ஒரு ஊரில் தணிகாச்சலம் பிள்ளை என்பவர் மேஜிஸ்திரேட்டாக இருந்தார். அவருக்கு ராமு என்பவன் உதவியாளராக (எடுபிடி) இருந்தான். தணிகாச்சலம் பிள்ளை எள் என்றால் எண்ணையாக நிற்பது தான் ராமுவின் வேலை. பிள்ளையவர்கள் மனதுக்குள் நினைப்பதைக் கூட செயல்படுத்தும் அளவுக்கு சாமர்த்தியசாலியாக இருந்தான் ராமு.
கார் கதவைத் திறந்து விடுவது, குளிக்க வெந்நீர் போடுவது, சமையலுக்கு காய்கறிகள் வாங்கி வருவது என அனைத்தும் அவனே. அவர் வெளியூருக்கு சென்றால் தணிகாச்சலம் பிள்ளையின் பெட்டிப் படுக்கைகளை சுமந்துகொண்டு கூடவே செல்வான் ராமு.
“இப்படி ஒரு சேவகன் கிடைக்க நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்” என்று நினைத்து நினைத்து பூரித்துப்போனார் தணிகாச்சலம் பிள்ளை.
மாஜிஸ்திரேட்டின் நேரடி உதவியாளர் என்கிற கௌரவம் எங்கு சென்றாலும் ராமுவுக்கு கிடைக்கும். இதன் மூலம் பல மறைமுக ஆதாயங்கள் அவனுக்கு உண்டு.
ஆண்டுகள் சில உருண்டோடியது. தணிகாச்சலம் பிள்ளை ஓய்வு பெற்றார். நீதிமன்றத்தில் அவருக்கு தடபுடலாக பாராட்டு விழா நடத்தி வழியனுப்பி வைத்தார்கள். ராமு வழக்கம்போல இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்தான்.
அன்று மாலை சொந்த ஊருக்கு புறப்படுகிறார் தணிகாச்சலம் பிள்ளை. இன்று முதல் அவர் முன்னாள் மாஜிஸ்திரேட். மூட்டை முடிச்சுக்களை ஏற்றிக்கொண்டு தான் இதுவரை வசித்த அரசாங்க வீட்டை ஏக்கத்துடன் பார்த்தபடி காரில் ஏறினார் பிள்ளை. ராமு பெருகி வந்த கண்ணீரை தன் துண்டால் துடைத்துக்கொண்டான். கார் புகைவண்டி நிலையம் சென்றது. அவரை கூடவே சென்று வழியனுப்ப சென்றான் ராமு.
ரயில்நிலையத்தில் இறங்கியதும் தான் ஏறவேண்டிய ரயில் நிற்கும் பிளாட்பாரம் நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தார் பிள்ளை. மூட்டை முடிச்சுக்களை சுமந்தபடி ராமு கூடவே சென்றான்.
=========================================================
Also check…
ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !
துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !
மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!
=========================================================
சில நூறு அடிகள் நடந்திருப்பார்கள்.
எதிரே ஒருவன் வந்தான். “ராமு, இந்த ஊருக்கு புதுசா வந்திருக்குற மாஜிஸ்திரேட் இப்போ தான் நெல்லை எக்ஸ்பிரஸ்ல அஞ்சாவது பிளாட்பாரம்ல வந்து இறங்கியிருக்கார். உனக்கு தெரியுமா?”
“ஓ… அப்படியா…????”
அடுத்த நொடி தான் சுமந்து கொண்டிருந்த தணிகாச்சலம் பிள்ளையின் பெட்டி படுக்கைகளை கீழே அப்படியே போட்டுவிட்டு அஞ்சாவது பிளாட்பாரம் நோக்கி ஓடினான் ராமு.
தணிகாச்சலம் பிள்ளை திடுக்கிட்டார்.
“அடப்பாவி… இத்தனை நாள் நீ நேசித்தது என்னையில்லை என் பதவியையா? நீ கூழை கும்பிடு போட்டது, சேவகம் செய்தது எல்லாம் என் பதவிக்காகவா? புது மாஜிஸ்திரேட் வந்திருக்கிறார் என்று சொன்னவுடன் என்னை அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு போய்விட்டாயே…”
மனதுக்குள் எழுந்த விசும்பலை அடக்கிக்கொள்ள முற்பட்டார். அவரால் முடியவில்லை.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை (குறள் 331)
என்கிற குறள் நினைவுக்கு வந்தது.
கீழே யாரோ அவர் கால்களை வருடுவது போல இருந்தது. குனிந்து பார்த்தார்… ஒரு நாய் நின்றுகொண்டிருந்தது. அவரை பார்த்ததும் வாலை குழைத்தது.
அவர் அடிக்கடி பிஸ்கட், ரொட்டித் துண்டுகளை போடும் தெருநாய் அது.
அந்த நாய் நன்றி மறக்கவில்லை. தணிகாசலம் பிள்ளையை வழியனுப்ப வந்தது.
“ஐந்தறிவு ஜீவன் இதற்கு இருக்கும் நன்றி கூட இந்த மனிதர்களுக்கு இல்லையே…” என்று கூறி அதை வாஞ்சையோடு தடவிக்கொடுத்துவிட்டு புறப்பட்டார் பிள்ளை.
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை
நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா
தம்பி, நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா!
(Disclaimer : இது அரசியல் பதிவு அல்ல!)
==========================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
==========================================================
Also check…
சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!
வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?
நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?
அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!
வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
================================================
Don’t miss this….
எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
================================================
[END]
இன்றைய காலகட்டத்தை பிரதி பலிக்கும் நல்ல பதிவு.
ஜி,
அருமை. (Disclaimer )
அன்பன்
நாகராஜன் ஏகாம்பரம்
Perfect depiction of the current state if affairs…Power is what matters ..no value for humanity…..Kalam Kali kalam