இவனுக்கு எதற்கு பிரசாதமும் பூமாலையும்?
சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞர். ஸ்வாமிகளைத் தரிசிக்கக் காஞ்சி மடத்துக்கு வந்தார். அதற்கு முன் அவர் மடத்துக்கு வந்தது இல்லை. ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க அவருக்கு ஆசை இருந்தது. வந்தார். ஆரஞ்சுப் பழங்களும் பூச்சரமும் வாங்கி வந்திருந்தார். பலர் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் காத்திருந்தனர். இவர் மடத்துக்குப் புதிது. ஸ்வாமிகளின் தரிசனம் எப்போது கிடைக்குமோ என்று தயக்கமும் இருந்தது அவருக்கு. கொஞ்ச நேரம் காத்திருந்தார்.
தரிசனம் கிடைத்தது. ஸ்வாமிகள் பக்கம் விழுந்து வணங்கினார். ஆரஞ்சுப் பழங்களையும் பூச்சரத்தையும் கொடுத்தார். எது வாங்கிக் கொண்டுபோக வேண்டும் என்ற தெளிவான முடிவுகூட அவருக்கு இல்லை. ஆரஞ்சுப் பழங்களும் பூச்சரமும் தான் அவர் மனதில் பட்டது. வாங்கிக் கொண்டு போனார்.
ஸ்வாமிகள் அவரைக் கருணை பொழியப் பார்த்தார். இதழ்களில் புன்னகை. கண்களில் அருள்பார்வை. ‘வெரி குட். உன் பணி தொடரட்டும்” என்று இளைஞருக்கு ஒரு மாலை அணிவித்து ஆப்பிள் பழத்தைப் பிரசாதமாகக் கொடுத்து ஆசி கூறினார்.
மற்றவர்களுக்குத் திகைப்பு. “இவன் பெரிய மனிதனும் அல்ல. எந்தச் செல்வாக்கும் இல்லாத சாதாரண இளைஞன். இவனுக்கு ஸ்வாமிகள் பிரசாதம் அளித்து மாலை போட்டு ஆசியளிக்கிறாரே” என்று குழப்பமும் பிரமிப்பும் இருந்தன.
ஆசாரிய ஸ்வாமிகளுக்கும் அவருக்கும் மட்டும் தெரிந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியாது. இளைஞரும் யாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார். ஸ்வாமிகளும் ஆசியளித்தார். இளைஞரின் செயல்கள் அவரது ஞானக்கண்களுக்குத் தெரிந்து இருந்தது.
அந்த இளைஞர் முதுகலைப் பட்டதாரி. பெரிய கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தார். மகிழ்ச்சியான சம்பளம். அவர் வேலையில் சேர்ந்தபின் சம்பளம் வாங்கிச் சேமித்துத் தனது அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தம்பியை நன்றாகப் படிக்க வைத்தார். பெற்றோர் அளவான சம்பளத்தில் மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவே கஷ்டப்பட்டார்கள். அந்த இளைஞர் பெற்றோரின் சுமையைத் தாங்கினார். நல்ல சம்பளம். ஓவர் டைம் சம்பளமும் கிடைக்கும். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அவர் வருமானத்தில் ஐந்து சதவிகிதப் பணத்தை மனிதநேயத்துடன் தர்மம் செய்தார்.
அப்போது அவருக்கு வருடத்துக்கு அறுபது ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது வரி, பிடித்தம் எல்லாம் போக! இதில் குடும்பத்துக்குக் கொடுத்தது போக வருடத்துக்கு மூன்று ஆயிரத்தை தர்ம காரியத்துக்குக் கொடுத்தார். ஒரு வருடம் ஏழைப் பெண்மணியின் பிரசவத்துக்குக் கொடுத்தார். இன்னொரு வருடம் ஒரு முதியவருக்கு மருத்துவச் செலவுக்குக் கொடுத்தார். மற்றொரு வருடம் ஏழை மாணவனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டினார். இதை அவர் விளம்பரப்படுத்தவில்லை.
அவர் வேலையில் சேர்ந்த ஐந்து வருடத்தில் குடும்பச் சுமையைத் துப்புரவாகக் களைந்து விட்டார். அவர் தம்பியும் அவர் மாதிரிதான்.
ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசித்து விட்டு வந்த அந்த இளைஞருக்குத் திருமணம் கைகூடியது. பெண்ணும் நல்ல டைப். இளைஞர் வரதட்சணையே கேட்காதது இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது பெண் வீட்டில். பெண்ணும் படித்து வேலைக்குப் போகிறாள். அவளை இவர் கட்டுப் படுத்தாமல் சுதந்திரமாக இருக்கச் சொன்னார். இவரது பண்பு கண்டு அவள் இவர் சொன்ன சொல்லைத் தட்டவில்லை. திருமணம் முடிந்தவுடன் ஆசாரிய ஸ்வாமிகளிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றார் மனைவியையும் அழைத்துக்கொண்டு.
ஆசாரிய ஸ்வாமிகள் இந்தத் தம்பதிக்கு ஆசியளித்து பிரசாதம் கொடுத்தார். அந்த இளைஞரின் மனைவியும் கணவர் கொள்கையைக் கடைப்பிடித்தாள்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! (நன்றி : www.periva.proboards.com)
=================================================================
‘கனிவுடன் கடமையை செய்… குருவருளும் சரி திருவருளும் சரி… தேடி வரும்’ என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம். படிக்கும்போதே நெஞ்சம் நிறைகிறது.
இது ஒரு அரிதினும் அரிய அனுபவம். சம்பவம். தனது குடும்பத்தின் மீது அக்கறையுள்ள பொறுப்பான மகன். தனது கடமைகளை சரிவரச் செய்து, குடும்பத்தின் சுமையை குறுகிய காலத்தில் குறைத்ததோடல்லாமல், அதற்காக கடுமையாக உழைத்தான். அதுமட்டுமா? மஹா பெரியவரின் உபதேசப்படி, பரோபகார சிந்தனை கொண்டு தனது வருவாயில், குறிப்பிட்ட சதீவீதத்தை கொண்டு துன்பப்படுவோரின் துயரை தீர்த்தான். இவை எல்லாவற்றுக்கும் மேல், அவனிடம் தற்பெருமை இல்லை. அடக்கம் இருந்தது. விளைவு கடவுள் அவனுக்கு தக்கதொரு துணையை தந்தருளினார். GOD HELPS THOSE WHO HELP OTHERS. இக்காலத்தில் இது போன்ற நபர்களை பார்ப்பது அரிது. இவரைப் போன்றவ பிள்ளைகள் இல்லந்தோறும் தோன்றட்டும். எழுத்திலும் சரி நிஜத்திலும் மஹா பெரியவரின் உபதேசத்தை பின்பற்றுபவர் அந்த இளைஞர். நமக்கெல்லாம் ரோல் மாடல் அந்த இளைஞர் என்றால் மிகையாகாது.
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
=================================================================
[END]
Dear sundarji,
Excellent article.
Thanks & Regards
Harish.V
டியர் சுந்தர்ஜி
மேற்கூறிய கதை மிகவும் அருமை. இந்த கதை உங்களுக்கு மிகவும் பொருந்தும். நீங்களும் நேரம் காலம் இல்லாமல் தூக்கத்தை துறந்து பாடுபடுகிறீர்கள். நீங்களும் ரைட் mantra என்னும் குடும்பத்திற்கு பொறுப்பான மகன். பதிவை போட்டுவிடுவது மடடுமல்லாமல் பதிவின் படி follow பண்ணுகிறீர்கள் For example விஸ்வரூப தர்சன்,. உங்களுக்கு வெகு விரைவில் குருவருளும் திருவருளும் கிட்டும். உங்களின் life partner வெகு விரைவில் கிடைக்க நான் மகா peiyavarai மனதார வேண்டுகிறேன்.
மஹா பெரியவரின் உபதேசப்படி, பரோபகார சிந்தனை கொண்டு தனது வருவாயில், குறிப்பிட்ட சதீவீதத்தை கொண்டு துன்பப்படுவோரின் துயரை தீர்த்த இந்த கதையின் நாயகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி
உமா
சுந்தர்ஜி
இன்றைய உலகத்து இளம் தலைமுறைக்கு ஏற்ற பதிவு இது. இன்றைய நாட்களில் திருமணம் முடியும் கையோடு எப்போது தனிக்குடித்தனம் போகலாம் என நினைக்கும் இளைய தலைமுறையினர் தான் அதிகம். அப்படியே சூழ்னிலை காரணமாக போனாலும் பெற்றோருக்கு சகோதரிகளுக்கு உதவுவது என்பது எல்லோருக்கும் வந்துவிடாது. மிக உன்னதமான விஷயம்.
நாமும் பெற்றோர்க்கு எவ்வளவு தொந்தரவு இன்று வரை கொடுத்துக்கொண்டு வருகிறோம் என்பதை நினைத்து வருந்துகிறேன். அவர்களை காப்பாற்றும் வயதில் அவர்களால் காப்பாற்றபட்டு வருகிறோம். அந்த இளைனரைப்பொல் நாமும் அவர்களை காப்பாற்றும் அளவு வளர மஹா பெரியவா தான் அருள வேண்டும்.
நன்றி
Very impressed … Sundhar sir ……
Thanks ….!
-Uday
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
நானும் உமா அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்….தனி ஒரு மனிதராக இருந்து கொண்டு…பணியிலும் இருந்து கொண்டு…நல்ல உள்ளத்துடன் எல்லோருக்கும் நல்லது ஒன்றையே நினைக்கும் உங்களுக்கும் உங்களைப் போலவே பரோபகார எண்ணத்துடன் ஒரு சிறந்த வாழ்க்கை துணை அமைய என்னுடைய பிரார்த்தனைகள்…..ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இந்திய நேரப் படி மாலை 5.30 முதல் 5.45 வரை ஒவ்வொருவருடைய துயரமும் இன்னல்களும் நீங்க வேண்டும் என்று மனமாரப் பிரார்த்திக்கிறேன்…இதை கடை பிடிப்பதன் மூலம் மனம் மிகவும் இலகுவாகிறது….ஆத்ம திருப்த்திக்கு வழி காட்டிய உங்களுக்கு ஆண்டவனின் ஆசியும் பெரியவாவின் கருணையும் காத்து நிற்கட்டும்…வாழ்க வளமுடன்… _/\_
The gracious speech of Maha Periayava never proves wrong .