Home > 2014 > September

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

மதுரை அரசாளும் அன்னை மீனாட்சியின் லீலா விநோதங்களையும் திருவிளையாடல்களையும் சொல்ல ஆரம்பித்தால் இந்த ஜென்மம் போதாது. எனினும் இந்த நவராத்திரி நேரத்தில் அன்னையின் பெருமையை பேசவேண்டும், நீங்கள் அதை படிக்கவேண்டும் என்று நாம் விரும்பும் காரணத்தால் இந்த உண்மை சம்பவத்தை பதிவு செய்கிறோம். அன்னைக்கு 'மீனாட்சி' என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா? மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் அன்னைக்கு மீனாட்சி என்ற பெயர் தோன்றியது. மீன் + ஆட்சி = மீனாட்சி.

Read More

இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!

நம் தளம் சார்பாக வாரியார் சுவாமிகளின் வாரிசுகளான வள்ளி-லோச்சனா சகோதரிகளின் 'நவராத்திரி பாடல்கள்' சிறப்பு நிகழ்ச்சி அன்னை விசாலாட்சியின் அருளால் நேற்று மாலை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. வாசகர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்கள். பொதுமக்களும் இறுதி வரை ஆவலுடன் அமர்ந்து கேட்டு,  பிரசாதம் பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியை நாம் சென்ற சனிக்கிழமை 27 ஆம் தேதியன்றே திட்டமிட்டிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். தமிழகத்தில்

Read More

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ? MONDAY MORNING SPL 62

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. "இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?" எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை

Read More

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

பகத்சிங். இந்திய விடுதலைப் போர் வரலாறு இவரைப் போல ஒரு மாபெரும் வீரரை கண்டதில்லை. 1931 ஆம் ஆண்டு, பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 23. தூக்கில் ஏறுவதற்கு முன்பு பகத்சிங் சொன்னது என்ன தெரியுமா? "மரணத்தை கண்டு  நான் பயப்படவில்லை. மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்றாமல் நான் மரணிக்கிறேன் என்பது

Read More

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

வீட்டுக்கே நடராஜரை வரவழைத்து அதற்குரிய பணத்தையும் அவரையே தரவைத்த  அந்த பெருமை பெற்றவர்..... கோவையை சேர்ந்த திருமுறை தமிழ்மணி திருமதி. ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள். சைவ ஒழுக்கம் மிகுந்த பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தும் புகுந்தும் நாளும் தமிழிசையில் திளைத்து அதில் தேர்ச்சியும், அனுபவமும் பெற்றவர். பார்வையற்ற நண்பர் ஈரோடு பன்னிரு திருமுறை ஆசிரியர் ஞானப்பிரகாசம் அவர்களின் குரு. தற்போது 73 ஆம் அகவையில் இருக்கும் அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் சைவத்துக்கும் பக்தி

Read More

நம் தளம் சார்பாக வாரியார் வாரிசுகள் பங்குபெறும் நவராத்திரி பாடல் நிகழ்ச்சி – அனைவரும் வருக!

நம் தளம் சார்பாக நாளை 27 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் இசை வாரிசுகளாக விளங்கும் அவரது கொள்ளுப் பேத்திகள் வள்ளி, லோச்சனா அவர்களின் பாடல் நிகழ்ச்சி நடைபெறும். சென்ற மாதம் நமது தளத்தின் பேட்டிக்காக அவர்களை சந்தித்தபோது அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற நமது விருப்பத்தை அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், நவராத்திரியின்போது குழந்தைகளை ஏதேனும்

Read More

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

அந்த மாதரசி ஒரு தலைசிறந்த சிவபக்தை. தேவாரம், திருப்புகழ் மற்றும் இதர சைவ ஆகமங்களிளெல்லாம் அசாத்திய பாண்டித்யம் பெற்றவர். அவரது பரம்பரையே பக்தி நெறியில் ஊறித் திளைத்த ஒன்று எனும்போது அவருடைய உதிரத்தில் சிவபக்தி இரண்டற கலந்திருப்பதில் வியப்பென்ன? தான் கற்ற பன்னிரு திருமுறை, திருப்புகழ் ஆகியவற்றை அடுத்தவர்களுக்கு குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு வணிக நோக்கமின்றி சொல்லிக் கொடுத்து வருபவர். வீட்டில் சுமார் மூன்று அடியில் நடராஜர் விக்ரகம் ஒன்றை ஸ்தாபித்து  அதன்

Read More

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

"என் கடமையை செய்யவே எனக்கு நேரமில்லை. இதுல சாமி எங்கே கும்பிடுறது... கோவிலுக்கு எங்கே போறது?" என்று ஆதங்கப்படுபவர்கள் பலர் உண்டு. உண்மைதான். குடும்ப சுழலில் சிக்கிக்கொண்டு கோவில்களுக்கு செல்ல மனமிருந்தும் மார்க்கமின்றி தவிப்பவர்கள் பலர் உண்டு. குறிப்பாக பெண்கள்... ஒவ்வொன்றுக்கும் கணவரிடமோ, பெற்றோரிடமோ அல்லது பிள்ளைகளிடமோ அனுமதி கேட்கவேண்டிய சூழலில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. =============================================================== "நீ கர்மயோகி. ஒரு வினாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும்!" கடமையைவிட

Read More

நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!

நவராத்திரியை முன்னிட்டு சற்று வித்தியாசமான, விசேஷ பதிவுகளை தயாரித்து வருகிறோம். நாளை முதல் நவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் இடம்பெறும். இப்போதைக்கு சென்ற ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு நாம் அளித்த பதிவை திரும்ப அளிக்கிறோம். நிச்சயம் உபயோகமாய் இருக்கும். நேற்று மகாளய அமாவாசையையொட்டி நடைபெற்ற கோ-சம்ரோக்ஷனமும் சிறப்பு வழிபாடும் இனிதே நடந்தது. வந்திருந்த நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள். நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவு ஒன்றை

Read More

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

மகான்கள் மற்றும் ஞானிகளின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும். காரணமின்றி அவர்கள் எதையும் செய்வதில்லை. சாமான்யர்கள் அதை புரிந்துகொள்ள பொறுமை மிகவும் அவசியம். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆவணி சுவாதி அன்று கிருபானந்த வாரியார் ஜெயந்தி அன்று நடைபெற்ற சில நிகழ்வுகள் உணர்த்துவதும் அதைத்தான். சில மாதங்களுக்கு முன்பு காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானத்திற்கு முதன்முறை சென்றிருந்தோம். அப்போதே வாரியாரின் அவதார தினத்தன்று நிச்சயம் மீண்டும்

Read More

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

இந்த உலகில் 100% புண்ணியம் செய்தவர்களும் இல்லை. 100% பாபம் செய்தவர்களும் இல்லை. இரண்டையும் மனிதர்கள் கலந்தே செய்கிறார்கள். ஆகையால் தான் மனிதப் பிறவியே அமைகிறது. முற்பிறவியில் செய்த பாபத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த பிறவியில் வாழ்க்கை அமைகிறது. அப்படி அமையும் இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் புண்ணியமோ, இறைவழிபாடோ பிறவியை மேலும் சிறப்பானதாக அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. ஆனால் செய்யும் பாபம் இப்பிறவியை துன்பம் நிறைந்ததாக ஆக்குகிறது. ஆக நமது

Read More

மகாளய அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும்? Must Read

நாளை செப்டம்பர் 23, செவ்வாய்க்கழமை மகாளய அமாவாசை. அன்றைய தினத்தில் தானதர்மங்கள் செய்வது சாலச் சிறந்தது. பல வகையிலும் உங்களுக்கு நன்மை தரக்கூடியது. பித்ருக்களின் மனதை குளிரச் செய்யக்கூடியது. நம் வாசர்களும் அவரவர் பகுதிகளில் நாளை அவர்களால் இயன்ற தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உங்கள் பித்ருக்களில் ஆசியை பெறுவீர்களாக. எங்கோ தூர தேசத்தில் இருக்கும் நம் வாசகர்கள் மற்றும் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், விருப்பம் இருந்தும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை

Read More

சாதனையாளர்களை உருவாக்குவது எது? MONDAY MORNING SPL 61

அந்த இளைஞன் ஒரு சிறந்த தோட்டத்தை அமைத்து தனது வீட்டில் பராமரித்து வந்தான். ஒரு நாள் பட்டாம்பூச்சி ஒன்று ஒரு பூந்தொட்டியில் முட்டையிட்டதை பார்த்தான். அது முதல் அந்த முட்டையின் வளர்ச்சியை மிகவும் ஆர்வமாக கவனித்து வரலானான். ஒரு கட்டத்தில் முட்டை அசைந்தது. முட்டை உடைந்து ஒரு உயிர் ஜனிப்பதை பார்க்க அவனுக்கு பரவசமாய் இருந்தது. மணிக்கணக்கில் அந்த முட்டையை கவனிப்பதில் கழித்தான். சிறிது நாளில் முதலில் ஒரு புழுவின் தலைமட்டும்

Read More

கேட்கும் விதத்தில் கேட்டால் கேட்பது கிடைக்கும் — Rightmantra Prayer Club

கடந்த காலங்களில் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறாமல் போனது குறித்து நீங்கள் ஏமாற்றமடையலாம். ஆனால், நம்பிக்கை இழக்கவேண்டாம். நாம் கூறுவதை காதில் வாங்காமல் கடவுள் எந்நாளும் இருப்பதில்லை. ஆனால் நாம் தான் அவன் இருக்கும் திசையை மறந்துவிட்டு வேறு திசையில் திரும்பி நிற்கிறோம். அன்பே வடிவானவர் கடவுள். நீங்கள் தியானம் செய்ய பழகிக்கொண்டால், சுலபமாக கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் . அதன் பின்னர் நமது கோரிக்கைகள் யாவும் ஒவ்வொன்றாக நிறைவேறுவதை கண்கூடாக

Read More