Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

print
னது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள விலைமதிப்பற்ற வைரங்கள் மீதும் வைடூரியங்கள் மீதும் அந்த வணிகனுக்கு எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அவன் தனது குருவாக கொண்டாடும் ஒரு ஞானி அவனைக் காண அவன் இல்லத்திற்கு ஒரு முறை வந்தார்.

அவரிடம் “என்ன சேர்த்து வைத்துள்ளாய் இது வரை?” என்று கேட்க, “யாராலும் விலை மதிக்க முடியாதவைகளை நான் சேர்த்துவைத்துள்ளேன்” என்றான்.

“என்ன அது?”

Gems 1

“என்னுடன் வாருங்கள்” என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பாதுகாப்பு பெட்டகத்தில் அவன் சேர்த்து வைத்திருந்த வைர, வைடூரியங்களை காண்பித்தான்.

“இவை வெறும் கற்கள் தானே?” என்றார் குரு.

“கற்கள் தான். ஆனால் இவற்றுக்கு கிடைக்கும் மதிப்பு வேறு எதற்கும் கிடைக்காது” என்றான்.

“சரி… இதிலிருந்து நீ என்ன லாபம் சம்பாதிக்கிறாய்?”

“லாபமா? நீங்க வேற குருஜி. இதை பார்த்துக்க தான் நிறைய முயற்சி எடுக்கவேண்டியிருக்கிறது. நான் வெளியூர் போகும் சமயங்களில் இவற்றை உள்ளூர் வங்கியில் பாதுகாப்பது பெட்டகத்தில் வைத்துவிட்டு போகிறேன். இங்கே கூட இவற்றை பாதுகாக்க ஆட்களை நியமித்திருக்கிறேன்”

“இவற்றை விட மதிப்பு மிக்க கல்லை நான் உனக்கு காட்டிவிட்டால்? அதுவும் இதே ஊரில்?”

அவனுக்கு அந்த ஊரில் யாரும் இது போல கற்களை வைத்திருக்கவில்லை என்பது தெரியும். “என்னது இவற்றை விட மதிப்பு கல்லா? அதுவும் இதே ஊரிலா? வாய்ப்பேயில்லை” என்றான்.

“என்னுடன் வா காட்டுகிறேன்” என்று கூறி அவனை அதே ஊரில் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். தனது குருவுடன் கூடுதல் நேரம் செலவழிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி அவன் சந்தோஷப்பட்டான். இருவரும் கொஞ்ச தூரம் நடந்து சென்றார்கள்.

ஊருக்கு எல்லையில், உள்ள ஏழை மூதாட்டியின் குடிசை முன் நின்றனர் இருவரும்.

Grinding Stone 1

அங்கு அந்த மூதாட்டி ஒரு யந்திரக் கல்லை வைத்து தானியங்களை அரைத்து மாவாக்கி கொண்டிருந்தாள். அவளிடம் ரொட்டி வாங்கி உண்ண பரம ஏழைகள் நான்கைந்து பேர் வாசலில் காத்திருந்தார்கள்.

“இதோ பார் இந்த கல் பல ஏழைகளுக்கு ரொட்டி மாவை அரைக்க பயன்படுகிறது. இவளுக்கும் அது உணவிடுகிறது. நீ வைத்திருக்கும் கற்களை விட இது தானே மதிப்பு மிக்கது? உனது கற்களால் யாருக்கு என்ன பயன்?”

There is a big difference between being expensive & being useful.

“நீ மதிப்புமிக்கதாக கருதும் அனைத்தும் விலை அதிகம் என்று நீ நம்புபவைகளை தான். அந்த கற்களுக்கு வேறு மதிப்பு எதுவும் இல்லை. இந்த யந்திரக் கல் மக்களின் பசியை தீர்க்கிறது. உனது வைரக் கற்களோ உனக்கு தேவையற்ற செலவுகளை தான் ஏற்படுத்துகிறது. இப்போது சொல் எது மதிப்பு மிக்கது?”

செல்வந்தன் வெட்கி தலைகுனிந்தான்.

உண்மை தான். விலை அதிகம் உள்ளவை எல்லாம் மதிப்பு மிக்கவை அல்ல. மற்றவர்களுக்கு எது பயன்படுகிறதோ அதுவே மதிப்பு மிக்கது. எந்த ஒரு விஷயத்தின் மதிப்பையும் அதன் பயன்பாட்டைக் கொண்டு தான் மதிப்பிடவேண்டுமே தவிர அதன் விலையை மனதில் கொண்டு அல்ல.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

இறைவன் உங்கள் மதிப்பை தீர்மானிப்பதும் இப்படித்தான். உங்கள் அந்தஸ்தை வைத்தோ பணத்தை வைத்தோ அல்ல.

சிலர், சிலர் அல்ல பலர், குடும்பத்திற்காக சம்பாதித்து வீடு / ஃபிளாட் வாங்கி செட்டிலாவது தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது வாழ்க்கையே அல்ல.

"

உங்களால் இந்த சமூகத்திற்கு என்ன பயன்? நாலு பேருக்கு உங்களால் உங்கள் வாழ்க்கையால் நன்மை விளைகிறதா? உங்கள் நேரத்தை ஏதேனும் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தி இருக்கிறீர்களா? ஒரு ஏழையின் பசியையாவது தீர்க்கிறீர்களா? ஒரு ஏழை குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாடாவது சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? துன்பத்தில் இருக்கும் யார் கண்ணீரையேனும் துடைத்திருக்கிறீர்களா?

இதுவரை இல்லையென்றாலும் இனியாவது அதை செய்யுங்கள். அடுத்த நொடி உங்கள் வாழ்க்கை மதிப்புமிக்கதாக மாறிவிடும். உங்களையும் சேர்த்து.

================================================================

* நமது கணினிகள் (வீட்டில் உள்ள கணினியும், அலுவலகத்தில் உள்ள கணினியும்) இடமின்றி நிரம்பி வழிவதால் இரண்டு 1 TB  இன்டெர்னல் ஹார்ட் டிஸ்க்குகள் உடனடியாக தேவைப்படுகின்றன. யாராவது அவற்றை வாங்கித் தந்து உதவினால் நன்றாக இருக்கும். நன்றி.

================================================================

ரைட்மந்த்ரா பதிவுகள் அனைத்தும் ரைட்மந்த்ரா வாசகர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுவது. கடும் உழைப்பில் விளைபவை. இவற்றை காப்பி பேஸ்ட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது காப்பிரைட் சட்டப்படி குற்றம். பதிவை உங்கள் நட்பு வட்டத்திடமும் சுற்றத்தினரிடமும் பகிர / மின்னஞ்சல் செய்ய தனி வசதிகள் பதிவின் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தவும். நன்றி.

================================================================

Also check for more motivational stories :

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

5 thoughts on “What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

  1. இனிய காலை வணக்கம்

    இந்த வாரமுதல் பதிவே அருமை. நம்மிடம் இருக்கும் செல்வம் அடுத்தவர்களுக்கு உதவிகரமாக இருப்பதே பயனுள்ள வாழ்க்கை என்பதை வைரக் கற்களுடனும் எந்திரக் கல்லுடனும் ஒப்பிட்டு அழகாக புரிய வைத்ததற்கு நன்றி.

    இப்பொழுதெல்லாம் இயந்திர உலகத்தில் எந்திரக் கல்லை பார்ப்பதே அரிதாகி விட்டது.

    இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்

    வாழ்க … வளமுடன்

    நன்றி

    உமா வெங்கட்

  2. மதிப்பு மிக்கது என்றால் என்ன என்பது பற்றி பேசும் விலை மதிப்பற்ற பதிவு. பதிவின் ஒவ்வொரு உள்ளடக்கமும் விலை மதிப்பற்றது.

    இது நாள் வரை நாம் நினைத்த விலை மதிப்புமிக்க என்று எண்ணிய அனைத்தும்,இந்த பதிவை படித்த பின்பு மாறிவிடும்.

    இந்த நாள் மிகவும் விலை மதிப்புமிக்க நாளாக மாற்றியதற்கு rightmantra விற்கு நன்றிகள்.

  3. சுந்தர்ஜி,
    மிகவும் நல்ல பதிவு. விலை அதிகம் உள்ள பல பொருள்கள் மதிபற்றவையே. உங்கள் பதிவுள்கள் தொடர வாழ்த்துக்கள்.
    R. Chandran

  4. விலை அதிகம் என்பதால் எதன மதிப்பும் உயர்ந்து விடாது, அதன் பயன்பாட்டை வைத்தே உயருகிறது. மிக நல்ல கருத்து.

    ஓம் சமார்த்த சத்குரு சாயி நாத் மஹாராஜ்கி ஜெய்!!!

  5. மிக நல்ல பதிவு.

    என்னை பொறுத்தவரையில் நமது தளமே மதிப்பில் மிக சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *