Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

print
ந்தக் கதை சற்று பிரபலமான கதை தான். உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதனால் என்ன நல்ல விஷயம் தானே… இன்னொரு முறை படியுங்களேன். ஆனால் இதை தெரியாதவர்கள் யாராவது ஒருவர் இருந்து அவர் இதன் மூலம் பலன் பெற்றால் கூட நமக்கு சந்தோஷம் தான். இதற்கு முன் இந்தக் கதையை கேள்விப்பட்டவர்களோ அல்லது படித்தவர்களோ இதன் உட்கருத்தை சரியாக உள்வாங்கியிருப்பார்களா என்று தெரியாது. ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும் சரி, நல்ல நல்ல கருத்துக்களை தன்னம்பிக்கையூட்டும் கதைகளை, நீதிக்கதைகளை அடிக்கடி படிக்கவேண்டும். உடலில் தினசரி  சேர்வது போல, மனதிலும் அழுக்குகள் சேரும். அவற்றை இது போன்ற விஷயங்களை உள்ளே செலுத்தி தான் கழுவவேண்டும்.

ஓரிடத்தில் சின்னஞ்சிறிய தவளைகள் குழுவாக வாழ்ந்து வந்தன. அவை ஒரு நாள் ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும்.

ஓர் கடினமான உயரமான குன்று மீது உள்ள கோபுரத்தின் உச்சியைச் சென்று அடைவது தான் பந்தயமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு பந்தயம் நடக்கப்போகிறது என்று தெரிந்தவுடன் அக்கம் பக்கத்து குட்டையில் இருந்த மற்ற தவளைகளும் அங்கு கோபுரத்தின் அடியில் குழுமிவிட்டனர். ஒரு சிலர், பந்தயத்தில் ஈடுபட ஆயத்தமாக இருந்த தவளைகளை எச்சரித்தனர். “வேண்டாம் விபரீத விளையாட்டு.  போகும் வழியில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன. பாம்புகளும், கழுகுகளும் நீங்கள் உங்கள் இலக்கை அடைவதற்கு முன்பு உங்களை பதம்பார்த்துவிடும். ஏதாவது ஒன்று என்றால், இங்கே கீழே உங்களை உற்சாகப்படுத்துபவர்கள் யாரும் அங்கு உதவிக்கு வரமாட்டார்கள். விட்டுவிடுங்கள்…” என்று ஏதேதோ சொன்னார்கள்.

ஓட்டப் பந்தயம் தொடங்கியது. “ஓ! வழி மிகவும் கடினம். தவளைகளில் எதுவும் மேலே செல்ல முடியாது”

அங்கே இருந்த யாரும் தவளைகள் உச்சியைத் தொடும் என்று நம்பவில்லை.

“இந்தக் கோபுரம் மிகவும் உயரமானது ஆபத்தானது வெல்வது ரொம்பக் கடினம்…” என்ற குரல்கள்தான் கேட்டுக்கொண்டிருந்தன. தவளைகள் ஒவ்வொன்றாக சோர்வடையத் தொடங்கின. நம்பிக்கையுடைய மிகச்சில மட்டும் மேல் நோக்கி முன்னேறின.

கும்பல் மேலும் மேலும் கூறியது. “இது மிகக் கடினம். யாராலும் வெல்ல முடியாது.” சிலரைத் தவிர தன்னம்பிக்கையில்லாத பல தவளைகள் விலகிக் கொண்டன.

baby froggsபல தவளைகள் சோர்வுற்று விலகின. ஒன்றே ஒன்றைத் தவிர. அது மட்டும் மேலே மேலே சென்று கொண்டிருந்தது.

இறுதியாக அந்த ஒரு தவளை மட்டும் பெரு முயற்சியெடுத்து மேலே ஏறிச் சென்று வெற்றி பெற்றுவிட்டது. அந்தத் தவளை மட்டும் எவ்வாறு வென்றது என்று அறியத் துடித்தன மற்ற தவளைகள்.

ஒரு போட்டியாளர் இது பற்றிக் கேட்டபோது, வென்றது எப்படி என்பது தெரியவந்தது. வெற்றி பெற்ற தவளைக்கு காது கேட்காது. அது ஒரு செவிட்டுத் தவளை.

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்கவேண்டுமா?

மேலே சொன்ன செவிட்டுத் தவளை போல சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் நாம் செவிடாகிவிடவேண்டும்!

எதிர்மறையான மனப்பான்மை கொண்ட மக்களின் கருத்துக்களை ஒரு போதும் கேட்காதீர்கள். அவர்கள் உங்களின் அற்புதமான கனவுகளையும், விருப்பங்களையும் சிதைத்துவிடுவார்கள். ஆற்றல் தரும் வார்த்தைகளையே எப்போதும் எண்ணுங்கள். நீங்கள் கேட்கும், படிக்கும் ஒவ்வொன்றும் உங்கள் நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும். எனவே, எப்போதும் ஆக்கப்பூர்வமாக சிந்தித்துச் செயல்படுங்கள். உங்கள் கனவுகளை உங்களால் நிறைவு செய்ய முடியாது என்று யாராவது உங்களிடம் சொன்னால், அப்போது மட்டும் செவிடாகிவிடுங்கள்.

RM Office

இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடப்போகிறோம்… ரைட்மந்த்ராவை இனி வேலைக்கு போய்கொண்டு நம்மால் நடத்த இயலாது… வேலையை ஒப்பந்த அடிப்படையில் பேசிவிட்டு, ரைட்மந்த்ராவுக்காக நிம்மதியாக தனியாக எழுத நமக்கு ஒரு அலுவலகம் நகருக்குள் தேவைப்படுகிறது என்ற நம் எண்ணத்தை நெருங்கிய நண்பர்கள் & நலம்விரும்பிகள் சிலரிடம் பகிர்ந்துகொண்டபோது சிலர் முன்பு நாம் செவிட்டுத் தவளையாக நடந்துகொண்டோம். அதனால் தான் இது சாத்தியமாயிற்று.

ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நம் நண்பர்கள் சிலரின் அன்பையோ அக்கறையையோ நாம் உதாசீனப்படுத்தவில்லை. நம் மீது பேரன்பும் நம் எதிர்காலத்தின் மிகவும் அக்கறையும் உள்ளதால் தான் அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பதையும் நாம் உணராமல் இல்லை. அவர்கள் நம் மீது வைத்துள்ள களங்கமற்ற அன்பை நாம் நன்றாகவே உணர்ந்துள்ளோம். என்றும் அவர்கள் நம்முடன் இருந்து நம்மை உற்சாகப்படுத்தவேண்டும்.

அவர்களிடம் நாம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது என்னவென்றால் மனதுக்கு பிடித்ததை செய்யும் யாரும் வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார்கள். நான் செய்வது மனதுக்கு பிடித்தது மட்டுமல்ல உன்னதமானதும் கூட என்று கருதுகிறேன். அப்படியிருக்க தோல்வி ஏது? நான் சொல்வது சரி தானே?

Free bird

“என்ன இப்போவே ஏதோ ஜெயித்துவிட்டது போல பேசுகிறீர்கள்? இனிமே தானே இருக்கு…” என்று சிலர் கேட்கலாம். நம்மைப் பொருத்தவரை இதுவே ஒரு பெரிய சாதனை தான்.

கடந்த ஏப்ரல் மாதம் வேளச்சேரியில், பாம்பே ஞானம் அவர்களின் போதேந்திராள் நாடகத்தை நாம் முதன்முறை பார்க்கச் சென்றபோது, அவருடன் ஒரு சில வினாடிகள் பேச முடியுமா அவரை ஒரு சால்வை போட்டு கௌரவிக்கமுடியுமா என்று நாம் தவித்த தவிப்பு நமக்குத் தான் தெரியும். அப்படிப்பட்ட நிலையில் அவரே இன்று நமது அலுவலகத் திறப்பு விழாவுக்கு வருகை தந்து இரண்டு மணிநேரம் நம் அலுவலகத்தில் செலவிட்டு, வந்திருந்த வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நாம் தர விரும்பிய ஒரு அற்புதமான பரிசை அவர்கள் கரங்கள் மூலம் கொடுத்து, நம்மையும் ஆசீர்வதித்து இறுதியில் விசேஷ பேட்டியும் கொடுத்து… அப்பப்பா… திக்குமுக்காடிப் போனோம்.

நான் யார்… நான் என்ன செய்துகொண்டிருந்தேன்? கடந்த காலங்களில் எனக்கு என்ன அடையாளம்? இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இப்போது நாம் செய்திருப்பது சாதாரண சாதனை அல்ல… இமாலய சாதனை என்பது புரியும். இதற்கு மேல் என்ன வேண்டும்?

(புதிய அலுவலகத்தில் நாம் அமர்ந்து முழு மூச்சில் பணியை துவக்க சில நாட்களாகலாம். இன்னும் பலவற்றை நாம் ஏற்பாடு செய்யவேண்டியிருக்கிறது.)

==================================================================

Also check :

ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77

மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

==================================================================

[END]

 

14 thoughts on “வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

  1. மண்டே மார்னிங் ஸ்பெஷல் அருமை. இந்தக் கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் தங்கள் தளம் மூலம் படிக்கும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி.

    //நாம் அடுத்தவர்கள் பேசும் உதாசீனப்பேச்சை கேட்க்காமல் நாம் நம் வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டு செல்ல வேண்டும்
    மனதுக்கு பிடித்ததை செய்யும் யாரும் வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார்கள். அனால் நான் செய்வது மனதுக்கு பிடித்தது மட்டுமல்ல உன்னதமானதும் கூட என்று கருதுகிறேன். அப்படியிருக்க தோல்வி ஏது? நான் சொல்வது சரி தானே? -//

    – 100% கரெக்ட்

    நேற்றை நிகழ்ச்சி மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. பாம்பே ஞானம் அவர்களை சந்தித்தது, அவர்களுடன் பேசியது… அவர்களுடன் இருந்த 2 மணி நேரமும் உணர்ச்சி பூரணமானவை. இந்த உன்னதமான நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்து, எங்களுக்கு பாம்பே ஞானம் அவர்கள் கையால் ஒரு பரிசு கிடைத்தது மறக்க முடியாத ஒன்று. தங்களுக்கு மிக்க நன்றி. நேற்று விழாவிற்கு வராதவர்கள் மிஸ் பண்ணியதற்கு கண்டிப்பாக வருத்தப்படுவார்கள்

    தாங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா வெங்கட்

  2. உண்மை சுந்தர்ஜி .மற்றவர்களின் கருத்துக்கு நாம் செவி சாய்த்தால் , நாம் நம் கருத்துக்கு முக்யத்துவம் கொடுக்க மாட்டோம் . யார் என்ன சொன்னாலும் கடமையே கண்ணாக இருந்தால் நம் முன்னேற்றம் நம் கையில்
    நன்றி சுந்தர்ஜி

  3. அன்புள்ள சுந்தர்
    அலுவலக பெயர் பலகை அருமையாக உள்ளது. அலுவலக திறப்பு விழா பற்றிய கட்டுரையை எதிர்பார்த்து உள்ளேன்.
    உங்கள் பயணம் மென் மேலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றி

  4. வாழ்த்துக்கள் சார்
    உங்கள் ஆன்மீக பயணத்தில் இது ஒரு மைல் கல்.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  5. வணக்கம் சுந்தர் சார்

    தாங்கள் என்றுஎன்றும் மென் மேலும் வளர நல்வாழ்த்துக்கள் சார்..

    நன்றி

  6. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  7. சுந்தர்ஜி
    பெயர் பலகை அருமையாக உள்ளது. அலுவலக திறப்பு விழா பற்றிய கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – பாம்பே ஞானம் அவர்கள் கையால் ஒரு பரிசும், அறிமுகமும் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக உள்ளது.விழா சிறப்பாக நடந்ததற்கு இறைவனுக்கு நன்றி

  8. ஏற்கனவே அறிந்த கதை ஆயினும், உங்கள் தளம் வழி படிப்பதில் மகிழ்ச்சி. நல்லதே நினைக்க, நல்லதுதானே நடக்கும் சுந்தர் சார்.
    வாழ்த்துக்கள்.

    “மனதுக்கு மட்டும் பயந்துவிடு
    மானத்தை உடலில் கலந்துவிடு
    இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”…

    அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
    நான்குமறைத் தீர்ப்பு!” ((தர்மம் தலைகாக்கும்)

    நடத்துங்கள் சுந்தர் சார்..இனி உங்களுக்கு ஏறு முகம் தான்…

    என்ற வரிகளை ஞாபகபடுத்த விரும்புகிறேன். நன்றி.

  9. Dear sundar sir
    My best wishes for the new office beginning for right mantra. wish you all succeses.

  10. Monday spl சூப்பர்.
    மேலும் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்
    நன்றிகள்

  11. வாழ்த்துக்கள் சுந்தர்,
    உங்கள் ஆன்மீக பயணத்தில் இது ஒரு மைல் கல். உங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    நாராயணன்.

  12. சுந்தர் சார்,

    ஆல் தி பெஸ்ட்.
    தாங்கள் மேன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  13. அய்யா,

    அற்புதம்…வெற்றி..ப்படிக்கட்டுங்கள்…மேலும் வெற்றி…பெற… வாழ்த்துக்கள்..

    இளங்கோ.

  14. Dear Mr.Sundar,

    Wish U all the best. Don’t loose your heart.

    YOU ARE ON RIGHT TRACK.

    RIGHT MANTRA IS ON RIGHT TRACK.

    Regards,
    Sankar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *