Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > மகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா?

மகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா?

print
நாளை அக்டோபர் 29 தீபாவளி. ஆனால் இன்று அதைவிட முக்கிய நாள். இன்றைக்கு பெண் விடுதலை, பெண் கல்வி என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் மகாகவி சுப்ரமணிய பாரதியே ஆவார். ஆனால் சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் அல்லவா? பாரதிக்கு பெண் விடுதலையை பற்றியும் நமது தேச விடுதலைப் போரின் புதிய பரிமாணத்தையம் காட்டியது யார் தெரியுமா?

சகோதரி நிவேதிதை!

அக்டோபர் 28 அவர் பிறந்த நாள்!

மகாகவி பாரதியார் இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுவார். 1905ஆம் ஆண்டினை ஒட்டி நிகழ்ந்த இவருடனான சந்திப்பு தான் பாரதியாரின் தனிவாழ்வில் சிந்தனைப் போக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது; பெண்மை பற்றிய அவரது பார்வையில் பெருமாற்றத்தினைத் தோற்றுவித்தது.

sister-nivedhita-copy

ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது, அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், சமுதாய வழக்கப்படி தான் அவரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார். மேலும் தனது மனைவிக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார். இதைக் கேட்ட சகோதரி நிவேதிதை வருத்ததுடன், “மனைவியை அடிமைக்கு அதிகமாக நினைக்காத இன்னொரு இந்திய மனிதரைக் காண்கிறேன்” என்றார். மேலும் சகோதரி நிவேதா, பாரதியாரிடம், “உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்?”, என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்தது.

இதன் விளைவாக, பாரதியார் நிவேதிதை அம்மையாரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்; ‘மாதரசி’ என்று அவரை மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் சுட்டினார். 1909ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது ஸ்வதேச கீதங்கள் என்னும் நூலின் இரண்டாம் பாகத்தை நிவேதிதை அம்மையாருக்கு ‘ஸமர்ப்பணம்’ (dedication) செய்தார். ஒருமுறை நிவேதிதை அம்மையார் நோய்வாய்ப்பட்டிருந்தபோது விரைவில் அவர் உடல்நலம் பெற இறையருளை வேண்டி ‘இந்தியா’ இதழில் ஒரு கட்டுரை எழுதினார்; பின்னாளில் ‘தாய் நிவேதிதையைத் தொழுது’ ஒரு பாடலும் புனைந்தார்.

பெண்மை பற்றிய பாரதியாரின் கண்ணோட்டத்தில் ஒரு நல்ல மாற்றம் விளைவதற்கு நிவேதிதை அம்மையார் தூண்டுதலாக இருந்தார் என ‘பாரதி சரித்திரம்’ என்னும் நூலில் அவரது துணைவியார் செல்லம்மா பாரதி குறிப்பிட்டுள்ளார். மேலும், “மகனே! புருஷர்கள் அனேகம் பேர் படித்தும் ஒன்றும் அறியாத சுயநல வெறி கொண்டவர்கள். ஸ்திரீகளை அடிமைகளென மதிப்பவர்கள். ஒரு சிலர் உன் போன்ற அறிவாளிகள், அவர்களும் கூட இப்படி அறியாமையில் மூழ்கி, ஸ்திரீகளுக்குச் சம உரிமையும் தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால், எப்படி நாடு சமூகச் சீர்திருத்தம் அடையும்? . . . சரி, போனது போகட்டும். இனிமேலாகிலும் அவளைத் தனியென்று நினைக்காமல், உனது இடக்கை என்று மதித்து, மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி நடந்து வருதல் வேண்டும்” என்று நிவேதிதை அம்மையார் பாரதியிடம் கூறியதாக எழுதியுள்ளார் செல்லம்மா. நிவேதிதையின் சொல்லை அப்படியே ‘குருஉபதேசமாக’ ஏற்று அதன்படி செயல்பட்டார் பாரதியார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

sister-nivedhithaa-with-amma
அன்னை சாரதா தேவியுடன் சகோதரி நிவேதிதை

நிவேதிதா அன்னையை பற்றி எழுதுவது என்றால் ஒரு பதிவு போதாது. அத்தனை அத்தனை சேவைகள் அவர் இந்த தாய்த்திருநாட்டிற்கு செய்திருக்கிறார்.

அவரது சேவைக்கடலில் இருந்து ஒரு துளியை பார்ப்போம்!

1899 ஆம் ஆண்டு, கல்கத்தாவில் பிளேக் நோய் மீண்டும் தலைதூக்கியது. தினசரி பல உயிர்களை பலி வாங்கிய அந்நோய் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு அந்த நோய் வந்தபோது அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், இம்முறை கண்டும் காணாதது போல இருந்துவிட்டது.

மக்கள் அறியாமையில் உழலும் போது அரசு மட்டும் என்ன செய்யமுடியும்? இந்த சுதேசிகளை சுத்தம் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டது.

சுவாமி விவேகானந்தரால் அவ்வாறு இருக்க முடியவில்லை. பிளேக் மீண்டும் தாக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். எனவே உடனடியாக நிவாரணப் பணியில் இறங்கினார். மார்ச் 31 நிவாரணப்பணி துவங்கியது. நிவேதிதை அதற்கு தலைவராகவும் செயலாளராகவும் இருந்தார்.

அடுத்தடுத்த பயணங்களால் சுவாமிஜியின் உடல்நிலை அப்போது மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. பயணங்கள் இப்போது போல அப்போது சுகமானதல்ல. மேலும் அப்போது அவரது சகோதரத் துறவியான யோகானந்தர் மகாசமாதி அடைந்திருந்தார். சுவாமிஜி அந்த துயரில் வேறு இருந்தார். இருப்பினும் சுவாமிஜி தனது உடல், மனது துயரங்கள் எதையும் பொருட்படுத்தாமல் பிளேக் கடுமையாக பரவி வந்த குடிசைப் பகுதிகளில் சென்று தங்கினார். அது அம்மக்களுக்கு தைரியமூட்டும் என்று கருதினார் அவர்.

நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தக் குடிசைப்பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று சகோதரி நிவேதிதை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

எனவே நிவேதிதை தாமாகவே செயலில் இறங்கினார். ஒரு நாள் காலை கையில் துடப்பத்தை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இது மக்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. நிவேதிதை சுத்தம் செய்வதை பார்த்து பலரும் அவருடன் தாங்களும் இணைந்துகொண்டனர். (உழவாரப்பணியை விட பன்மடங்கு புனிதமான பணி அன்னை நிவேதிதை செய்தது.) சதானந்தர் பலரிடம் நன்கொடை வசூலித்து ஆட்களை நியமித்து தாமும் அவர்களோடு சேர்ந்துகொண்டு தெருக்களை சுத்தம் செய்தார். நோயாளிகளுக்கு உதவினார்.

மாவட்ட மருத்துவ அலுவலர் தமது குறிப்பேட்டில் “இந்தப் பேரிழப்புக் காலத்தில் அன்பின் வடிவாகத் திகழ்ந்த நிவேதிதையை பாக்பஜாரில் உள்ள எல்லாக் குடிசைப் பகுதிகளிலும் காண முடிந்தது. தன்னைப் பற்றிய சிந்தனையின்றி, துன்பத்தால் நலிந்தோர்க்குப் பணத்தாலும் உழைப்பாலும் உதவி புரிந்தாள் அவள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்கோ பிறந்து வளர்ந்து இந்தியாவின் முன்னேற்றத்துக்காக பெண் கல்விக்காகவும் சுதந்திரத்திற்காகவும் நமது சனாதன தர்மத்திற்காகவும் தன்னை அர்பணித்துக் கொண்ட சகோதரி நிவேதிதையை மறக்கலாமா?

பாரதி அவரை பற்றி என்னக் கூறுகிறார் என்று பாருங்கள்..

bharathiyarஅருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மை தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

– மகாகவி சுப்ரமணிய பாரதி

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அன்பு அறமும் இன்பமும் உங்கள் இல்லங்களில் இந்த நன்னாளில் பெருகட்டும். ஈசன் அருள் எல்லாருக்கும் உரித்தாகட்டும். 

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more information click here!

==========================================================

Also check… Articles on Swami Vivekananda in Rightmantra.com

ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை!

எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==========================================================

Also check… Articles on பாரதியார் 

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

==========================================================

[END]

One thought on “மகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *