Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
‘திருநாகை காரோணம்’ என்று தேவார மூவரால் பாடப்பெற்ற தலம் நாகப்பட்டினம், சப்தவிடங்க தலங்களில் ஒன்று. இங்கு இறைவன் பெயர் காயாரோகண சுவாமி. அம்பாள் நீலாயதாட்சி அம்பிகை.

இந்நகரின் மையப் பகுதியில், நீலா தெற்கு வீதியில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமான் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி. (மெய்கண்ட வேலாயுதசுவாமி கோவில்.). தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய அழகுமுத்து புலவர் உருவாகக் காரணமான இந்த சன்னதி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

Meykanda Velayudha Swamy

‘குமரகோயில்’ என்று இவ்வூராரால் அழைக்கப்படும் இவ்வாலயம், கி.பி 1750 ஆம் ஆண்டுவாக்கில் அன்றைய புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுனரின் துபாஷியாகப் பணியாற்றிவந்த ஆனந்த ரெங்கம் பிள்ளையால் அமைக்கப்பெற்றதாகும்.

நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்க கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அழகு என்ற ஊமைப்பணியாள் இந்தக் கோவில் தோட்டப்பணிகளைச் செய்து கொண்டு முருகன் நிவேதன பிரசாதத்தையே உணவாக உட்கொண்டு பக்தர்கள் கொடுக்கும் சில காசுகளை மட்டும் பெற்று காலம் தள்ளினான். ஒரு நாள் அர்த்தசாம மணி அடித்து விட்டு களைப்பு மிகுதியால் அங்கு ஒரு மறைவான இடத்தில் தூங்கிவிட்டான்.

Meikanda Moorthy2

பூஜை முடித்துவிட்ட அர்ச்சகர் சாதத்தை ஒரு பெஞ்சின் அடியில் வைத்து சொல்லிவிட்டுச் செல்ல இரவு 1 மணிக்கு விழித்தவனுக்கு பசி மிகுதியானது. வாய்பேச முடியாத அவன் பூட்டிய கோவிலுக்குள் அங்குழிங்கும் கத்தியபடியே ஓடிவந்தான்.

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் அமுது படைப்பவனாயிற்றே இறைவன்.

ஊமையன் முத்து கத்துவது முருகனுக்குக் கேட்டது. உடனே பாலன் உருவில் வந்து அவனை அமரச் செய்து பஞ்சாமிர்தத்தை கொடுத்து பசியாறச் சொன்னான். பிறகு என்னை முருகா என்று கூப்பிடு பேச வரும் என்ற போது ஊமையன் முத்து பேசினான் வாய்திறந்து…!

“நீ… ஊமையல்ல. இந்த உலகிற்குக் கவிபாட வந்த புலவன் நீ! புறப்படு உனக்காகவும் உன் குரலைக் கேட்க உலகமே காத்துக் கொண்டிருக்கிறது!” என்றான் அழகன் முருகன். “என்னிடம் செய்த இறைபணி போதும் இனி இலக்கியப்பணி செய்வாய்” என்று வாழ்த்தினான்.

அவ்வளவுதான் கங்கையாய்ப் பிரவாகமெடுத்தது அழகுமுத்துவின் கணீர்க்குரல் ஓடினான் திருத்தலங்களுக்கு பாடினான் அருட்பாடல்களை..! புகழ்பெற்று ஊரெல்லாம் சுற்றி வயதானபின் வைகாசி மாத விசாக நட்சத்திர நாளில் சிதம்பரம் நடராஜரின் 1000-கால் மண்டபத்தில் ஆவிபிரிந்தபின் நேராக நாகைமெய்கண்ட மூர்த்தி முருகன் சன்னதிக்கு வந்தது அழகுமுத்துவின் ஆவி!

அப்போது சாயரட்சை தீப ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது முருகனின் அசரீரி ஒலித்தது, ” என் பக்தன் வருகிறான் வழிவிடுங்கள் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன்” என்று.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசியில் விசாக விண்மீன் நிலவும் நாளில் ஐக்கியத் திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.

பொன்பூத்தநூ புரப்பாதமும் புரிபூத்தமார் பீராறுதோள்
முன்பூத்தகண் முன்னான்குடன் முடியாறுகை வடிவேலுமாய்
கொன்பூத்த வென்னிதயத்திலே குடிகொண்டருள் கூர்வாய்குற
மின்பூத்தபா காசண்முகா வேலயுதா வேலயுதா
– அழகுமுத்துப் புலவர்

(நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள வரும் 3 ஆம் தேதி இரவு கரூர் செல்கிறோம். 4 ஆம் தேதி முஹூர்த்தம் முடிந்தவுடன் அங்கிருந்து நாகப்பட்டினம் செல்கிறோம். நாகப்பட்டினத்தில் ‘மெய்கண்ட வேலாயுதசுவாமி கோவில்’ உள்ளிட்ட பல ஆலயங்களை தரிசிக்கவிருக்கிறோம்!)

==================================================================

* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பி இதுவரை இடம்பெறாதவர்கள் மீண்டும் நமக்கு அதே மின்னஞ்சலை அனுப்பி நினைவூட்டவும். தொலைபேசியில் கூறியிருந்தால் மீண்டும் தொடர்புகொண்டு நினைவுபடுத்தவும்.

** பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக் கதைகள் விரைவில் வெளியிடப்படும்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : 
திருவாசகத் தொண்டர் திரு.திவாகர் அவர்கள் 

திரு.திவாகர் அவர்களைப் பற்றியும் அவரது சைவத் தொண்டு பற்றியும் ஏற்கனவே கூறியிருக்கிறோம். மாணிக்கவாசகரையே தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் சொல்படி வாழ்ந்து வருபவர் திரு.திவாகர்.

Thiruvadi Pooja

திருவாசகப் பாடல்களை கணீர் குரலோடு திரு.திவாகர் பாடும்போது ஆச்சரியமாய் இருக்கும். காரணம், இவர் சிறு வயது முதலே திருமுறைகள் கற்றவர் அல்ல. இவரது தாய்மொழியும் தமிழ் அல்ல. இருப்பினும் தமிழ் மொழி பால் ஈர்ப்பு ஏற்பட்டு திருமுறைகள் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அவ்வளவு தான் மாணிக்கவாசகர் உள்ளே இழுத்துவிட்டார்.

Thiruvadi Pooja 6

ஒவ்வொரு திருகார்த்திகை தீபத்தின்போதும் போரூரில் உள்ள சிவலோகம் மையத்திலிருந்து திருக்குடைகள் திருவண்ணாமலையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒவ்வொரு ஞாயிறும் மாலை 4 – 6 வரை போரூரில் உள்ள சிவலோகம் மையத்தில் திருவாசகம் பாடப்படுகிறது. பின்னர் இறைவனின் திருவடிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. நீங்கள் கலந்துகொண்டால் உங்களுக்கு இறைவனின் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

Thiruvadi Pooja 2

Thiruvadi Pooja 3

இந்த வாரந்திர பூஜைக்கென்றே இந்த அறையை பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக இங்கு வாரந்திர வழிபாடு நடைபெற்று வருகிறது. சிவலோகத்தின் முக்கிய பணிகளுள் இதுவும் ஒன்று. பூஜையின்போது திருவாசகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல பதிகங்கள் பாடப்படுகின்றன. திவாகர் அவர்கள் பாடப் பாட அவர் குடும்பத்தினர் உட்பட வந்திருப்பவர் அனைவரும் சேர்ந்து பாடுகின்றனர்.

Thiruvadi Pooja 4

சேர்ந்து பாட வசதியாக திருவாசக நூல் ஒன்றும் வருபவர்களுக்கு தரப்படுகிறது.

இறுதியில் திருவடி பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. சிற்றுண்டியும் உண்டு.

சென்ற ஞாயிறு திவாகர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து முடித்தவுடன் அடுத்து போரூரில் உள்ள சிவலோகம் மையத்திற்கு வந்து அங்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு அனைத்தையும் நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றோம்.

முகவரி : சிவலோகம், எண் 5, முதல் பிரதான சாலை, ஜி.கே.எஸ்டேட், போரூர், சென்னை – 600116. (வசந்த் & கோ பின்புறம்).

இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்று எங்கள் வாசார்களுக்காக பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

Thiruvadi Pooja 5

இந்த வாரத்திற்கான பிரார்த்தனை வரும் ஞாயிறு மாலை மேற்படி சிவலோகம் மையத்தில் திருவாசகப் பாடல்களை பாடிக்கொண்டு நடைபெறும்.

திரு.திவாகர் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

பிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை சமர்பித்திருக்கும் பெயர் வெளியிடவிரும்பாத அந்த அன்பர் சில மாதங்களுக்கு முன்னர் நம்மை தொடர்புகொண்டு தனது பிரச்சனைகளை நம்மிடம் சொல்லி கிட்டத்தட்ட அழுதேவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறி, ஒரு சில ஆலயங்களுக்கு போகச் சொன்னோம். பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்புவதாகவும் தயவு செய்து வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு பிறகு அவர் அனுப்பவில்லை. நாமும் மறந்துவிட்டோம். இந்நிலையில் சமீபத்தில் கோரிக்கை அனுப்பியிருக்கிறார். படித்தவுடன் மனமே ரணமாகிப்போனது.

ஒரு மனிதனுக்கு ஏன் இப்படி அடுத்தடுத்த சோதனைகள்? சில கேள்விகளுக்கான பதில் அவன் ஒருவனுக்கு தான் தெரியும்.

பரிபூரண சரணாகதி – TOTAL SURRENDER ஒன்றைத் தவிர இதற்கு வேறு எதுவும் தீர்வு இருப்பதாக நமக்கு தெரியவில்லை.

வாழ்க்கையில் பிரச்னை பிரச்சனை எனகூக்குரல் எழுப்புபவர்கள் அனைவரும் இவர் பிரச்சனைகளோடு தங்கள் பிரச்சனைகளை ஒப்பிட்டுக்கொள்ளவேண்டும்.

அடுத்து கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.ராகேஷ் நமது உழவாரப்பணிக் குழுவின் புது உறுப்பினர். சென்ற உழவாரப்பணிக்கு வந்திருந்து பணி செய்துவிட்டு சென்றார்.

ஜோதிடம் மற்றும் ஜாதக பொருத்தமெல்லாம் பார்த்து தான் மணமுடித்தேன். அப்படியும் என் திருமண வாழ்க்கை வாழ்க்கை இனிமையாக அமையவில்லை என்று கூறி கண்ணீர் வடித்திருக்கிறார்.

ஜோதிடத்தில் மிகத் தீவிரமாக இருப்பவர்கள் சிந்திக்கவேண்டிய ஒன்று இது. கிரகப் பொருத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனப்பொருத்ததிற்கும் கொடுக்கவேண்டும்.

இவருக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. பிரச்சனைகளில் இருந்து இவர் விரைவில் விடுப்பட்டு நல்லதொரு இனிமையான வாழ்க்கை இவருக்கு அமையவேண்டும் என வாழ்த்துவோம். (மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, “அந்த கட்டமெல்லாம் தாண்டியாகிவிட்டது. இனி அது வாய்ப்பில்லை. நல்லபடியாக விவாகரத்து பெற்று புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.)

==================================================================

1) வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி!

வணக்கம் சுந்தர்.

நான் தங்கள் தளத்தின் நீண்ட நாள் வாசகர்.  உங்கள் பதிவுகள், புகைப்படங்கள், கமெண்ட்டுகள் என்ன ஒவ்வொன்றையும் ரசிப்பவன். படிப்பவன். நீங்கள் செய்து வருவது மிகப் பெரியதொரு சேவை. வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

எனக்கிருக்கும் பிரச்சனைகளையும் மன வேதனைகளையும் இங்கே இறக்கிவைத்து உங்களிடம் பிரார்த்திக்க சொன்னால் மனம் சற்று ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியதால் இங்கே இதை தருகிறேன்.

உங்கள் அனைவரையும் போலவே நானும் கடவுளை மிகத் தீவிரமாக நம்புகிறவன். அக்டோபர்  2013 வரை.  1998 – 2000 என் வாழ்வில் மிக மிக மோசமான காலகட்டம் எனலாம்.

கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை விற்று பிசினஸ் செய்தேன். இருப்பதையும் இழந்து தற்போது தவிக்கிறேன்.

பட்ட காலிலே படும் என்பதற்கிணங்க என் தந்தை (65+) கடந்த ஆண்டு ஏப்ரல் 2014 முதல் காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடிக்க இந்த உலகில் என்னென்ன முயற்சிகள் செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிட்டேன். ஆனால் ஒன்றும் பலனில்லை.

ஒரு டஜன் ஜோதிடர்களுக்கு மேல் இந்த காலகட்டத்தில் சந்தித்து அவர்கள் கூறிய பரிகாரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் செய்தேன். திருப்பதியில் இரண்டு முறை முடி இறக்கினேன். நவக்கிரக தலங்களுக்கு சென்று வந்தேன். சுந்தரகாண்ட சப்தாக பாராயணம் (தினம் ஏழு காண்டங்கள் வீதம் ஏழு நாட்கள்), சாய்சத் சரிதம், என் ஒன்று விடாமல் அனைத்தையும் செய்துவிட்டேன். இதுவரை எந்த பலனுமில்லை.

இதற்கிடையே என் தாயாரும் உடல்நலமில்லாமல் வீழ்ந்துவிட்டார். அவரை கொண்டு போய் பரிசோதனைக்கு காண்பித்ததில் அவருக்கு ILD (Lung disease) எனப்படும் நுரையீரல் பதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். இதற்கு தீர்வே கிடையாதாம். இன்னும் 2 அல்லது 3 வருடம் இருப்பார்கள். இருமிக்கொண்டே இருப்பார்களாம். இருப்பினும் கடந்த எட்டு மாதங்களாக சிகிச்சை அளித்து வருகிறேன்.

முதலில் கடன் பிரச்னை. இரண்டாவது, அப்பா காணாமல் போனது. மூன்றாவது அம்மாவின் உடல்நிலை.

வேலை வேறு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எந்த நேரமும் பெஞ்ச்க்கு செல்வேன் என தெரிகிறது.

என்னைவிட துன்பப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்று எனக்கு  தெரியும். இருந்தாலும் என் பிரச்சனைகளை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

1) என் தந்தைக்கு என்ன ஆயிற்று? அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என தெரியவேண்டும். அவர் இறந்திருந்தால் கூட பரவாயில்லை. அதை ஏற்றுகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறோம். ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியாமலே வாழ்வது நாளை நகர்த்துவது கொடுமையிலும் கொடுமை.

2) எத்தனை செலவானாலும் சரி.. என் அம்மாவை காப்பாற்றவேண்டும். என் கண் எதிரே அவர்கள் சதா இருமிக்கொண்டு நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதை ஒரு மகனாக என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

3) வாழ்ந்து கெட்டவன் நான். எங்கள் சொத்தெல்லாம் கரைந்து கடனில் மூழ்கி தவிக்கிறேன். இழந்த பொருளை நான் திரும்ப பெறவேண்டும்.

4) எனக்கு ஒரு நல்ல வேலை  வேண்டும். என் திறமையை உழைப்பை அங்கீகரிக்கும் இடத்தில் எனக்கு வேலை வேண்டும்.

வைகுண்ட ஏகாதேசி அன்று விரதமிருந்து கோவில்களுக்கு சென்றேன்.  நம் தளத்தை பார்த்த பிறகு தற்போது ‘வேல்மாறல்’ படித்து வருகிறேன். இதற்கு மேல் வேறு எதன் மீதாவது எனக்கு நம்பிக்கை ஏற்படும் என்று தோன்றவில்லை.

எனக்கு மிதுன ராசி என்பதால் இனி நேரம் நல்லாயிருக்கும் என்றார்கள் ஜோதிடர்கள். ஆனால் இன்னும் எனக்கு விடியவே இல்லை.

கடைசி நம்பிக்கையாக இங்கு பிரார்த்தனையை சமர்பிக்கிறேன்.

– பெயர் ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

=================================================================

2)Want to get rid of problems Marriage life!

Dear Sir,

Let me introduce myself. I am Rakesh from Chennai. (Theni is my native).

I got lot of problems after my marriage life. I write this is in very bad situation. I got married last year May.

I did not expect in my life ji. I applied divorce in June month.I gave lots of chances to my wife but she did not realize what is going in my life.

I want to tell about this. I am working from my 6th std itself. After my job in Chennai, My family going in smooth. Before my marriage i expect my marriage life going to give lots of happiness and joy like that. But Ongoing problems made me in cry.

We checked horoscopes before marriage too. It is Ok only. I beat my wife due to her speech abt my dad. Then her dad scolded me in bad words. They went to police station in last diwali time. I gave another chance to her. Upto now they went to police station 2 times. I never expect this  in  my life.

Then last April, she gave me same problem. Lots of problem loaded in my life. I did not expect this in my life. I applied divorce . Then Last Diwali time , I called my wife for starting a new life (with help of relatives). But she did the same thing. My mom also told, she is not fit for your life. Last week we went to Theni and i asked my wife to stay with her parents. We will check further in court. I don’t know why lot of this happened to me.

Please add my wishes to next pirarthanai. I would like to get a new lease of life.

– Rakesh,
Chennai.

=================================================================

பொது பிரார்த்தனை

திருமுறைகள் பள்ளி மாணவர்களிடையே பரவ வேண்டும்!

நாம் எத்தகைய புண்ணிய பூமியில் வாழ்ந்து வருகிறோம் தெரியுமா?

பக்திக்கே புது அர்த்தம் சொன்ன 62 நாயன்மார்கள் அவதரித்த பூமி நம் தமிழகம். அது மட்டுமா தெள்ளு தமிழ் பாமாலை சூடி திருமாலைக் கண்ட 12 ஆழ்வார்களும் அவதரித்த நாடு நம் தமிழ்நாடு. அவ்வளவு ஏன் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்கிறான் பாரதி.

'சிவலோகம்' சார்பில் திருமுறைகள் ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது
‘சிவலோகம்’ சார்பில் திருமுறைகள் ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது

ஆனால் பக்தி இலக்கியங்கள் எனப்படும் இராமயணம், மகாபாரதம் ஆகியவையும், திருமுறைகள் மற்றும் திவ்யப்ரபந்தங்கள் எனப்படும் திராவிட வேதங்ளும் இங்கே எத்தனை குழந்தைகளுக்கு தெரியும்?

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் திருமுறைக் கல்வி அவசியம் வரவேண்டும். மாணவ மாணவியர் தேவாரம், திருப்புகழ், திவ்யப்ரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களை பாடல்களை பாடங்களோடு சேர்த்து கற்கவேண்டும்.

Competion2

பள்ளி மாணவர்களிடையே நமது திருமுறைகளை கொண்டு சேர்க்கும் உன்னத பணியில் திரு.திவாகர் போன்ற வெகு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வெகு சிலர் விரைவில் பலராகவேண்டும். அந்த பணியில் அவர்களுக்கு தேவையான அனைத்தை உதவிகளும் தங்கு தடையின்றி கிடைக்கவேண்டும்.மேன்மைகொள் சைவநீதி உலகமெல்லாம் ஓங்கவேண்டும். திருமுறைகளை அறியாத பள்ளிக் குழந்தைகளே தமிழகத்தில் இல்லை என்னும் நிலை வரவேண்டும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)

இதுவே இந்த வார பிரார்த்தனை!

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதனது பெயரை வெளியிட விரும்பாத அந்த வாசகருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவர் தம் பெற்றோர் ஒற்றுமையாக சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கவும், அவரது கடன் உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் யாவும் நீங்கி அவர் இன்புற்று இருக்கவும், சென்னையை சேர்ந்த திரு.ராகேஷ் அவர்களுக்கு திருமண வாழ்க்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்து அவருக்கு சௌக்கியமான சந்தோஷமானதொரு புதிய வாழ்க்கை அமையவும், நமது மாநிலத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அனைவரும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட திருமுறைகளை கற்று தெளியவும், மேன்மை கொள் சைவ நீதி உலகமெல்லாம் பரவவும் இறைவனை வேண்டுவோம்.

திரு.திவாகர் அவர்களின் சிவத்தொண்டும் அவரது சிவலோகம் அமைப்பின் திருமுறை தொண்டும், திருவாசகத் தொண்டும் மேன்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும். ‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ நாடகம் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் மேலும் பல அரங்கேற்றங்களை காண இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மார்ச் 1, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவிலில் குருக்களாக தொண்டு செய்யும் நடராஜ குருக்கள்

10 thoughts on “ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. நாகை முருகனைப் பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. அழகு முத்துவின் கதையை தங்கள் தளம் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. கேள்விப்படாத ஒரு கதையை பதிவு செய்து இருக்கிறீர்கள். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு திவாகர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் .போரூரில் உள்ள சிவலோக மையம் அட்ரஸ்சை பதிவு செய்வும் . எங்களுக்கு ஏதேனும் ஒரு ஞாயிறன்று நேரில் சென்று திருவாசக தேன் பருக வசதியாய் இருக்கும்

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் முதல் வாசகரின் கோரிக்கையை படிக்கும் பொழுது கண்கள் கலங்குகின்றன . அவருடைய கோரிக்கைக்கு இறைவன் செவி சாய்க்க வேண்டும். திரு ராகேஷ் அவர்கள் தங்கள் சந்தோசமாக வாழ மகா பெரியவா அனுக்கிரகம் செய்ய வேண்டும்.

    மாணவர்கள் அனைவரும் படிப்புடன் தேவாரம் திருவாசகம் முதலியன கற்க வேண்டும். திரு திவாகர் அவர்களின் தொண்டு மேலும் மேலும் சிறக்க வேண்டாம்.

    நம் நாடு சுபிக்ஷம் அடையவும் , பசுக்களை உரிய முறையில் பாதுகாக்கவும் அனைவரும் பிரார்த்திப்போம் பசுக்களை முறையாக போஷிக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும் நம் நாட்டில்.

    லோக சமஸ்தா சுகினோ பவந்து

    மகா பெரியவா கடாக்ஷம்

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

    1. முகவரி : சிவலோகம், எண் 5, முதல் பிரதான சாலை, ஜி.கே.எஸ்டேட், போரூர், சென்னை – 600116. (வசந்த் & கோ பின்புறம்).

  2. பிரிந்த தம்பதியர் ஒன்று சேர …

    //அயிலாரும் அம்பதனாற் புற மூன்றெய்து
    குயிலாரும் பொன்மொழி யாளொரு கூறாகி
    மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
    பயில்வானைப் பற்றி நின் றார்க்கில்லை பாவமே //

    திருமனஞ்சேரியில் திருஞானசம்பந்தர் அருளியது – 2ம் திருமுறை

    திருச்சிற்றம்பலம்

    தங்கள் நாகை பயணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள். பல அற்புதங்களை அடுத்த வாரம் வாசகர்களாகிய நாங்கள் பதிவாக எதிர்பார்க்கலாம்

    நன்றி

    உமா வெங்கட்

  3. அருள்மிகு மெய்கண்ட முர்த்தி சுவாமிகள் ஆலயம் அமைந்த விவரம் தெரியப்படுததிதற்கு நன்றி.

    கோயில் கோபுரம் மற்றும் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி சுவாமிகளின் படங்களை காண கண் கோடி வேண்டும்.

    தங்களின் நாகப்பட்டினம் ஆன்மிக பயண கட்டுரையை ஆவலுடன் எதிர் நோக்கியுளோம்

    வேல்மாறல் பாராயணம் செய்யும் அந்த வாசகர் வாழ்வில் நிச்சயம் வசந்தத்தை விரைவில் காண்பார். திரு ராகேஷ் அவர்களின் குடும்ப பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரவும், மகிழ்சியான மணவாழ்க்கை அமைந்திடவும் பள்ளி செல்வங்கள் திருமுறையில் சிறந்து விளங்கவும், திரு.திவாகர் அவர்களின் ஆன்மிக தொண்டு மேன்மேலும் சிறக்கவும் பிரார்த்தனை செய்வோம்

  4. சுந்தர் அண்ணா,

    மிக்க நன்றி. நான் மிகவும் நம்முடைய பிரார்த்தனை குழுமத்தை நம்பி உள்ளேன். எனக்கு நல்லதொரு வாழ்க்கை இனி அமைய அனைவரும் பிரார்தனை செய்யுங்கள்.

    ரா.ராகேஷ்

  5. முருகா சரணம்…… அழகென்ற சொல்லுக்கு முருகா எனும்படி மெய்கண்ட மூர்த்தி மிக அழகாக உள்ளார்……….இந்த வாரம் பிரார்த்தனை கோரிக்கை வைத்திருப்பவர்களுக்கு நாம் கூற விரும்புவது இதுதான்………..நம் தளத்திற்கு வந்து விட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்த மாதிரிதான்……….மீதி பிரச்சினைகளும் நம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் தீர்ந்து விடும்………….நம்பிக்கையுடன் இருங்கள்………..திருவருளாலும், குருவருளாலும் நல்லதே நடக்கும்………..

  6. பெயர் சொல்லாத வாசகர் நிச்சயம் எல்லா துன்பம்களில் இருந்து விடு படுவர். யார் ஒருவர் தனது தாய் தந்தை மீது பக்தி கொண்டு பணிவிடை புரிந்தால் அவரை அந்த கருணா முர்த்தி ஆன அந்த பகவான் கை விட மாட்டான்.

    நம் மஹா பெரியவர் திருவடி தொழுவோம். நிச்சயம் நல்லது நடக்கும். வெகு விரைவில் எல்லாம் நன்மையில் முடியும்.

    பிற வாசகர்களின் துயர் தீர இறைய தொழுவோம்.

    கே. சிவசுப்ரமணியன்

  7. முருகப் பெருமான் பற்றிய பதிவு மிக அருமை.

    தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த வாசகரின் கோரிக்கைகள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை மனமுருக வேண்டிகொள்வோம்.

    வாசகர் ராகேஷ் அவர்களுக்கு மீண்டும் ஒரு புதிய நல்ல வாழ்க்கை அமையவும்,அவர்தம் எதிர்காலம் சந்தோசம் , நிம்மதி நிறைந்ததாகவும் அமையவும் வேண்டிக்கொள்வோம்.

    குழந்தைகள் அனைவரும் குடும்பப் பெருமையையும், பாரம்பரியத்தை காப்பாற்றுபவர்களாகவும்,திருமுறைகளை கற்று தேர்ந்தவர்களாகவும்
    தலை சிறந்த மனிதர்களாகவும் விளங்க வேண்டிக்கொள்வோம்.

    பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திவாகர் அவர்களது தொண்டு தலை சிறந்து விளங்கவும், அன்னார் அவர்களது குடும்பம் மென்மேலும் உயரவும் வேண்டிக் கொள்வோம்.

    நன்றி
    வாழ்க வளமுடன்

  8. பெயர் வெளியிடாத அந்த வாசகர் நிலைமையை நினைக்கும்போது ,காலமாற்றம்தான் அவருக்கு நல்ல முன்னேற்றத்தையும் மன நிம்மதியையும் கொண்டுவரும் என்று நினைக்கின்றேன்.இவருக்காகவும்,தி ராகேஷ் மற்றும் இந்த வார பிரார்த்தனை விடுத்த அனைவருக்காகவும் ,இறைவனை பிரார்த்திக்கின்றேன் .

  9. அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *