Monday, December 10, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

print
ரு ஊரில் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வரும் ஒரு ஏழை பிராம்மணன் வசித்து வந்தான். ஒரு நாள் ஒரு வீட்டு முன் நின்று அந்த பிராம்மணன் பிக்ஷை கேட்டான். அந்த இல்லத்தரிசியோ ஏழை எளியவர்கள் பால் இரக்கம்கொண்டு அவர்களுக்கு உதவி வரும் ஒரு நல்லாள்.

பிராமணன் பிக்ஷை கேட்பதை பார்த்து “சற்று நேரம் அந்த மரத்தடியில் உட்காருங்கள். நான் சமைத்து முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். சற்று நேரத்தில் சூடான உணவு கொண்டுவருகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றால். அடுத்த சில நொடிகளில் அவனுக்கு பசியாற சுவையான உணவு கொண்டு வந்து கொடுத்தாள்.

உணவை பார்த்த மாத்திரத்தில் பிராமணனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. அது போல அவன் சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருந்தது. உணவை சாப்பிடும் முன், சில நிமிடங்கள் கண்களை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிடலானான்.

அந்நேரம் பார்த்து, எங்கிருந்தோ ஒரு நாகத்தை தூக்கிக்கொண்டு வந்திருந்த பருந்து ஒன்று அம்மரத்தில் அமர்ந்திருந்தது. பருந்தின் கால்களில் சிக்கியிருந்த நாகம் தன்னை விடுவித்துக்கொள்ள போராடியபோது அதன் விஷமானது பிராமணனின் உணவில் அவனுக்கு தெரியாமல் சில துளிகள் விழுந்துவிட்டது.

Eagle snake

ஏதுமறியாத பிராமணன் அந்த உணவை சாப்பிட துவங்க சாப்பிட்ட சில நிமிடங்களில் அம்மரத்தடியிலேயே வாயில் நுரை தள்ளி இறந்துவிடுகிறான்.

தண்ணீர் கொண்டு வர உள்ளே செல்லும் இல்லாள் மீண்டும் வெளியே வரும்போது பிராமணன் இறந்துகிடப்பதை பார்க்கிறான். “என்ன நடந்தது என தெரியவில்லையே….” என அந்த இல்லாள் பதறித் துடிக்க, அந்நேரம் பார்த்து அவள் கணவன் வந்துவிடுகிறான். பிராமணன் இறந்துகிடப்பதை பார்த்து, அவனும் பதறிப்போய் மனைவியிடம் விசாரிக்க, அவள் நடந்ததை கூறுகிறாள். அவனோ தன் மனைவி தான் பிராமணனை சாப்பாட்டில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டாள் என்று கருதி, “ஒரு கொலைகாரியோடு என்னால் வாழமுடியாது! இன்றே ஊர் பஞ்சாயத்தை கூட்டி உன்னை ஒதுக்கிவைத்துவிடுகிறேன். உனக்கு தண்டனையும் வாங்கிக் கொடுப்பேன்!” என்கிறான்.

இந்த சம்பவத்தில் பிராமணனை கொன்ற பாபம் பிரம்மஹத்தி தோஷம் யாரை பிடிக்கும்?

1) பருந்தை என்றால், அது பாம்பை பிடிப்பதும் அதை உண்பதும் இயற்கையானது. அதை குற்றம் சொல்ல முடியாது. மேலும் அது ஐந்தறிவு விலங்கு.

2) பாம்பை என்றால் அதுவும் பருந்தைப் போல ஒரு ஐந்தறிவு விலங்கு. அதையும் குற்றம் சொல்ல முடியாது.

3) அந்த இல்லாளை என்றால் அவள் நிரபராதி என்பதை நீங்களே அறிவீர்கள்.

4) அந்த பிராமணன் மீது தான் தவறு. அவன் தான் அஜாக்கிரதையாக இருந்தான் என்றால், அதுவும் தவறு. இந்த விஷயத்தில் அஜாக்கிரதை என்பதே இல்லை.

அப்படியானால் ஒரு உயிரை போக்கிய பிரம்மஹத்தி தோஷம் யாரைப் பிடிக்கும்? பிராமணனை கொன்ற பாவத்தை யார் கணக்கில் சேர்ப்பான் இறைவன்?

மேற்கொண்டு படிப்பதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை யோசியுங்கள்.

இறைவன் என்றுமே நீதி தவறுவதில்லை.

மேற்படி சம்பவத்தை பொறுத்தவரை நடந்தது என்ன என்று ஆராயாமல், அவசரப்பட்டு தன் மனைவி மீது பழி சுமத்திய அவள் கணவனுக்கே அந்த பாவம் போய் சேரும்.

ஒரு தவறை இன்னார் தான் செய்திருப்பார்கள் என்று உறுதியாக தெரியாதபோது, சந்தேகத்தின் அடிப்படையில் யார் மற்றவர் மீது பழி சுமத்துகிறார்களோ அவர்களையே அந்த குற்றத்திற்கான பாவம் போய் சேரும். தர்ம சாஸ்திரம் கூறுவது இதைத் தான்.

அலுவலகத்திலும், இன்ன பிற இடங்களிலும் தவறு நடக்கும்போது “எனக்கு தெரியும்…. அவர் தான் அதை செஞ்சிருப்பார்.  இவர் மேலத் தான் எனக்கு சந்தேகம். இவர் தான் அதை செஞ்சிருப்பார்!” போன்ற வார்த்தைகளை பிரயோகிக்கவேண்டாம். நீங்களாகவே குற்றவாளி குறித்து ஒரு முடிவுக்கும் வரவேண்டாம். ஒருவேளை நீங்கள் பழி சுமத்தும் நபர் நிரபராதியாக இருந்தால் உங்கள் புண்ணியப் பலன் முழுதும் அவருக்கு போய் சேர்ந்துவிடும். அவர் பாவப் பலன் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.

எனவே அடுத்தமுறை, உங்களைச் சுற்றி ஏதாவது குற்றமோ தவறோ நடந்தால் அவசரப்பட்டு யார் மீதும் பழி போடவேண்டாம். மௌனமாய் இருங்கள். மௌனம் சர்வார்த்த சாதகம்.

7 thoughts on “பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

 1. monday morning special ஒரு அருமையான கருத்துள்ள பதிவு. எந்த ஒரு குற்றத்தையும் ஆராயாமல் அடுத்தவர்கள் மீது பழி போட்டால் பாவம் நம் மீது வந்து சேரும் என்பதை அழகான கதை மூலம் விளக்கியது நன்றாக உள்ளது.

  இந்த வாரம் முழுவதும் இனிய வாரமாக எல்லோருக்கும் அமைய வாழ்த்துக்கள்

  நன்றி
  உமா

 2. வாரத்தின் முதல் பதிவே அருமையாக உள்ளது.
  “மௌனம் சர்வார்த்த சாதகம்”. நமக்கு மிக மிக தேவை மௌனம் .

 3. Dear Sundarji,
  Monday Morning Spl as usual Super. All of us has to hept this Thought in there mind to avaid unnecessary Bad situation.

  S.Narayanan.

 4. கிரேட்…..அனைவரும் உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டிய விஷயம்……..

 5. வாரத்தின் முதல் பதிவே அருமையாக உள்ளது. “மௌனம் சர்வார்த்த சாதகம்”. நமக்கு மிக மிக தேவை மௌனம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *