Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, March 2, 2024
Please specify the group
Home > Featured > ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!

print
ன்று ‘பீஷ்ம ஏகாதசி’. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தோன்றிய நாள். பாரதப் போரில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது கிருஷ்ணர் பீஷ்மரிடம் பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும் உபதேசிக்கிறார். இதில் சிவபெருமானும் இடையே தோன்றி ஆமோதிப்பது தான் இதன் சிறப்பு. வேறு எந்த ஸ்லோகத்துக்கும் இந்த பெருமை கிடையாது.

r4‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ பற்றி சற்று விரிவாக பார்ப்போமா?

வேத வியாசர் தாம் இயற்றிய நூல்களில் பல அற்புதமான ஸ்லோகங்களை வைத்திருக்கிறார். ஆழ்கடலில் முத்து எப்படி இருக்கிறதோ அதே போன்று அவற்றை படிக்க படிக்க அந்த அரும்பெரும் பொக்கிஷங்களை நாம் உணரலாம்.

உலக தர்மத்தை அறிந்தவர்கள் என்று பாகவதம் 12 பேரை பட்டியலிடுகிறது. அவர்களுள் பீஷ்மரும் ஒருவர். இதிலிருந்தே பீஷ்மரின் பெருமை விளங்கும். பாரதப் போரின்போது தர்மத்தை பற்றியும் அதன் தன்மைகளை பற்றியும் கிருஷ்ணரிடம் யுதிஷ்டிரர் கேட்டபோது, “இதை கூறுவதற்கு தகுதியான நபர் பீஷ்மர் தான்” என்று கூறி பீஷ்மரிடம் அழைத்துச் சென்றார்.

யுதிஷ்டிரரின் ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் பீஷ்மர் அரச தர்மம், நெருக்கடி நிலை தர்மம், ஆண், பெண் தர்மம், தான தர்மம், வீடுபெறும் தர்மம் ஆக இன்னும் பல தர்மங்களை உபதேசித்தார். நம் முன்னோர்கள் நல்வழி என்று தாம் ஆராய்ந்து உணர்ந்த வழியில் தாமும் சென்று நலம் பெற்றபின் நம்மையும் அதைப் பின்பற்றுமாறு அன்புடன் கட்டளையிட்டுள்ளதை ‘அனுசாஸனம்’ என்பர். இப்படி அனுசாஸனங்கள் நிறைந்த அனுசாஸனபர்வத்தின் முடிவில், ஒரு சிறந்த அனுசாஸனமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் இடம் பெறுகிறது.

bhishma

முடிவாக யுதிஷ்டிரர் பீஷமரிடம் கேட்கும் கேள்விகள் ஆறு:

இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது?

அதை அடைவதற்குரிய மேலான நிலை எது?

எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்?

எந்த தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்?

எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது?

எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்?

இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார். மந்திர சக்தி மிக்க கடவுளின் நாமங்களை வரிசைப்படுத்தித் தொகுத்து யுதிஷ்டிரர் மூலம் உலகுக்களித்தார் பீஷ்மர்.

இறைவழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்  உண்டு. அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது.; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.

============================================================

Don’t miss these articles…

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

============================================================

ஆண்டவனுடைய ‘அனந்த கல்யாண குணங்களை’, அதாவது அவனுடைய எல்லையற்ற நற்பண்புகளை, பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட தோத்திரம்.

ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நற்குணத்தைக் காட்டும். மத்வாச்சாரியார் ஒரே ஒரு பெயரின் பொருளை மட்டும் ஒரு மாதம் விளக்கி கூறுவாராம். அப்போது சஹஸ்ரநாமத்தின் பெருமைகளை கூற எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.

இறைவனின் நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதை விடவோ, பிராயச்சித்த கருமங்கள் செய்வதை விடவோ உயர்ந்தது. ஏனென்றால், அவையெல்லாம் பாவங்களை போக்குகின்றன. அவ்வளவு தான. ஆனால் நாமங்களை உச்சரிப்பதால், பாவம் புரியத் தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும் அதாவது பாவங்களின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படுகிறது என்பது தான் நாம உச்சரிப்பின் பெருமை.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பலன்

 • எவன் இதனை தினமும் கேட்கிறானோ, எவன் இதனைக்கொண்டு ஆண்டவனை துதிக்கிறானோ அவன் இம்மையிலும் மறுமையிலும் சிறிதும் கெடுதலை அடையமாட்டான்.
 • தருமத்தை விரும்புபவர் தருமத்தையும், பொருளை விரும்புபவர் பொருளையும், காமத்தை விரும்புபவர் காமத்தையும், வம்சம் செழிக்க விரும்புபவர் வம்சச்செழிப்பையும் பெறுவர்.
 • உள்ளத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் புருஷோத்தமனை ஆயிரம் நாமங்களால் துதிப்பவன் நோயால் துன்புறுபவனானால் நோயிலிருந்து விடுபடுகிறான். சிறையில் அடைக்கப்பட்டவன் விடுபடுகிறான். ஆபத்தில் சிக்கியவன் மீள்கிறான். கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்து விடுகிறான்.
 • சிரத்தையும் பக்தியும் கொண்டவனாக இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவன் ஆன்மசுகம், பொறுமை, செல்வம்,மன உறுதி, நினைவாற்றல், புகழ் இவற்றைப் பெறுவான்.

Vishnu Sahasra Namam – Video by S P Balasubramaniam

=======================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally. 

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

============================================================

Also check :

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

==========================================================

திருமால் திருவிளையாடல் தொடர்

ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

=============================================================

[END]

4 thoughts on “ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!

 1. பீஷ்ம ஏகாதசியன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் உருவான நிகழ்வையும் அதன் பாராயண பலன்களையும் தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி

 2. விஷ்ணு சகஸ்ரநாமத்தின் அருமைகளை நம் தளம் வாயிலாக தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அருமையாக உள்ளது இந்த பதிவு. நாமும் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பிறவி பெருங்கடலை நீந்துவோம் மகான் ஷிர்டி சாய் பாபாவே விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பலன்களை சாய் சத் சரிதத்தில் சொல்லி உள்ளார்.
  ராம் ராம் ராம்
  வாழ்க வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *