Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > யோகிகளுக்கிடையே நடந்த போட்டி – வென்றது யார்? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

யோகிகளுக்கிடையே நடந்த போட்டி – வென்றது யார்? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
சூரியன், பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதாயினும் வெகு தூரத்தில் இருப்பதால் ஒரு சிறிய தட்டைப்போலக் காணப்படுகின்றது. அதைப்போல இறைவன் அளவற்ற மகத்துவம் உடையவராயிருந்தும் நமக்கும் அவருக்கும் இடையே உள்ள தூரத்தினால் அவருடைய உண்மையான மகத்துவத்தை அறிய சக்தியற்றவர்களாக இருக்கிறோம்.

யோகிகளின் கூட்டமைப்பு ஒன்று மக்களின் முன்பு கூடியது. அவர்கள் மனோபலத்தினாலேயே மகாவீரர்கள் ஆவார்கள். இவர்களுடைய சாகசத்தைக் கண்டு கொண்டிருந்த சிலருக்குள் ஒரு பேச்சு எழுந்தது. இங்கு இருப்பவர்களுள் யார் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்ற கேள்வி எழுந்தது. அனைத்து யோகிகளும் தங்கள் திறமையை வெளிக்காட்டி அதன் மூலம், தானே கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் என்று நிரூபிக்க, சாகசங்களை நிகழ்த்தத் துவங்கினர்.

முதலில் வந்தவர், “நான்தான் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவன். என்னால் தண்ணீரின் மேல் நடக்க முடியும்’’ என்று கூறி, சாதாரணமாகத் தரையில் நடப்பதைப்போலத் தண்ணீரில் நடந்து காட்டினார். கூடியிருந்த மக்கள் அதைக் கண்டு வியந்தனர். அடுத்ததாக வந்தவர், ‘‘என்னால் காற்றில் பறக்க முடியும்; ஆகாயத்தைத் தொட்டுவிட்டு பூமிக்குத் திரும்ப முடியும்’’ என்றார். சொன்னபடியே அதை நிரூபித்தும் காட்டினார். அடுத்தவர் வந்தார். ‘‘என்னால் நேற்று, இன்று, நாளை என்று ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று காலச் சக்கரங்களைச் சொல்ல முடியும்’’ என்று கூறி அங்கிருந்த ஒருவருடைய வாழ்க்கை கால கட்டங்களைச் சொல்லி நிரூபித்தார். அடுத்தபடியாக வந்தவர், “நெருப்பு என்னை எரிக்காது” என்று கூறிப் பெருந்தீயை எழுப்பி அதில் குதித்துக் காட்டினார்.

வேறொருவரோ, “என்னை உயிரோடு புதைத்தாலும் நான் சாக மாட்டேன்” என்றார். இப்படி அங்கே சர்ச்சைகள் வளர்ந்து கொண்டே இருந்தன.
அக்கூட்டத்திலிருந்த வயதான பெண்மணி ஒருவர், அந்த வித்தைக்காரர்களுக்கு அருகில் சென்று பேசத் துவங்கினார்.

‘‘கடவுளின் பாதங்களுக்கு வெகு அருகில் இருப்பவர் யார் என்று நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார். உடனே அங்கிருந்தவர்கள், ‘‘சொல்லுங்கள் தாயே; எங்களில் யார் கடவுளின் அருகில் இருக்கிறோம் என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறோம்” என்றார்கள்.

“உங்களில் யாரும் இறை அபிமானியர் இல்லை. யார் மிகவும் எளிமையானவரோ அவரே கடவுளின் அபிமானி. உலகில் தன்னடக்கத்தையும் எளிமையையும் எவர் பெற்றுள்ளாரோ அவரே இறைவனின் அருளைப் பெறுவார். அவரே கடவுளுக்கு அருகில் இருப்பார். இந்த வழியை எந்தத் தந்திரியாலும் புரிந்துகொள்ள இயலாது’’ என்றார், அந்த மூதாட்டி. (நன்றி : தினகரன் ஆன்மீக மலர்)

நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து….
பரமன் அருள் தரும் சாதனம்…

நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை

நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து….
பரமன் அருள் தரும் சாதனம்…

ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்

நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து….
பரமன் அருள் தரும் சாதனம்…

நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா

======================================================

இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த சமூக சேவகர் திரு.தீனதயாளன்.

பார்வையற்றோரை பெருமிதம் கொள்ளச் செய்பவர்!

நிலாச்சாரல் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் மூலம் தான் தீனதயாளன் அவர்களை நாம் அறிவோம். டிசம்பர் துவக்கத்தில் நடைபெற்ற நம் பாரதி விழாவுக்கான ஏற்பாடுகளில் நாம் இருந்தபோது, கடவுள் வாழ்த்தை பார்வையற்ற மாணவிகளை கொண்டு பாடவைக்க விரும்பினோம். அப்போது தான் திரு.தீனதயாளன் அவர்களை பற்றி நம்மிடம் சொல்லி திரு.ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.

தீனதயாளன் அவர்கள், வேளாண்மை உதவி பொறியாளராக தமிழக அரசு ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர். தனது மகன் மற்றும் மகள்களை படிக்கவைத்து, திருமணமும், செய்வித்து செட்டில் செய்துவிட்டு ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையை என்ஜாய் செய்துகொண்டிருந்தார். அப்போது, இளைஞி என்பவர் ஒரு முறை இவரை பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத (SCRIBE) அழைத்து சென்றார்.  பார்வையற்றவர்கள் என்றாலே தோடு, சேஃப்டி பின், பர்ஸ் விற்பவர்கள் அல்லது பிச்சை எடுப்பவர்கள் என்று அதுவரை எண்ணிக்கொண்டிருந்த இவருக்கு, அங்கு ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவர்களுக்கு போட்டியாக பி.ஏ, எம்.ஏ., எம்.பில். ஆகிய தேர்வுகளை SCRIBE துணையுடன் எழுதிக்கொண்டிருந்ததை பார்த்து விக்கித்து போய்விட்டார்.

அங்கு கண்ட காட்சிகள் இவரை ஏதோ செய்ய, தனது ஒய்வு காலத்தை இம்மாணவர்களுக்கு துணையாக இருந்து செலவழிப்பது என்று முடிவுசெய்துவிட்டார். மேற்கொண்டு பல பார்வையற்ற மாணவர்களுக்கு உதவியாக அவர்களுக்காக பாடங்களை படித்து அவர்களிடம் சொல்வது, தேர்வு எழுதுவது ஆகிய உதவிகளை செய்து வந்தார். அப்போது அவர்களிடம் பல கலை சார்ந்த திறமைகள் ஒளிந்திருப்பதை கண்டு வியந்தார். அந்த திறமைகளை வெளிக்கொண்டு அதை உலகறியச் செய்து பார்வையற்றவர்கள் தங்களை பெருமிதம் கொள்ளச் செய்வதே தன் பணி என்று கருதி அது முதல் செயல்பட்டு வருகிறார்.

பார்வையற்ற கல்லூரி மாணவ, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முழு உதவிகள் செய்கிறார். அவர்களுக்கு மேக்கப் ஏற்பாடு செய்வது, அவர்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வது, நிகழ்ச்சிக்கான பாடலை தயார் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் பார்த்துகொள்கிறார். அவர்களின் கலைத்திறன் மற்றும் பன்முகத் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்.

தனது பணிகளை செம்மையாக செய்ய ‘விழிகள்’ என்ற டிரஸ்டை துவக்கியிருக்கிறார். பார்வையற்ற மாணவியர் தேர்வு முதலான கல்வி தொடர்பான அலுவல்களுக்கு சென்னை வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடம் கிடைக்க மிகவும் கஷ்டமாக உள்ளது. எனவே அவர்கள் தற்காலிகமாக தங்கிவிட்டு செல்ல, ஒரு இல்லத்தை அடுத்த ஆண்டு துவக்கவிருக்கிறார். (பார்வையற்ற மாணவர்கள் தங்குவது பிரச்னையில்லை. ஆனால் மாணவிகள் இந்த நெரிசல் மிக்க, அவசர நகரத்தில் என்ன செய்வார்கள்?). இல்லத்தை துவக்கும் பணியில் நம்மாளான உதவிகளை  செய்வதாக உறுதியளித்திருக்கிறோம்.

நம் பாரதி விழாவில் கலைத் திறமையை வெளிப்படுத்திய பார்வையற்ற மாணவியரை நிகழ்ச்சிக்காக தயார் செய்தது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC_6096

குறிப்பு : நமது பாரதி விழாவில் திரு.தீனதயாளன் பேசும் காட்சி. பின்னால் இருக்கும் மாணவியின் பெயர் வளர்மதி. பார்வையற்ற இவர், ‘கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை’ பாடலுக்கு நடனமாடி அனைவரையும் உருக வைத்தார். வளர்மதியின் கல்வித் தகுதி என்ன தெரியுமா? B.A., B.Ed., M.A., 

(பார்வையற்ற மாணவியர் நம் பாரதி விழாவில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிக்கொண்டுவந்த விதம், கல்லையும் கரைக்கும் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாகும். அது பற்றி தனியாக பதிவளிக்கிறோம்.)

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று திரு.தீனதயாளன் அவர்களை கேட்டுக்கொண்டபோது, “பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் அளவிற்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லே. நான் அத்தனை பெரிய சேவையும் பண்ணலே” என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டார். இருப்பினும், நமது பிரார்த்தனை கிளப்பின் நோக்கத்தை அவரை சம்மதிக்க வைத்தோம்.

தம்முடன் சேர்த்து தாம் பயிற்சி அளிக்கும் தமக்கு தெரிந்த சுமார் 30 பார்வையற்ற மாணவ, மாணவியரை பிரார்த்தனை செய்ய சொல்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

==========================================================

தங்கைக்கு புத்திர பாக்கியம் வேண்டும்!

வாழ்க வளமுடன்.

வேதாரண்யத்தை சேர்ந்த என் தங்கை ஹேமா மற்றும் அவரது கணவர் திரு.முத்தமிழன் ஆகியோருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும்  இன்னும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் அவர் குடும்பத்தினரும் நாங்களும் சொல்லொண்ணா மனத்துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.

அவர்களுக்கு விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று உங்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

ஜி.சுப்ரமணியன்

==========================================================

தம்பி குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும்!

ரைட்மந்த்ரா குடும்பத்தினருக்கும் ஆசிரியருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

என் தம்பி நல்லபடியாக படித்து முடித்து அயல்நாடு சென்று நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்த வேளையில் அவனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து அவனை மீட்க போராடி வருகிறோம். ஒரு மூத்த சகோதரனாக அவனது எதிர்காலத்தை நினைத்து எனக்கு அச்சமாக உள்ளது.

ரைட்மந்த்ரா வசகர்கர்கள் நண்பர்கள் அனைவரும் அவன் குடிப்பழக்கத்தில்ருந்து விரைவில் விடுபடவேண்டும் என்று பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– கோதை மணாளன்
சென்னை.

==========================================================

Children’s education and my prosperity !

Dear Sir,

Good Day to you and Rightmantra readers and friends.

1) I am Rathina Kumar,  am facing financial struggle since 17 years, and request you to pray for me.

2) My Elder Son R.Aswin Kumar doing 4th year B.E., he should get good job during his course completion, Please Pray for him

3) My Younger Son R. Mani Bhaarathi, doing 10th Std, he should get good marks on his 10th std. Public exam, pls Pray for him,

I have read your articles on website very recently and it was excellent and very much appreciating you,

Kindly pray for us on above said points,

thanking you

Kind regards
Rathina Kumar M
Tiruppur

==================================================

நம் பொது பிரார்த்தனை

பார்வையற்றோர் கல்வி பயில அனைத்து வசதிகளும் கிடைக்கவேண்டும்!

உடலில் குறைப்பாட்டுடன் பிறக்கும் மாற்றுத் திறனாளிகள் நம் நாட்டில் படும் பாடுகள் தான் எத்தனை எத்தனை? அதுவும் பார்வைத் திறனற்றவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பள்ளியிலிருந்து கல்லூரி வரை அவர்கள் படிக்கவும், அதற்கு எவரையும் பொருளாதார ரீதியாக சார்ந்திராத ஒரு வேலையை பெறவும் பிறகு தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எத்தனை போராடவேண்டியிருக்கிறது?

தம் நடனத்தில் கோபியரை கண்முன்னே கொண்டு வந்த பார்வைத்திறன் சவால் கொண்ட செல்வி.வளர்மதி நம் பாரதி விழாவில் சான்றிதழ் பெறும் காட்சி!
தம் நடனத்தில் கோபியரை கண்முன்னே கொண்டு வந்த பார்வைத்திறன் சவால் கொண்ட செல்வி.வளர்மதி நம் பாரதி விழாவில் சான்றிதழ் பெறும் காட்சி!

பார்வைத் திறனற்ற ஒரு கார்த்திக் சாவ்னி என்கிற மாணவர் +2 தேர்வில் 95% மதிப்பெண்கள் பெற்றபோதும் நம் நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களால் பந்தாடப்பட்டு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஸ்காலர்ஷிப்புடன் படிக்க இடம் கிடைத்ததை பற்றி நாம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பதிவு ஒன்றில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். (“வாழும் வரை போராடு; வழி உண்டு என்றே பாடு!”)

மாற்றுத் திறனாளிகளை மதித்து அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை சௌகரியங்களை செய்து கொடுக்காதவரையில் நம் நாடு முன்னேற்றமடையாது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களின் திறமையை நாம் அங்கீகரிப்போம். அவர்கள் எவ்வித சிரமும் இன்றி கல்வி கற்கவும், தங்களுக்குரிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் துணை நிற்போம்.

நம் நாட்டின் சூழ்நிலைகள் அவர்களுக்கு அனுகூலமாக மாறவேண்டும். அவர்களின் கோரிக்கைகள் பரிவுடன் கவனிக்கப்படவேண்டும். திருவருள் அதற்கு  உதவ வேண்டும்.

இதுவே நமது இந்த வார பொது பிரார்த்தனை.

==========================================================

வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு சௌக்கியமாக வாழவேண்டும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் கேள்விகளில் சிறந்து விளங்கி அவர்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை நம் நாட்டில் மலரவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : டிசம்பர் 29, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

– See more at: http://rightmantra.com/?p=8561#sthash.TBm9qeTr.dpuf

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சமூக சேவகர் திரு.ஜெகதீசன் அவர்கள்.

10 thoughts on “யோகிகளுக்கிடையே நடந்த போட்டி – வென்றது யார்? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழவேண்டும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை எங்கும் உருவாகவும் பெரியவாவை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்வோம்.

  2. டியர் சுந்தர்ஜி

    இந்த வார கூட்டு பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு.தீனதயாளன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்

    //வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு சௌக்கியமாக வாழவேண்டும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் கேள்விகளில் சிறந்து விளங்கி அவர்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை நம் நாட்டில் மலரவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.//

    திருச்சிற்றம்பலம்

    (For the pleasent prosperous life of the family – also to bless people in auspicious occasions
    மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
    கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
    பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

    போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
    தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
    காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
    பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.

    தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
    வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
    கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
    பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

    அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
    நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
    கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
    பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.

    அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
    விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
    கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
    பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

    மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
    கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
    சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
    பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.

    குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
    நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
    கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
    பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.

    அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
    நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
    கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
    பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.

    நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
    அடியொடு முடியறி யாவழல் உருவினன்
    கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
    பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

    தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
    ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்
    காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
    பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.

    கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
    பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
    அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
    விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.

    திருவீழிமிழலை
    For improvement of financial position

    வாசி தீரவே காசு நல்குவீர்
    மாசின் மிழலையீர் ஏச லில்லையே.
    இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
    கறைகொள் காசினை முறைமை நல்குமே.
    செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
    பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.
    நீறு பூசினீர் ஏற தேறினீர்
    கூறு மிழலையீர் பேறு மருளுமே.
    காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
    நாம மிழலையீர் சேம நல்குமே.
    பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
    அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.
    மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
    கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.
    அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
    பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.
    அயனு மாலுமாய் முயலு முடியினீர்
    இயலு மிழலையீர் பயனு மருளுமே.
    பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
    வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.
    காழி மாநகர் வாழி சம்பந்தன்
    வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.

    திருச்சிற்றம்பலம்

    கல்வியில் தலைசிறந்து விளங்க ஓத வேண்டிய திருப்பதிகம்
    (To be proficient in education.)
    திருஞானசம்பந்த சுவாமிகள்

    சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
    மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
    கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.
    வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
    கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
    விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
    கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.
    வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
    போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
    நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
    காதவ னிருப்பது கருப்பறிய லூரே.
    மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
    உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
    தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
    கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
    ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
    நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
    விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
    கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
    விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
    பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
    எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
    கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.
    ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
    சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
    தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
    காதின னிருப்பது கருப்பறிய லூரே.
    வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
    பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
    கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
    காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
    பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
    கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
    நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
    கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
    அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
    சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
    குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
    கற்றென இருப்பது கருப்பறிய லூரே.
    நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
    கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
    பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
    வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.

    திருச்சிற்றம்பலம்

    நன்றி
    உமா

  3. சுந்தர் சார்

    தலைமை தாங்கும் திரு.தீனதயாளன் சார் அவர்களுக்கு நன்றி

    நன்றி

  4. வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு சௌக்கியமாக வாழவேண்டும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் கேள்விகளில் சிறந்து விளங்கி அவர்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை நம் நாட்டில் மலரவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

    மனோகர்

  5. விழிகள் தீனதயாளன் அவர்கள் நம் பிரார்த்தனைக்கு தலைமை பொறுப்பு வகிப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்.
    அவர் செய்யும் சேவை தன்னலமற்றது. தன் குடும்ப கடமைகளை சரிவர முடித்த ஒரு தலைவன் தன் ஓய்வு காலத்தில் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் ஒரு பெரிய மாற்று திரனளிகளின் குடும்பத்தை
    விழிகள் போல காப்பாற்றி வருகிறார். அவருக்கு ஒரு ராயல் solute ,
    selvi. வளர்மதியின் நாட்டியம் நம் barathi விழாவிற்கு ஒரு முத்து.

    வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழவேண்டும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை எங்கும் உருவாகவும் பெரியவாவை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்வோம்.

  6. சுந்தர்ஜி

    தீனதயாளன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யுட்.
    வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.
    எல்லா நதியும் கடலில் சங்கம் ஆவதை போல் நம் தள அன்பர்கள் கூட்டு பிராத்தனையில் ஒன்றாய் சங்கமிப்போம்

  7. திரு தீனதயாளன் அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன். இந்த வார பிரார்த்தனைக்கு மிகவும் பொருத்தமானவர். இப்படி ஒவொருவரும் தன்னுடைய ஒய்வு காலத்தை பயனுள்ளதாக இருக்கும்படி செய்து கொண்டால் நம் நாட்டில் மாற்று திறநாளிகளின் கோரிக்கைகள் மிகவும் சுலபமாக மாறி விடும்.

    வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழவேண்டும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை எங்கும் உருவாகவும் பெரியவாவை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்வோம்.

  8. திரு. தீன தயாளன் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இப்படியும் மனிதர்கள் உள்ளது சந்தோஷமாக உள்ளது.

    /////வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கவும் திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு சௌக்கியமாக வாழவும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் கேள்விகளில் சிறந்து விளங்கி அவர்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை நம் நாட்டில் மலரவும் திருவருளை வேண்டி பிரார்தனை செய்து கொள்கிறேன்./////

  9. சகோதரா
    உங்கள் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நல்ல முறையில் ஈடேறவும் …உங்கள் அன்பு நண்பர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் என்னுடைய பிரார்த்தனைகள் உங்கள் பரிச்சயம் கிடைத்த பிறகு நானும் எனது குடும்பத்தினரும் நாங்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை நேரத்தில் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். இறைவன் மஹா பெரியவா அனைவருக்கும் அணுக்ரகம் செய்ய வேணும். _/\_

  10. வாசகர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களின் சகோதரி ஹேமா அவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கவேண்டும், திரு.கோதை மணாளன் அவர்களின் சகோதரர் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு சௌக்கியமாக வாழவேண்டும், திரு.இரத்தின குமார் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து அவர் சந்தோஷமாக எவ்வித மன உளைச்சலும் இன்றி வாழவும் அவரது பிள்ளைகள் கல்வியில் கேள்விகளில் சிறந்து விளங்கி அவர்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலம் அமையவும், பார்வையற்றோருக்கான வாழ்வாதாரங்கள் மேம்பட்டு அவர்கள் விரும்பியபடி கல்வி பயில உன்னதமான ஒரு சூழ்நிலை நம் நாட்டில் மலரவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம். –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *