Home > 2016 > July

கற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள் – Rightmantra Prayer Club

இந்த வார பிரார்த்தனைப் பதிவில் இடம்பெற்றிருக்கும் கதையை நாம் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்த 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' இதழில் படித்தோம். படித்தபோது அத்தனை பிடித்துப் போனது. உங்களிடையே அக்கதையை பகிரலாம் என்று அதை தட்டச்சு செய்து தயார் செய்து வைத்த நிலையில், ஏனோ அப்போது அதை வெளியிட சந்தர்ப்பம் அமையவில்லை. பின்னர் ஒரு தருணத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து, DRAFT ல் SAVE செய்து வைத்துவிட்டோம்.

Read More

வேல்மாறல், சுந்தரகாண்டம், குருசரித்திரம் – முக்கிய அறிவிப்பு!

வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்! வேல்மாறல், சுந்தரகாண்டம், குருசரித்திரம் ஆகியவை நிகழ்த்தும் அற்புதங்கள் பற்றிய பதிவுகளை அளிக்கும்போது பல புதிய அன்பர்கள் தொடர்புகொண்டு அந்த நூல்களை கூரியர் அனுப்பும்படி கேட்கின்றனர். புதியவர்களுக்கு அனுப்பும்போது POST-DELIVERY FOLLOW UP, PAYMENT FOLLOW UP போன்றவற்றை செய்ய நமக்கு கடினமாக இருக்கிறது. அவற்றுக்கு நமக்கு நேரமிருப்பதில்லை. சிலர் நமது நேரத்தையும் சேவையையும் வீணடிப்பதோடு கூரியரை ரிட்டர்ன் செய்து நம்மை வேதனைப்படுத்துகிறார்கள். எனவே இது போன்ற சேவைகள்

Read More

மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

இன்று ஆடிகிருத்திகை. இந்நன்னாளில் இப்பதிவை அளிக்க முடிந்தது முருகன் திருவருளே. சென்னையில் அஷ்டலக்ஷ்மிகளும் கோயில் கொண்டுள்ள பெசன்ட் நகரில் அக்கோவிலுக்கு அருகே அதே கடற்கரை ஓரம் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகளும் அடங்கிய அழகிய கோவில் ஒன்று உள்ளது தெரியுமா! அதுவும் காஞ்சி மகா பெரியவாவின் அருள்வாக்கிற்கிணங்க இந்த கோவில் கட்டப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பொதுவாகவே நமது ரைட்மந்த்ரா தளத்தில் பாரம்பரியம் மிக்க தொன்மையான ஆலயங்கள்

Read More

கலாமை சோதித்த அவரது செயலாளர் – குடியரசுத் தலைவர் கலாமோடு கொஞ்ச நேரம்!

இன்று மக்கள் ஜனாதிபதி கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள். நம்மிடம் சுவாமி விவேகானந்தரை அடுத்து கலாம் அவர்களை பற்றிய நூல்கள் தான் அதிகம் இருக்கின்றன. அந்தளவு அவரை நேசிக்கிறோம். சுவாசிக்கிறோம். கலாம் அவர்களை பற்றி படிக்க படிக்க வியப்பு மலைப்பு மகிழ்ச்சி நெகிழ்ச்சி என பலவித உணர்ச்சிகள் தோன்றும். நாட்டிலேயே மிக உயர்ந்த பதவி வகித்த ஒருவர் இத்தனை எளிமையாக மக்கள் நலனைப் பற்றியே சதாசர்வ காலமும்

Read More

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் ? (11)

'வேல்மாறல்' நமது வாழ்விலும் வாசகர் ஒருவர் வாழ்விலும் நிகழ்த்திய அற்புதம் பற்றிய மற்றுமொரு பதிவு இது. 'வேல்மாறல்' பற்றிய பதிவை தளத்தில் பார்த்து நம்மிடம் வேல்மாறல் நூலை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட வாசகர்கள் பலருக்கு கடந்த காலகட்டங்களில் அந்நூலை அனுப்பிவைத்தோம். எத்தனை பேர் அதை முறையாக தவறாமல் பாராயணம் செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த ஒரு பாராயண முறைக்கும் பலன் தெரியவேண்டும் என்றால் சிறிது அவகாசம் பிடிக்கும். குறைந்தது அரை மண்டலமோ அல்லது

Read More

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

சற்று பெரிய பதிவுகள் எழுதும்போது ஆவலுடன் காத்திருக்கும் உங்களை அப்போதைக்கு கவனித்துக்கொள்ள பெரியவா பதிவுகள் தான் நமக்கு கைகொடுக்கின்றன. நம் தளத்தில் வெளியாகும் மகா பெரியவா தொடர்பான அனுபவங்களுக்காக பலர் ஆர்வமுடன் காத்திருப்பது தெரியும். பெரியவாவின் மகிமைகளில் பலதரப்பட்ட மனிதர்களின் பல வித அனுபவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. அதில் பெரியவா கூறும் தீர்வுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக்கூடாது. அதுபோன்ற பிரச்சனைகள் உள்ள யாவருக்கும்

Read More

Hard work vs Smart work!

சிலர் கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பார்கள். முன்னேற்றமே இருக்காது. ஆனால் அவர்களை விட குறைவாக உழைப்பவர்கள் அவர்களை தாண்டி போய்விடுவார்கள். அது ஏன் என்று யோசித்ததுண்டா? கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு! இரண்டு விறகு வெட்டிகள் ஒரு பெரிய மர வியாபாரியிடம் பணிக்கு சேர்ந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணி. எவ்வளவுக்கெவ்வளவு வெட்டுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு பணம் ஊதியமாக கிடைக்கும். இருவரையும் வேறு வேறு பகுதிக்கு அனுப்பினார் வியாபாரி. முதல் நாள் இருவரும் ஒரே

Read More

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

நாம் எல்லாம் ஒரு வகையில் பாக்கியசாலிகள். ஈஸ்வரனை நினைத்த நேரத்தில் சென்று தரிசிக்கிறோமே அது எத்தனை பெரிய பேறு தெரியுமா? 276 பாடல் பெற்ற தலங்கள், அது தவிர 267 வைப்புத் தலங்கள், இதுவும் தவிர தனிச் சிறப்பு மிக்க அந்தந்த பதிகளில் உள்ள தலங்கள் என நாம் உய்ய எத்தனை எத்தனை வழிகள். இந்த கண்களின் பயன் சிவனை தரிசிப்பதும், செவியின் பயன் அவன் பெருமைகளை கேட்பதும், நாவின் பயன் அவன்

Read More

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

19.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று குரு பூர்ணிமா. இரண்டு கண்களை போல நம்மை வழிநடத்தும் இரண்டு குருமார்களை பற்றி இந்நன்னாளை முன்னிட்டு பார்ப்போம். பகவான் ஸ்ரீ ரமணர் 1950 ஆம் ஆண்டு சித்தியானார். மகா பெரியவா அப்போது தான் ஸ்ரீ மடத்தில் தனது பாதி ஆயுளை நிறைவு செய்கிறார். இருவருக்கும் இடையேயான புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை பற்றி நீங்கள் ஏற்கனவே பல சம்பவங்களை படித்திருப்பீர்கள். குறிப்பாக மகா பெரியவாவும் பகவான்

Read More

ஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்?

ஒரு ஊரில் ஒரு பழுத்த வயது முதிர்ந்த ஞானி வசித்து வந்தார். அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை எனுமளவுக்கு அத்தனை விஷயங்களை தெரிந்துவைத்திருந்தார். அவரது கேள்வி ஞானத்தையும் கல்வி ஞானத்தையும் கண்டு அனைவரும் வியந்தனர். இந்நிலையில், பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் இவரை விட மிகப் பெரிய ஞானி ஒருவர் வசித்து வருவதாகவும் அவருக்கு இன்னும் அதிக விஷயங்கள் தெரியும் என்றும் ஊருக்குள்

Read More

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா – பாடல் தோன்றிய கதை!

தமிழகம் கண்ட ஒப்பற்ற தேசத் தலைவர்களுள் மூதறிஞர் ராஜாஜியும் ஒருவர். இவரது வாழ்க்கை வரலாற்றை படித்தால் இப்படியெல்லாம் கூட ஒருவர் இருந்திருக்கிறாரா என்கிற வியப்பே மிஞ்சும். அரசியல் ஞானி என்றே சொல்லலாம். அந்தளவு அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவர் ராஜாஜி அவர்கள். திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அவரது 'குறையொன்றுமில்லை மறைமூர்த்திகண்ணா' பாடல் மிகவும் பிரபலமானது. உள்ளத்தை உருக்கும் ஒன்று. அந்தப் பாடல் பிறந்த கதை பற்றி கிடைத்த தகவல் ஒன்றை சமீபத்தில் நமது

Read More

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

சிவபுண்ணியக் கதைகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவை. பிரமிக்கவைப்பவை. பார்ப்பதற்கு ஒன்று போல தோன்றினாலும், தனித்தனிக்குணம் கொண்டவை. ஒவ்வொரு கதையும் உணர்த்தும் பாடம் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாபத்தை தூள் தூளாக்கி நன்னெறிக்கு நம்மை இட்டுச்சென்றுவிடும். எனவே சிவபுண்ணியம் செய்ய கிடைக்கும் எந்தவொரு செயலையும் விடக்கூடாது. அதே போன்று மறந்து போய் கூட சிவாபராதத்தை செய்துவிடக்கூடாது. செய்பவர்களுக்கும் துணை போகக்கூடாது. சிவாபராதம், ருதிராட்சம் பற்றியேல்லாம அடுத்தடுத்த அத்தியாயங்களில்

Read More

மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ

மகாபாரதம் ஒரு மாபெரும் கருத்துக் கருவூலம். இதில் இல்லாத நீதிகளே இல்லை. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், கர்மவினைகள் பற்றியும் இது அற்புதமாக விளக்குகிறது. அது மட்டுமா பகவத் கீதை, விதுர நீதி, நள தமயந்தி சரித்திரம், இராமாயணம், அகஸ்தியரின் கதை, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரன், துஷ்யந்தன்-சகுந்தலை என பல்வேறு பொக்கிஷங்களை கொண்டது மகாபாரதம். நாம் தற்போது படித்து வரும் நூல்களுள் மகாபாரதமும் ஒன்று. இந்நிலையில் சமீபத்தில்

Read More

பிள்ளையார் எழுதிய திருமண பத்திரிக்கை!

ஒளவையாரை பெரிதும் மதித்த பாரி - ஆம் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி - வாழ்ந்த பகுதி பறம்பு மலை. இன்று இது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். பாண்டிநாட்டு தலங்களில் இது ஐந்தாவது தலமாகும். பாரி போரில் மாண்ட பிறகு அவரது பெண்கள் அங்கவையும் செங்கவையும் திருக்கோவலூரில் திக்கற்றவர்களாக வாழ்நாட்களை கழித்து வந்தனர். ஒளவையார் அப்பெண்களைக் கண்டார். ஒரு முறை மழையில் நனைந்து வந்த

Read More