Home > All in One

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!!

நம் நண்பர் சுந்தர் மறைவு ஏற்று கொள்ள முடியாத பெரிய இழப்பு. நண்பர்களும், ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரிய வெற்றிடம் தான் தெரிகிறது. அவரின் இந்த அசுர மாற்றம் கடந்த 3-4 வருடங்களில் ஏற்பட்டது. அவர் பிறவியிலேயே நல்ல எழுத்தாளர். சூப்பர் ஸ்டார் தளத்திலும் ஏகப்பட்ட வாசர்கள் உண்டு. www.rightmantra.com எந்த அளவிற்கு பரவியதோ அந்த அளவிற்கும் மேல் ரைட் மந்த்ரா சுந்தர்ஜி யின் புகழ் பரவியது. அவரின் தொண்டு, சுய முன்னேற்றம்,

Read More

யார் மிகப் பெரிய திருடன் ?

அவன் ஒரு பலே திருடன். வாழ வழி தெரியாமல் சிறு சிறு திருட்டுக்களில் ஆரம்பித்து பின்னர் அது பழகிவிட வீடுகளில் புகுந்து திருடும் மிகப் பெரிய திருடனாகிவிட்டான். ஒரு கட்டத்தில் சாதாரண திருட்டு போரடித்துவிட, பிரபலங்களின் வீடுகளில் புகுந்து திருட ஆரம்பித்துவிட்டான். இது மிகவும் சேலஞ்சிங்காக சுவாரஸ்யமாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு வாரமும் ஒரு சினிமா நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என ஏதாவது ஒரு பிரபலத்தின் வீட்டில் தனது கைவரிசையை

Read More

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

பொள்ளாச்சியை சேர்ந்த 'அருணாச்சல அக்ஷர மணமாலை' என்கிற அமைப்பின் நிறுவனர் நண்பர் பாலசுப்ரமணியன் என்பவர் நேற்றைக்கு நமது வீட்டுக்கு ஒரு பெரிய கூரியர் அனுப்பியிருந்தார். மாலை சென்றபோது பிரித்துப் பார்க்கிறோம்... பகவான் ரமண மகரிஷியின் 135வது ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள 'ரமண திருவிளையாடற் திரட்டு' மற்றும் 'சிவமணியம்' என்கிற இரண்டு விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள். இரண்டு நூலையுமே ஒரு புரட்டு புரட்டியதில், "நிச்சயம் ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம்

Read More

குமரகுருபரர் அருளிய ‘சகலகலாவல்லி மாலை’ பிறந்த கதை – கலைவாணியின் அதிசயம்!

'அர்த்தமுள்ள ஆயுத பூஜை' என்கிற தலைப்பில் சிறப்பு பதிவு தயாராகி வருகிறது. இன்றிரவோ நாளையோ பதிவளிக்கப்படும். இப்போதைக்கு முந்தைய ஆண்டுகளில் நாம் வெளியிட்ட சரஸ்வதி பூஜை சிறப்பு  பதிவை மீண்டும் அளிக்கிறோம்.  இப்போதைக்கு ஒரு அவசர குறிப்பு : சரஸ்வதி பூஜை என்றழைக்கப்படும் ஆயுத பூஜையன்று அவசியம் அனைவரும் பொரி சாப்பிடவேண்டும். (குறைந்தது  இரண்டு கைநிறைய). தேவர்களுக்கு மிகவும் பிடித்தமானது பொரி. பொரி சாப்பிடுவது பாபத்தை போக்கும் என்று மகா பெரியவா

Read More

அன்னமிட்ட அண்ணல்!

இதுவரை எத்தனையோ முறை என் பிறந்த நாள் சென்றிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தான் அது அர்த்தமுள்ள வகையில் சென்றது என்று கருதுகிறேன். முன்னதாக கூறியபடி, நான் என்னை உணர்ந்த பிறகு, என் கடமையும் பாதையும் எதுவென்று தெளிந்த பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் இது ஒருவகையில் முதல் பிறந்தநாள். பிறந்தநாளின் முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் நான் அளித்த பதிவுகளில் கூறப்பட்டிருந்தது எனக்கு முன்பே தெரியுமென்றாலும் ஒரு பதிவாக அதை அளித்து

Read More

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி எனக்கு எப்போதும் உண்டு. அதுவும் இப்போது அந்த வெறி உச்சத்தில் இருக்கிறது. சரியான பாதை, சரியான நண்பர்கள், நல்லோர் அறிமுகம் அதன் மூலம் நமக்குள் ஏற்படும் சிந்தனை மாற்றம்,  தன்னலமற்ற நல்ல உள்ளங்களின் நட்பு, விதியை புரட்டிபோட்டு வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டிய சாதனையாளர்களின் சந்திப்பு - என்னுடைய நிகழ்காலம் இது தான். என்னுடைய பேச்சு, செயல், சிந்தனை, சந்திப்பு எல்லாம் தற்போது இது

Read More

அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை!

இந்த அவசர உலகில் தான் எத்தனை எத்தனை மனிதர்கள்? பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணடித்து, அதையும் பெருமை பேசுகிறவர்கள் ஒரு புறம். தனது முன்னேற்றம், தங்கள் குடும்பத்தின் முன்னேற்றம் இந்த இரண்டும் மட்டுமே இந்த உலகில் கவனம் செலுத்தக்கூடிய விஷயங்கள்.. மத்ததையெல்லாம் "அந்த பகவான் பார்த்துப்பான்" என்று சுயநல சிந்தனையோடு வாழ்பவர்கள் மறுபுறம். அடுத்தவர்களை கெடுத்து பலவித வன்செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை சக்கரத்தை ஒட்டிகொண்டிருக்கும் வஞ்சகர்கள் கூட்டம் ஒருபுறம். அனைத்தையும் குறை சொல்லிக்கொண்டு அதே

Read More

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. அந்த தம்பதிகள் இருவரும் புதிதாக மணமானவர்கள். கணவன் அடுத்த நாள் சபரிமலைக்கு புறப்படவிருக்கிறார். இந்த நேரம் பார்த்து அவரது புது மனைவிக்கு கைகள் இரண்டிலும் - தோள்பட்டையிலிருந்து கீழே விரல்கள் வரை - ஏதோ அலர்ஜி ஏற்பட்டு எரிச்சல் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது காயத்தில் மிளகாய்த் தூளை தடவியது போன்ற ஒரு எரிச்சல். காரணம் என்ன ஏது என்று தெரியவில்லை. உடனே மருத்துவமனைக்கு

Read More

‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை ! மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….

'கந்தன் கருணை' படத்துல "உலகத்திலேயே பெரியது என்ன?" அப்படின்னு ஒளவை பாட்டியிடம் முருகப் பெருமான்  கேட்கும்போது  ஒளவை என்ன சொல்வாங்கன்னு ஞாபகம் இருக்கா? பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் கரிய மாலோ அலைகடற் றுயின்றோன் அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம் குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத்தொடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும்

Read More

ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!!

இந்த மார்கழி மாசம் முழுக்க லௌகீக விஷயங்களை குறைச்சுகிட்டு கோவிலுக்கு போகணும். அதற்க்கென்றே ஒதுக்கப்பட்ட மாதம் இது. மாதம் முழுக்க போகமுடியதவங்க... என்னைக்கெல்லாம் முடியுமோ அன்னைக்கு போங்க. அதுவும் முடியாதவங்க... அவசியம் சொர்க்க வாசல் திறப்புக்காகவாவது போங்க. தமிழகத்தில் உள்ள வைணவத்  திருத்தலங்களில் நாளை காலை (Dec 24, 2012) பிரம்ம முஹூர்த்தத்தில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஒருவேளை இந்தப் பதிவை நீங்கள் தாமதமாக பார்க்க நேர்ந்தால் பரவாயில்லே.. அடுத்த வருஷம்

Read More

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை. அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. சோற்றுக்கோ சுகத்துக்கோ பஞ்சமில்லை. சோறு சலித்தால் இருக்கவே இருக்கிறது கே.எப்.சி. & பீட்சா ஹட். அம்மா தரும் காபி சலித்தால் இருக்கவே இருக்கிறது காஃபி டே. கேளிக்கைக்கும் பஞ்சமில்லை. தொலைகாட்சி சலித்தால் இருக்கவே இருக்கிறது மல்டிப்ளெக்ஸ். மொபைல் ஃபோன் வடிவத்தில் ஒரு சினிமா தியேட்டரே நமது கைகளில் தவழ்கிறது.

Read More

நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?

இந்த தளத்தை ஆரம்பிக்கும் சமயம், எனது இன்ஸ்பிரேஷன்களில் ஒருவரான திரு.நாராயணசாமி (Shivatemples.com) அவர்களை சந்தித்து ஆசி பெற சென்றேன். அப்போது வாழ்த்திய அவர், "இந்த தளம் எல்லாவித தடைகளையும் தாண்டி, வெற்றிகரமாக அமைய சிவன் உங்களுக்கு அருள் புரிவார்" என்று கூறி வாழ்த்தினார். எனக்கு ஒரு மாதிரி இருந்தது. "உங்கள் ஆசி கிடைத்ததில் சந்தோஷம் சார். ஆனால், நான் இப்போ தான் நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறேன். இங்கேயும் தடைகள் அது இது

Read More

மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி? தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை!

'சிரஞ்சீவி' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை 'சிரஞ்சீவி' என்பர். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். பின்னே இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12

Read More

செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

'பர்சனாலிட்டி' அதாவது 'ஆளுமை' என்பது ஏதோ தோற்றத்தையும், நிறத்தையும், டிப் டாப் உடைகளையும், ஆங்கில FLUENCY யையும் வைத்து மட்டும் வருவதில்லை. அது பல விஷயங்களை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் ஒருவரை ஈர்க்க வேண்டுமானால் உங்கள் தோற்றம் பயன்படலாம். ஆனால் அந்த ஈர்ப்பை மரியாதையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் பர்சனாலிட்டி மட்டுமே உதவும். தோற்றம் உங்கள் உருவத்தை மட்டுமே வெளிப்படுத்தும். பர்சனாலிட்டி உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்தும். அது தான் விஷயம். எனவே பர்சனாலிட்டியில் சிறந்து

Read More