! Monday Morning Spl 20

ஒரு பெண் தோட்டத்தில் உள்ள புல்வெளியில் குழந்தைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தாள். கணவன் வெளியே சென்றிருந்தான். விளையாடும்போது குழந்தைகள் அடித்த பந்து புல்வெளிக்குள் சென்று மறைந்துவிட, அதை தேடிக்கொண்டு இவள் சென்றாள். அங்கே ஒரு பொறியில் ஒரு வெள்ளை எலி சிக்கியிருப்பதை பார்க்கிறாள். இவளை பார்த்தவுடன், அந்த வெள்ளை எலி பேசியது. "என்னை இந்த பொறியில்  இருந்து விடுவித்தால் உனக்கு மூன்று வரம் தருவேன்" என்றது. இவளுக்கு எலி பேசுவது ஆச்சரியம். தன்னை விடுவித்தால் வரம்

Read More