Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று!

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று!

print
ண்பர் ஒருவரின் முகநூலில் படித்தது இது. படித்தவுடன் நம் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே உங்களுடன் பகிர்கின்றோம்… இதில் உள்ள அத்தனை வரிகளும் நம்மில் சிலர், மன்னிக்க பலர் வாழ்வில் நடந்தவை… நடப்பவை!!

motherhood-1d

அம்மா…
நான் பிறந்து
விழுந்த போது…
உன் சேலைதான்
ஈரமானது…!!!
நான் உறங்க…
உன் சேலைதான்
ஊஞ்சல் ஆனது..!!!

நான் பால்
அருந்தும் போது…
உதட்டினை துடைத்து
உன் சேலை தான்…!!!

எனக்கு பால்
கொடுக்கும்போது…
உன் சேலை தான்
எனக்கு திரையானது…!!!

நான் மழையில்
நனையாமல் இருக்க…
உன் சேலை
தான் குடையானது…!!!

நீச்சல் பழக…
என் இடுப்பில் கட்டியதும்
உன் சேலை தான்…!!!!

மழையில் நனைந்த
என் தலையை…
துவட்டியதும்
உன் சேலை தான்…!!!

மாம் பழம் தின்று
என் கை துடைத்தும்
உன் சேலை தானம்மா…!!!

goat-mother-feeding

ஆசிரியரின்
மிரட்டலுக்கு…
ஓடி ஒளிந்ததும்
உன் சேலைதான்…!!!

அப்பா அடிக்க
வரும் போது…
என்னை ஒலித்து
வைத்ததும்…
உன் சேலை
தானம்மா…!!!

அண்ணனுக்கு தெரியாமல்
மறைத்து வைத்து…
மிட்டாய் கொடுத்தும்
உன் சேலை தான்…!!!

காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்…
உன் சேலை தான்…!!!

தலை வழிக்கு ஒத்தடம்
கொடுத்தும்…
உன் சேலை
தான் அம்மா…!!!

அம்மா உன் சேலையை
தொட்டு பார்கிறேன்…!!

தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்கிறேன்…!!!

மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று…
இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக….. அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி…..!!!

அம்மா…
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்…!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே
ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், “மளிகை கடைக்கு ”
போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு “பத்து நிமிஷம்” பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்
இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்…
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..!

கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க…
கைபேசியை எடுத்து , அம்மா….என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே…
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
“வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு ”
“மறக்காம எண்ண தேச்சி குளிடா”
“ரோட்ல பத்திரமா பாத்து போடா”
” உடம்ப பாத்துக்கோடா தங்கம் ”
என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்க
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்…!!!!

– பாஸ்கர் கோடி நாயுடு & பாக்யராஜ் ராஜா

==========================================================

இந்த மாத விருப்ப  சந்தா  செலுத்திவிட்டீர்களா?

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

யுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன்! சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு!! — “இதோ எந்தன் தெய்வம்” — (2)

தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! அன்னையர் தின ஸ்பெஷல்

“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” – தந்தையர் தின சிறப்பு பதிவு !

நம்பிக்கை!

‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

ஒரு துரோகத்தின் முன்னால்…

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *