Home > 2016 > October

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

இன்று கந்தசஷ்டி துவங்குகிறது. வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரம். இந்த ஒரு வாரமும் இயன்றவரை முருகப் பெருமானின் பெருமைகளைப் பற்றி நம் தளத்தில் பேசுவோம். தளத்தில் சிறப்பு பதிவுகள் தொடர்ந்து வெளிவரும். நீங்கள் கேள்விப்படாத புதுப் புது விஷயங்களை தரவேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறோம். இதை நிறைவேற்றித் தரவேண்டியது முருகப் பெருமான் தான். அடியேன் ஒரு கருவி மட்டுமே. மனிதன் நினைப்பதை முடிப்பவன் இறைவனல்லவா? கந்தசஷ்டி முதல் நாளின் சிறப்பு பதிவாக 'முருகவேள்

Read More

மகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா?

நாளை அக்டோபர் 29 தீபாவளி. ஆனால் இன்று அதைவிட முக்கிய நாள். இன்றைக்கு பெண் விடுதலை, பெண் கல்வி என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் மகாகவி சுப்ரமணிய பாரதியே ஆவார். ஆனால் சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் அல்லவா? பாரதிக்கு பெண் விடுதலையை பற்றியும் நமது தேச விடுதலைப் போரின் புதிய பரிமாணத்தையம் காட்டியது யார் தெரியுமா? சகோதரி நிவேதிதை! அக்டோபர் 28 அவர் பிறந்த நாள்! மகாகவி பாரதியார் இவரைத் தமது

Read More

பண்டிகை, விஷேட நாட்களும் ஆலய தரிசனமும்! தீபாவளி SPL 1

வாசகர்கள் அனைவரும் தீபாவளி பரபரப்பில் இருப்பீர்கள். சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு மலரில் அடியேன் எழுதிய ஆன்மீக கட்டுரை ஒன்று முதல் கட்டுரையாக பிரசுரமாகியுள்ளது. திருவருள் துணைக்கொண்டு நம் Rightmantra.com தளத்தையடுத்து இனி வார மாத இதழ்களுக்கும் எழுத தீர்மானித்துள்ளேன். இந்த கட்டுரையில் வரும் செய்தி தான் அடியேனின் தீபாவளி மெசேஜ். நாமெல்லாம் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் நேரங்களில், அத்தியாவசிய சேவைகளுக்காக தீபாவளித் திருநாளிலும் பணியில் இருக்கப்போகும் பேருந்து ஓட்டுனர்கள் & நடத்துனர்கள்,

Read More

தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)

'அதிதி போஜனம்' என்பது நமது தலையாய அறங்களுள் ஒன்று. காலம்காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த தருமம். ஆனால் இன்று அந்த வார்த்தைக்கே அர்த்தம் போய்விட்டது. அக்காலங்களில் அதிதி போஜனத்துக்காக என்னவெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று அறியும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன. விருந்தோம்பலால் கெட்டவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. சொல்லப்போனால் தலைமுறைகளை தழைக்கச் செய்வது அதிதி போஜனமே ஆகும். இந்த ஒப்பற்ற அறத்தின் சிறப்புக்களையும் அதன் பின்னணியில் நடைபெற்ற

Read More

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

வாழ்வில் சில கேள்விகளுக்கு விடை உடனே கிடைப்பதில்லை. ஏன் இப்படி நடக்கிறது? நாம் எந்த தவறும் செய்யவில்லையே, இருந்தும் ஏன் இது நிகழ்ந்தது? இதற்கு நாம் எந்தளவு பொறுப்பாளி? இதை நாம் எப்படி எதிர்கொள்வது? நமது எதிர்வினை சரிதானா? அல்லது வழக்கம்போல் மௌனமாய் கடந்து போய்விடுவோமா? அப்படி செல்வதும் சரி தானா? இவ்வாறாக... மண்டையை உடைக்கும் அளவுக்கு யோசித்தும் சில விஷயங்களை புரிந்துகொள்ளவே முடியாது. 'சரி நமது வேலையை கவனிப்போம்... சுறுசுறுப்பான தேனீக்கு

Read More

திருப்பம் தரும் தாருகாவனத்தில் சில மணித்துளிகள்!

வாசக அன்பர்களுக்கு வணக்கம். 'திருப்பராய்த்துறை தாருகவனேஸ்வரர்' சென்ற மாதம் தான் நமக்கு அறிமுகமானார். அதற்குள் இரண்டு முறை அங்கு சென்றுவந்துவிட்டோம். இனி திருச்சி சென்றால் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரரை தரிசிக்காமல் நம்மால் இருக்கவேமுடியாது. நமக்கு அத்தனை நெருக்கமாகிவிட்டார் இத்தலத்து இறைவன். இந்த ஆலய தரிசன பதிவை படியுங்கள். உங்களுக்கும் நெருக்கமாகிவிடுவார். பராய்த்துறைநாதர் நமக்கு எப்படி அறிமுகமானார்? நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பான். அது

Read More

திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

திருப்பராய்த்துறை தலத்தின் ஆலய தரிசன பதிவை எழுதிவருகிறோம். பதிவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, திருப்பராய்த்துறை தொடர்பாக மகா பெரியவா கூறிய ஒரு அற்புதமான விஷயம் மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் தொகுப்பில் கண்ணில் பட்டது. கூட இரண்டு மூன்று மகிமைகள் சேர்த்து அதை முதலில் அளித்துவிடுவோம். பின்னர் ஆலயதரிசன பதிவை சற்று நிதானமாக அளிக்கலாம் என்று தோன்றியது. சிவாலயங்களில் காலக்கிரமம் தவறாமல் பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தால் வானம் பொய்க்காது. நாட்டில் பஞ்சம் வராது.

Read More

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

இது தண்டபாணித் தெய்வம் புரிந்த மற்றுமொரு திருவிளையாடல். முருகப் பெருமானுக்கு எத்தனையோ தலங்கள் உள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட தலங்களை தேர்ந்தெடுத்து அவற்றை 'அறுபடை வீடுகள்' என்று சொல்லும் வழக்கம் எப்படி வந்தது? அறுபடை வீடுகளின் பின்னணி என்ன என்பது பலருக்கு தெரியாது. //இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.// தலைசிறந்த முருகனடியார்களுள் ஒருவர் புலவர் நக்கீரர். (ஆம் 'நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றமே குற்றமே' என்று தலைவரையே

Read More

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

'When the student is ready teacher appears' என்று ஒரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. அதாவது உங்களுக்கு பக்குவம் ஏற்படும்போது உங்களுக்குரிய குரு தானே தோன்றி உங்களை வழிநடத்துவார். ஆனால் இந்தப் பொன்மொழிக்கு இந்த ஒரு அர்த்தம் மட்டுமா உண்டு? இல்லை... இதன் அர்த்தம் மிக மிக பரந்து விரிந்த ஒன்று. எந்த ஒன்றையும் அடைவதற்குரிய தகுதியை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டால் போதும், பிரபஞ்சம் அதை அடைவதற்கு துணை நின்று

Read More

95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்!

மூன்று நாள் எட்டயபுரம், தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் & திருப்பராய்த்துறை பயணம் இனிதே நிறைவடைந்து நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிவிட்டோம். பயணம் மிக மிக அற்புதமாக அமைந்தது. நமது அலைபேசி தான் மக்கர் செய்து தனது ஆயுளை முடித்துக்கொண்டுவிட்டது. பலரது தொடர்புகள் விடுபட்டுப்போயிருக்கின்றன. எனவே ஏற்கனவே நட்பில் இருந்த நண்பர்கள், நட்புக்கரம் நீட்ட விரும்பும் அன்பர்கள் யாவரும் E-MAIL, SMS, WHATSAPP இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் தங்கள் அலைபேசி எண்ணை

Read More

அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா ? Rightmantra Prayer Club

சென்ற பிரார்த்தனைப் பதிவு அளிக்கப்பட்ட பிறகு நாம் சம்பந்தப்பட்ட திரிபுராந்தகர் திருக்கோவிலுக்கு சென்று அர்ச்சனையும் வழிபாடும் செய்ததோடு, (இறுதியில் அது குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன) மேலும் சில ஆலயங்களிலும் சம்பந்தப்பட்ட பிரார்த்தனையாளர்களுக்காக அர்ச்சனை செய்யவும் பிரார்த்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று திருப்பதி திருச்சானூரில் உள்ள சூரிய நாராயணப் பெருமாள் கோவில். சென்ற வாரம் ஒரு தனிப்பட்ட அலுவல் காரணமாக திருச்சானூர் சென்றபோது அப்படியே அங்கே அலமேலுமங்காபுரத்தில் உள்ள சூரியநாராயணப் பெருமாள் கோவிலுக்கும்

Read More

தீட்டு என்றால் என்ன? இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் யாவை?

'தீட்டு' என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம். நமது முகநூலில் பகிர்ந்ததை இங்கு நமது ஓவியர் வரைந்த பிரத்யேக ஓவியத்துடன் தந்திருக்கிறோம். தீட்டு என்பது என்ன? இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான்

Read More

சூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்!

ஒரு முறை தேவாசுர யுத்தம் முடிந்த பின்னர் தேவேந்திரன் தேவகுரு பிரகஸ்பதியை சந்திக்கச் சென்றான். தேவேந்திரனின் முகம் வாட்டத்துடன் இருப்பதை பார்த்த பிரகஸ்பதி, "அது தான் மகாவிஷ்ணுவின் உதவியால் வெற்றி பெற்றுவிட்டீர்களே இன்னும் என்ன கவலை?" என்று வினவினார். "குருவே போரில் வெற்றி பெற்றுவிட்டாலும், போரினால் ஏற்பட்ட காயம் மற்றும் காயத்தின் தழும்புகள் தேவர்களை வருத்தமுறச் செய்கின்றன. அவர்கள் வேதனையிலிருந்து எப்படி மீட்பது என்று தெரியவில்லை. எனவே தான் வாட்டத்துடன் இருக்கிறேன்!" "தேவேந்திரா

Read More

வேதவித்துக்கள் பங்கேற்ற ரைட்மந்த்ரா அலுவலக ஆயுத பூஜை!

இந்துக்களின் பண்டிகையில் மிக மிக முக்கியமானது அர்த்தமிக்கது ஆயுத பூஜை பண்டிகை. செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து அதற்கென்று ஒரு பண்டிகை எடுப்பது நமது இந்து மதம் மட்டுமே. சென்ற ஆண்டு தி.நகர் சத்குரு சபா வேத பாடசாலை குழந்தைகளை கொண்டு நமது அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடியது நினைவிருக்கலாம். இந்த ஆண்டும் அக்குழந்தைகளை கொண்டே கொண்டாடுவது என்று முடிவு செய்து முன்னதாக சென்று பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளிடம் பேசி

Read More