Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, June 18, 2024
Please specify the group
Home > Featured > பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

print
கவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மடத்தில் எறும்புகள் தொல்லை இருந்தது. ஏதாவது ஒரு உணவுப் பொருளை வைத்துவிட்டால் போதும் எறும்புகள் அவற்றை மொய்த்துவிடும். மடத்தில் ஒரு முறை ஒரு விழாவிற்காக லட்டுக்கள் செய்யப்பட்டன.

ஒரு பெரிய தட்டு நிறைய அடுக்கி வைக்கப்பட்ட லட்டுக்களை இரவு நேரத்தில் எறும்புகளிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று சீடர்களுக்கு கவலை ஏற்பட்டது. அதுபற்றி பகவானிடமே கேட்டார்கள்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திரு.கி.சிவக்குமார் அவர்களை வரவேற்கும் (பால) பாரதி!
சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திரு.கி.சிவக்குமார் அவர்களை வரவேற்கும் (பால) பாரதி!

அதற்கு மெலிதாக சிரித்தவாறே பதில் அளித்த பகவான், சீடர்களிடம் லட்டு நிறைந்த தட்டைச் சுற்றி சர்க்கரையை வட்டமாக கோலம் போல தூவச் சொன்னார். மறு நாள் காலையில் பார்த்தால் எறும்புகள் அனைத்தும் சர்க்கரையிலேயே மூழ்கி மொய்த்துக் கிடந்தன, லட்டுக்களை சீந்தவில்லை. அதாவது சர்க்கரைக்கு அப்பால் லட்டுக்கள் இருப்பது அவைகளுக்கு தெரியவில்லை.

 பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளின் கடவுள் வாழ்த்து

பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளின் கடவுள் வாழ்த்து
பள்ளி மாணவி செல்வி.தீபிகாவின் 'திருக்குறளும் பாரதியும்' உரை!
பள்ளி மாணவி செல்வி.தீபிகாவின் ‘திருக்குறளும் பாரதியும்’ உரை!

 

அது போலதான் நேற்று மாலை நடைபெற்ற நம் பாரதி விழாவும். அரும்பெரும் சான்றோர்கள் பங்குபெறும் இந்த விழா போன்ற பேரின்பமான விஷயங்கள் பல இருக்க சிற்றின்பத்தில் மூழ்கி “நமக்கு இதுவே போதும்” என்று கருதி விழாவை ஏதேதோ காரணம் கூறி தவிர்த்தவர்களை  என்ன சொல்ல?

DSC_6155

நம்  நிகழ்ச்சியை இறைவன் வெகு சிறப்பாக நடத்திக்கொடுத்துவிட்டான். ஆனால் உண்மையான இழப்பு யாருக்கு ??

(இதை நாம் இங்கு சொல்ல காரணம் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த நண்பர்கள், வாசகர்கள் சிலர் இந்த விழாவுக்கு வரவில்லை. ஆனால் இறைவனருளால் நாம் எதிர்பார்க்காதவர்கள் வந்திருந்து விழாவில் கலந்துகொண்டு இறுதி வரை இருந்து நம்மை திக்குமுக்காடச் செய்தார்கள் என்பது வேறு விஷயம்!!)

=============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

[END]

12 thoughts on “பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

 1. MONDAY MORNING SPL பாரதி விழாவில் தாங்கள் கூறிய கதையை சிறப்பு பதிவாக அளித்தது மிகவும் வரவேற்க்கதக்கது .

  விழாவிற்கு வராதவர்களுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி இழப்பு என்பதை உணர்வார்கள்.

  \\\எதிர்பார்க்காதவர்கள் வந்திருந்து விழாவில் கலந்துகொண்டு இறுதி வரை இருந்து நம்மை திக்குமுக்காடச் செய்தார்கள். \\\ எல்லாம் மஹா பெரியவா அருளும் ,அப்பன் அருணாச்சலத்தின் ஆசியும் ,குமரக்கடவுளின் கருணையும் சாட்சி .

  -நன்றிகளுடன்
  மனோகர் .

 2. Dear sundarji,

  Good Morning

  It was a very great experience and excitement for myself and my mother.

  It was not like a normal function , it was just as like as family function.

  Thank you for organizing such a wonderful function.

  We are very much greatful to you for making us to attend such an ethical function.

  Mr.Baskarabharathy and Mr.Sivakumar speeches are very much amazing.
  Others speeches were also very good and enthusiastic for us.

  Thanks and Regards

  Harish.V

  Uma.V

 3. சுந்தர்ஜி,

  மிக்க மகிழ்ச்சி. யார்க்கு எது கிடைக்கும் என்பது அவன் போட்ட கணக்கு. இருந்தாலும் அவனிடம் உருகினால் அந்த கணக்கு மாறும் என்பது பலருக்கு புரிவதில்லை. இன்னும் நம் தளத்திற்கு பல பல வெற்றிகள் கிடைக்க காக்கும் தெய்வம் ஸ்ரீ மஹா சுவாமிகளை வேண்டிகொள்கிறேன்.

  இந்த நிகழ்விற்கு வந்த திரு.பாலன் சார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்க்கு நம் தளம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நல்லார் ஒருவர் , அவர் பொருட்டு பெய் என பெய்யும் மழை எனும் திருக்குறள் அவர்க்கு பொருந்தும். நன்றி

 4. சுந்தர்ஜி
  திரு பாலன் அவர்களுக்கு என் நன்றி. எல்லாம் மஹா பெரியவா அவர்களின் ஆசி.இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.
  பாரதீ விழாவை சிறப்பாக நடத்திய நம் சுந்தர்ஜிக்கு ஒரு ராயல் சலியூட்.
  நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

  புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்

  நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு

  எல்லார்க்கும் பெய்யும் மழை

  உழவர்கள் தங்களுடைய நெற்பயிர் செழித்து வளர்வதற்காகத் தண்ணீர் இறைத்து ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடிப் பக்கத்தில் உள்ள புல்லின்மீதும் கசிகிறது, அதையும் நன்கு வளரச் செய்கிறது.

  அதுபோல, பழமையான இந்த உலகத்தில், நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால்கூடப் போதும், அவருக்காக மழை பெய்யும், மற்றவர்களும் அதில் பலன் அடைவார்கள்.

  அதுபோல உங்களால் நாங்கள் பயன் அடைகிறோம் .

 5. சுந்தர்ஜி,

  விழாஎந்த ஒரு குறையும் இன்றி சிறப்பாக அமைய வேண்டும் என்று நேற்று காஞ்சிபுரத்தில் மகா பெரியவா ஆதிஷ்டனத்தில் வேண்டி கொண்டேன். அதற்கு இணங்க விழா சிறப்பாக அமைந்தது என்று நம் தல வாசகர்கள் சொன்னார்கள். மிகவும் சந்தோழமாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  நேற்று மகா பெரியவா அனுஷ நட்சத்திர நாள் வேறு. அங்கு ஒரே கூட்டம் . நாங்கள் நினைத்த படி வேலை முடிய வில்லை. அதனால் விழாவில் கலந்து கொள்ள இயலாமல் பொய் விட்டது .மிகவும்வருத்தமாக உள்ளது.

 6. சந்தோசம்.

  கரணம் சொல்லி வருந்தவில்லை. வருவதற்கு எனக்கு யோகம் இல்லை.

  தங்களது எல்லா முயற்சிகளும் இறை அருளால் குரு அருளால் இனிதே நடைபெறும். நடைபெற பிரார்த்திக்கின்றோம்.

  ப.சங்கரநாராயணன்.

 7. விழாவில் ஆரம்பம் முதல் இறுதிவரை கண்டு ரசித்தேன். மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில் விழாவை நேர்த்தியாக நடத்திய திரு. சுந்தர் அவர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  1. சார் தங்களை போன்றவர்களின் வருகையால் விழாவின் சிறப்பு பன்மடங்கு அதிகமானது என்றால் மிகையாகாது. நன்றி.
   – சுந்தர்

 8. Glad to know that the function went well. Couldn’t make it due to other commitments.
  Regards
  R.HariHaraSudan
  “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

 9. சுந்தர்ஜி ,

  விழா சிறப்புடன் நடந்தது .. வாழ்த்துகள் சுந்தர்,உங்களுக்கு உதவிய அனைவருக்கும் . சிறப்பு உரையாளர்கள் அனைவரது உரையும் சிறப்புடனும் சிந்திக்க வைக்கும் படியும் இருந்தது.பாலன் அய்யா அவர்கள் வருகை நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாகியது. பாரதி விருது உரியவர்களுக்கு கொடுக்க பட்டது மிக்க மகிழ்ச்சி.

  நன்றி,
  பாலு மகேந்திரன்.வீ

 10. மக்கள் ஆட்டு மந்தை கூட்டம் போல வாழ்ந்து கழிக்கும் இக் காலத்தில்
  இப்படி ஒரு எண்ணம் உதித்து இன்று இரண்டவாது விழாவும் வெற்றியுடன் கடந்து விடீர்கள்
  இறைவன் இயக்குகிறான் நாமெல்லாம் இயங்குகிறோம்
  இயக்கத்தின் காரணம் அவனே அறிவான்
  வாழ்துக்கள்

 11. Dear Sundarji

  The way in which you organized the Bharathi vizha function is very much magnificent. I am very much proud of attending such a wonderful function. Thank you so much for making me to attend such a great function. The speeches of chief guest and others are excellent. I never forget the day in my life. It was very much inspirational to all of us. Tons of thanks to you.
  May God Bless you
  Regards
  Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *