2012 செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த தளம் துவக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை 788 பதிவுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. உயரமான மலையை கஷ்டப்பட்டு ஏறியவன் தான் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் என்ன பிரமிப்பு ஏற்படுமோ அதே பிரமிப்பு தற்போது நமது பாதையை சற்று திரும்பிப் பார்த்தால் நமக்கு ஏற்படுகிறது. இத்தனை நாள் வேலையையும் பார்த்துக்கொண்டு அதே நேரம் இந்த தளத்தையும் எப்படி நடத்தினோம் என்று இதுவரை புரியவில்லை. எங்கிருந்து அந்த சக்தி கிடைத்தது என்று தெரியவில்லை. இறைவனின் அருளின்றி நிச்சயம் இது சாத்தியமேயில்லை.
ஆனால், நாம் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிட்டோமா?
இல்லை. நாம் எட்ட வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கிறது. சாதிக்கவேண்டியது அதைவிட நிறைய இருக்கிறது. இவை அனைத்திற்கும் மேல் இன்னும் இருக்கிறது நாம் மாற்ற வேண்டிய மனங்களும், ஆற்ற வேண்டிய கடமைகளும்.
இதுவரை நாம் நம்முடைய கால்களில் உத்தியோகம் என்ற குண்டுகளை கட்டிக்கொண்டு மலையை ஏறிக்கொண்டிருந்தோம். இனி அது சாத்தியமில்லை என்கிற கட்டத்தை அடைந்துவிட்டோம். இந்த தளம் நமக்கு ஒரு PASSION என்கிற கட்டத்தை எல்லாம் தாண்டி ஒரு சுவாசமாக மாறி நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால்… இது மட்டும் போதுமா? இது இந்த சமுதாயத்தின் சுவாசமாகவே மாறவேண்டும் என்பதே நம் லட்சியம்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)
நாம் நமது வீட்டிலிருந்து கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் மிச்ச சொச்ச நேரத்திலும் இந்த தளத்தை நடத்தி வருகிறோம் என்றாலும் இனியும் பணிக்கு போய்கொண்டு வந்துகொண்டு நம்மால் இந்த தளம் நடத்த இயலாது. ரைட்மந்த்ராவுக்கு என்று தனியாக ஒரு அலுவலகம் துவக்கும் கட்டத்தை எட்டிவிட்டோம் என்றே கருதுகிறோம். நமது அடுத்த கட்ட வளர்ச்சி என்பது இதுவாகத் தான் இருக்கமுடியும்.
நண்பர்களிடமும் நம் நலம் விரும்பிகளிடமும் பேசியதில் இனி இந்த தளத்திற்கு என ஒரு அலுவலகம் இருந்தால் தான் இனி சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
பணி முடிந்து வீட்டிற்கு வந்து இரவெல்லாம் கண்விழித்து, காலையில் சீக்கிரம் எழுந்து பதிவுகளை தட்டச்சு செய்யவோ சிந்திக்கவோ இப்போதெல்லாம் இயலவில்லை. ஏனெனில், அலுவலகத்திற்கு சென்றுவிட்டால் அந்த சிந்தனையிலேயே இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நாம் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சியில் அது சாத்தியமில்லை என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.
மேலும் உங்களுக்கு எப்படி ரைட்மந்த்ராவை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாதோ அதே போல, நமக்கும் இந்த தளத்திற்கு எழுதாமல் ஒரு நாளும் இருக்கமுடியாது. நாம் அளிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் எதிர்பார்ப்புக்கள் கூடிவிட்டது. எனவே ரைட்மந்த்ராவுக்கு என்று தனியாக ஒரு அலுவலகம் அமைத்து அதில் இது தொடர்பான பணிகளை செய்வதே இனி சரியாக இருக்கும் என்று கருதுகிறோம்.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தக கண்காட்சியில் நாம் எழுதிய நூல்களும் ரைட்மந்த்ரா சார்பாக வெளியிடப்படும் நூல்களும் நிச்சயம் விற்பனைக்கு இருக்கவேண்டும் என்கிற இலக்கை நோக்கி நாம் உழைக்கத் துவங்கியாகிவிட்டது. நமது தளத்தின் பதிவுகள் பல திருடுபோய்கொண்டிருக்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்தி நமது படைப்புக்களை நூல்களாக வெளியிடவேண்டும் என்று விரும்புகிறோம்.
அப்போ உங்க வேலை என்ன ஆகும் என்று கேட்டால்… நாம் பணிபுரியும் இடத்தில் நமது பணியை CONTRACT BASIS ல் தரச் சொல்லி கேட்டிருக்கிறோம். நமது சேவையை எந்த நிலையிலும் அவர்கள் இழக்க விரும்பவில்லை. எனவே எங்கிருந்தாலும் நமது சேவையை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதர விஷயங்கள் குறித்து பேச்சு நடத்திவருகிறோம். தவிர நமக்கு தெரிந்த நண்பர்களிடம் FREELANCE JOB கேட்டிருக்கிறோம். மேலும் நம் நண்பர்கள் சிலரிடம் இது தொடர்பாக விவாதித்ததில் நமது SURVIVAL க்கு அவர்கள் ஆக்கப்பூர்வமான சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறார்கள். அவையும் பின்பற்றப்படும்.
இப்படியெல்லாம் முடிவெடுக்க காரணம் இந்த தளத்திற்கு என்று முழுமையாக நேரம் ஒதுக்கி எழுதவேண்டும் என்பதற்காகத் தான்.
இதற்காக தனியாக அலுவலகம் வைக்கவேண்டுமா? வீட்டில் இருந்து இதை செய்ய முடியாதா ? என்று கேட்கலாம். முடியும். ஆனால் ஒரு SELF-DISICIPLINE & PROFESSIONALISM வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வீட்டில் அது சாத்தியமேயில்லை. மேலும் நமக்கு வீட்டில் DISTURBANCE & DIVERSIONS அதிகம். மேலும் தளம் தொடர்பாக யாரையாவது சந்திக்கவேண்டும் என்றாலோ எங்காவது ரைட்மந்த்ரா பதிவுகள் தொடர்பான கவரேஜ்காக செல்லவேண்டும் என்றாலோ சென்று வர சிரமமாக இருக்கிறது. அதற்காகவே நகருக்குள் தனி அலுவலகம் வேண்டியிருக்கிறது.
சில தருணங்களில் சில சாதனையாளர்களை, பெரிய மனிதர்களை சந்திக்க நமக்கு ஒரு MEETING POINT தேவைப்படுகிறது. சிலரிடம் பேசும்போது, “உங்க ஆஃபிஸ் அட்ரெஸ் கொடுங்க. ஆபீஸ்க்கே நான் வர்றேன். அங்கே சந்திப்போமே…” என்று கேசுவலாக கூறுகிறார்கள். அவர்கள் வீட்டிலோ அல்லது நம் வீட்டிலோ அல்லது நாம் பணிபுரியும் இடத்திலோ சந்திப்பு சாத்தியமில்லை எனும்போது எங்கே சந்திப்பது? இதனால் நாம் இழந்த சந்திப்புக்கள் பல உண்டு. ஆனால் ரைட்மந்த்ராவுக்கு என்று அலுவலகம் இருக்கும்போது நிச்சயம் அது சுலபமாகிவிடும்.
மேலும் நீங்கள் தற்போது இந்த தளத்தில் பார்த்து வியக்கும் அனைத்தும், அலுவலக நேரம் போக, கிடைக்கும் நேரங்களில் எப்படி எப்படியோ நாம் எழுதுவது. அப்படியிருக்க இதற்கென்று நேரம் ஒதுக்கி எழுதும்போது நமது பணி இன்னும் சிறப்பாக இருக்கும், இன்னும் நிறைய எழுத முடியும் என்பது நம் கருத்து. நான் அடுத்தவர்கள் கனவுக்காக உழைத்துக்கொண்டிருந்தேன். இனி எம் கனவுக்காக உழைக்க விரும்புகிறேன். எம் அறிவும் ஆற்றலும் ஒரு மாதாந்திர சம்பளத்தில் முடங்கிக்கிடக்கிறது. இனி அது எம் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் இந்த தளத்திற்கும் முழுமையாக பயன்படும் என்பதில் ஐயமில்லை.
மேலும் நமது குறிக்கோள்களை அடைய இதுவே சரியான மூவாக இருக்கும் என்று கருதுகிறோம்.
நமது குறிக்கோள்களுள் சில…
* 1000 சாதனையாளர்களை அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் சந்திப்பது. (ஒரு ஆண்டு ஏற்கனவே முடிந்துவிட்டது.) அவர்கள் சாதித்த கதையை பகிர்ந்துகொண்டு அவர்களின் சாதனைத் தீயை மற்றவர்களுக்கும் ஏற்றிவைப்பது.
* தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட பக்தி திருமுறைகளை ஓதி வருபவர்களை கற்றுத் தருபவர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது.
* திருக்குறள் நெறி பரப்பும் தொண்டில் ஈடுபட்டு வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களை மேலும் பிரபலப்படுத்துவது.
* பழமையான, புராண தொடர்புடைய திருக்கோவில்களுக்கு சென்று அவற்றின் புதைந்து கிடக்கும் சிறப்புக்களை தனித்தன்மைகளை உங்களிடம் எடுத்துச் சொல்வது.
* சமூகத்திற்கு தன்னலமற்ற சேவை செய்து வரும் நல்லோர்களை, உத்தமர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது. மேலும் ஊக்குவிப்பது.
* சுதந்திர போராட்ட தியாகிகளை சந்தித்து அவர்தம் தியாகங்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது.
* பாரம்பரியமும் பழமையும் மிக்க திருக்கோவில் உற்சவங்கள் மற்றும் சமய விழாக்கள், சொற்பொழிவுகள், ஆகியவற்றுக்கு சென்று அவற்றை கவர் செய்து தளத்தில் அளிப்பது.
* தொன்மையும் சிறப்பும் வாய்ந்த திருக்கோவில்களில் உழவாரப்பணி செய்து அந்த கோவில்களின் புகழை நம்மால் இயன்ற அளவு பரப்புவது. அங்கு தேவைப்படும் கைங்கரியங்களை செய்வது, செய்ய உதவியாக இருப்பது.
….. இப்படி இன்னும் பலப் பல!!
இவற்றில் பலவற்றை நாம் ஏற்கனவே செய்து வருவது நீங்கள் அறிந்ததே.
தளத்திற்கு என வருவாய் பெறும் வழியை ஆராய்ந்து (REVENUE GENERATION) நமது கொள்கைக்கு பங்கம் வராமல் அதே சமயம் யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வண்ணம் அவற்றை நடைமுறைப்படுத்த நமக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும்.
வாசகர்களின் உதவியும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் நாம் விளம்பர வருவாய்கள் பற்றி சிந்திக்காமல் தளத்தின் பதிவுகளில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். இதுவரை அப்படித் தான் இருந்து வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதிர்காலத்திலும் அதுவே தொடரவேண்டும் என்று விரும்புகிறோம்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த சிந்தனையே நம்மை ஆக்ரமித்திருந்தபடியால் அலுவலகம் அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி நடந்துகொண்டிருந்தன.
மேற்கு மாம்பலத்தில் ஒரு வணிக வளாகத்தில் இரண்டாம் மாடியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை நண்பர் ஒருவர் உதவியுடன் பேசி இறுதி செய்திருக்கிறோம். இப்படி ஒரு தளம் நடத்த அலுவலகம் அமைக்கிறோம் என்றவுடன் அதன் உரிமையாளர் பெருந்தன்மையுடன் வாடகையிலும் அட்வான்ஸ் தொகையிலும் பெரும் சலுகை தந்திருக்கிறார். இது போன்ற இடம் கிடைப்பது அரிது என்பதால் இப்போதைக்கு ஒரு சிறிய தொகை அட்வான்ஸாக கொடுத்து நமது அலுவலக அறையை உறுதி செய்துவிட்டோம். மீதி தொகைக்கு சற்று அவகாசம் கேட்டிருக்கிறோம்.
அலுவலகம் என்றவுடன் ஏதோ பெரிய வணிக ரீதியிலான செட்டப் என்று நினைக்கவேண்டாம். 12 அடிக்கு 8 அடி நீள அகலம் கொண்ட ஒரு சிறு அறை. எந்த வித தொந்தரவும் இல்லாமல் பதிவுகளை எழுத தனிமையான இடம். அவ்வளவே. நகருக்கு மத்தியில் என்பதால் யாரையேனும் சந்திக்கவேண்டும் என்றாலோ எங்கேனும் செல்லவேண்டும் என்றாலோ சௌகரியமாக இருக்கும்.
அலுவலக நேரம் : 9.30 AM – 7.00 PM. சனி, ஞாயிறு பெரும்பாலும் தளம் தொடர்பான வெளியூர் பயணங்கள்.
தரமான ஆன்மீக & சுயமுன்னேற்ற நூல்களை எழுதும் ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்கிற நம் லட்சியத்திற்கு நிச்சயம் இது உபயோகமாக இருக்கும். நாளையே (இறைவன் அருளால்) திருமணம் என்று ஆகிவிட்டால் நம்மால் இந்த தளத்தை எப்படி இதே வேகத்துடன் நடத்தமுடியும் என்கிற கேள்விக்கும் இதன் மூலம் விடை கிடைத்திருக்கும் என நம்புகிறோம். ரைட்மந்த்ராவுக்கு QUALITY TIME ஒதுக்கியது போக மீதி நேரத்தை நமது பர்சனல் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் ஒதுக்க இனி இயலும்.
மேலும் இப்படி ஒரு ஏற்பாட்டின் உள்ளே நமது தனிப்பட்ட முன்னேற்றமும் ஊடிழையாய் இருப்பதால் நமது தளமோ அதன் பணிகளோ எந்த விதத்திலும் எதிர்காலத்தில் தொய்வடையாது. தளம் வளர வளர நாமும் வளர்வோம். நமது லட்சியமும் ஈடேறும். நாம் ஆற்றும் சேவைகளும் இறையருளால் பெருகும் என்று நம்புகிறோம்.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். எமது முன்னேற்றம் என்பது தனிப்பட்ட ஒரு மனிதனின் முன்னேற்றமாக மட்டும் இருக்காது. நம்முடன் சேர்ந்து பலரை கைதூக்கிவிட உறுதி பூண்டிருக்கிறோம். நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, வாழ்க்கையில் போராடுபவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும், தெய்வபக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கும் அற்றவர்களுக்கும் உற்ற துணையாக இந்த தளம் விளங்கும். எம் எழுத்துக்கள் முழுக்க முழுக்க அறநெறியையும், தெய்வபக்தியையும் பரவச் செய்யவும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற தாகம் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுவதற்கும் மட்டுமே பயன்படவேண்டும் என்று விரும்பியே எத்தனையோ ஆப்ஷன்கள் நம் கண் முன்னே இருந்தபோதும் இப்படி ஒரு தளத்தை துவக்கினோம்.
ஆன்மிகம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, ஆலய தரிசனம், உழவாரப்பணி, மருத்துவம், ஆரோக்கியம், பக்தி இலக்கியங்கள், தமிழ் நன்னெறி நூல்கள், இதிகாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள், சாதனையாளர்களுடன் சந்திப்பு, பல்துறை நிபுணர்களின் பங்களிப்பு என வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்கள் மட்டுமே எந்தக் காலத்திலும் இந்த தளத்தில் இடம்பெறும்.
ரைட்மந்த்ரா அலுவலகத்தை அமைப்பதற்கு ரைட்மந்த்ரா வாசகர்கள் மனமுவந்து உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு அலுவலகம் அமைப்பதில் சில அடிப்படை உள் கட்டமைப்புக்கள் தேவை என்பது நீங்கள் அறிந்ததே. எனவே நமது தேவையை குறிப்பிடுகிறோம். முடிந்தவர்கள் தோள் கொடுங்கள்.
* ஒரு கணினி (யூ.பி.எஸ், ஸ்கேனர் & பிரிண்டருடன்)
* ஒரு லேப்-டாப்
* ஒரு பிராட்-பேண்ட் இணைப்பு
* கம்ப்யூட்டர் டேபிள் மற்றும் சேர் உட்பட சில அடிப்படை பொருட்கள்.
இது தவிர நமது விசேஷ தேவைகள் சில உண்டு…
* பெரிய காமிரா (Canon PowerShot SX50 HS – Price Rs.26,000/-)
* சிறிய காமிரா (Sony DSC-WX200/B Price Rs.12,500/-)
* வாய்ஸ் ரெக்கார்டர் (Sony ICD-UX533F/B Price Rs. 6,500/-)
* அலுவலக அறைக்கான அட்வான்ஸ் தொகை ரூ.35,000/-
இவை தான் நமது முதலீடு. ஆனால் இந்த சமூகத்துக்கு நாம் திருப்பி செய்யக்கூடியது நிச்சயம் விலை மதிப்பற்றதாக இருக்கும்.
மனமும் பணமும் படைத்த ஒரு சில வாசகர்கள் மனது வைத்தால் போதும் மேற்கூறியவைகளை சுலபமாக நிறைவேற்றி தந்துவிட இயலும். அவர்கள் அப்படி செய்வது எத்தனையோ பேருக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டும் என்று உறுதி கூறுகிறோம்.
முழுவதும் தயாராகிவிட்டு தான் இறங்கவேண்டும் என்றால் நாம் எந்தக் காலத்திலும் எந்தக் செயலிலும் இறங்கமுடியாது. எனவே வரும் பிப்ரவரி 1 ஞாயிற்றுக் கிழமை கணபதி ஹோமம் செய்துவிட்டு, பால் காய்ச்சி நமது அலுவலகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுவிடலாம் என்று இருக்கிறோம். உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திகொள்ள சிறிது அவகாசம் தேவைப்படும். முழுமூச்சாக அலுவலகம் செயல்பட ஒரு சில வாரங்களாகலாம்.
நமது ஒவ்வொரு அடியிலும் சுவாமி விவேகானந்தர் உடனிருந்து வழிகாட்டுகிறார் என்று உறுதியாக நம்புகிறோம்.
நாம் வாசகர்களிடம் எதிர்பார்ப்பது ஆரம்ப கட்ட உதவிகள் தான். எழுந்து நிற்பதற்கு உதவிடுங்கள். இலக்கை நோக்கி ஓடுவதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
இது தொடர்பாக ஒரு சில வாசகர்களிடமும் நம் நண்பர்களிடம் நமது எண்ணத்தை பகிர்ந்துகொண்டபோது, ஒரு அன்பர் கணினி டேபிள் & சேர், வாங்கித் தருவதாக கூறிவிட்டார். மற்றொருவர், பிராட்பேண்ட் இணைப்புக்கு உதவுவதாக கூறியிருக்கிறார். இப்படி உதவிகள் மனமுவந்து வரத் துவங்கியிருக்கின்றன.
அதே சமயம் நம் லட்சியம் குறித்தோ நமது பயணம் குறித்தோ நம்மிடம் எதிர்மறையாக பேசுவதை தவிர்க்குமாறு நண்பர்களை நாம் கேட்டுக்கொள்கிறோம். காரணம் நமது இந்தப் பயணம் தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, காசு பணம் சம்பாதித்து ஈசி சேரில் செட்டிலாகும் சராசரி வாழ்க்கைப் பயணம் அல்ல. ஒரு மிகப் பெரிய லட்சியத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஒன்று பொருளாலோ, அல்லது செயலாலோ அல்லது சொல்லாலோ உதவிடுங்கள். நம் மீது முழு நம்பிக்கை வைத்து உங்கள் ஒத்துழைப்பையும் உற்சாகத்தையும் தந்திடுங்கள். வட்டியும் முதலுமாக இந்த சமூகத்திற்கு நாம் திருப்பி தருவோம்.
ஒரு தெளிவான இலக்கை நோக்கி, உன்னதமான ஒரு லட்சியத்துடன் இந்த புனிதப் பயணத்தை துவக்கியிருக்கிறோம். இதில் ஜெயித்தே தீருவோம். ஜெயித்தே ஆகவேண்டும். ஏனென்றால் எனக்கு வேறு வழியில்லை. என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அடைவதற்கு அந்த வானமே எல்லை.
நான் நன்றாக இருக்கிறேன். நன்றாக இருப்பேன். என்னை சுற்றியிருப்பவர்களும் என்னை சார்ந்தவர்களும் நன்றாகவே இருப்பார்கள்.
குருவருளும் திருவருளும் என்றும் உடனிருந்து வழி காட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
நன்றி!!
– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர், www.rightmantra.com
============================================================
Also Check :
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு!
சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு!
அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்!
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!
அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!
இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்!!
எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!
திருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்!
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
============================================================
[END]
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ரைட் மந்த்ரா அலுவலகம் உதயமாவாதை நினைத்து.
குருவருளும் திருவருளாலும் தங்கள் எண்ணம் எல்லாம் நிறவெற இறைவன் அருள் புரிவான்..
நான் தங்களுக்கு வேண்டிய உதவியை கண்டிப்பாக செய்வேன். தங்கள் கனவுகள் மெய்பட வாழ்த்துக்கள். இன்னும் பல அறிய பதிவுகளை நம் தளம் மூலம் படிக்கலாம் என்பதை நினைக்கும் பொழுது சந்தோசமாக உள்ளது.
//என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அடைவதற்கு அந்த வானமே எல்லை. //- சூப்பர் …..
நன்றி
உமா வெங்கட்
I am very happy to hear this news from you. 🙂 🙂 🙂
All the best sundar for our new Right Mantra Office.
Always my support to u..
Nagaraj T
இதயபூர்வமான வாழ்த்துக்கள் சுந்தர். உங்களது இந்த புனிதப் பயணம் நிச்சயம் வெற்றியடையும். குருவருளும் திருவருளும் என்றும் உடனிருந்து வழி காட்டும்.
ஒரு புதிய பாதையை நோக்கி அடி எடுத்து வைப்போம். எனது ஒத்துழைப்பு நிச்சயம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.
நான் அடுத்தவர்கள் கனவுக்காக உழைத்துக்கொண்டிருந்தேன். இனி எம் கனவுக்காக உழைக்க விரும்புகிறேன்.
நல்ல முடிவு.வாழ்த்துக்கள் சார்.
வாழ்த்துக்கள்………….தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…………தங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துக்கள்……….
சுந்தர்ஜி
தங்களின் இந்த புனித பயணம் தொடங்க வாழ்த்துகள். மேலும் நம்
மகா பெரியவா அவர்களின் குருவருளும் திருவருளும் நீச்சயம் தங்களுக்கு உண்டு. மேலும் நாங்கள் அனைவரும் தங்கள் பின் வருவோம்.
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
Dear Mr.Sundar,
I happened to see your web site 2months back while searching for some good things on net and found it to the point with dedicated articles,good photos,variety of life teachings, good articles of Mahaperiavaya and to name others also.
I am quite impressed and WISH YOU THE BEST IN YOUR ENDEAVOURS.
We are all guided by HIM and He knows precisely what is in store for us.
MAHAPERIVAYA SARANAM
OM SAI RAM.
Pls invite all to your new office whether on line or off line.
Regards,
Sankar J
Hi Ji,
I’m happy that you have taken this decision at last.
**
So many times, I felt that you haven’t been rewarded for the efforts and hard work you had and are still putting into this site.
But from now, it won’t be so. You will set yourself free by lightening up your wings of ambition – this time – without any blockage.
And doing so, plus the amount of time you’re going to get – all will lead you to – as said by Kalam, one of your inspirations, “Wings of fire” would have evolved in few days or in a month in you and that will entirely redefine ‘You’ and your capability in others’ eyes.
Since you had been doing this much astonishing work in your post-office hours itself, then one can only imagine how you could be in this freedom life of yours.
**
Of course, like all wonder, I too worry about your finance for the day-to-day life. But I’m so sure that one can achieve anything by having that aim thought as his soul as badly as he wants air or water.
And you sure, are going to be so – and so, there’s no doubt that you will have achieved the desire of coming out of financial lock through your talents – designing skills and other talents and so many FREELANCE jobs are there as your well wishers have suggested you.
**
In any case, as you go along, like Swami Vivekananda said, “path will soon open for you”.
And by the end of this year, you will lead a peaceful, loving, most enjoying, inspiring life with your family – of parents and wife and will do annual function grandly – in terms of quality of the function and people involved in it.
Wish you all the best. Mahaperiyava bless you.
Be happy always. Good time has started for you.
**
**Chitti**.
மிகவும் சந்தோஷமான ஒரு தகவல்.
ரைட் மந்த்ரா அலுவலகம் தங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட எங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒன்று மஹா பெரியவா அவர்கள் திருவருளால் தற்போது நடக்க உள்ளது.
ஆனைமுகன் ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தளம் மேல்மேலும் பிரகாசித்து நீங்கள் கனவு கண்ட அனைத்தும் கைவரப்பெருவீர்கள்.
எங்களால் முடிந்த உதவிகள் எப்போதும் தங்களுக்கு உண்டு.
குருவருளும் திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
வாவ்……… சூப்பர். சூப்பர். சூப்பர். இதைத் தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
சரியான விவேகமான ஒரு முடிவு. இந்த நிலையை அடைய தாங்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்பதை உணரமுடிகிறது.
ஒவ்வொரு வார்த்தையையும் எந்தளவு கவனமாக கையாண்டிருக்கிறீர்கள் என்பதை படிக்கும்போது உணரமுடிகிறது. உங்கள் பக்குவம் அதிலேயே புரிகிறது.
நிச்சயம் உங்கள் முன்னேற்றம் என்பது மற்றவர்களைப் போல தனிப்பட்ட ஒருவரின் முன்னேற்றமாக மட்டும் இருக்காது, ஒரு சமூகத்தின் முன்னேற்றமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த புண்ணியத் தேரை இழுப்பதில் எனது பங்கும் நிச்சயம் இருக்கும்.
மேன்மேலும் தங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சுந்தர் ஜி
தங்களது ஆக்கபூர்வமான சேவை என்றென்றும் தொடர எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றல் குரு ஆற்றல் உங்களுக்கு துணையாக இருக்க பிரார்த்திக்கின்றோம்.
நிச்சயம் எங்களால் முடிந்ததை உங்களுக்கு செய்வோம். செய்ய கடமை பட்டுள்ளோம்.
நன்றி
ப.சங்கரநாராயணன்
மிக நல்ல முடிவு… உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் உறுதுணையாய் இருப்போம்…
ஒவ்வொரு பதிவும் ஒரு குழந்தையை பிரசிவிப்பது போல.. ஏகாந்தமான மனநிலையோடு உங்கள் பணிகள் தொடரட்டும்…
“நான் நன்றாக இருக்கிறேன். நன்றாக இருப்பேன். என்னை சுற்றியிருப்பவர்களும் என்னை சார்ந்தவர்களும் நன்றாகவே இருப்பார்கள்”
இந்த வரிகளை அடிக்கடி நினைத்தாலே வெற்றி நிச்சயம்…
வாழ்த்துக்கள் சுந்தர்..
வாழ்த்துக்கள் சுந்தர்.
ரைட்மந்த்ரா வாசக நண்பர்களே,
கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இந்த மனிதர் பல பயனுள்ள பதிவுகளைத் தருகிறார் என்றால், இவர் முழு நேரமும் இப்பணியில் ஈடுபடப் போகிறார் எனில் நம் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?
கரும்பு தின்ன கூலியா? அவர் பல நல்ல பதிவுகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருப்பார். நாமும் பதிவுகளை, சுவைத்துக் கொண்டுதான் இருப்போம். ஆனாலும் நாமும் ஏதாவது திருப்பிச் செய்வதுதான் நியாயம். இத் தருணத்தில் திரு. சுந்தர் அவர்கள், வாசகர்களிடமிருந்து மாத அல்லது வருட சந்தா (Subscription) போன்று ஒரு தொகையினைப் பெற்று நம் தளத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லமாறுக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தளத்தை நன்றாக நிர்வகிக்க முடியும். இவரின் கடின உழைப்பினால் வரும் பதிவுகள் பலர் திருடுகிறார்கள் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். Subscription, வசூலிப்பதன் மூலம், இதை ஒரளவுக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும் இத்தொகையானது தள நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமின்றி, பல நல்ல காரியங்களுக்கும் உபயோகப் படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது Subscription அல்ல, பல புண்ணிய காரியங்களுக்குத் நாம் தரும் நன்கொடை அல்லது தட்சிணையாகவும் இருக்கலாம்.
உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.
நன்றி,
கே.எஸ். வெங்கட்,
முகலிவாக்கம், சென்னை – 125
//வாசகர்களிடமிருந்து மாத அல்லது வருட சந்தா (Subscription) போன்று ஒரு தொகையினைப் பெற்று நம் தளத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லமாறுக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தளத்தை நன்றாக நிர்வகிக்க முடியும். // குட் ஐடியா
திரு வெங்கட் சொல்வது சரியான முடிவு. subscription கொடுபதால் நம் தள செலவுகளுக்கு உபயோகமாக இருக்கும். நான் முன்னரே subscription collect செய்யும்மாறு சுந்தரிடம் 6 மாதத்திற்கு முன்னால் சொன்னேன் வாசகர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்
நன்றி
உமா வெங்கட்
வெங்கட் அவர்களே,
தங்கள் அக்கறைக்கும் வழிக்காட்டுதலுக்கும் மிக்க நன்றி.
எதை செயல்படுத்தினாலும் ‘இதை கண்டிப்பாக செய்தே தீரவேண்டும்’ என்கிற கட்டாயம் எதுவும் நம் தளத்தைப் பொருத்தவரை எந்தக் காலத்திலும் இருக்காது.
துயரத்தில் தத்தளிப்பவர்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள் உடனடி ஆறுதல் தேடி ஓடிவரும்போது, அவர்களுக்கு நம் தளத்தை படிப்பதில் எந்த வித நிர்பந்தமும், தடங்கலும் இருக்கவே கூடாது என்று கருதுகிறேன்.
மற்றபடி இதர வழிகளை அனைவரிடமும் கலந்து பேசி காலப்போக்கில் முடிவு செய்துகொள்ளலாம்.
– சுந்தர்
நல்லதொரு யோசனை சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவில் இதை பற்றி எந்த தகவலும் இல்லையே என்று எண்ணிக்கொண்டே இருந்தேன்.
அந்த பணியை நீங்கள் எற்றுகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
நம் தளம் நம் மூச்சு போல பதிவு தந்து தன் கடமையை செய்யும் சுந்தர் அவர்களுக்கு நாம் நம் கடமையை செய்வோம்.
நன்றி வெங்கட் சார்.
ஒரு பேட்டியில் கேட்டது ………”ஒருத்தர் வேலையை விட முடிவெடுத்தால் தடுக்காதீர்கள் …….அவரால் 100 பேருக்கு வேலை குடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையினால் தான் அந்த முடிவை எடுக்க முடியும்…”
எண்ணிய துணிதல் …. எல்லாராலும் முடியாது
இறையருள் நிச்சியம் துணை இருக்கும்… வாழ்த்துக்கள்!!
மஹா பெரியவா அருள் நிச்சயம் தங்களுக்கு உண்டு . நல்ல சிந்தனை , நல்ல செயல் நல்லதே நடக்கும் .
Good Times Ahead 🙂
நம் தளத்தின் அடுத்த கட்ட முன்னேற்றம் இதுவாகும்
எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க வேண்டி.,என்னுடைய வாழ்துக்கலை தெரிவிக்கின்ரே ன்.
வாழ்த்துக்கள் சுந்தர். எப்போதும் போல நமது ஆதரவு உங்களுக்காக என்றும் தொடரும். சிறிய அளவில் ஆரம்பமாகும் நமது ரைட் மந்த்ரா அலுவலகம் தமிழகம் முழுவதும் பல கிளைகள் பரப்பி மிகப்பெரிய நிறுவனமாக நிச்சயம் மாறும்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். எல்லாம் பல்கி பெருகி, வளர வாழ்த்துக்கள். நல்ல முடிவு. எங்களால் ஆன உதவி எப்போதும் உண்டு.
மூன்று வருடங்களுக்கு முன்பு நாம் இந்த தளம் ஆரம்பிப்பதை பற்றி பேசும்போது, இது இவ்வளவு தூரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல் இப்போது ஏற்பட்டுள்ள இந்த நல்ல தொடக்கம், அதாவது நமக்கென்று ஒரு தனி அலுவலகம், நமது லட்சிய பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்.
காஞ்சி மஹா பெரியவரின் அருளால் நாம் என்னும் செய்ய வேண்டிய வேலைகள் அடைய வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளது.
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம், பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம். ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே. ஒவ்வொரு விடியலும் இறைவன் பெயர் சொல்லுதே.
தங்கள் பணி தொடர நமது தளம் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர்!
Nice to Hear… all the best for New office and journey i am confident that you will get great success in this divine journey
Regards
Vivekanandan
அண்ணா
மிக்க மகிழ்ச்சி,நல்ல முடிவு அண்ணா.நம் தளத்திலுள்ள அனைவருக்கும் இந்த வருட துவக்கத்திலேயே மிக மிக இனிப்பான செய்தியை தந்துள்ளிர்கள்.இது போல என்றும் பல இனிமைகள் உங்கள் வாழ்வில் நிறைந்து இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும் அண்ணா.
சுபா
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
பாரதியு, வ.உ.சியும் செய்தது போல இதுவும் ஒரு அறப்போர் தான் அண்ணா… தம்பி துணை வருகிறேன் துணிந்து முன்னேறுங்கள் அண்ணா…
With Best Wishes Sundar ..May God Bless you.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் (குறள் 1023)
We are there with you.
Malar & Rajendiran,
http://www.voiceofvalluvar.org
வாழ்த்துக்கள் சுந்தர்.
ரஞ்சித்
சுந்தர்ஜி
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்….
சுந்தர் தற்போது சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். முன்பு இருந்தே உங்களிடம் நான் வலியுறுத்தி வந்தது ஒன்று தான், அது உங்களுடைய நேரத்தை உங்களுக்காக உங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துங்கள் என்பது தான்.
நீங்கள் மிகத் திறமையானவர் ஆனால், உங்களிடம் உள்ள சில குறைகளை சரி செய்து கொண்டீர்கள் என்றால், மேலும் சிறப்பாக வருவீர்கள்.
மென் மேலும் முன்னேற என் வாழ்த்துகள்.
கிரி
நன்றி கிரி. நீங்கள் இந்தப் பதிவை மட்டும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை.
அவசியம் இதற்கு பிறகு அளித்த இந்த மூன்று பதிவுகளையும் நான் கொடுத்திருக்கும் ஆர்டரில் படிக்கவும். பதிவு நிச்சயம் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகமாய் இருக்கும்.
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
http://rightmantra.com/?p=16078
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
http://rightmantra.com/?p=16111
ஒரு கனவின் பயணம்!
http://rightmantra.com/?p=16210
நன்றி!
சுந்தர் கட்டுரை பெரியதாக இருந்ததால் பொறுமையாகப் படிக்கலாம் என்று அனைத்தையும் இன்று தான் படித்தேன்.
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். ஏற்கனவே பல முறை கூறியது தான் என்பதால் திரும்பக் கூற ஒன்றுமில்லை.
எனக்கு ஆன்மீகத்தில் அவ்வளவாக நாட்டமில்லை எனவே எப்போதாவது வந்து படித்துச் செல்வேன். முருகன் எனக்கு பிடித்த கடவுள். எனவே, முருகன் பற்றி எங்கே இருந்தாலும் படிப்பேன் அவ்வளவு தான் என்னுடைய ஆன்மிகம். சுய முன்னேற்ற கட்டுரைகள் நிறைய படித்து இருப்பதால், போதும் என்ற மனநிலை வந்து விட்டது.
நீங்கள் ஒரு கட்டுரையில் எந்த வேலை செய்தாலும் முழு அர்ப்பணிப்புடன் செய்வேன் என்று கூறி இருந்தீர்கள். உங்களை அறிந்தவன் என்ற முறையில் இது முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
உண்மையைக் கூறினால் கடவுள் நம்பிக்கையை விட இது தான் உங்களின் மிகப்பெரிய சொத்து.
துவக்கத்தில் இந்தத் துறையில் நீங்க வந்த போது ஆச்சர்யமாக இருந்தது ஆனால், இதிலும் சிறப்பாக செய்த போது ஆச்சர்யம் இருந்தாலும் எதிர்பார்த்த ஒன்றாக மாறிப்போனது. காரணம் உங்களின் அர்ப்பணிப்பு.
பழையதை நினைத்துப் பேசிட்டு இருக்காதீங்க. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
அன்புடன்
கிரி
Thanks Giri. You are a good soul who think all should be well.
– Sundar
valga valamudan