Home > ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு

கோபுர தீபம்…

குறள் எண் : 994 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. குறள் விளக்கம் நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். என்கிற வள்ளுவரின் மொழி நமது ரைட் மந்த்ரா சுந்தர் அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அவரது எண்ணங்களும் செயல்களும் நம்மிடையே என்றும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அவர் இறைவனின் பாதத்தை சரணாகதி அடைந்து இன்றோடு ஒரு வருடமாகிறது. இருப்பினும் அவர் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்

Read More

Mr.NANDAKUMAR, I.R.S. – ஒரு சிலிர்க்க வைக்கும் சாதனை சரித்திரம்! MUST READ

* படிக்கிற வயசுல ஏதோ காரணத்துனால சரியா படிக்க முடியாம போயிடுச்சேன்னு வருத்தப்படுற ஆளா நீங்க? * உங்க குழந்தைகளுக்கோ, உறவினரின் குழந்தைகளுக்கோ அல்லது நண்பர்களின் குழந்தைகளுக்கோ படிப்பு சரியாக ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா? * என்ன வாழ்க்கை இது? எங்கே போனாலும் இப்படி நம்மளை எட்டி எட்டி உதைக்கிறாங்களே... உண்மையில் நாம வேஸ்ட் போல.... அப்படின்னு அடிக்கடி தோணுதா உங்களுக்கு? * வாழ்க்கையில அவமானத்தை தவிர வேறு எதுவும் பார்க்காத ஆளா நீங்க? * வயித்து பிழைப்புக்காக இந்த வேலையெல்லாம்

Read More

ட்ரீ பேங்க் முல்லைவனம் – பசுமைக்கு பாடுபடும் ஒரு ஒன்மேன் ஆர்மி!

அக்னி நட்சத்திரம் துவங்க இன்னும் சில தினங்களே இருக்கும் சூழ்நிலையில் இப்போதே அனல் தகிக்கிறது. "வெயில்... வெயில்..." என்று பரிதவித்து நிழலைத் தேடி ஓடும் மக்கள், ஒரு மரமாவது நம் பங்கிற்கு நட்டிருக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. இந்த சூழலில் தான் மரங்களின் முக்கியத்துவம் வெயிலில் வாடும் அனைவருக்கும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது. நாளை மே 1, பசுமைக் காவலர், 'மரங்களின் தந்தை' நண்பர் முல்லைவனம் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இன்று காலை விருகம்பாக்கத்தில்

Read More

ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு!

நர்த்தகி நடராஜ். இதுவரை நாம் சந்தித்த சாதனையாளர்களுள் மிக முக்கியமானவர். தனது சாதனைகளால் நம்மை பிரமிக்க வைத்தவர். மிகப் பெரிய நாட்டிய தாரகை. அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு 'திருநங்கை' என்று பெயர் சூட்டியது இவர் தான்.  வைஜயந்தி மாலா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நாட்டியம் கற்றுத் தந்த கிட்டப்பா பிள்ளையிடம் நாட்டியம் கற்றவர். இவரது கதையையும் கடந்து வந்த பாதையையும் கேட்க கேட்க பிரமிப்பும் வியப்பும் தான் மேலிட்டது. மகளிர் தினத்துக்கு

Read More

நண்பா… நீ மனிதனல்ல தெய்வம்!

நம் தளத்திற்காக எழுதுவது என்பது பல நேரங்களில் நமக்கு ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவது போலத் தான். அது ஆன்மீக பதிவுகளானாலும் சரி, சுயமுன்னேற்ற பதிவுகளானாலும் சரி. ஆனால் சில பதிவுகள் 'தவம்' போல. அத்தகைய பதிவுகளில் ஒன்று இது. ஒரு வரி விடாமல் படியுங்கள். ஒன்றல்ல இரண்டல்ல... பல பாடங்கள் இதில் ஒளிந்துள்ளன! FORTUNE FAVOURS ONLY THE BOLD! "உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம்

Read More

டாக்டர்.எம்.ஏ.ஹூசேன் – சிவநெறியும், சைவநெறியும் இவர் இரு கண்கள்!

சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை அவரது அவதார தலத்தில் (முருகன் கோவில் அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் கோவில் எதிரே) நடைபெற்றபோது அதில் பங்கேற்க சென்றிருந்தோம். அந்நிகழ்ச்சிக்கு பல சைவ சமய பெருமக்கள், அறிஞர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு சேக்கிழார் மன்ற பொது செயலாளர் திரு.இரா.பார்த்திபன் அவர்கள் வரவேற்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தாடி வைத்து திருநீறு பூச்க்கொண்டிருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார். "நம்மில் சிலர் சைவத்தில் தீவிர பற்று உடையவர்களாக இருந்தாலும்

Read More

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

உயர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன்,  ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார். தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று

Read More

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

கலாம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. தேசமே கண்ணீரில் மூழ்கியிருக்கும்போது நாம் மட்டும் எம்மாத்திரம்? எனவே ஆன்மீக பதிவுகளை எழுதமுடியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'இப்படியேத் தான் நான் இனி வாழவேண்டுமா? என்ற நிலையிலிருந்த ஒருவர், 'எப்படி வாழவேண்டும்?' என்று பிறருக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் கதையை தருகிறோம். கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா? இவரைப் பார்த்து தெரிந்து

Read More

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!' என்கிற தலைப்பில் கடந்த மாதம் ஒரு பதிவளித்திருந்தது நினைவிருக்கலாம். குன்றத்தூரில் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 10 வருடங்களாக முழுக்க முழுக்க சேவையின் அடிப்படையில் திருமுறைகள் கற்றுத் தரும் திரு.சங்கர் அவர்களை நாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக கூறியிருந்தோம். அது பற்றிய பதிவு இது. மார்கழி மாதத்தில் ஒரு நாள் நாம் நாகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அதிகாலை வேளையிலும்

Read More

தெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி!

தமிழகத்தின் எந்த குடியிருப்பு பகுதியை நீங்கள எடுத்துக்கொண்டாலும் தெருக்களுக்கு பொதுவாக யார் பெயர் சூட்டப்பட்டிருக்கும் ? உங்கள் தெருவின் பெயர் என்ன என்று சற்று பாருங்களேன்...! விட்டில் பூச்சிகளாக வாழ்ந்து (?!) மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் (அ) அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள் (அ) அந்த லே-அவுட்டை ப்ரொமோட் செய்தவர்களின் சொந்தங்களின் (?!) பெயர்கள் (அ) சில நேரங்களில் தேச விடுதலைக்காக சிறை சென்ற தலைவர்கள் மற்றும் சுதந்திர

Read More

ஜோலார்பேட்டை நாகராஜ் – நூற்றுக்கணக்கானோரின் பசியை ஆற்றும் ஒரு தனி மனிதன்!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் நமது பணிகளில் மூழ்கியிருந்தபோது, ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தால்... ஜோலார்பேட்டை நாகராஜ்! நம்மை நலம் விசாரித்தவர், தனது மனைவிக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அட்மிட் செய்திருப்பதாகவும் இன்னும் இரண்டொரு நாள் சென்னையில் தான் இருப்பேன் என்றும் கூறினார். அன்றைக்கு நமக்கிருந்த அத்தனை முக்கிய பணிகளையும் ஒத்தி வைத்துவிட்டு, புரசைவாக்கம் விரைந்தோம். சுமார் ஒரு

Read More

பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி!

இந்த தளம் துவக்கியதில் இருந்து நாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சினிமா, அரசியல் இந்த இரண்டும் தொடர்பான எந்த ஒரு பதிவையும் நம் தளத்தில் அளிக்கக்கூடாது என்பதே அது. ஆனால், நமது கொள்கைகளை சற்று தளர்த்தி இன்று ஒரு நடிகரை பற்றிய பதிவை இங்கே அளிக்கிறோம். காரணம், இதில் நமக்கு ஒளிந்திருக்கும் பாடங்கள், வாழ்வியல் நீதிகள். சமீபத்தில் நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு நடிகரின் பேட்டி

Read More

கடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்!!

பிறவிகளிலேயே சிறப்பானது, அரியது மனிதப்பிறவி தான். ஏனெனில், மனிதப்பிறவிக்கு மட்டும் இறையுணர்வு உண்டு. இறைவனை தொழுது மேற்கொண்டு பிறவிகள் இல்லாமல் செய்துகொள்ளும் வாய்ப்பு மனிதப் பிறவியில் தான் ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும். பலர் தங்களுக்கு அடுத்த பிறவியும் மானிடப் பிறவியாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிறவி மானிடப் பிறவியாகத் தான் இருக்கும் என்பதில் எந்த நிச்சயமுமில்லை. "அரிது அரிது மானிடராதல் அரிது" என்று அதனால் தான் ஒளவையும் பாடினார். புழுவாய் பிறக்கினும்

Read More

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

கடந்த அக்டோபர் மாதம் நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் வாரிசுகள் செல்வி.வள்ளி & லோச்சனா அவர்களின் இசை நிகழ்ச்சியை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் ஏற்பாடு செய்திருந்தது நினைவிருக்கலாம். அந்நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக வயலின் இசைக்க வந்திருந்தவர் மணலியை சேர்ந்த திரு.குமார் என்பவர். அபாரமாக வயலின் வாசித்த திரு.குமார் (வயது 26) அவர்கள் பார்வையற்றவர் என்பதை அறிந்தபோது ஒரு பக்கம் நெகிழ்ச்சி மறுபக்கம் வியப்பு. அந்நிகழ்ச்சியின் முடிவில் அவருக்கு சன்மானம் அளித்து

Read More