Home > 2016

துரை… ராஜதுரை!

திருத்தணியில் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் நடைபெறும் படிவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பஜனை குழுவினர் படிக்கட்டுகளில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலக்கு சென்று முருகபெருமானை தரிசனம் செய்வார்கள். விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசித்து செல்வார்கள். திருத்தணி முருகன் கோவிலில் இன்று 31–ந்தேதி படி பஜனை திருவிழாவும் நாளை ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும் நடைபெற உள்ளது.

Read More

ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் என்ன தெரியுமா?- ஸ்ரீ ரமண ஜயந்தி SPL

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன்… அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தைமிக விழைந்ததாலோ! - வள்ளலார்  பகவான் ஸ்ரீ ரமணர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், மகா பெரியவா போன்ற ஞானிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் வரிகள் இவை. இன்று ஸ்ரீ ரமண ஜயந்தி. எல்லாரும் மற்றவர்களை ஆராய முற்பட்ட காலத்தில், 'நான் யார் என்று

Read More

‘நீங்களும் சாதிக்கலாம்’ – மனங்களை புரட்டிவிட்டுச் சென்ற ஒரு புயல்!

நமது பாரதி விழாவில் திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ். (வருமானவரி இணை ஆணையர்) அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது எளிமையும், பண்பும், அபாரமான உரையும், வாசகர்களுக்கு அவர் அளித்த உத்வேகமும் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே | சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே || ******************************************************************** யார் இந்த நந்தகுமார்? 'கற்றலில் குறைபாடு' காரணமாக பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்த நேர்ந்த இவர் அதன் பிறகு லாட்டரி விற்பது,

Read More

ராமாயணத்தில் அனுமனின் முதல் ராம, சீதா தரிசனம்! A THERAPEUTIC MYTH!!

இன்று அனுமத் ஜெயந்தி. (சில கோவில்களில் நாளை). இராமாயணத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரின் என்ட்ரிக்கு பின்னர் தான் ராமருக்கும் சரி சீதைக்கும் சரி நல்ல செய்திகள் கிடைக்கத் துவங்கின. எனவே தான் அந்த பாகத்திற்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார் வால்மீகி. இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கத்திற்கும் ஒரு பாராயண பலன் உண்டு. அதுவும் அனுமன் ராமரையும் சீதா தேவியையும் முதன்முதலில் சந்திக்கும் பகுதி மிக முக்கியமானது.

Read More

நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!

கோவிலுக்கு போவது சுவாமி தரிசனம் செய்வது விரதமிருப்பது பதிகங்கள் ஓதுவது தான் நன்மையைத் தரும் என்று எண்ணிவிடக்கூடாது. நல்லவர்கள் சத்சங்கம் மிகவும் முக்கியம். நல்லோர் தரிசனம் பாப விமோசனம். எனவே தான் வள்ளுவரும் , உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் - குறள் 442 (வந்த துன்பத்தை நீக்கி இனி துன்பம் வராமல் முன்னதாகவே காக்கும் தன்மையுடையவரைப் போற்றி நட்பாக்கி கொள்ளவேண்டும்!) என்று கூறினார். நமது பாரதி விழாவின் வெற்றிக்கு மிக முக்கிய

Read More

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

எப்படி நடக்குமோ என்று எண்ணியபடி எதிர்நோக்கிய பாரதி விழா நல்லபடியாக நடந்து முடிந்தவுடன் அடுத்த நாள் திங்கட்கிழமை (நேற்று) காலை குன்றத்தூர் சென்று சுப்ரமணிய சுவாமிக்கு நன்றி தெரிவிக்க நினைத்தோம். முருகன் தயவு இல்லையென்றால் இந்த விழா நடந்தேயிருக்காது. உண்மையினும் உண்மை. விழா நடத்த திட்டமிட்ட நாள் முதல் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் பொருளாதார நெருக்கடிகள் போதாக்குறைக்கு இயற்கை சீற்றங்கள். இப்படிப் பட்ட சூழலில் சென்ற வாரம் ஒரு நாள் ஒரு உறக்கம்

Read More

இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!

குருவருளாலும் திருவருளாலும் நம் நண்பர்கள் மற்றும் வாசகர்களின் மகத்தான ஆதரவினாலும் நம் பாரதி விழாவும் ரைட்மந்த்ரா ஐந்தாம் ஆண்டு விழாவும் மிக மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக ஒரு சிறு அப்டேட். விரிவான பதிவு நாளை வெளியாகும். விழாவைப் பற்றி எழுதவேண்டுமென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அந்தளவு விஷயம் இருக்கிறது. நாம் முன்பே குறிப்பிட்ட படி ஒவ்வொரு விழா நடத்தி முடிக்கும்போதும் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். அறிந்துகொள்கிறோம். இந்த விழாவைப் பொறுத்தவரை பல்வேறு தடைகளை தகர்த்து நடைபெற்றிருக்கிறது. சென்ற

Read More

சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

சும்மா வந்தோமா, ஆன்மிகம், பக்தின்னு ஒரு பதிவு படிச்சோமா போனோமா என்பது மட்டும் நம் வாசகர்களின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. அதற்க்கு மேலும் சில நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கை  எப்போதும் ஒரே சீராக இருக்காது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அத்தகைய சூழலை எதிர்கொண்டே ஆகவேண்டும். எல்லாவற்றுக்கும் கடவுளை தொந்தரவு செய்யக்கூடாது.  அது போன்ற நேரங்களில் சமயோசிதமாக நடந்துகொள்ளவேண்டும். கடவுளுக்கும் அது தான் பிடிக்கும். நீண்ட நாட்களுக்கு முன்னர்  ஒரு

Read More

தற்கொலை எண்ணத்தை போக்கிய மிகச் சிறந்த அன்பளிப்பு!

விக்டர் ப்ராங்ள் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய மனோதத்துவ நிபுணர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படையினரின் சித்தரவதைக் கூடங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தவர். அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் அவரை தொலைபேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொன்னாள். அவள் கூறுவதை பொறுமையாக கேட்ட விக்டர் அவளுக்கு பலவிதங்களில் ஆறுதல் சொல்லி தற்கொலை என்பது கோழைத்தனமானது என்று

Read More

Mr.NANDAKUMAR, I.R.S. – ஒரு சிலிர்க்க வைக்கும் சாதனை சரித்திரம்! MUST READ

* படிக்கிற வயசுல ஏதோ காரணத்துனால சரியா படிக்க முடியாம போயிடுச்சேன்னு வருத்தப்படுற ஆளா நீங்க? * உங்க குழந்தைகளுக்கோ, உறவினரின் குழந்தைகளுக்கோ அல்லது நண்பர்களின் குழந்தைகளுக்கோ படிப்பு சரியாக ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா? * என்ன வாழ்க்கை இது? எங்கே போனாலும் இப்படி நம்மளை எட்டி எட்டி உதைக்கிறாங்களே... உண்மையில் நாம வேஸ்ட் போல.... அப்படின்னு அடிக்கடி தோணுதா உங்களுக்கு? * வாழ்க்கையில அவமானத்தை தவிர வேறு எதுவும் பார்க்காத ஆளா நீங்க? * வயித்து பிழைப்புக்காக இந்த வேலையெல்லாம்

Read More

பாரதி விழா & ரைட்மந்த்ரா ஐந்தாம் ஆண்டு விழா – அழைப்பிதழ்!

வருடாவருடம் ஆண்டு இறுதியில் பாரதி பிறந்த நாள் விழாவும் நம் ரைட்மந்த்ரா தளத்தின் ஆண்டுவிழாவும் நடத்துவது வழக்கம். அவ்விழாக்களில் நம்மிடையே வாழும் சமூக அங்கீகாரம் தேவைப்படும் சாதனையாளர்களை பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதும் சான்றிதழும் தருவது வழக்கம். இது அவர்கள் சாதனைக்கு ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறு ஊக்கம். உற்சாகம். கடைசியாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பெரும் விழாவாக இது சென்னையில் கே.கே.நகரில் சக்தி விநாயகர்

Read More

விதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க!

அடுத்தடுத்து முக்கிய பதிவுகள் வரவிருக்கின்றன. அதற்கு முன் நீண்ட நாட்களாக அளிக்க நினைத்திருந்த இந்தப் பதிவை அளிக்கிறோம். விதி என்னும் ஊழ்வினை குறித்த சரியான பார்வை நம் வாசகர்களுக்கு இருக்கவேண்டும். ஏற்கனவே 'கடவுள் Vs கர்மா' என்னும் தொடரை நாம் அளித்தது நினைவிருக்கலாம். விதியை மாற்ற முடியும் என்று நம்பிக்கை உடையவர்களே அதை மாற்றவும் வல்லவர்களாகிறார்கள். முடியாது என்று நினைப்பவர்களால் நிச்சயம் முடியவே முடியாது. 'முடியும்' என்று நினைக்கும்போது தான் உங்கள் வாழ்க்கை தடைகளை

Read More

விஸ்வரூப தரிசனமும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதமும்!

நாளை (16/12/2016 வெள்ளி) மார்கழி மாதம் துவங்குகிறது. கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கூறியிருப்பதிலிருந்தே இம்மாதத்தின் மகத்துவத்தை உணரலாம். இது பற்றி நம் தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் மார்கழி மாதத்திற்கே உரிய 'விஸ்வரூப தரிசனம்' பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் தளத்தில் அளித்த பதிவு தான் இது. புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சற்று மெருகூட்டி

Read More

அர்த்தமுள்ள கல்யாணப் பரிசு – மகள் திருமணத்தில் தொழிலதிபர் செய்த புரட்சி!

ஒரு திருமணத்தின் மாண்பு என்பது எது எத்தனை விமரிசையாக நடைபெறுகிறது எவ்வளவு செலவு செய்யப்படுகிறது எத்தனை வி.ஐ.பி.க்கள் வந்தார்கள் என்பதில் இல்லை. அந்த மணமக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. திருமணத்தை பிரமாண்டமாக நடத்திவிடுவதால் அது வெற்றி என்கிற அர்த்தம் இல்லை. ஒருவருக்கொருவர் எந்தளவு அணுசரணையாக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. திருமணங்களில் ஆடம்பரங்களை தவிர்த்து கூடுமானவரை எளிமையாக நடத்தி, பணத்தை மிச்சம் பிடித்து அந்தப் பணத்தில் அன்று பலர்

Read More