Home > 2013 > December

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

மஹா பெரியவா அவர்கள் மேல் நம் வாசகர்களுக்கு பேரன்பும் அளவிடமுடியாத பக்தியும் இருப்பது நமக்கு தெரியும். ஒரு சிலருக்கு சில பல காரணங்களினால் சில சந்தேகங்கள் இருப்பதும் நமக்கு தெரியும். அது பற்றி தனியாக ஒரு பதிவெழுதி நாம் இயன்றளவு  தெளிவுபடுத்திவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள இந்துமதம்' நூலை தற்செயலாக படித்துக்கொண்டிருந்தோம். அந்நூலில் மஹா பெரியவரை பற்றி பல இடங்களில் கவியரசு கண்ணதாசன்

Read More

ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்!

நாம் ஏற்கனே கூறியபடி, வரும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அன்று ஹனுமத் ஜெயந்தியும் வருவதால் கூடுதல் சிறப்பு. டிசம்பர் 31, செவ்வாய் கிழமை இரவு 8.00 மணிக்கு நங்கநல்லூர் நிலாச்சாரலில் பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு ஸ்பெஷல் டின்னர் ஸ்பான்சர் செய்து அவர்களுடன் நேரம் செலவழிப்பது. தவிர அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரும்படி நம் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதுவும் அவர்களிடம் அன்று ஒப்படைக்கப்படும். மார்கழி மாதம் என்பதால்

Read More

செல்வத்துள் பெரிய செல்வம் எது தெரியுமா ? MONDAY MORNING SPL 26

யாரோ தனது வீட்டு வாசலுக்கு வந்திருப்பதை பார்த்த அந்த பெண், வெளிய வந்து பார்க்கிறாள். அங்கே நீண்ட வெள்ளை தாடிகளுடன் மூன்று பேர் நின்றுகொண்டிருப்பதை பார்க்கிறாள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. பார்த்தால் மிகப் பெரிய யோகிகளை போல காணப்பட்டனர். விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் குடும்பம் அது என்பதால், "நீங்கள் மூவரும் பசியோடிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். உள்ளே வாருங்கள். சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம்" "உங்கள் கணவர் வீட்டில் இருக்கிறாரா?" "இல்லை!" "அப்போது நாங்கள் வரமுடியாது. நாங்கள்

Read More

யோகிகளுக்கிடையே நடந்த போட்டி – வென்றது யார்? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

சூரியன், பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதாயினும் வெகு தூரத்தில் இருப்பதால் ஒரு சிறிய தட்டைப்போலக் காணப்படுகின்றது. அதைப்போல இறைவன் அளவற்ற மகத்துவம் உடையவராயிருந்தும் நமக்கும் அவருக்கும் இடையே உள்ள தூரத்தினால் அவருடைய உண்மையான மகத்துவத்தை அறிய சக்தியற்றவர்களாக இருக்கிறோம். யோகிகளின் கூட்டமைப்பு ஒன்று மக்களின் முன்பு கூடியது. அவர்கள் மனோபலத்தினாலேயே மகாவீரர்கள் ஆவார்கள். இவர்களுடைய சாகசத்தைக் கண்டு கொண்டிருந்த சிலருக்குள் ஒரு பேச்சு எழுந்தது. இங்கு இருப்பவர்களுள் யார் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்

Read More

ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

சென்ற ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அளிக்கப்பட்ட பதிவு. இது. சிற்சில திருத்தங்களை செய்து மீண்டும் தந்திருக்கிறோம். அவசியம் படியுங்கள்... ஷேர் செய்யுங்கள். வரும் வியாழக்கிழமையன்று 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. உலகையே இன்று இணைக்கும் மொழியாக ஆங்கிலம் மாறிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி என்பதையும் தாண்டி ஒரு அத்தியாவசியம் என்று ஆகிவிட்டது. ஆங்கில தேதிப்படியே இன்று பெரும்பாலான வர்த்தக, அலுவலக, தொழில் சார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சம்பளம் பெறுவது, பில்களை செட்டில்

Read More

தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு தவறு செய்கிறவர்கள் அநேகம் பேர் உள்ளனர். நாம் செய்த தவற்றை மூடி மறைத்து யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் மனசாட்சியை ஏமாற்றவே இயலாது. அறிந்தோ அறியாமலோ அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் பலவித தவறுகள் செய்கின்றனர். பின்னர் அதை எண்ணி வாழ்நாள் முழுதும் வருந்துகின்றனர். "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது" என்னும் பாடலுக்கிணங்க, ஒரு நொடியில் அவசரப்பட்டு செய்த தவறானது வாழ்க்கை முழுதும் மனவருத்தத்தை சிலருக்கு தந்து

Read More

மகனின் கல்வி உதவி – தாய் அடைந்த சிவலோகப் பதவி!

பாவ புண்ணிய கணக்குகளை இறைவன் நிர்வகிக்கும் விதமே அலாதி தான். அவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டுவரவே முடியாது. இன்னது... இப்படித் தான்.... இவ்வளவு புண்ணியம் என்று எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. புண்ணியமானது செய்பவர் என்ன செய்கிறார் என்பதைவிட எந்த சூழ்நிலையில் செய்கிறார், யாருக்கு செய்கிறார் என்பதை பொறுத்தே கணக்கிடப்படும். மேலும் செய்யக்கூடிய நேரமும் மிக மிக முக்கியம். எனவே உதவிகளை தேவையறிந்து விரைந்து செய்யவேண்டும். காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின்

Read More

தேடி வந்த ராஜா… பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா? கிருஸ்துமஸ் ஸ்பெஷல்!

இவ்வுலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இறைவனை அடைவதற்காக தனித்தனி வழியைக் காட்டுகின்றன. இந்த சமயங்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், எந்தவொரு வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

Read More

“கனிவுடன் கடமையை செய்… குருவருளும் திருவருளும் தேடி வரும்!”

சமீபத்தில் நாம் படித்து உருகிய, கலங்கிய, மஹா பெரியவா தொடர்புடைய மகிமை இந்த நிகழ்ச்சி. நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரண புருஷரை நமக்கு அடையாளம் காட்டுகிறார் குரு இந்த சம்பவத்தின் மூலம். இவனுக்கு எதற்கு பிரசாதமும் பூமாலையும்? சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞர். ஸ்வாமிகளைத் தரிசிக்கக் காஞ்சி மடத்துக்கு வந்தார். அதற்கு முன் அவர் மடத்துக்கு வந்தது இல்லை. ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க அவருக்கு ஆசை இருந்தது. வந்தார். ஆரஞ்சுப்

Read More

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ? MONDAY MORNING SPL 25

அந்த குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே... அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்க்கிறான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்" என்று கூறுகிறார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள். மாணவர்களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள்

Read More

திறமையை வறுமை முடக்கிவிட முடியாது என்று உலகிற்கு உணத்திய மேதை – MUST READ

விளம்பர வெளிச்சங்களில், ஊழல் பணத்தில் மின்னும் திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களை அறிந்துள்ள நம் சமூகம் நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை உணர்ந்ததும் இல்லை போற்றியதும் இல்லை. அப்படி மறந்துபோன மனிதர்களில் ஒருவர்தான் கணிதமேதை ராமானுஜன். டிசம்பர் 22. இன்று அவரது பிறந்தநாள். நாம் இதுவரை வெளியிட்ட பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டது நமது தளத்தில் நாம் இதுவரை வெளியிட்ட பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டது சென்ற ஆண்டு ராமானுஜனின் பிறந்தநாளின்

Read More

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club

மந்த்ராலயத்திலே குடிகொண்டிருக்கும் மகான் ஸ்ரீ ராகவேந்திரர், தன்னை நம்பி சரணடைந்தால், இன்றும் கூப்பிட்ட குரலுக்கு இல்லந்தோறும் ஓடிவருகிறார் என்று கூறுவார்கள். இந்த வாரம், தனது பக்தை ஒருவர் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை பார்ப்போம். குருவின் பெருமை படிக்க சிறந்தது. இருவினையை நீக்க வல்லது. நம் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களின் ஸ்ரீ ராகவேந்திர மகிமை 6 ஆம் பாகத்திலிருந்து... காத்திருந்து அருள் புரியும் கருணைக்கடல் நீ குருராஜா! 1987-

Read More

பார்க்க வேண்டியவர்களை அவன் பார்த்துக்கொள்வான்!

ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் இந்த கதை வருகிறது. இது ஒரு நிஜ சம்பவம். பக்த விஜயத்தில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் கலியுகத்தில் அதுவும் கடந்த சில நூற்றாண்டுகளில் நடைபெற்றவை தான். இந்த கதைகளில் வருபவர்களின் சந்ததியினர் பலர், குறிப்பிட்ட அந்தந்த நகரங்களில் இன்றும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்த விஜயத்தில் சமீபத்தில் நாம் படித்து உருகிய கதையை உங்களுக்கு இங்கே தருகிறோம். இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நாம் நம் கடமையை

Read More

எல்லாப் புகழும் இறைவனுக்கே! துணை நின்ற பெருமை உங்களுக்கே!!

என்றைக்கு எமது எழுத்துக்கள் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கும் ஆன்மீக எழுச்சிக்கும் கடுகளவாவது பயன்படவேண்டும் என்று விரும்பி இந்த 'ரைட்மந்த்ரா.காம்' தளத்தை துவக்கினோமோ அன்றே அதன் பலனை இறைவன் கைகளில் கொடுத்தாகிவிட்டது. நமது கடமை உழைப்பது மட்டும் தான். இடையில் சில சில சஞ்சலங்கள் ஏற்பட்டபோதும் அவை யாவும் நன்மைக்கே என்று கருதி தான் இந்த தளத்தை நடத்தி வந்தோம். நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதும்

Read More