Home > 2015 > June

கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

முருகப்பெருமானின் பெருமையை கூறும் 'திருப்புகழ்' எனப்படும் பாக்களை இயற்றியவர் அருணகிரிநாதர். நாளை ஜூலை 1 (ஆனி மூலம்) அவரது ஜெயந்தித் திருநாள். திருப்புகழ் பாக்கள் யாவும் எழுத்தாணி, ஏடு, முதலியன கொண்டு, யோசித்து எழுதாமல் உடனுக்குடன் பேசுவது போல “ஆசு" கவிகளாகத் தோன்றியவை. பதினாறாயிரம் திருப்புகழ்ப் பாக்களை அவர் பாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கால வழக்கில் நமக்குக் கிடைத்துள்ள அவரது திருப்புகழ்ப் பாடல்கள் 1307 தாம். மகாபாரதத்தை தமிழில் பாடியவர் வில்லிபுத்தூரார்.

Read More

‘ஆண்மை’ என்பது எது ? – கண்டதும் கேட்டதும் (6)

வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி! (தவிர்க்க இயலாத காரணங்களினால் நேற்று இந்தப் பதிவை அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்!) 1) சீக்கிரம் படிப்பை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? அமெரிக்க அதிபர் கார்பீல்டு கல்லூரி ஒன்றின் தலைவராக இருந்த சமயம்,

Read More

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

இது வரை நாம் படித்த கதைகளில் ONE OF THE BEST என்று இதைச் சொல்லலாம். நீங்களும் படியுங்கள். கதை கூறும் கருத்துக்களை உங்கள் ஆழ்மனதில் விதையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இந்த கதையை சொல்லுங்கள். (குழந்தைகளிடம் கதை சொல்லும் பழக்கம் எத்தனை பேருக்கு உண்டு?) அர்த்தமுள்ள சோதனைகள் ஆண்டவனின் போதனைகள்! சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொள்ளாமல் சாதனைகள் புரிந்தவர்கள் என்று சரித்திரத்தில் எவருமே இல்லை. புலிகள் வாழும் அதே காட்டில்தான் புள்ளிமான்களும் வாழ்கின்றன. பூனைகள்

Read More

மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

இன்று (ஜூன் 28) சாண்டோ சின்னப்பா தேவரின் பிறந்த நாள். மருதமலை முருகன் என்றால் தேவர் பெயர் நினைவுக்கு வராதவர்கள் இருக்க முடியாது. அதே போல தேவர் என்றாலும் மருதமலை ஆண்டவன் தான் நினைவுக்கு வருவார். எத்தனை பெரிய பாக்கியம் இது...! ஒரு மனிதன் வழி தவறி நடப்பதற்குரிய அத்தனை காரணிகளும் சர்வ சாதாரணமாக புழங்குமிடம் திரையுலகம். ஆனால், அதிலிருந்துகொண்டும் ஒருவர் கொள்கைக்குன்றாய் பக்திமானாய் வாழமுடியும் என்பதை நிரூபித்தவர் தேவர்.

Read More

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

சிவபெருமானின் பெருமைகளை பாடும் திருமுறைகளின் பெருமை அளவிடற்கரியது. விதியையே மாற்ற வல்லது. திருமுறைகளை பற்றிய அறிவும் ஞானமும் உங்களுக்கு இருக்கிறது என்றாலே உங்களால் விதியையே மாற்ற முடியும் என்று தான் அர்த்தம். இதில் திருஞானசம்பந்தர் பாடிய இசைப்பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று திருமுறைகளும் திருநாவுக்கரசர் பாடியவை. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் பாடியவற்றை திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடல்களை தேவாரம் என்றும்,

Read More

கனடாவில் அதிருத்ர மஹாயக்ஞம்!

கனடாவிலிருந்து நமது வாசகர் ராகவன் என்பவர் இன்று தொடங்கி ஜூலை 5 வரை டொரன்டோவில் நடக்கவிருக்கும் அதிருத்ர மஹா வேள்வியை பற்றி தகவல் அனுப்பியிருக்கிறார். இதில் கலந்துகொள்ள கனடாவில் வசிக்கும் இதர வாசகர்கள் எவரேனும் விரும்பினால் கலந்துகொள்ளலாம். அதிருத்ர மஹாயக்ஞம் 2015 - டொரன்டோ, கனடா கனடா நாட்டில் முதல் முறையாக அதிருத்ர மஹாயக்ஞம் டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது. ப்ராம்டன் வேதா குழவின் சார்பில் அதிருத்ர மஹாயக்ஞம் ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை திருவாரூர்

Read More

“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

இன்று ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் பல கருத்துள்ள பாடல்களை இயற்றியிருக்கிறார். கம்ப ராமாயணத்திலும் பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். நாத்திகம் பேசிக்கொண்டிருந்த கண்ணதாசனை ஆத்திகத்தின் பக்கம் திருப்பிய பெருமை காஞ்சி மஹா பெரியவருக்கும்

Read More

நீண்ட நாள் வாழ்வதற்குரிய வழி என்ன தெரியுமா?

மூச்சு விட்டுக்கொண்டு பூமிக்கு பாரமாய் இருப்பதெல்லாம் வாழ்வதாகாது. எனவே பதிவின் தலைப்பை பார்த்து அனர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். 'வாழ்தல்' என்பதற்கு வள்ளுவர் தரும் இலக்கணமே வேறு. 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்கிறார் வாழ்தல் குறித்து தெய்வப்புலவர். வள்ளுவர் கூற்றிற்கு ஏற்ப, காலத்தால் அழியாத ஒரு காவியத்தை மொழிபெயர்த்து, அதன் மூலம் புகழ் பெற்று, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் இன்று எங்கோ உலகத்தின் மூலையில் ஒரு இணையத்தளத்தில் ஒரு பதிவாக

Read More

தெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி!

தமிழகத்தின் எந்த குடியிருப்பு பகுதியை நீங்கள எடுத்துக்கொண்டாலும் தெருக்களுக்கு பொதுவாக யார் பெயர் சூட்டப்பட்டிருக்கும் ? உங்கள் தெருவின் பெயர் என்ன என்று சற்று பாருங்களேன்...! விட்டில் பூச்சிகளாக வாழ்ந்து (?!) மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் (அ) அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள் (அ) அந்த லே-அவுட்டை ப்ரொமோட் செய்தவர்களின் சொந்தங்களின் (?!) பெயர்கள் (அ) சில நேரங்களில் தேச விடுதலைக்காக சிறை சென்ற தலைவர்கள் மற்றும் சுதந்திர

Read More

சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)

வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி! 1) சாதனை என்பது சுலபமா? கொலம்பஸ் பல மாதங்கள் கப்பல் பயணம் செய்து அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டு தாய்நாடான இத்தாலிக்கு திரும்பிய பின்னர் அரசாங்கம் அவருக்கு மிக பெரிய பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு

Read More

நூம்பல் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தர்கள் முறைப்படி மஹா ம்ருத்ஞ்சய வேள்வி!

சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி செல்லும் நெடுஞ்சாலையில் வேலப்பஞ்சாவடியிலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது நூம்பல் கிராமம். காசி விஸ்வநாதருக்கு உகந்த மலரான நூம்பல் என்னும் பெயருடைய இந்த கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப் புராதனமான கருங்கற்களால் கட்டப்பட்ட கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் கூடிய சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. (பிரதி மாதம் நமது தளத்தின் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வரும் இரு ஆலயங்களுள் இது ஒன்று). இமயம் விட்டு பொதிகை நாடி

Read More

அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்! RIGHTMANTRA PRAYER CLUB

சென்னையை அடுத்துள்ள போரூரைச் சேர்ந்தவர் திருமதி.வத்சலா வேணுகோபால். வயது 58. சென்ற வாரம் ஒரு நாள் இரவு, சுமார் 10.00 மணியளவில் திடீரெனெ "அம்மா... நெஞ்சுவலிக்குதே..." என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர், அப்படியே மூர்ச்சையாகிவிட்டார். என்னவோ ஏதோ என்று பதறிப்போன பிள்ளைகள், அவரை உடனே வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு பரிசோதனை நடந்தபோது, பிள்ளைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஏதோ கேட்கப் போய் ஏதோ பதில்

Read More

கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் !

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோ-சாலையில் காமாக்ஷி என்ற பசு, ஆண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. புனர்பூசம் நட்சத்திரம். தாயும் சேயும் நலம். வெள்ளிக்கிழமை காலை இதைவிட ஒரு நல்ல செய்தியை பகிரமுடியுமா? எல்லாம் விஸ்வநாதர் அருள்! நெற்றியில் நீறு பூசி பிறந்துள்ள குழந்தை கொள்ளை அழகு. இதுவரை இங்கு காணாத நிறம். இந்த கோவிலில் கடந்த மூன்றாண்டுகளாக நம் தளம் சார்பாக பிரதி மாதம் கோ-சம்ரட்சணம் செய்துவருவது நீங்கள்

Read More

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

சராசரி வாழ்வில் நமக்கு தோன்றும் கேள்விகளுக்கு மஹா பெரியவா அளித்த பதில்களைப் பற்றிய பதிவை சென்ற குரு வாரம் வெளியிட்டது நினைவிருக்கலாம். நம் வாசகர்கள் மத்தியிலும் மஹா ஸ்வாமிகளின் பக்தர்கள் மத்தியிலும் அந்த பதிவு அமோக வரவேற்பை பெற்றதோடல்லாமல், அந்த பதிவை தொடரவேண்டும் என்றும் பலர் நம்மிடம் கேட்டுக்கொண்டார்கள். வெகு ஜனக் கோரிக்கையையடுத்து அந்த பதிவின் இரண்டாம் பாகமாக மேலும் சுமார் 10 கேள்விகளுக்கு மஹா ஸ்வாமிகளின் பதில்கள் தரப்பட்டுள்ளது. 'தெய்வத்தின்

Read More