* படிக்கிற வயசுல ஏதோ காரணத்துனால சரியா படிக்க முடியாம போயிடுச்சேன்னு வருத்தப்படுற ஆளா நீங்க?
* உங்க குழந்தைகளுக்கோ, உறவினரின் குழந்தைகளுக்கோ அல்லது நண்பர்களின் குழந்தைகளுக்கோ படிப்பு சரியாக ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா?
* என்ன வாழ்க்கை இது? எங்கே போனாலும் இப்படி நம்மளை எட்டி எட்டி உதைக்கிறாங்களே… உண்மையில் நாம வேஸ்ட் போல…. அப்படின்னு அடிக்கடி தோணுதா உங்களுக்கு?
* வாழ்க்கையில அவமானத்தை தவிர வேறு எதுவும் பார்க்காத ஆளா நீங்க?
* வயித்து பிழைப்புக்காக இந்த வேலையெல்லாம் செய்யவேண்டியிருக்கேன்னு விதியை நொந்து கொள்பவரா?
* வாழ்க்கையை தேடுபவரா? அல்லது அதில் போராடுபவரா?
மேற்படி பிரிவுல நீங்க யாராயிருந்தாலும் சரி… இந்தப் பதிவு உங்களுக்கு தான். நிச்சயம் இந்தப் பதிவு உங்க பிரச்னைகளுக்கு ஒரு நல்ல பதில் சொல்லும்.
நாம் அடிக்கடி சொல்வது தான். “நமக்கு என்ன நடக்கிறதோ அது வாழ்க்கையல்ல. அதற்கு நாம் எப்படி ரீயாக்ட் செய்கிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது” என்று. நாம் சந்திக்கும் சாதனையாளர்கள் எல்லாரும் ஒரு வகையில் இதனடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தான்.
படிக்காத மக்குப் பையன்
சரி. ஒ.கே. இப்போ நாம் படிப்பே ஏறாத ஒரு படிப்பே ஏறாத ஒரு பையனோட கதையை உங்க கிட்டே சொல்லப் போகிறோம்.
சுமார் 20 அல்லது வருஷத்துக்கு முன்னாடி நடக்குற கதை இது.
வசதிமிக்க குடும்பத்தில் இவன் பிறக்கவில்லை என்றாலும் ஓரளவு நடுத்தரமான குடும்பம் இவனுடையது. குடும்பத்தில் இவன் மூத்தவன்… சிறு வயதிலேயே அதாவது ஐந்தாவது வயதிலேயே இவனை சின்னம்மை, மஞ்சள் காமலை, டைஃபாயிடு, டெங்கு உள்ளிட்ட எண்ணற்ற நோய்கள் தாக்கியதில்… இவனது உடம்பே நோய்களின் கூடாரமாக மாறிவிட்டது. மருந்து மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதில் நோய் எதிர்ப்பு சக்தியும் போய்விட்டது. உடம்பு நல்லாயிருந்தாத் தானே மூளை நல்லாயிருக்கும்? இப்படி ஒரு பலவீனமான உடம்புல மூளை மட்டும் எப்படி சரியா வேலை செய்யும்?
படிச்சா மனசுல தங்காது. வாத்தியார் சொல்லிக்கொடுக்குறதும் புரியாது. போர்டுல எழுதி சொல்லித் தர்றதை கூட திரும்ப எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் அதுல ஆயிரம் தப்பு இருக்கும். கிளாஸ்ல இவனோட பேர் என்ன தெரியுமா? “தூங்குமூஞ்சி பயல்!” என்பது தான்.
வகுப்பில் தூங்குவதில் அப்படி ஒரு சூரர். இவர் வகுப்பில் தூங்குவதை பார்த்து, டீச்சர் இவனை பிரம்பால் அடித்து பெஞ்சில் நிற்க வைக்க, நின்றபடியே இவன் தூங்கிவிட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் எப்பேர்ப்பட்ட கும்பகர்ணன் என்று. “உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. எப்படியோ போய்த் தொலை” என்று ஆசிரியர்கள் கடைசியில் கைகழுவி விட்டனர்.
ஒன்றுமில்லை… இந்த மாணவன் DYSLEXIA (கற்றலில் குறைபாடு) என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். அமீர்கான் நடித்த “TAARE ZAMEEN PAR” படத்தில் அந்த சிறுவனுக்கு வருமே அதே தான். சுமார் 20 வருடம் முன்பு என்பதாலோ என்னமோ அது பற்றிய விழிப்புணர்வு இவனுக்கோ, இவனது குடும்பத்தினருக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ இல்லாமல் போனது.
எத்துனை நாள் தான் இப்படி பள்ளி சென்று தூங்குவது… அவமதிப்புகளுக்கு மத்தியில் மேற்கொண்டு படிப்பை தொடர விருப்பம் இன்றி, 6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்புக்கு டாட்டா கூறிவிடுகிறான். ஒரு ஸ்கூல் படிக்கிற பையன்… அதுவும் ஆறாம் வகுப்போட ஸ்கூலை டிஸ்கண்டின்யூ பண்ணினா என்னாவான்? அவனோட வாழ்க்கை எப்படி திசை மாறிப்போகும்? கற்பனை கூட செஞ்சி பார்க்க முடியலே இல்லே…?
லாட்டரி சீட்டு….
நம்ம பையன் என்ன பண்ணினான்னா தெருத் தெருவா போய் லாட்டரி சீட்டு வித்தான். அப்புறம் ஒரு சின்ன லாட்டரி கடையில் உட்கார்ந்தான். ஏதோ அன்னைன்னக்கு செலவுக்கு வருமானம் கிடைச்சது. வயசு ஏற ஏற ஸ்கூலுக்கு யூனிபாரம் போட்டுக்கிட்டு புக்ஸை தூக்கிட்டு போற பசங்களை பார்க்கும்போது இவனுக்கு ஏக்கமா இருக்கும். ஆனா அவங்க கூட இவனால பேசக் கூட முடியாது. ஏன்னா நம்ம பெத்தவங்க தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க இல்ல….. “நல்லா படிக்கிறவன் நல்ல பையன். நல்லா படிக்காதவன் கெட்ட பையன்”. (யப்பா என்னா கண்டுபிடிப்பு…! இதை நம்ம மனசுல சின்ன வயசுலயே மனசுல திணிச்சதாலே என்னவோ, சொக்கத் தங்கங்களை எல்லாம் விட்டுட்டு, படிப்போட சூதும் வாதும் நிறைய வெச்சிருந்தவங்க கூடவே நாம நட்பை வளர்த்துகிட்டோம். இல்லையா?)
இங்கே நம்ம ஆளு கூட பழக விரும்புற பசங்களை அவங்களை பெத்தவங்க… “அவன் மக்குப் பையன். அவன் கூட சேராத. அவன் கூட சேர்ந்தா… நீயும் அவனை மாதிரி லாட்டரி டிக்கட் விற்க வேண்டியது தான்” என்று கண்டித்து வைத்திருந்தனர். ஆகையால் எந்த மாணவனும் இவருடன் பேசுவதற்கு கூட முன் வரவில்லை.
நம்ம ஆளுக்கோ படிக்கவும், ஸ்கூலுக்கு போகவும் கொள்ளை ஆசை. இருந்தாலும் விதியை நொந்துகிட்டு லாட்டரி வித்துகிட்டு இருந்தாரு.
ஒரு நாள் இந்த பையனோட நண்பன் ஒருத்தன் ஒரு ஐடியா கொடுத்தான். அது என்னன்னா… “ஸ்கூலுக்கு போய் தான் பரீட்சை எழுதனும்னு அவசியம் இல்லே… 8 ஆம் வகுப்பு ப்ரைவேட்டா கூட எழுதலாம்”னு சொன்னான்.
“இது நல்ல ஐடியாவா இருக்கே!”ன்னு சொல்லி, லாட்டரி கடை வேலையை பார்த்துகிட்டே எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினான். அதுல பாஸ் பண்ணினவுடன், ஓரளவு நம்பிக்கை வந்தது. பத்தாம் வகுப்பும் ப்ரைவேட்டா எழுதினான். சொன்னா நம்பமாட்டீங்க… ஐயா கணக்குல 92 மார்க்.
உன்னையெல்லாம் சேர்த்துக்கிட்டா எங்க ஸ்கூலோட இமேஜ் என்னாகுறது?
தமிழ்நாட்டுல லாட்டரி பிசினஸ் தானே ஒரு காலத்துல ஓஹோன்னு போச்சு. ஓரளவு நல்லா போய்கிட்டிருந்த நேரத்துல கவர்மென்ட் திடீர்னு லாட்டரியை தடை பண்ணிடுச்சு. So, ஒரே நாள்ல நம்ம ஆளு நடுத்தெருவுக்கு வந்துட்டாரு. ஸ்கூல்ல சேர்ந்து பிளஸ் ஒன் படிக்க ஆசை. ஆனா இவரை எந்த ஸ்கூல்லயும் சேர்த்துக்கலை. “உன்னையெல்லாம் சேர்த்துக்கிட்டா எங்க ஸ்கூலோட இமேஜ் என்னாகுறது? தவிர நீ எட்டாவது, பத்தாவது ரெண்டுமே ப்ரைவேட்டா வேற எழுதி பாஸ் பண்ணியிருக்கே. உனக்கெல்லாம் அட்மிஷன் நிச்சயமா கொடுக்க முடியாது!” இப்படியாக ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லி கேட்டை கூட சாத்திவிட… சுவற்றில் அடித்த பந்து போல இவர் திரும்ப வந்துவிடுகிறார்.
படிச்சிருந்தா வேற ஏதாச்சும் வேலைக்கு போகலாம். படிப்பும் கம்மி என்பதால் கடையை ஏறகட்டிட்டு… கட்டிடம் கட்டுற சித்தாள் வேலைக்கு போனாரு. அவரோட உடம்பு வாகுக்கு கல்லும் மண்ணும் சுமக்க முடியலே. So, அதை விட்டுட்டு அப்புறம் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு போனாரு. அதுவும் சரியா வரலே. தப்பு தப்பா எடுத்து கஸ்டமர்ஸ் கிட்டே கொடுத்தா அதுல ஒருத்தர் அடிக்கவே வந்துட்டாரு. சரி… அந்த வேலையையும் விட்டாச்சு…. அடுத்து சவுண்ட் சர்வீஸ் கடை. அப்புறம் டீ.வி.மெக்கானிக். இப்படியே வாழ்க்கையில் செட்டிலாக நிலையான இடம் தேடி அலையோ அலை என்று அலையுறார். கடைசியில் டூ-வீலர் மெக்கானிக் ஷாப் ஒன்றில் வேலை கிடைக்க அங்கு வேலையில் சேர்கிறார்.
அங்கிருந்தபடியே +2 ப்ரைவேட்டா எழுத ப்ரிப்பேர் பண்றார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறார். எழுதி எழுதி பழகுறார்.
டாக்டர் கொடுத்த தண்டனை
அப்படி இருக்கும்போது ஒரு நாள்… இவருக்கு சளியோ காய்ச்சலோ ஏதோ பிரச்னை வர…. தங்கள் பகுதியில் இருக்கும் ஒரு பிரபல கிளினிக்கிற்கு செல்கிறார். அங்கு டாக்டருக்காக வரிசையில் காத்திருந்தபோது அங்கே கண்ணடி ஷெல்பில், உள்ள தடிமனான புக் ஒன்று இவரை கவர்கிறது. ஷெல்பை ஓபன் செய்து… ஆவலுடன் அந்த புக்கை எடுத்து புரட்டுகிறார். ஐ.ஏ.எஸ். பணிக்கான மத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவது பற்றிய புத்தகம் அது. ஆவலுடன் பக்கங்களை புரட்டுகிறார். கிளினிக் அட்டென்டன்ட் இவர் ஷெல்பை திறந்து புத்தகத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சத்தம்போட, டாக்டர் தனது அறையிலிருந்து வெளியே வருகிறார். வந்தவர், அழுக்கான ஒரு மெக்கானிக் சிறுவனின் கைகளில் விலை உயர்ந்த அந்த புத்தகம் இருப்பதை பார்த்துவிட்டு, “இவனை ஓரமா வெயிட் பண்ணச் சொல்லு… பேஷண்ட்ஸ் எல்லாரையும் அனுப்பிட்டு நான் வர்ரேன்!” என்று கூறிவிட்டு போய்விடுகிறார். சிறிது நேரத்தில் அனைத்து நோயாளிகளையும் பார்த்து அனுப்பிவிட்டு, நேரே நம்மாளிடம் வருகிறார். “என்ன தைரியம் உனக்கு? எவ்ளோ துணிச்சல் இருந்தா ஷெல்பை திறந்து அந்த புக்கை எடுத்து பார்ப்பே…? DISCIPLINE என்றால் உனக்கு என்னன்னு தெரியாதா? நான் சொல்லித் தர்ரேன்” என்று கூறி, அட்டண்டரை கூப்பிட்டு சிறுது கல்-உப்பு எடுத்து வரச் சொல்கிறார். கல்-உப்பு வர, அதை ஓரமாக கீழே போட்டுவிட்டு, “அது மேலே ஒரு பத்து நிமிஷம் முட்டி போடு!” என்று பணிக்கிறார்.
செய்யக்கூடாத தப்பை செஞ்சிட்டோம் போல… என்று எண்ணிக்கொண்டே நம்ம ஆளு அதன் மேலே முட்டி போடுகிறார். கல் உப்பு மேலே முட்டி போட்டா எப்படியிருக்கும்னு தெரியுமா?
ஓகே… மேட்டருக்கு வருவோம்….
அன்று கல்-உப்பு மீது முட்டி போட்ட சிறுவன்… அதன் பிறகு டூ-வீலர் கடையில் வேலை பார்த்தபடி +2 ப்ரைவேட்டாக எழுதி, அதிலும் பாஸாகிவிடுகிறார். இவருக்கு கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி. கணிதம் படிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் தனித் தேர்வராக தேர்வு எழுதி பாஸ் செய்தவர் என்பதால் எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. எப்படியோ அடித்து பிடித்து கெஞ்சி கூத்தாடி நகரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேர்ந்து, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கிறான். (B.A. Eng. Literature). அங்கு கல்வியே அவருக்கு போராட்டமாகத் தான் இருந்தது. இவரது ஆங்கில அறிவை பார்த்து அனைவரும் பரிகசிக்க, இவரோ அவற்றை பற்றி கவலைப்படாமல் தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். மூன்றாண்டுகள் முடிவில் இவரது வகுப்பில் அரியர்ஸ் இல்லாமல் டிகிரி வாங்கிய ஒரே மாணவர் இவர் மட்டும் தான். அதன் பிறகு எம்.ஏ. சேர நிறைய கல்லூரிகளுக்கு அப்ளிகேஷன் போடுகிறார். அந்த நிலையிலும் நிறைய கல்லூரிகள் இவரை சேர்த்துக்கொள்ளவில்லை.
கடைசியில் மாநிலக் கல்லூரியில் “வெராண்டா சிஸ்டமில்’ (Veranda System) அட்மிஷன் கிடைக்கிறது. அதாவது போனாப் போகுதுன்னு கொடுக்கிறது. அங்கு அவருக்கு நல்லா நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்கள் மூலம் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் பற்றி அறிமுகம் கிடைக்கிறது. TNSPSC Group 2 (Tamil Nadu Public Service Commision) தேர்வு எழுதுகிறார். அதில் பாசாகி ஏ.எஸ்.ஒ.வாக வேலை கிடைத்தது. அடுத்த இலக்கு, Group 1 தேர்வு எழுதினார். அதில் வெற்றி. கூட்டுறவுத் துறையில் சப்-ரெஜிஸ்ட்ராராக வேலை கிடைக்கிறது. 3 வருடங்கள் பணிபுரிகிறார். இடையே (IAS) UPSC தேர்வுக்கு தயாராகி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். தமிழ்நாட்டில் அந்த பேட்ச்சில் பாஸானவர்களில் நம்பர் 1 இவர் தாங்க. பிறகென்ன ஐ.ஏ.எஸ். வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அதில் தமிழ்நாட்டுப் பிரிவு கிடைக்கவில்லை. எனவே, IRS ஐ தேர்ந்தெடுத்து (Indian Revenue Service) அதில் பணியில் சேர்கிறார்.
அவர் தான் திரு.நந்தகுமார் (Joint Commissioner, Income-Tax Department). தற்போது மத்திய நிதியமைச்சகத்தில்ன் கீழ் வரும் வருமான வரித்துறையில் இணை ஆணையாளர். இந்த பொறுப்பு எப்பேர்ப்பட்ட பொறுப்பு தெரியுமா? சமூகத்தில் இவருக்கு இருக்கும் அந்தஸ்து தெரியுமா?
அன்றைக்கு எந்த பள்ளிகளெல்லாலாம் இவரை சேர்த்துக்கொள்ளமுடியாது என்று சொன்னார்களோ … அதே பள்ளிகள் இன்று “இவர் நமது பள்ளிக்கு வருவாரா? நம் மாணவர்களிடம் சிறிது நேரம் பேசுவாரா?” என்று இவரது அப்பாயின்மென்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். இது தான்டா சாதனை!
இன்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று தன் கதையை மாணவர்கள் மத்தியில் சொல்லி, “நானே சாதித்திருக்கிறேன். உங்களால் முடியாதா என்ன?” என்று கூறி அவர்களின் மனதில் நம்பிக்கை விதைகளை விதைக்கிறார். எப்பேற்ப்பட்ட சேவை….!
ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். இந்த வெற்றி இவருக்கு ஒரே இரவில் கிடைத்ததல்ல. சுமார் 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு இறுதியில் கிடைத்தது. இந்த போராட்டத்தில் தான் எத்துனை அவமானம், அவமதிப்பு, ஏளனம்… ஆனா, அதுவெல்லாம் தன்னை பாதிக்கவிடாம இவர் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை பற்றி மட்டுமே சிந்தித்தபடியால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறார். அப்படி அவர் தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு நிலைகுலைந்து போயிருந்தார் என்றால் என்றோ நொறுங்கிபோயிருப்பார்.
ஆண்ட்டி கிளைமேக்ஸ் ANTI-CLIMAX
அப்புறம் விஷயம் தெரியுமா? இவர் ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணினவுடனே, தமது அனுபவ அறிவு மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்று கருதி, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தனக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரத்தில் டியூஷன் எடுத்து வருகிறார். (ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணிட்டு பிறகு டியூஷன் எடுப்பவர்கள் ரொம்ப கம்மி. நல்ல வேலைல செட்டிலாகிவிட்ட பிறகு எப்படி டியூஷன்லாம் எடுக்கனும்னு தோணும்?) இவர் நடத்தும் அந்த டியூஷன் வகுப்புக்கு ஒரு டாக்டரும் வருகிறார். அவருக்கு ஐ.ஏ.எஸ் எழுதி பாஸ் பண்ணனும்னு ஆசை. (ஆனா, அவரால PRELIMINARY கூட போகமுடியலே என்பது வேற விஷயம்). அந்த டாக்டர் வேற யாருமில்லேங்க… நம்ம ஹீரோவை உப்பு போட்டு முட்டி போட வெச்சாரே அதே டாக்டர் தாங்க. இவர் இன்னும் அந்த டாக்டர் கிட்டே தான் தான் அன்னைக்கு முட்டி போட்டதுன்னு சொல்லிக்கவில்லையாம். நாம் ஏன் என்று கேட்டோம்.
“தெரிஞ்சா அவர் ரொம்ப சங்கடப்படுவாரு. வருத்தமும் பாடுவாரு. அதுனால தான் நான் சொல்லிக்கலே சுந்தர்ஜி!” என்கிறார். என்ன ஒரு நல்ல மனசு பார்த்தீங்களா?
இவரோட முயற்சியில் இவர் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்… ஆனால் இதைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான் என்பது தெளிவாக புரியும். இதற்க்கு முன்னாள் அந்த நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உறைக்கும்.
சினிமாவா எடுத்து இந்த கதையை – உண்மைக் கதை – என்று சொல்லி ரிலீஸ் பண்ணாக் கூட பார்த்துட்டு நம்புறதுக்கு கஷ்டமா இருக்கும். இல்லையா? ஆனா இது ஒன்னும் சினிமா கதை இல்லீங்க. நிஜத்திலும் நிஜம்.
மேற்படி நிஜ சம்பவம் உணர்த்தும் நீதி என்ன?
நீதி 1 : அவமானத்தை கண்டு கலங்கவேண்டாம். அதுவே உங்களது முன்னேற்றத்துக்காக இறைவன் போடும் ஏணி.
நீதி 2 : சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் நீங்கள் கிளம்பிவிட்டால் அதன் பிறகு உங்களை தடுத்து நிறுத்த எவராலும் முடியாது.
நீதி 3 : எவரையும் அலட்சியமாக கருதவேண்டாம். அவமதிக்க வேண்டாம். காலம் யாரை, எங்கே, எப்போது வைக்கும் என எவராலும் கூறமுடியாது. அதே போல யாரை எப்போ எங்கே தூக்கியடிக்கும் என்றும் கூற முடியாது. அடக்கத்தோடு என்றும் இருங்கள். எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பவர்களை பார்த்து பரிகசிக்கவேண்டாம்.
நீதி 4 : நாம் “இத்துடன் முடிந்தது” என்று கருதும் சந்தர்ப்பங்களில் தான் இறைவன் நமக்கு ஒரு பிரம்மாண்டமான தொடக்கத்தை தருகிறார். அதை அடையாளம் கண்டு நம்பிக்கையுடன் தொடர வேண்டியது நமது சாமர்த்தியம். தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
திரு.நந்தகுமார் அவர்களை நாம் சந்தித்த தருணங்கள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வருமான வரித்துறை மண்டல அலுவலகத்தில் திரு.நந்தகுமார் அவர்களின் பிரத்யேக அறையிலேயே அவருடனான எனது சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்ற நமது முதல் பாரதி விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி நம்மை சிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ப்ரோமோஷன் பெற்று திருச்சி மண்டல அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். நமது முகநூலிலும் நட்பில் இருக்கிறார். அவ்வப்போது நமது பதிவுகளுக்கு ரியாக்ட் செய்வது உண்டு.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள், நமது ரைட்மந்த்ராவின் வளர்ச்சி பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நமது பணியை துறந்து நாம் ரைட்மந்த்ராவுக்கு என்று ஒரு அலுவலகம் அமைத்து கிட்டத்தட்ட முழு நேரமும் இதற்காக உழைத்து வருவது பற்றி குறிப்பிட்டு உங்களுடனான சந்திப்பு பற்றி தளத்தில் பதிவழிக்கவிருக்கிறேன். ஆனால், அதற்கு முன் அவசியம் நம் ரைட்மந்த்ரா அலுவலகத்திரு வருகை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
அதைத் தொடர்ந்து சில இந்த வருடத்தின் மத்தியில் நமது அலுவலகம் வந்து நம்முடன் அளவளாவிட்டு சென்றார். நம் மீதும் நமது பணிகள் மீதும் பெரு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்.
மிகவும் பரபரப்பான மனிதரான இவர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நமது அலுவலகத்தில் செலவிட்டது சூறாவளி காற்றை பிடித்து குமிழிக்குள் அடைத்து வைப்பதை போன்று இருந்தது.
திரு.நந்தகுமார் பழகுதற்கு இனியவர், பண்பில் சிறந்தவர், எளிமையானவர். தான் அடைந்த உயரத்தை மற்றவர்களும் அடையவேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள், கல்லூரிகள் சென்று மாணவ மாணவியர் மத்தியில் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அவர்களில் பலர் கிராமப்புற மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புகிறவர்களுக்கு தனது முகநூலில் பல டிப்ஸ்களை தொடர்ந்து அளித்து அவர்கள் தேர்வை எதிர்கொள்ள உதவி வருகிறார்.
இந்த ஆண்டு பாரதி விழாவை திட்டமிட்டவுடனேயே அவரை தொடர்பு கொண்டு நீங்கள் அவசியம் வருகை தந்து எங்கள் வாசகர்களிடையில் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவருடைய அத்தனை பிஸி ஷெட்யூலுக்கு இடையேயும் ஒப்புக்கொண்டார். தவிர்க்க முடியாத காரணத்தால் விழா ஒரு வாரம் தள்ளிப்போனது. அதை சற்று தயங்கிக்கொன்டே அவரிடம் சொன்னோம். பரவாயில்லை சுந்தர்ஜி. நான் அவசியம் வருகிறேன் என்று கூறி நம்மை திக்குமுக்காடச் செய்தார்.
அவசியம் நமது விழாவுக்கு வாருங்கள். அவரை என்ன பேசப்போகிறார் என்று கேளுங்கள்.
எப்படி இந்த சாத்தியமாயிற்று? அதற்கு இவர் கையாண்ட முறைகள் என்ன?
சவால்களை எப்படி சாதனைகளாக மாற்றினார்?
அவமானங்களை எப்படி உரங்களாக மாற்றினார்?
தடைக் கற்களை எப்படி படிக்கற்களாக மாற்றினார்?
(இவர் நமது அலுவலகத்தில் அளித்த பேட்டி விரைவில் வெளியாகும்!)
==========================================================
நம் பாரதி விழாவுக்கு வருகை தாருங்கள்!!
நமது தளத்தின் பாரதிவிழா வரும் 25/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் நவீன் மஹால் # 41, ஆற்காடு சாலை, வளசரவாக்கம் சென்னை – 600087 என்கிற முகவரியில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும். வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மங்கல இசை, தேவராம், திருமுறை, பாரதி பாடல்கள், சாதனையாளர்களின் உரை என அனைத்து அம்சங்களும் இவ்விழாவில் உண்டு.
(மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்றாலும் நடைமுறை சிரமங்கள் காரணமாக விழா இரண்டு வாரம் தள்ளி நடத்தப்படுகிறது!) சென்ற ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாரதி விழா நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு அவசியம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். (2017 கோடை விடுமுறையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெறும்!)
மேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
மேலும் பல ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்களுக்கு check …
ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு!
ட்ரீ பேங்க் முல்லைவனம் – பசுமைக்கு பாடுபடும் ஒரு ஒன்மேன் ஆர்மி!
மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!
கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?
கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!
அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!
50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!
முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !
ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!
இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2
ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!
==========================================================
Motivational articles & stories …
தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87
ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ?
தேவை : வாழ்வில் சாதிக்க துடிக்கும் சில இளைஞர்கள் !
==========================================================
[END]
EXCELLENT, EXCELLENT, EXCELLENT. Nothing to say more.
HATS OFF TO THAT MAN OF CONFIDENCE Mr.
NANDHAKUMR.
தன்னம்பிக்கை ஊட்டும் இந்த நிஜக்கதைக்கு எத்தனை பாராட்டு கொடுத்தாலும் தகும். சாதனைக்கு எந்த தகுதியும் தேவையில்லை , தளராத முயற்சி மட்டுமே வேண்டும் என்பதை திரு . நந்தகுமார் அவர்கள் நிரூபித்துள்ளார்! பாரதி விழா இனிதே நிறைவு பெற நம் மனமார்ந்த வாழ்த்துக்கள் !! நன்றி சுந்தர்ஜி !!
Dear SundarJI,
No words to express my feelings.. great…
Thanks
Ramesh