Home > 2014 > August

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

இன்று ஆவணி சுவாதி! திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஜெயந்தி. 'வாரி’ என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். கிருபானந்த வாரியார் ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனிக் கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு. சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்யப் பிரபந்தம், பிள்ளைத்தமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ அத்தனையும் கற்றறிந்தவர். அதுமட்டுமா

Read More

பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளிப்பட்ட பெரியவா அருள் – குரு தரிசனம் (9)

ரத்தின சுருக்கமாக இருந்தாலும் படிப்பதற்கே மன நிறைவு தரும் பெரியவாளின் மகிமை இது. குரு மகிமையை படிக்கும் அனைவருக்கும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறி இன்புற்று வாழ முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானை வேண்டிகொள்கிறோம். வயோதிக ஆடிட்டர், சென்னையிலிருந்து தரிசனத்துக்கு வந்திருந்தார் குடும்பத்துடன். நாட்டுப்பெண் கையில் மூன்று மாதக் குழந்தை. "பேரன்….நட்சத்திரம் விசாகம்…இன்னும் பெயர் வைக்கலை. இவன்தான் முதல் பேரன்.. மற்றப் பையன்களுக்குக் குழந்தை இல்லை." நாட்டுப்பெண் குழந்தையைத் தரையில் கிடத்தினாள், பெரியவாள் பார்வைபடும்படியாக.

Read More

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆவணி சுவாதி அன்று வாரியார் ஸ்வாமிகள் அவதாரத் திருநாள். நாளை 29 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. அதையொட்டிய சிறப்பு பதிவு இது. காங்கேயநல்லூரில் வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திற்கு எதிரே அமைந்துள்ள முருகன் கோவிலில் லட்சதீப விழா. வாரியார் ஸ்வாமிகள் கலையரங்கம் பக்தர்களால் நிறைந்திருக்கிறது. தொடர் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு நடுவே தீந்தமிழில் திருவாசகப் பாடல் மழலைக் குரலில் ஒலிக்க சபையில் கனத்த அமைதி. காதலாகிக் கசிந்து

Read More

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு!

வரும் விநாயகர் சதுர்த்தியோடு நமது தளம் இரண்டு ஆண்டுகள் பயணத்தை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நேற்றைக்கு துவக்கியது போலிருக்கிறது. அதற்குள் இரண்டாண்டுகள் ஓடிவிட்டது. தொடர்ந்து துரத்திய துரோகங்களாலும் பொறாமையினாலும் சூழ்ச்சிகளாலும் மனம் வெறுத்துப் போய் ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல், எவரிடமும் சொல்ல வழியுமின்றி கண்ணீரிலேயே நாம் நாட்களை நகர்த்திய காலம் உண்டு. கைகள் கட்டப்பட்ட நிலையில் பந்தயத்தில் இறக்கிவிடப்பட்டால் ஒருவனால் என்ன செய்ய முடியும்?

Read More

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

சென்ற ஆடிக்கிருத்திகை அன்று நடைபெற்ற நமது அன்னதானம் மற்றும் முருகனின் தரிசனம் குறித்த பதிவு இது. ஆடிக்கிருத்திகை அன்று முருகனுக்கு மிகவும் விஷேடமான நாள் என்பதால் தளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை அளித்ததோடு அன்று அன்னதானமும் செய்ய விரும்பினோம். முன்பே கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து பணமும் கட்டிவிட்டோம். இதற்கிடையே ஆடிக்கிருத்திகைக்கு முந்தைய தினம் மாலை, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது, போரூர் ஏரிக்கரை மீதுள்ள ஆதி ஜலகண்டேஸ்வரர்

Read More

குரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

ஒவ்வொரு வியாழனும் நம் தளத்தில் மகாகுரு ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையையும் காஞ்சி மகான் மகா பெரியவாவை பற்றியும் படித்து வருகிறீர்கள். அது எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது தெரியுமா? இருவினை தீர்க்கும் குருவின் பெருமை கேட்பது படிப்பது. அதென்ன இருவினை ?   தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை  வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனருளாலே - திருமந்திரம் 'முன்னை  வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள், பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்' என்கிற இந்த

Read More

இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? MON MORNING SPL 57

அவர் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. அவரது விவசாய நிலத்துக்கு அருகில், சதுப்பு நிலம் ஒன்று உண்டு. ஒரு நாள் தனது வயலில் அவர் வேலையில் இருக்கும்போது ஒரு பெரும் கூக்குரலை கேட்கிறார். ஆபத்தில் இருப்பவர்கள் எழுப்பும் அபயக்குரல் அது. தனது வேலையை விட்டுவிட்டு சத்தம் வந்த திசைக்கு ஓடிச் சென்று பார்க்கிறார். பார்த்தால், அங்கு ஒரு சிறுவன் புதைசேற்றில் மாட்டிக்கொண்டு கொஞ்ச கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருக்கிறான். உடனடியாக பலவித முயற்சிகள்

Read More

ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு – Rightmantra Prayer Club

இராவணன் மூவுலகையும் ஆட்சி செய்து வந்த சமயம் அது. ஒரு முறை, இந்திர லோகத்தில் இருந்து கைப்பற்றிய புஷ்பக விமானம் ஒன்றில் வானில் பவனி வந்துகொண்டிருந்தான். அப்படி செல்லுகையில் இடையில் கயிலாயம் குறுக்கிட்டது. இராவணனும் அவன் தந்தை விச்வரஸூம் சிறந்த சிவபக்தர்கள் ஆதலின் இயல்பிலேயே அவர்கள் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். என்ன இருந்து என்ன பயன்? தான் என்கிற அகம்பாவம் அனைத்தையும் அழித்துவிடும் அல்லவா? தன் பாதையில் குறுக்கிட்ட கயிலையை சுற்றிச் செல்ல

Read More

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ஸ்ரீ ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 343வது மகோத்சவம் மந்த்ராலயத்தில் உள்ள மூல பிருந்தாவனத்திலும் நாடெங்கிலும் உள்ள மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சென்ற வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி சென்ற குரு வாரம் நமது தளத்தில் விஷேக பதிவுகளும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திருச்சியை சேர்ந்த நமது வாசகர் சிவக்குமார் என்பவர், நமக்கு ஒரு மின்னஞ்சலை ஃபார்வேர்ட் செய்திருந்தார். அதில், சமீபத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது புதுவையில் உள்ள குரும்பபேட் மிருத்திகா பிருந்தாவனத்தில் பக்தர்

Read More

“கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)

மகா பெரியவா தான் ஸ்தூல சரீரத்துடன் இந்த பூவுலகில் இருந்த போது தம்மை நாடி வந்தவர்கள் எத்தனையோ பேரின் பாவங்களை பொசுக்கி நல்வழி காட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லாமலே தன் ஞான திருஷ்டியினால் அவர்களின் குறைகளை உணர்ந்து அவற்றை களைவதற்கு உரிய வழிகளை சொல்லியிருக்கிறார். காஞ்சியில் அவரை சந்தித்து தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிக்கொண்டவர்கள், பாபம் தொலைத்தவர்கள், ஜென்ம சாபல்யம் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கில் உண்டு. தினம் தினம் நூற்றுக்கணக்கான அதிசயங்கள் காஞ்சியில்

Read More

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

இந்த தளத்தை பொருத்தவரை ஆரம்பம் முதலே ஒரு கொள்கை வைத்திருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான பதிவுகள் இடம்பெறக்கூடாது என்பதே அது. இவை இரண்டும் இல்லாமலே ஒரு தளத்தை வெற்றிகரமாக நடத்தமுடியும் என்று நிரூபிக்க நமக்கு ஒரு ஆசை (வெறி). அந்த இலக்கை நாம் அடைந்துவிட்டோமா இல்லையா என்று நமக்கு தெரியாது. ஆனால் இன்றளவும் அதை கடைப்பிடித்து வருவது நீங்கள் அறிந்ததே. ஆனால், இப்போது நாம் பகிர்ந்துள்ள இந்த

Read More

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

64 வது நாயன்மார் என்று அன்போடு அழைக்கப்படும் திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அவதாரத் திருநாள் வரும் ஆகஸ்ட் 25  ஆம் தேதி வரவிருக்கிறது. ஸ்வாமிகள் பிறந்தது ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் நட்சத்திரப்படி ஆகஸ்ட் 31 அவரது பிறந்த நாள். வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூரில் அவரது திருச்சமாதியில் ஆகஸ்ட் 31 ஞாயிறு அன்று அவரது ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. ஆகஸ்ட் 30 அன்று நமது தளத்தில் விசேஷ பதிவுகள் அளிக்கப்படவுள்ளன.

Read More

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

'சிக்கலுக்கு வேல் வாங்க செந்தூரில் சம்ஹாரம்' என்று கூறுவார்கள். சிக்கலில் சிங்காரவேலர் திருக்கோவிலில் வேல் வாங்கும் விழாவும், திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருளாகும். சிக்கல் சிங்கார வேலர் தாயிடம் வேல் வாங்கும்பொழுது அவருடைய திருமுகத்தில் வியர்வை துளிகள் அரும்பும் அதிசயத்தை இன்று நீங்கள் சிக்கல் சென்றாலும் பார்க்கலாம்.   "மனிதர்களுக்கு தானே வியர்வை அரும்பும். கடவுளுக்கும் வியர்க்குமா என்ன...?" என்று நீங்கள்  கேட்கலாம். குழந்தை வேலனாக பாலசுப்ரமணினாக முருகன் எளிதில்

Read More

தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!

வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு நரசி வெளியேறி, சிவாலயத்தில் தஞ்சம் புகுந்து, சிவ பெருமானின் தரிசனம் பெற்று, கண்ணனின் ராசலீலையை காணும் பெரும் பாக்கியத்தையும் பெற, அங்கே யமுனாதாஸ், வெளியே  சென்ற நரசிம்ம மேத்தாவை எதிர்பார்த்துப் பார்த்து அழுதார்.  மருமகளை அழைத்து கேட்க, அவள் தான் திட்டியதைச் சொல்லி மன்னிப்பும் கேட்டாள்.  உடனே அவர் ஊர் முழுவதும் தேடும் படி ஆட்களை ஏவினர்.  குளம், குட்டை, நதி, வாய்க்கால்கள் முதலிய இடங்களிலும்

Read More