அன்றைக்கு நமக்கிருந்த அத்தனை முக்கிய பணிகளையும் ஒத்தி வைத்துவிட்டு, புரசைவாக்கம் விரைந்தோம். சுமார் ஒரு மணி நேரம் திரு.நாகராஜ் அவர்களுடன் இருந்து, அவருக்கு ஆறுதலும் தைரியமும் கூறினோம். அவரது மனைவி திருமதி.சுஜாதா நாகராஜ் அவர்களையும் பார்த்து நலம் விசாரித்தோம். அந்த நிலையிலும் பெட்டிலிருந்து எழுந்து உட்கார்ந்து இரு கரம் கூப்பி நம்மை வரவேற்றார் திருமதி.சுஜாதா. வாங்கி சென்ற ஆப்பிள் சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை அவரின் அம்மாவிடம் கொடுத்து ‘டாக்டர்ஸ் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு கொடுங்க!’ என்றோம்.
வெளியே வந்து வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
“என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்… இயன்றதை செய்ய காத்திருக்கிறேன்!”
“நீங்க வந்ததே போதும் சார். அதுவே எனக்கு சந்தோஷம்………… சென்னை வந்தா கால் பண்ணச் சொன்னீங்க… அதான் பண்ணினேன்” என்றார்.
யார் இந்த ஜோலார்பேட்டை நாகராஜ்?
எதற்காக நமது பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவரை சந்திக்க செல்லவேண்டும்?
இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருப்பதற்கு காரணமானவர்களுள் ஒருவர் திரு.ஜோலார்பேட்டை நாகராஜ்!
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் 226)
என்று வள்ளுவர் கூறும் ஏழைகளின் பசித் துயர் போக்கும் அருந்தொண்டை செய்து வருபவர் இவர். ஏழைகளின் பசித் துயர் தீர்க்கும் தொண்டுக்காக சென்ற டிசம்பரில் நடைபெற்ற நமது பாரதி விழாவில் நம் தளம் சார்பாக திரு.நாகராஜ் அவர்கள் ‘ரைட்மந்த்ரா – கர்மவீரர் காமராஜர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

ஜோலார்பேட்டையில் திரு.நாகராஜ் என்பவர், தான் நடத்திவரும் ஓட்டலில் தினசரி பல ஏழை எளியோர்களுக்கு இலவச உணவு வழங்குகிறார், தொழிலாளர்களுக்கும் கூலி வேலை செய்பவர்களுக்கும் பாதிவிலையில் உணவு வழங்குகிறார் என்று கேள்விப்பட்டதில் இருந்தே அவரை நேரில் சந்தித்து நமது தளம் சார்பாக கௌரவித்து சில வார்த்தைகள் பேச விரும்பினோம். இதையடுத்து சென்ற ஆண்டு, மார்ச் மாதம், திரு.நாகராஜ் அவர்களிடம் பேசி அப்பாயின்மென்ட் பெற்று ஜோலார்பேட்டை சென்றோம்.
நமது சந்திப்பு நிறைவுபெற்று ஏனோ தெரியவில்லை… பதிவு அளிக்க நேரம் அமையவில்லை. அதற்குள் திரு.நாகராஜ் அவர்களின் புகழ் மேலும் மேலும் பரவி, ‘அவள் விகடன்’, ‘தினமலர்’ உள்ளிட்ட பல ஊடகங்களில் இவரைப் பற்றிய செய்தி வந்துவிட்டது.
நாம் லேட்டாக தந்தாலும் லேட்டஸ்ட்டாக தந்திருப்பதாக எண்ணுகிறோம். நன்றி!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
சென்ற ஆண்டு மார்ச் மாதம். ஒரு ஞாயிறு காலை திரு.நாகராஜ் அவர்களை சந்திப்பது என்று முடிவானது. அதிகாலை 2.00 க்கு வீட்டிலிருந்து கிளம்பி, 3.15 க்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட ட்ரெயினில் ஜோலார்பேட்டை புறப்பட்டோம். திருவள்ளூரில் நண்பர் மனோகரன் நம்முடன் இணைந்துகொண்டார். கிட்டத்தட்ட 3.5 மணி நேரம் பயணம். 7.00 மணிக்கு ஜோலார்பேட்டையை அடைந்ததும், அங்கே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மார்கெட்டில் திரு.நாகராஜ் அவர்ககளுக்கு வழங்க பழம் பூ உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டோம்.
நாம் சென்றபோது நாகராஜ் பரபரப்பாக இருந்தார். நம்மை வரவேற்றவர், முதலில் காபி, டீ தந்து உபசரித்தார்.
பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு, முதலில் அவரது சேவைக்கு வாழ்த்துக்கள் சொன்னோம். நமது தளம் பற்றி கேட்டார். அலைபேசியை எடுத்து அதில் தளத்தை ஒப்பன் செய்து காட்டினோம். நமது தளத்தின் நோக்கத்தையும் பணிகளையும் அறிந்துகொண்டவர் “நாட்டுக்கு இன்றைய சூழலில் தேவையான ஒன்றை செய்துவருகிறீர்கள். சந்தோஷம்!” என்றார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே கடையில் தொங்கிக்கொண்டிருந்த அறிவிப்பு பலகைகளை பார்த்தோம். ஒவ்வொரு பலகையும் ஒரு கதை சொல்லியது.
* (இந்த பலகைகளில் உள்ள எண்ணிக்கையையெல்லாம் தாண்டி தற்போது இந்த சேவையை செய்துவருகிறார் திரு.நாகராஜ்!)
இப்படி ஒரு தொண்டு செய்யவேண்டும் என்று தோன்றியது எப்படி?
“இந்த ஹோட்டல் ஆரம்பிச்சு சுமார் 30 வருஷம் இருக்கும் சார். பிரிட்டிஷ் காலத்துல இந்த லைன் போட்டதுல இருந்தே அதாவது நீராவி எஞ்சின்ல ரயில் ஓடின காலத்துல இருந்தே ஜோலார்பேட்டை பெரிய ஜங்க்ஷன் தான். பல வெளிமாநில ட்ரெயின்கள் தினசரி வந்து போகும் ஒரு ஜங்க்ஷன். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் இவங்களை வீட்டுல வெச்சு பார்த்துக்க முடியாதவங்க என்ன பண்ணுவாங்கன்னா… அவங்களை கொண்டு வந்து இங்கே ஸ்டேஷன்ல இறக்கிவிட்டுட்டு போய்டுவாங்க. அங்கே போய் எல்லார்கிட்டேயும் காணாம போய்ட்டாங்கன்னு சொல்லிடுவாங்க. ஒரு மாசத்துக்கு குறைஞ்சது இப்படி ஒரு இருபது பேராவது இங்கே விடப்படுறாங்க. (எங்கே போகிறது நம் தேசம்?)
அப்படி அனாதரவா விடப்படுறவங்க எல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம ஸ்டேஷன்லயே சுத்திகிட்டு இருப்பாங்க. ரெண்டு நாள் கழிச்சி பசி பின்னி எடுக்கும்போது நடக்கக் கூட தெம்பு இல்லாம வெளியே வந்து சாப்பாட்டுக்கு அலைவாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கும். இன்னும் ஒரு சிலர் அஞ்சு பத்துன்னு ஸ்டேஷன்ல பிச்சை எடுத்துட்டு வந்து இங்கே அரை வயிறு கால் வயிறு சாப்பிட்டுட்டு போவாங்க. அதே மாதிரி ஜோலார்பேட்டை, ட்ரெயின்ல பிக்பாக்கெட் அடிக்கிறவங்களோட ஹப். அப்படி திருடர்கள் கிட்டே பர்ஸ் உடமை இதையெல்லாம் அடிக்கடி பறிகொடுக்குறவங்க சாப்பிட காசில்லாம கஷ்டப்படுவாங்க. மாற்று ஏற்பாடு செஞ்சி ஊர் போறதுக்கு வழி இருக்காது. செல்போன்லாம் கடந்த பத்து வருஷமாத் தானே… அதுக்கு முன்னால அதெல்லாம் கிடையாது. அவங்களுக்கெல்லாம் ஏதாவது பண்ணனும்னு தோணிச்சி. நாம் தான் ஓட்டல் வெச்சிருக்கோமே நாமளே ஏதாவது செய்யலாம்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சது தான் இந்த சேவை.
“பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைங்க. அதையும் தாண்டி எத்தனையோ உன்னதமான விஷயங்கள் இருக்கு!” மிகப் பெரிய ஒரு தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 200 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.
இந்த சேவையோட பயனாளிகள் யார் யார்?
“இதோ நீங்களே பாருங்களேன்..! (அங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த முதியவர்களை காட்டுகிறார்.) காலைல 8.00 மணியிலேர்ந்து 11.00 மணிவரைக்கு இவங்களுக்கு தினமும் இங்கே டிபன் உண்டு. ஒரு பைசா வாங்கமாட்டேன்.”
“பெரும்பாலும் விதவைத் தாய்மார்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், பக்கவாதம் மற்றும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டோர்கள், கண் பார்வையிழந்தவர்கள் போன்றர்கள் தான் இந்த இலவச உணவுத் திட்டத்தின் பயனாளிகள். இதைத் தான் சாப்பிடவேண்டும் என்கிற நிர்பந்தமெல்லாம் இவர்களுக்கு கிடையாது. இட்லி, பூரி, தோசை, பரோட்டா என அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.”
அதுதவிர அதிக வருமானம் இல்லாத துப்புரவுத் தொழிலாளர்கள், கோயில் பூசாரிகள், ஆட்டோ டிரைவர்ஸ் இவங்களுக்கெல்லாம் பாதி விலையில் கொடுக்க ஆரம்பிச்சோம். அப்புறமா, ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்க்கு இதை விரிவுபடுத்தினோம். படிக்கிற பிள்ளைங்க… வயிறார சாப்பிட்டுட்டு படிக்கட்டுமே… ஸ்கூல் யூனிபார்ம் & பேக்கோட வர்றவங்களுக்கு தான் இந்த சலுகை.”
தினமும் குறைந்தது 20 – 30 மாணவர்களுக்கு பேனா அல்லது பென்சில்… ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பால் என்று வழங்கிவருகிறார்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தோற்றமளித்த ஒருவர் கடைக்கு முன் வந்து நிற்க, உடனே இவர், சப்ளையரை பார்க்க, இவர் பார்வையின் குறிப்பறிந்து, தயாராக கட்டி வைக்கப்பட்டிருந்த பார்சல்களுள் ஒன்று அவரிடம் தரப்பட்டது. ஏதோ புதையலைப் போல அதை பெற்றுக்கொண்டு நகர்ந்தார் அந்த மனிதர்.
நம்மிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் திரு.நாகராஜ்.
“இந்த மாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவங்க, சித்த சுவாதீனம் இல்லாதவங்கள்ளாம் அவங்க பாட்டுக்க ரோட்டுல்ல நடந்து போய்கிட்டே இருப்பாங்க. எதையுமே கண்டுக்க மாட்டாங்க. ஆனா, ஒரு டீக்கடை முன்னாடியோ டிபன் கடை முன்னாடியோ வந்தா, அங்கேயே நின்னு அந்த கடையையே பார்த்துக்கிட்டிருப்பாங்க. காரணம், எந்த உணர்ச்சியும் இல்லேன்னா கூட பசியுணர்ச்சி கண்டிப்பா அவங்களுக்கு இருக்கும். சிலருக்கு அதை வெளிப்படுத்த தெரியாது. கேட்டு வாங்கி சாப்பிடவும் தெரியாது. அவங்களை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் தனியா பார்சலை தேடிக்கொண்டு போய் கொடுத்துட்டு வருவேன்.”
வாவ்… அவர் சொல்லும்போதே நமக்கு சிலிர்த்தது.
“இன்னைக்கு அந்த மாதிரி கொடுத்துட்டீங்களா?”
“இல்லே இனிமே தான். ஒரு 11.00 மணிக்கு போவேன்.”
“நீங்க போகும்போது சொல்லுங்க… நாங்களும் வர்றோம்!”
“சும்மா வாங்க… போட்டோல்லாம் எடுக்காதீங்க” என்றார். *(நாம் சமாதானப்படுத்தி, எடுத்தது வேறு கதை!)
திரு.நாகராஜ் அவர்களின் பூர்வீகம் ஏலகிரி மலை. சிறுவயது முதலே ஓட்டல்களில் வேலை செய்த அனுபவம் உண்டு. புதுசா ஏதாவது செய்றதைவிட தனக்கு நன்றாக தெரிந்த ஓட்டல் தொழிலில் இறங்கலாமே என்று இதில் இறங்கியிருக்கிறார்.
நாகராஜ்-சுஜாதா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள். முறையே ஒன்பதாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். இவருக்கு என்று சொந்த வீடு எதுவும் கிடையாது. இவருடைய சேவையை பலர் பாராட்டினாலும் உறவினர்கள் மத்தியில் இவர் பெற்றிருக்கும் பெயர் “பிழைக்கத் தெரியாதவன்” என்பதே.
பிழைக்கத் தெரிந்த மனிதன் என்று பெயரெடுப்பதைவிட நான்கு பேருக்கு பசியாற்றுவதன் மூலம் கிடைக்கும் ஆத்மதிருப்தியே போதும் என்று கருதுகிறார்கள் தம்பதியினர்.
‘பிழைக்கத் தெரிந்த மனிதன்’ என்று பெயரெடுப்பதைவிட நான்கு பேருக்கு பசியாற்றுவதன் மூலம் கிடைக்கும் ஆத்மதிருப்தியே போதும் என்று கருதுகிறார்கள் தம்பதியினர்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அந்தவகையில் தான் ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறார் திரு.நாகராஜ்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அந்தவகையில் தான் ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறார் திரு.நாகராஜ்.
இவரது மனைவி சுஜாதா இவரது சேவையில் பக்கபலமாக இருப்பதால் பிறரது விமரசனங்கள் மற்றும் கேலி, கிண்டல்கள் எதையும் இவர் பொருட்படுத்துவதில்லை.
“எப்படி கட்டுப்படியாகிறது?” என்று கேட்டோம்.
“இவர்களுக்கென்று தனியாக அடுப்பு பத்த வைக்கப்போறதில்லே. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக செய்றோம். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவாகிறது.” என்கிறார் உண்மையை மறைக்காமல்.
வரவுக்கும் செலவுக்கும் சேவைக்கும் அனைத்தும் சரியாக இருப்பதாகவும் பெரிதாக எதுவும் சேர்க்கமுடியவில்லை என்றும் கூறுகிறார்.
தொழிலாளர்களுக்கு பரோட்டா பாதிவிலையில் தரப்படுவதால், பரோட்டா இங்கு அதிகம் போகிறது என்றும், அதன் மூலம் மற்றவற்றை ஈடுக்கட்ட முடிகிறது என்றும் கூறுகிறார்.
நம்மிடம் பேசிய சுஜாதா, இப்போது குடும்பம் முழுக்க இந்த ஓட்டல் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருக்கு. நான் ஏதாவது ஒரு வேலைக்கு போய் வீட்டு செலவை பாத்துக்கிட்டா இவரால இன்னும் நல்லா சேவை செய்யமுடியும். அதனால வி.ஏ.ஓ. தேர்வுக்கு படிச்சிட்டு வர்றேன் என்றார்.
இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? நம்பமுடியாமல் தான் சுஜாதா அவர்களை பார்த்தோம்.
“உங்களை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தானம்மா!” என்றோம்.
இவர் செய்யும் சேவை பற்றி அறிந்து பலர் இவருக்கு உதவ முன்வருகிறார்கள். ஆனால் இவர் ஏற்க மறுத்துவிட்டார்.

“எங்க சொந்த உழைப்பால தான் செய்யனும்னு ஆசைப்படுறேன் சார்… என்னால் முடியுற வரைக்கும் இதை செய்வேன். அதுக்கு ஆண்டவன் எங்களை நல்லபடியாக வெச்சிருந்தா அதுவே போதும்!” என்றார்.
ஒரு விஷயம் தெரியுமா? நாகராஜ் தூங்குவதே ஐந்து மணிநேரம் தான். மேலும் இவரது ஓட்டலுக்கு விடுமுறை என்பதே கிடையாது. வருடம் 365 நாட்களும் திறந்திருக்கும். மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் ஓட்டல்கள் கூட தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, விடுமுறை விடுவார்கள். ஆனால், நாகராஜ் தனது ஓட்டலுக்கு விடுமுறை விடுவதில்லை. பசி மனிதர்களுக்கு விடுமுறை பார்த்து வராமல் இருக்குமா என்ன?
ஒரு விஷயம் தெரியுமா? நாகராஜ் தூங்குவதே ஐந்து மணிநேரம் தான். மேலும் இவரது ஓட்டலுக்கு விடுமுறை என்பதே கிடையாது. வருடம் 365 நாட்களும் திறந்திருக்கும். மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் ஓட்டல்கள் கூட தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, விடுமுறை விடுவார்கள். ஆனால், நாகராஜ் தனது ஓட்டலுக்கு விடுமுறை விடுவதில்லை. பசி மனிதர்களுக்கு விடுமுறை பார்த்து வராமல் இருக்குமா என்ன?



அப்புறம் நாகராஜ் அவர்கள் செய்யும் இன்னொரு முக்கிய சேவை தெரியுமா? ஜோலார்பேட்டையை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேனா, பென்சில் வாங்கித் தருவது தான். விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார்.
விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார்.
நாம் இவரை தொடர்புகொண்டு அவரை சந்திக்க வருவதாக சொன்னபோது, ஏதாவது வாங்கி வரவேண்டுமா என்று கேட்டோம். அப்போது கூட தனக்கென்று எதுவும் கேட்கவில்லை இவர். பள்ளி மாணவர்களுக்கு பேனா தருவது என் வழக்கம். முடிந்தா ரெனால்ட்ஸ் பேனா உங்களால் எத்தனை வாங்கி வரமுடியுமோ அத்தனை வாங்கி வாருங்கள் என்றார். தளம் சார்பாக நண்பர் ஒருவர் உதவியுடன் சுமார் 500 பேனாக்கள் வாங்கிச் சென்று நாகராஜ் அவர்களிடம் ஒப்படைத்தோம்.
நாங்கள் செய்யும் இந்த காரியத்தை சேவை தொண்டு என்றெல்லாம் சொல்லி எங்களை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை, பசிக்கும் சக மனிதர்களுக்கு செய்யும் சிறு உதவி அவ்வளவுதான் என்கின்றனர் தம்பதியினர் .
இவரது சேவைக்கு ஏதேனும் நம் தளம் சார்பாக செய்ய விரும்பினோம். ஆனால் இவர் ஏற்றுக்கொள்வாரா என்கிற தயக்கம் இருந்தது. அவரிடம் கேட்டோம். தனது சேவைக்காக யாரிடமும் இதுவரை உதவி பெறாதவர், நம்மிடம் பெற ஒப்புக்கொண்டது நாம் செய்த பாக்கியம்.
நாம் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய தாயார் திருமதி.சாமக்கால் அம்மாள் அவர்கள் வந்திருந்தார். நம்மை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். புண்ணியனை பெற்ற புனிதவதியாயிற்றே… அவர்கள் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்று, அந்த காசோலையை அவர்களிடமே ஒப்படைத்தோம். பெருந்தன்மையுடன் பெற்றுக்கொண்டு, அவரது அருந்தொண்டில் நம்மையும் ஒரு சில நாட்கள் இணைத்துக்கொண்டார்.
=====================================================================
நாம் அங்கிருந்தபோது, வந்து டிபன் பார்சல் வாங்கிய ஆட்டோ டிரவைர்கள் சங்கர் & ஜாகீர் உசேன் ஆகிய இருவரிடம் பேசினோம்.
“சிட்டி போல இல்லே சார் இங்கே. ட்ரெயின் வந்தாத் தான் எங்களுக்கு வருமானம். வாடகையே 50% போயிடும். அதுக்கப்புறம் பெட்ரோல்லாம் போட்டபிறகு பெரிசா என்ன நிக்கும்? இவர் கிட்டே டிபன் பாதி விலையில கிடைக்கிறது எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.” என்றனர்.

முதியவர்கள் பாக்கியம் (70), வெள்ளையம்மாள் (80) ஆகியோரிடம் பேசினோம். இந்த வயதிலும் ஏதோ கூலி வேலை செய்வதாக தெரிவித்தனர். குப்புசாமி (58) என்னும் பெரியவர் பஸ் விபத்தில் சிக்கி அடிபட்டவர். தன்னால் இனி எந்த வேலையும் செய்ய முடியாது என்றும், இங்கே கிடைக்கும் உணவே வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது என்றும் கூறினார்.
இன்னொரு அம்மா, பொன்னி (60) சர்க்கரை நோயால் பாதிக்கப்பாட்டிருக்கிறார். நான்கு பெண்கள், ஒரு மகன் இருக்கிறார்கள் இவருக்கு. இருப்பினும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் விலகியிருப்பதாக கூறுகிறார். இன்னொரு பெண், கண்ணம்மா என்பவரோ சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்.

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. பல குடும்பங்கள் குடியால் அழிந்தவை தான். தென்னையை பெற்றா இளநீரு, பிள்ளையை பெத்தா கண்ணீரு என்கிற கதை தான்.
உதவவேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் போதும். ஒருவர் எந்த சூழ்நிலையிலும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் உதவி செய்யமுடியும் என்பதே திரு.நாகராஜ் அவர்களின் வாழ்க்கை நமக்கு கூறும் பாடமாகும்!
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
====================================================================
Also check :
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய பெருந்தலைவர் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!
இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !
தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!
ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!
சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!
இது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :
====================================================================
[END]
திரு நாகராஜ் அவர்கள் செய்யும் அளப்பர்கரிய சேவையை படித்து இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா என்று வியக்க வைக்கிறது. அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை . வணங்குகிறேன்.
பணத்தை தனது சந்ததியினருக்கு சேர்க்கும் மக்களின் மத்தியில் அவர் அன்னதானம் செய்து அவரின் வருங்கால சந்ததியினருக்கு புண்ணியம் சேர்த்து கொண்டு இருக்கிறார். இவரைப் போன்று ஒரு சிலர் இருப்பதால் தான் நம் பூமி குளிர்ந்து மழை பொழிகிறது
நாம் சாதனையாளர்கள் பட்டியலை பார்த்தால் அவர்கள் தூங்கும் நேரம் 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே இருக்கும். திரு நாகராஜும் ஒரு சிறந்த தன்னலமற்ற சாதனையாளர்.
நம் ஆண்டு விழாவில் பொருத்தமான நபருக்கு காமராஜ் விருது கொடுத்து, அந்த விருதுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.
அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் என்ற பேரில் (அதுவும் குறுகிய நாட்களிலேயே காணாமல் போய் விடும்) கூட்டம் சேர்த்துக்கொண்டு அரசியல்வாதிகள் கொட்டம் அடிக்கின்ற இந்நாளில் இப்படி அமைதியாக சேவை செய்யும் திரு. நாகராஜ் மற்றும் அவரது குடும்பமும் மேலும் இச் சேவை தொடர எல்லா வளமும் பெற நான் என் அப்பனை வேண்டுகிறேன்.
வளர்க அவரது தொண்டு.
நம்மிடம் எவ்வளவு தான் பணம் இருந்தாலும், பிறருக்காக செலவு செய்ய உயர்ந்த மனம் வேண்டும். திரு.நாகராஜ் அவர்களிடம் பணம் இல்லை தான் என்றாலும் கொடுக்கும் மனம் இருக்கிறது. மனத்தால் அவர் மிகப்பெரிய பணக்காரர். இவரைப் போன்ற மனிதர்களால் தான் உலகம் இன்னமும் சுழல்கிறது போலும்.
—
சாதனையாளர்களைத் தேடிச் செல்லும் உங்கள் பயணத்தில், இன்னும் பல சாதனையாளர்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும். நன்றி !
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
—
விஜய் ஆனந்த்
ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்களுக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அய்யா நீங்கள் செய்யும் தன்னலமற்ற சேவைக்குமுன் நான் ஒரு தூசு. இன்னும் சொல்லப்போனால் நான் உலோபி.
திரு நாகராஜ் அவர்கள் எத்தனையோ ஜென்மங்களாக செய்திருக்கும் புண்ணியத்தின் பலன் எது தெரியுமா? அவருக்கு அமைந்திருக்கும் அன்பான அதைவிட மனிதாபிமானமுள்ள நல்ல மனைவி. திருமதி சுஜாதா நாகராஜ் அவர்கள் பெண்ணினத்திற்கு நல்ல முன்மாதிரி.
இப்படிப்பட்ட நல்லவர்களை கண்டுபிடித்து நமக்கு அறிமுகம் செய்துவைத்து நம்மையெல்லாம் செம்மை படுத்தும் சுந்தரின் முயற்சிக்கு கோடானுகோடி நன்றி.
வணக்கம் சுந்தர்.உதவி செய்வதற்கு வயதோ .பணமோ முக்கியம் இல்லை மனனுதன் முக்கியம் என நிருபித்து உள்ளார் .இப்படிப்பட்டவர்களை பார்பதே புண்ணியம் .கணவருக்கு ஏற்ற மனைவி.மென்மேலும் உதவி செய்ய லக்ஷ்மி தேவி அவரிடம் சென்று சேரட்டும்.அவர் குடும்பமும் வளமோடு வாழட்டும்.இவர்களுககதான் மழையே பெயிகிறது.திரு நாகராஜ் அவர்களே உங்கள்கு கோடி கோடி நன்றிகள்.
உண்மையில் திரு. நாகராஜ் அய்யாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை… அவருடைய தொண்டால் அவரது சந்ததியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ்வார்கள்…சக மனிதனுக்கு உதவிட பணம் மட்டும் தேவையில்லை மனம் இருந்தால் போதும் என தெளிவாக உணர்த்தியுள்ளார் … இவரை போன்ற ‘நிஜ ஹீரோ ‘ க்களை கௌரவிக்கும் சுந்தர் சார் க்கு ஒரு ராயல் சல்யுட் …
ஒரு நல்ல மனையாள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தெய்வப்புலவர் திருக்குறளில் இவ்வாறு கூறியுள்ளார்:
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இதன் பொருள்:
இரக்க குணம் பொருந்தி, கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே நல்ல மனைவி ஆவாள்.
திருமதி சுஜாதா நாகராஜ் அவர்கள் குறளின் வழிப்படி நடக்கும் நல்ல மனையாள் என்பது சாலப் பொருந்துகிறது.
திரு நாகராஜ் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். அவர் ஒரு நடமாடும் தெய்வம் என்று தான் கருத வேண்டி உள்ளது. அவரின் தாயுள்ளத்தோடு பசியாற்றும் பண்பை விட பெரிய பண்பை காசி அன்னபூரணியிடம் பார்க்க முடியுமா. இதுவல்லவோ தாயன்பு. தங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தாலாவது தங்கள் பண்பில் 1% வருகிறதா என்று பார்க்கலாம். சுந்தர் அவசியம் அய்யாவிடம் சொல்லவும். அவருக்கும் அவர் மனைவி, குடும்பத்திற்கும் ஒரு சிறு கஷ்ட்டம் கூட கடவுள் கொடுக்க கூடாது என்று எல்லாம் வல்ல சாயி பகவானிடம் மன்றாடி வேண்டுவதாக சொல்லவும்.
நண்பர்களே,
இது நல்ல விஷயம் தான். இவரிடம் உதவி பெற்ற பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை தரம் உயரும்போது பிறருக்கு உதவிட வேண்டும் என்ற மன நிலையினை பெற வேண்டும். (இத்தனை வருடத்தில் அப்படி ஏதாவது நடந்துள்ளதா? என தெரியவில்லை) ஏனென்றால் இன்றைய சுயநலமான உலகில் உதவி பெற்றவர்கள் மறந்து விடுகிறார்கள். அதுபோன்ற நிலை மாற கொடுப்பவர் பெறுபவருக்கு அன்புடன் அறவுரை செய்தால் (கேட்பவர் கேட்கட்டும்) நன்றாக இருக்கும். எதிர்பார்த்து உதவி செய்ய சொல்லவில்லை. பலகரங்கள் ஆங்காங்கே இதுபோல செய்தால், பரவினால் அதன் பலன் இன்னும் நன்றாக இருக்கும். அன்பும், உதவியும் தொடர் வளையங்கள், அவைகள் துண்டாகக் கூடாது. இதன் மூலம் இந்த சமூகம் ஒழுங்குபடும் என்பது உண்மை. திருவள்ளுவர், பாரதியார் போன்றவர்கள் தங்கள் எழுது மூலம் சொன்னதால்தான் நமக்கு பல நல்ல விஷயங்கள் கிடைத்துள்ளது. அதுபோல அவரவர் தாய் தந்தை சொல்வதால்தான் குழந்தைகளும் கற்கிறது.
நம் வரிப் பணத்தில் இலவசங்களை அள்ளி வீசி அதற்குப் பதில், அத்காரம் பெற்று நம்மையே சுரண்டும் அரசியல்வாதிகளை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு இந்த சமூகம் எவ்வளவு அடிமைப்பட்டு இருக்கிறது எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உதவி பெறுபவர்கள் பிறருக்கு (தேவையானவருக்கு) உதவி செய்யும் மனநிலையை தோற்றுவிக்க வேண்டும். அதுதான் மனிதாபிமானம், அன்பு.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.
பணம் படைத்த மனிதரிடம் குணம் இருப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இந்த சமூகம் ஒழுங்காக வேண்டும்.
ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பணம் சம்பாரிப்பது சேர்த்து வைப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு இருப்பவர்கள் மத்தியில் மனிதத் தன்மையுள்ள மனிதனாக உயர்ந்து நிற்கிறார் . கடவுளின் அருள் என்றென்றும் அவர்கள் குடும்பத்திற்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிற்ன்
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கங்களுடன்,
ஜோலார்பேட்டை திரு .நாகராஜ் அவர்களின் மனமார்ந்த சேவைகளை ,வெளிப்படுத்திய விதம் அருமை.
கடந்த ஆண்டு எடுத்த பேட்டியை ,நேற்றுதான் சந்தித்தது போல் எப்படி கோர்வையாக அளிக்கமுடிகிறது .????? மிகவும் வியப்பாகவும் மலைப்பாகவும் உள்ளது.
உணவு சாப்பிட்டவகளிடம் பேசிக்கொண்டு ,அவர்களின் பின்னணி என்ன என்பதை பெயர்களுடன் “அப்பப்பா”அருமை.
நாகராஜ் மட்டும் தான் இந்த சேவையை செய்யவேண்டும் என்பதில்லை ,நாமும் நமது பகுதிகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற கருத்தை ஆணி அடித்து பதியவைத்து விட்டீர்.
அருமை.
வாழ்த்துக்களுடன் ,
மனோகர் .
ஜோலார்பேட்டை நாகராஜ் பற்றி ரோல் மாடல் பதிப்பில் தெரிந்து கொண்டேன். மனிதருள் “வாழும் தெய்வம் ” என்று சொன்னால் அது மிகையாகா..
அய்யா வின் சேவை பற்றி படிக்க,படிக்க என்ன சொல்ல என்று தெரியவில்லை. நாமெல்லாம் அய்யாவின் சேவையை பார்க்கும் போது, இன்னும் பூஜியத்தில் தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அய்யாவிற்கு பக்கபலமாக இருக்கும் திருமதி.சுஜாதா அம்மாவின் தொண்டும் என்னே.! இருவரையும் வணங்குகிறேன்..தொண்டு செய்வதற்கு பணம் தேவையில்லை..மனம் தான் தேவை என்று சூட்சுமுகமாக இந்த பதிவு சொல்லுகிறது.
சிறப்பான வி.ஐ.பி யை நம் தளத்தில் பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா..
நம் தளத்தின் அடுத்த பாரதி விழாவினை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.