Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

print
ரு உரையாடல் மூலம் நமது வாழ்வின் பிரச்சனைகள் சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு சொல்ல முடியுமா? “ஆம்… முடியும்!” என்று நிரூபித்திருக்கிறார்கள் அந்த குருவும் அவரது உண்மை மாணவனும்.

மாணவன் கேட்டது சாதாரண கேள்விகள் அல்ல. வாழ்க்கையில் போராடும் ஒவ்வொருவர் மனதிலும் உள்ள கேள்விகள். எல்லா தெய்வங்களிடமும் குருமார்களிடமும் கேட்டு கேட்டு பதில் கிடைக்காத கேள்விகள். பதில் சொன்ன குரு அந்த மாணவனுக்கு மட்டும் சொல்லவில்லை. நம் அனைவருக்கும் சேர்த்து தான் சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல் ஒன்றை தருகிறோம். உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.

வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்!

DSC_9779

சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.

சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)

Productive-Quotes-3 copyசுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.

சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம்  தெரியவில்லை….

இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)

சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.

Focus

சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.

சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

Self-Confidence copy

சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?

இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.

God's answers

சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் :  கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்துகொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு.

=================================================================

Also check :

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

==================================================================

Also check from our archives:

==================================================================

யார் உங்கள் தலைவர்?

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

துறவிக்கு கிடைத்த நரகம்! ராமகிருஷ்ண பரமஹம்சர் B’DAY SPL

“இவரை எதுக்கு உங்க விசிட்டிங் கார்டுல போட்டிருக்கீங்க?”

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

=============================================================

[END]

11 thoughts on “ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

  1. அருமையான பதிவு சார்.மிகவும் பயன் கொடுக்க கூடிய பதிவு கொடுத்தமைக்கு நன்றி.

  2. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான வாழ்வு சிறக்க கருத்துள்ள பதிவு சார்

    நன்றி

  3. HAPPY MORNING TO EVERYBODY.

    MONDAY MORNING SPECIAL IS VERY VERY ENERGETIC SPECIAL

    THANKS A LOT FOR SUPERB ARTICLE

    REGARDS
    UMA V

  4. Excellent Dear Sh Sundar

    The Q&A gives me (not only me but also to ‘so as concerned’) a boost in day to day activities without seriously thinking of ‘loses’ and ‘unanswered prayers’.
    ‘Lost’ is not a ‘Lose’ it is a testing for ‘Experiencing the Experience’ and ‘Unanswered prayers’ will be answered at a proper time by the Almighty..

    Thanks for producing such a nice Q&A by Two Giants…of India.

    KK – Navi Mumbai

  5. MONDAY MORNING SPL மிகவும் உற்சாகம் அளிக்கும் அருமையான பதிவு

  6. படித்து பத்திரப்படுத்தப்பட வேண்டிய ஒன்று…முடிந்த வரையில் என் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளேன்…அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது..இது வரையில் நம் தளத்தின் பதிவுகள் என் நம்பிக்கைக்கு உரமிட்டு இருக்கின்றன…அந்த வகையில் இந்தப் பதிவு எனக்கு புது நம்பிக்கையும், தைரியத்தையும் தருகிறது,.

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *