Saturday, February 23, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > அமைதி என்றால் என்ன? Monday Morning Spl 22

அமைதி என்றால் என்ன? Monday Morning Spl 22

print
நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான்.

Waterfall

அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்திருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்துகொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.

“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

Plant inside Rock“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி! அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”

“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.

ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, இறைவனை மனதார நினைத்து “நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் எவர் தந்தாலும் “எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே… அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

=============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

[END]

12 thoughts on “அமைதி என்றால் என்ன? Monday Morning Spl 22

 1. Monday Morning Spl மிகவும் அருமை சுந்தர்ஜி .

  \\அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.

  ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, இறைவனை மனதார நினைத்து “நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி\\
  மிகவும் சிந்திக்கவேண்டியவரிகள்.
  மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டுள்ளது .

  monday மார்னிங் spl சூப்பர் சுந்தர்ஜி .

  -பாராட்டுக்களுடன் ,
  மனோகர்
  .

 2. ////ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, இறைவனை மனதார நினைத்து “நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி////

  இந்த வார Monday Morning Spl …எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது நன்றி ..

 3. monday morning ஸ்பெஷல் சூப்பர்.

  துன்பம் வரும் பொழுது இந்நிலையும் மாறும் என்ற எண்ணம் இருந்தால் கண்டிப்பாக சந்தோஷம் நம் வாழ்வில் நிச்சயம் வரும்.

  நன்றி
  உமா

 4. சுந்தர்ஜி
  திங்கள் சூப்பர்.
  அமைதி பற்றி ஒரு அற்புதவிளக்கம். பெரிய கருத்தை ஒரு சீரிய கட்டுரை மூலம் மிகவும் அழகாக வடடித்துதுள்ளிர்கள் . ஒரு மனிதனுக்கு விடாமுயற்சி, தன்னமிக்கை, தான் எடுத்த காரியத்தில் வெற்றி மிகவும் அவசியம் போன்ற கருத்தை நமக்கு அளிக்கிறது உங்கள் கட்டுரை.

 5. அமைதிக்கு ஓவியம் மூலம் ஒரு அருமையான விளக்கம். அமைதி என்பது வெளியே இல்லை, நமக்குள்ளே இருக்கிறது என்று புரிய வைக்கும் ஒரு சின்ன கதை. இந்த உண்மை புரிந்தாலும் மன அமைதி கிடைப்பது அத்தனை சுலபமல்ல. இறை வழிபாடு மன அமைதி கிடப்பதற்கு ஒரு மிக சிறந்த வழி. எப்போதும்போல் திங்கட்கிழமை சிறப்புப்பதிவு அருமை. நன்றி சுந்தர்.

 6. திங்கள் பதிவு சூப்பர்.
  வழக்கம் போல் ஒரு நல்ல கருத்துடன் கூடிய விளக்கம்.
  அமைதி எங்கே என்று தேடுபவர்கள் இந்த பதிவை படித்தால் புரியம்.
  அமைதியை கொட்டும் அருவி சத்தத்தில் கூட நம் மனதில் அறியலாம் என்று ஒரு சிறிய கதை மூலம் தெரிகிறது.
  தியானத்திற்கு கூட இந்த மாதிரி சொல்வார்கள் படித்தும் உள்ளேன். அனுபவித்தும் உள்ளேன்.
  ஆனால் எவ்வளவு தேடினாலும் அமைதியை அறிவது அவ்வளவு சுலபம் அல்ல.
  சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!! உண்மை.

 7. வணக்கம் சுந்தர் சார்

  மிகவவும் அற்புதமான பதிவு

  நன்றி

 8. நல்ல பதிவு… பல முறை சென்னை புற நகர்
  இரயிலில் பயணிக்கும்போது நான் இதை முற்றிலுமாக அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன் . அமைதி மனத்தில்தான் இருக்கிறது .வெளியே இல்லை . சி . இராஜேந்திரன் ,விசாகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *