Saturday, February 23, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ? MONDAY MORNING SPL 33

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ? MONDAY MORNING SPL 33

print
சுமார் 50 பேர் ஒரு செமினாரில் கலந்துகொள்ள சென்றிருந்தனர். அதில் சிறப்புரையாற்ற பேச்சாளர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பலர் தங்கள் கவலைகளை பிரச்னைகளை சோகங்களை பகிர்ந்துகொண்டனர்.

அவர்களது தேவை என்ன மற்றும் அவர்களின் குறை என்ன என்பதை பேச்சாளர் தெளிவாக புரிந்துகொண்டார்.

அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தவர் இடையில் திடீரென்று எல்லோருக்கும் தலா ஒரு ஒரு பலூனை கொடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு பலூனிலும் அவரவர் பெயரை எழுதச் சொன்னார். பெயர்கள் எழுதிய பின், அனைத்து பலூன்களும் சேகரிக்கப்பட்டு  அருகேயிருந்த வேறு ஒரு பெரிய அறையில் விடப்பட்டன.

Woman-Balloons-1600x1200

“இப்போது அனைவரும் அந்த அறைக்கு சென்று 5 நிமிடங்களுக்குள் அவரவர் பெயரை எழுதிய பலூனை எடுங்கள் பார்க்கலாம்…” என்றார்.

ஐந்தே நிமிடங்களுக்குள் தங்கள் பலூனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு, இடித்துக்கொண்டு,  திக்கித் திணறி பலூன்களுக்கு இடையே தங்கள் பலூனை தேடினர். ஐந்து நிமிடங்கள் கடந்தது தான் மிச்சம். ஒருவரால் கூட தங்கள் பெயர் எழுதிய பலூனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

“இப்போது யார் வேண்டுமானாலும் எந்த பலூனை வேண்டுமானாலும் எடுங்கள். எடுத்து அந்த பெயர் எழுதியவரிடம் அதை கொடுங்கள்.” என்றார்.

இந்த முறை ஐந்து நிமிடங்களுக்குள் அனைவர் கைகளிலும் அவரவர் பெயர் எழுதிய பலூன் இருந்தது.

“நமது வாழ்க்கையில் நடப்பதும் இது தான். மகிழ்ச்சி உண்மையில் எங்கிருக்கிறது என்று தெரியாமல் அர்த்தமற்ற முறையில் அதை தேடுகிறோம். நமது மகிழ்ச்சி மற்றவர்களின் மகிழ்ச்சியில் இருக்கிறது. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பாருங்கள். உங்கள் சந்தோஷம் தானாகவே உங்களிடம் தேடி வரும்!”

உங்கள் துன்பமே பெரிதென்று நீங்கள் வாழ்ந்து வந்தால் எந்தக் காலத்திலும் இன்பத்தை உணரமுடியாது. “உன்னை விட துன்பப்படுகிறவர்கள் இந்த உலகில் எப்போதும் உண்டு” என்பதை எந்நாளும் மறக்கவேண்டாம்.

நமது அன்பையும் கருணையையும் பரிவையும் எதிர்பார்த்து எத்தனையோ உன்னதமான விஷயங்கள் இந்த உலகில் காத்திருக்கின்றன. அவற்றின் மீது கொஞ்சம் உங்கள் கவனத்தை திருப்புங்கள். உங்கள் துன்பம் தானே தீரும்!

நினைவிருக்கிறதா? நமது தினசரி பிரார்த்தனையில் 9 வது வரி இது தான் :

“பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!”

==============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

[END]

11 thoughts on “மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ? MONDAY MORNING SPL 33

 1. நன்று தம்பி…மிக நன்று….வார முதல் நாளை மிக நல்ல பதிவுடன் துவங்க உதவிய உங்களுக்கு கோடானு கோடி நன்றி…அருமையான கருத்து….ஆம் மகிழ்ச்சி நமக்குள்ளேதான் இருக்கிறது…’இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே ‘ எனும் கவியரசரின் வரிகளுக்கு இணையாக உங்கள் வரிகள் நேர்த்தியாய் விளக்குகின்றன ….உங்களுக்கு இந்த நாள் மட்டும் அல்ல எல்லா நாளும் சிறப்பாய் அமைந்திட அக்காவின் பிரார்த்தனைகள் வாழ்க வளமுடன். _/|\_

 2. உங்கள் துன்பமே பெரிதென்று நீங்கள் வாழ்ந்து வந்தால் எந்தக் காலத்திலும் இன்பத்தை உணரமுடியாது. “உன்னை விட துன்பப்படுகிறவர்கள் இந்த உலகில் எப்போதும் உண்டு –

 3. \\நமது அன்பையும் கருணையையும் பரிவையும் எதிர்பார்த்து எத்தனையோ உன்னதமான விஷயங்கள் இந்த உலகில் காத்திருக்கின்றன. அவற்றின் மீது கொஞ்சம் உங்கள் கவனத்தை திருப்புங்கள். உங்கள் துன்பம் தானே தீரும்! \\

  “பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!” –

  நேற்றைய பொழுதில் இந்த வரிகளுக்கான அர்த்தங்களை, நேரிடையாக அனுபவித்து மகிழ்ந்தேன் .

  இந்த பதிவில் எளிமையான விளக்கத்துடன் விளக்கியவிதம் அருமை .
  monday marning spl வெரி வெரி சூப்பர் .
  -மனோகர்

 4. டியர் சுந்தர்ஜி

  monday மோர்னிங் spl சூப்பர்.

  //உங்கள் துன்பமே பெரிதென்று நீங்கள் வாழ்ந்து வந்தால் எந்தக் காலத்திலும் இன்பத்தை உணரமுடியாது. “உன்னை விட துன்பப்படுகிறவர்கள் இந்த உலகில் எப்போதும் உண்டு” என்பதை எந்நாளும் மறக்கவேண்டாம்.//

  துன்பத்தை நினைத்து கவலை படாமல் இருந்தால் இன்பம் தானாக வரும்

  ” தனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி ஆகு”

  என்ற கண்ணதாசனின் வைர வரிகள் தான் எனக்கு
  நினைவுக்கு வருகிறது

  நன்றி
  உமா

 5. சுந்தர் சார் காலை வணக்கம்

  மிகவும் அருமையான பதிவு

  நன்றி

 6. Good Morning Sundar Sir.

  Very reviving words in the morning that too beginning of the week.
  (உங்கள் துன்பமே பெரிதென்று நீங்கள் வாழ்ந்து வந்தால் எந்தக் காலத்திலும் இன்பத்தை உணரமுடியாது. “உன்னை விட துன்பப்படுகிறவர்கள் இந்த உலகில் எப்போதும் உண்டு” என்பதை எந்நாளும் மறக்கவேண்டாம்). very very apt sentence.
  Thanks for producing very good Mantra.

  reg
  KK, Navi Mumbai

 7. சுந்தர் சார் வணக்கம் …..மிக அருமையான பதிவு …..உங்கள் துன்பமே பெரிதென்று நீங்கள் வாழ்ந்து வந்தால் எந்தக் காலத்திலும் இன்பத்தை உணரமுடியாது. “உன்னை விட துன்பப்படுகிறவர்கள் இந்த உலகில் எப்போதும் உண்டு” என்பதை எந்நாளும் மறக்கவேண்டாம்…..நன்றி தனலட்சுமி ……

 8. சுந்தர் சார் வணக்கம்
  அவரவர் பலூன் அவரவர் கைக்கு வர அவர் சொன்ன அந்த இரு வழிகள்.
  கைக்கு கிடைத்த பலூனை எடுத்து அதில் உள்ள பெயர் பொறித்துள்ள உரியவரிடம் கொடுக்கும் போது அதிலும் ஒரு சந்தோசம் கிடைக்கும்.
  நம்மை விட கஷ்டபடுபவர், வேதனைபடுபவர், எத்தனையோ பேர் உலகத்தில் உள்ளனர். அதை பார்க்கும் போது நம்மை இந்த நிலையில் வைத்துள்ள ஆண்டவனுக்கு நன்றியும் நம்மை விட கஷ்டபடுபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியும் செய்யும் போது கிடைக்கும் சந்தோசம் அளவிடமுடியாது.
  தனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி ஆகு”
  அடிக்கடி நான் நினைக்கும் வார்த்தைகள். நன்றி சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *