Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

print
ன்று (ஜூன் 28) சாண்டோ சின்னப்பா தேவரின் பிறந்த நாள். மருதமலை முருகன் என்றால் தேவர் பெயர் நினைவுக்கு வராதவர்கள் இருக்க முடியாது. அதே போல தேவர் என்றாலும் மருதமலை ஆண்டவன் தான் நினைவுக்கு வருவார். எத்தனை பெரிய பாக்கியம் இது…! ஒரு மனிதன் வழி தவறி நடப்பதற்குரிய அத்தனை காரணிகளும் சர்வ சாதாரணமாக புழங்குமிடம் திரையுலகம். ஆனால், அதிலிருந்துகொண்டும் ஒருவர் கொள்கைக்குன்றாய் பக்திமானாய் வாழமுடியும் என்பதை நிரூபித்தவர் தேவர். நாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்கள் அவசியம் தேவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கவேண்டும். தனி மனித ஒழுக்கத்துக்கும், அவனது கொள்கை பிடிப்புக்கும், இறை நம்பிக்கைக்கும் உள்ள முப்பிணைப்பை மிக அழகாக எடுத்துக் கூறுவது இவர் வரலாறு. ஆன்மீகத்திலோ சுயமுன்னேற்றத்திலோ சாதிக்க விரும்புபவர்கள் அவசியம் இவர் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பதிவில் பா.தீனதயாளன் எழுதியிருக்கும் ‘சாண்டோ சின்னப்பா தேவர்’ என்கிற புத்தகத்திலிருந்து தேவர், ‘தெய்வம்’ படத்தை எடுத்த பின்னணியில் நடைபெற்ற சுவையான சம்பவங்களையும், அதற்காக அவர் பட்ட பாட்டையும், இறுதியில் கிடைத்த ஒரு எதிர்பாரா பரிசையும் பற்றி பார்ப்போம்.

அன்னாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தப் பதிவை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறோம். மருதமலை உள்ளவரை தேவரின் புகழ் இந்த பூமியில் நிலைத்திருக்கும்!

மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி! 

ல்லா பெரிய மனிதர்களுக்கும் ஏற்படுகிற ஆசை, சுயசரிதை எழுதுவது. தேவருக்கும் அடிக்கடி மனத்தில் வந்து போகும். ‘ஏம்பா… இத்தனை பேர் என் கதை இலாகால இருக்கீங்க. என் வாழ்க்கை வரலாற்றை எழுதித்தரக்கூடாதா. ஏன்யா அய்யா பிள்ளை, நீ எங்காலத்து ஆளு. நான் பட்ட கஷ்ட நஷ்டம் கூடவே இருந்து பார்த்தவன். நீயும் அசட்டையாவே இருக்கே.’

சினிமா கதைகளை எழுதுவதற்கே அங்கு நேரம் இருக்காது. தேவரின் சுயபுராணத்தை எப்படி ஆரம்பிப்பது? கதை இலாகா தங்களுக்குள் விவாதித்தது. அவர்களுக்கு நல்ல யோசனை தோன்றியது.

Chinnappa Devar‘அடப்போங்கண்ணே…. உங்க கதையை புஸ்தவமா எழுதலாம்னா அதுக்கு காலம் ஆவும். பேசாம, உங்க வாழ்க்கையைப் படமாவே எடுத்திடலாமே. மூணு மாசத்துல நாலு கோடி பேர் பார்த்து ரசிப்பாங்களே.’

உச்சி குளிர்ந்து போனது தேவருக்கு.

‘என் கதைன்றது என்ன? முருகனுடைய திருவிளையாடல். அந்த மருதமலையான் என்னை எப்படி காப்பாத்தி கரை சேர்த்தான். அதெல்லாம் உங்களுக்கு நல்லா தெரியுமே. அதுல சினிமாவுக்கு எதெல்லாம் தோதுபடுதுன்னு பாருங்க.’

தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஆறு கதைகளாகத் தனித் தனியாக திரைக்கேற்றவாறு உருவானது. ஆறுமுகன் திருத்தலங்களில் அவை நடைபெற்றது போல மெருகூட்டப்பெற்றது. மருதமலைக்கு முதலிடம் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து சுவாமிமலை, பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி என்று கோயில்கள் காட்டப்பட்டன.

வாரியார் தோன்றி சொற்பொழிவு செய்வதாக கதை நகர்ந்தது. முருகன் ஆலயங்களில் நடைபெற்ற பல திருவிழாக்கள், தேவர் பிலிம்ஸாரால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படம்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றையும் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் தேவர்.

தேவர் பிலிம்ஸின் அந்த டாக்குமெண்டரி எட்டு மணிநேரம் கொண்டது. அதை போட்டுப் பார்க்கக்கூட தேவருக்கு நேரம் கிடைக்கவில்லை. தங்களின் புதிய முயற்சிக்கு ‘தெய்வம்’ என்று பெயரிட்டார்கள். தேவர் பிலிம்ஸில் தொடர்ந்து நடித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.

எழுபதுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமாருக்கு அடுத்து குன்னக்குடி வைத்தியநாதன் பிஸியாக இருந்த நேரம். நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருந்தது புதிய வயலின் குதிரை. குன்னக்குடி வைத்தியநாதனின் அந்த டார்ச் லைட் குங்குமம் தேவரை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ஒப்பந்தம் செய்தார்.

Deivamபாடல்கள் வழக்கம்போல் கண்ணதாசன். கவிஞர் பாடலுக்கான சூழலை கேட்டார்.

‘சிச்சுவேஷனே கிடைக்கலே. என்னய்யா மாரா, விளையாடறீங்களா? தேவர் அண்ணன் கதையில பாட்டெழுத சந்தர்ப்பமே இல்லையா?’

தேவருக்கு கடும் கோபம். கதை இலாகாவுக்கு டாக்குமெண்டரி நினைவுக்கு வந்தது. ‘அண்ணே… நீங்களும் கவிஞர் ஐயாவும் கோயில் உற்சவங்களை போட்டுப் பாருங்க. முருகனுக்கு ஆறு பாட்டாவது கிடைக்காமலா போயிடும்?’

தினமும் ஒரு எபிஸோட் என்று எட்டு மணி நேரம் திருவிழா காட்சிகளை பொறுமையாக பார்த்தார்கள். வேலனின் ஒவ்வொரு விசேஷமும் பாடலாக ஆனது. கவிஞர் உணர்ச்சிவசப்பட்டு எழுதினார். தேவரின் முகத்தில் முருக ஒளி.

குன்னக்குடி தன் யோசனையை கூறினார். ‘அண்ணே பாட்டெல்லாம் ஊருக்கு ஊரு அருமையா வந்திருக்கு. அதை வழக்கமானவங்களை கொண்டு பாடவைக்க வேணாம். நீங்கள் உத்தரவு கொடுத்தால், மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ், பெங்களூர் ரமணியம்மாள், ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சிஸ்டர்ஸ்னு ஆளுக்கொரு வாய்ப்பு தரலாம்.’

Madurai Somu
திரு.மதுரை சோமு
Kunnakudi_Vaidyanathan copy
திரு.குன்னக்குடி வைத்தியநாதன்

மதுரை சோமு, மருதமலையிலேயே கச்சேரி செய்திருந்தார். பெங்களூர் ரமணியம்மாளின் புகழ் பெற்ற நர்த்தன விநாயகர் பாடல், ‘பொம்ம பொம்ம தான்… தைய தைய தான்’ தேவருக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. சாமி பாட்டிலும் டப்பாங்குத்தா? தேவருக்கு ஆச்சரியம்.

‘எல்லாம் சரிப்பா… எனக்கு டி.எம்.எஸ். பாட்டு நிச்சயம் வேணும். கூடவே சீர்காழியையும் சேர்த்துக்க.’

கர்நாடக இசைக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் அளவில்லாத சந்தோஷம். படத்தில் பாடுவது மட்டுமில்லாமல், நேரடியாகவே அவர்கள் கச்சேரியும் சினிமாவில் முதன் முதலாக இடம்பெறுகிறதே என்று.

விஜயா கார்டன் ஒலிப்பதிவு கூடம். ‘தெய்வம்’ படத்தின் பாடல் பதிவு. தேவர், ‘முருகா முருகா’ என்று சொன்னபடியே உள்ளும் புறமும் அலைந்தார். படபடப்பாக தோன்றியது. இன்சுலினை மறந்துவிட்டோமோ இன்று.

‘மருதமலை மாமணியே முருகைய்யா’ பாடல் மொத்தம் 6 நிமிடம் 48 நொடிகள். நீளமான பாடல். அந்த ஒரு பாடலின் பதிவே அதிக நேரம் எடுத்துக்கொண்டது. மதுரை சோமுவும் அதற்கு முன்பு திரைப்படத்திற்கு பாடியது கிடையாது.

தேவர் மீண்டும் எட்டிப் பார்த்தார். கடைசி சரணம் கேட்டது. வே…ல…ய்…யா…. என்று ஒவ்வொரு அட்சரமாக பாடல் நிறைவு பெறும்போது சோமு மயங்கி விழுந்தார்.

தேவர், ‘ஐயோ முருகா என்னை சோதிச்சுபுடாதே’ என்றபடி எல்லோரையும் தள்ளிக்கொண்டு ஓடினார். ‘முருகா, டேய்! உன் படத்துக்காக உன் மேல தான் அவர் உருக்கமா பாடினாரு. அவரைக் கீழே சாச்சுபுட்டியே. சாமான்யமான ஆளா அவரு. நா எல்லாருக்கும் பதில் சொல்ற நிலமைய உண்டு பண்ணிடாதே. மொதல்ல அவரை எழுப்பு. எழுப்புடா பழனியாண்டி!’

‘முருகா, டேய்! உன் படத்துக்காக உன் மேல தான் அவர் உருக்கமா பாடினாரு. அவரைக் கீழே சாச்சுபுட்டியே. சாமான்யமான ஆளா அவரு. நா எல்லாருக்கும் பதில் சொல்ற நிலமைய உண்டு பண்ணிடாதே. மொதல்ல அவரை எழுப்பு. எழுப்புடா பழனியாண்டி!’

குன்னக்குடிக்கு தேவர் புதுசாக இருந்தார். இப்படி ஒரு முருகன் பைத்தியமா! மதுரை சோமு மயக்கத்திலிருந்து மீளாவிட்டால் அடுத்த அடி திட்டு தனக்கும் விழும் என்று அஞ்சினார். யாரோ அதற்குள் ஓடிப்போய் சோடாவை கொண்டுவந்தார்கள். வேக வேகமாக அதை வாங்கி சோமுவின் முகத்தில் அடித்தார் குன்னக்குடி. பேய் அறைந்தவர் போல தோற்றமளித்த தேவரது முகத்தில் விழித்தார் சோமு.

Sandow Chinnappa Devar‘தேவர் ஐயா, உங்களுக்கு என்னாச்சு? என் பாட்டு புடிக்கலியா?’

தேவர் கலகலவென்று சிரித்தார். ‘மருதமலையை உங்க குரலால எவ்வளவு உயர்த்தனுமோ அப்படி செஞ்சிட்டீங்க. இந்த பாட்டு ஒன்னு போதும். என்னிக்கும் சினிமாவுல உங்க பேரைச் சொல்ல. கட்டிப்பிடித்தபடி இருவரும் போஸ் கொடுத்தனர்.

1972 தீபாவளிக்கு ‘தெய்வம்’ வெளியானது. ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ ஒலிக்காத சேரிகளில்லை. ‘மருதமலை மாமணியே’ தினமும் விற்றுத் தீர்ந்தது. ரிகார்ட் பிரேக் என்றார்கள். வெலிங்கடன் தியேட்டர் ஐயப்ப சாமிகளால் எப்போதும் நிரம்பி வழிந்தது. ‘வசந்த மாளிகை’க்கு அடுத்து ‘தெய்வம்’ 1972-73 ல் ஆறு மாதங்களுக்கும் மேல் வசூலில் சிறப்பிடம் பெறும் என ரிப்போர்ட் வந்தது.

தேவருக்கு வெளியில் சொல்ல முடியாத சந்தோஷம். ‘பரவாயில்லப்பா… நம்ம படத்துல எம்.ஜி.ஆர். இல்லேன்னாலும் ஜனங்க விரும்புற மாதிரி சினிமாவ வரிசையா எடுத்துடுறோம்.’

‘தெய்வம் படத்தில் இடம் பெற்றுள்ள அறுபடை வீட்டு முருகன் சிலைகள் அத்தனையும் காஞ்சிக்கு எழுந்தருள வேண்டும். காஞ்சி குமரக்கோட்டதில் கந்தர் சஷ்டி விழாவில் பக்தர்கள் தரிசனத்திற்கு தேவைப்படுகிறது. காஞ்சி பெரியவர் ஆக்ஞை.’

வந்தவர்கள் சொன்ன சேதி தேவரை திக்குமுக்காட வைத்தது. காஞ்சி மகானை எண்ணி, கை தொழுதார். அவர் கண்களிலிருந்து நீர் பெருகியது. ‘இது பெரும் பாக்கியம். நான் கனவுலயும் நினைச்சி பார்க்கல’.

வாகினிக்கு விரைந்தார் தேவர். அவரே முன்னின்று ஆறுமுகனின் தெய்வ வடிவங்களை லாரிகளில் ஏற்றி காஞ்சிக்கு அனுப்பினார். அடுத்து மருதமலையானுக்கு தன் மனம்குளிர நன்றி சொல்லச் சென்றார்.

* இந்த நூல் வேண்டுவோர் நம்மை தொடர்புகொண்டால் வாங்கி அனுப்புகிறோம்.

(இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் மதுரை சோமு அவர்கள் சாதாரண ஆளில்லை. அவரைப் பற்றியும் தளத்தில் அடிக்கடி இனி பகிர்ந்துகொள்வோம். மஹானுபாவர் அவர்!)

‘மருதமலை மாமணியே’ – Song Video

=================================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=================================================================================

Also check  earlier episodes of this series…

“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

=================================================================================

Also check :

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

=================================================================================

[END]

 

8 thoughts on “மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

  1. வாழ்க வளமுடன்
    நல்ல படைப்பாளி , தேவரின் பிறந்த நாளன்று அருமையான நினைவலைகள் . பணம் வாங்கி பத்திரிகை நடதுபவர்கூட இவ்வளவு உழைப்பை கொடுபர்களா என்று தெரியவில்லை , சுந்தர் சாரின் தந்தை உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதை அறிந்து நேற்று பார்த்து வந்தேன் , சுந்தர் சார்தான் உடன் இருந்து பார்த்து கொண்டார் , பல , பல இடர்பாடுகளுக்கு நடுவே இந்த தளத்தை தொய்வின்றி நடத்தி வருகிறார் . அவரின் தந்தை பூரண குணமடைய அனைவரும் பிரத்தனை செய்வோம்

    நன்றி

    1. தாங்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்தமைக்கு நன்றி. அப்பா இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார். ராகேஷின் சகோதரர் மனோ உடனிருந்து அனைத்து வகைகளிலும் உதவியாக இருந்தார். அவருக்கும் என் நன்றி.

      1. அண்ணா..

        நன்றி சொல்ல வேண்டாம்..இது எங்கள் கடமை மற்றும் நாங்கள் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு அண்ணா.

        புரிதலுக்கு நன்றி அண்ணா..

  2. தேவரின் பிறந்த நாளில் இதை விட சிறந்த பதிவை அளித்து இருக்க முடியாது. படிக்கும் பொழுது மனம் சிலிர்க்கிறது. இந்த பதிவு தங்கள் தளத்தின் மணி மகுடம்

    இந்த உலகம் இருக்கும் வரை அவர் புகழ் நிலைத்து இருக்கும்.

    தங்களின் அப்பா வெகு விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. வணக்கம் சுந்தர்.நல்ல பதிவு .இனிமேல் இப்படி பக்தி கொண்டவரை பார்க்கமுடியாது என நினைகிறேன். மனதின் ஆழத்தில் இருந்து வருகின்ற உரிமையான பக்தி.முருகன் என்றல் தேவர், தேவர் என்றல் முருகன் என்றே ஆகிவிட்டது.தங்கள் தந்தை நலமோடு வீடு திரும்ப ஆறுமுக கடவுள் அருள்வான் .கவலைபடாதிர்கள்.நன்றி.

  4. தேவர் என்றால் கண்டிப்பானவர் என்று தெரிந்தது..ஆனால் இப்படி பக்தி கொண்டவர் என்பது இந்த பதிவின் மூலம் தன தெரிகிறது..

    வீடியோ சுட்டி மிகவும் அருமை.தெய்வம் திரை காவியத்திற்கு பின்புலனான சம்பவங்கள் பரவசமூட்டுகின்றன.

    மதுரை சோமு அவர்களை பற்றியும் நம் தளத்தில் ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.

    என்ன தான் புத்தகம் வைத்து படித்தாலும், தாங்கள் நடையில் படிக்கும் போது தான், இன்னும் கருத்துகளை உள்வாங்க முடிகிறது.இது போன்ற பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறோம் அண்ணா..

    நன்றி..

  5. தெய்வம் படம் பார்த்துள்ளேன் ஆனால் அது தேவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் என்று தெரியாது

    தேவரின் படங்கள் போல் இந்த கட்டுரையும் தங்கள் கை வண்ணத்தில் ஜொலிக்கிறது

    தங்கள் தந்தையார் பூர்ண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    நன்றி

  6. “கடைசி சரணம் கேட்டது. வே …ல …ய்… யா …..! என்று ஒவ்வொரு அட்சரமாக பாடல் கடைசி சரணம் முடியும்போது சோமு மயங்கி விழுந்துவிட்டார்” …. வரிகளை வாசிக்கும்போது கண்கள் பனித்துவிட்டது.

    திரு சோமு அவர்கள் பாடலாக பாடாமல் அந்த தருணத்தில் முருகனின் பால் தவமாகி நின்றதால்தான் இன்னும் நாம் அந்த பாடலோடு சங்கமிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *