Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, July 27, 2024
Please specify the group
Home > Featured > இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

print
சிவபுண்ணியக் கதைகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவை. பிரமிக்கவைப்பவை. பார்ப்பதற்கு ஒன்று போல தோன்றினாலும், தனித்தனிக்குணம் கொண்டவை. ஒவ்வொரு கதையும் உணர்த்தும் பாடம் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாபத்தை தூள் தூளாக்கி நன்னெறிக்கு நம்மை இட்டுச்சென்றுவிடும். எனவே சிவபுண்ணியம் செய்ய கிடைக்கும் எந்தவொரு செயலையும் விடக்கூடாது. அதே போன்று மறந்து போய் கூட சிவாபராதத்தை செய்துவிடக்கூடாது. செய்பவர்களுக்கும் துணை போகக்கூடாது. சிவாபராதம், ருதிராட்சம் பற்றியேல்லாம அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிவாக வரும்.

கீழ்கண்ட இந்த சிவபுண்ணியக் கதையை கூறியது பரத்வாஜ முனிவர்.

Sivapunniyam Nandagopan

கல்லே சிவலிங்கம்; களிமண்ணே கனிவைகள் என்று பூஜித்தவனுக்கு  கிடைத்தது என்ன?

முனை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதி ஒன்றில் (இன்றைய மதுரா) ஒரு சின்னஞ்சிறு இடையன் வசித்து வந்தான். அவனுக்கு விளையாட யாரும் தோழர்கள் இல்லாததால், ஒரு சிறு கல்லையே சிவலிங்கமாக கருதி, அதை பூஜித்து விளையாடி வந்தான். சேற்றையே சந்தனமாக கருதி அதற்கு இட்டு அழகு பார்த்தான். மேய்ச்சல் நிலத்தில் கிடைத்த சில மலர்களை கொண்டு அதற்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தான். நைவேத்தியத்திற்கு கனிகள் கிடைக்கவில்லை என்பதால் பல வகை மண் வகைகளையே உருண்டையாக பிடித்து வைத்து அவற்றை கனிகளாக பாவித்து அந்த சிவலிங்கத்திற்கு படைத்து மகிழ்ந்தான். அவன் வழிபாடு அன்போடும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.

இடையர் குலச் சிறுவனின் இந்த பூஜையை பெரிதும் மகிழ்து ஏற்றுக்கொண்ட சிவபெருமான், குபேரனின் தனத்தில் இருந்து பெருமளவு எடுத்து அச்சிறுவனுக்கு கொடுத்து, அவன் பூஜித்து வந்த அந்த கல்லை இரத்தின மயமான லிங்கமாக மாற்றிவிட்டார். அவனுடைய வீடும் சகல செல்வங்களாலும் நிரம்பி இரத்தின மயமாக காட்சியளித்தது.

திடீரென தான் பூஜித்து வந்த சிவலிங்கமானது ரத்தினக் கல்லாகவும், தனது வீடு உள்ளிட்ட அனைத்தும் செல்வத்தால் நிரம்பி வழிவதைக் கண்ட அந்த சிறுவன் வியப்படைந்தான்.

அப்போது அவன் முன்னர் பிரத்யட்சமானார் பரமேஸ்வரன். தான் ஏக்கத்தோடு பணிந்து பூஜித்து வந்த அடிமுடிய காணவியலாத பரமன், தன் முன் நிற்பதை கண்ட அந்த பாலகன் அவரை பணிந்து பலவாறு துதித்தான்.

“ஹே… கருணாமூர்த்தி… இந்த ஏழை செய்த எளிய பூஜைக்கும் மகிழ்ந்து உன் அருளை பொழிந்து காட்சியும் கொடுத்தனையோ… சர்வேஸ்வரா….” நெகிழ்ச்சியில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

கிருஷ்ணாவதாரம்

பொதுவாக சிவதரிசனம் தனியாக கிடைக்காது. சோமாஸ்கந்தர் திருவுருவமாக, விடை மீதேறி, பார்வதி மற்றும் புத்திரர்கள் சமேதராக கிடைக்கும். இல்லையெனில் ஒட்டுமொத்த தேவர்களும் சப்த ரிஷிகளும் ஈசனோடு எழுந்தருளியிருக்கும் வண்ணம் கிடைக்கும்.

இங்கு சப்தரிஷிகளும் தேவாதி தேவர்களும் ஈஸ்வரனோடு எழுந்தருளியிருந்தார்கள். அவர்களில் சிலர் ஓடிச்சென்று அச்சிறுவனை ஆரத்தழுவி உச்சி மோர்ந்தனர்.

அப்போது கங்காதரன் அந்த சிறுவனை நோக்கி.. “குழந்தாய்… நீ செய்துள்ள புண்ணியத்தால் இனி உன் பெயர் ‘ஸ்ரீகரன்’ என்று வழங்கப்படும். மேலும் உன் வம்சத்தில் நந்தகோபன் என்கிற மகன் தொந்த்ரப்போகிறார். அவரிடம் மகாவிஷ்ணுவே மகனாக வளர்வார். நமது நல்லாசிகள்!” என்று கூறிவிட்டு மறைந்தார்.

அதன் பிறகு அந்த சிறுவன் பல காலம் சிவபூஜை செய்தபடி வாழ்ந்துவிட்டு அனைத்து விதமான இன்பங்களையும் துய்த்துவிட்டு இறுதியில் சிவலோகப் ப்ராப்தி அடைந்தான்.

ஒரு இடைச்சிறுவன் செய்து வந்த எளிய சிவபூஜையின் பலனாக அந்த குலமே பெயர் துலங்கும்படி அமைந்துவிட்டது என்றால சிவபுண்ணியத்தின் மகிமையை யாரால் கூற முடியும்?

சங்கரனை பூசிப்பதே சாஸ்வதம்!

‘தாமோ தரன்முதலேர் சாதல்நூல் சாற்றுவதும்
பூமேலோர் ஒன்றுவதும் கண்டோமே – நாமுடலை
நேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனைப்
பூசிப்ப தொன்றே புகல்’ 

– நீதிவெண்பா

=======================================================

தெய்வத்தின் குரல்!

இத்தனை பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம்!

ஒரு சின்னஞ்சிறிய பூவாக இருந்தால்கூட ஸரி, தன்னிடம் அது வந்துவிட்டது என்றால் அதைத் தன்னிலும் உசத்தியான மஹிமையுள்ளதாகப் பண்ணிவிடுகிற ஒளதார்யம் (உதார குணம்) உடையவர் பரமசிவன் என்பது அந்த வைஷ்ணவர் வார்த்தையால் தெரிவதாக எடுத்துக் கொள்ளலாம்.

Periyava sittingஆனால் இப்படி அவனை எப்போ பார்த்தாலும் தொட்டுப் பூஜை பண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எல்லோருக்கும் அந்த ஸெளகர்யம் கிடைக்குமா?இந்த ஸாதாரணத் தும்பை கூட எல்லா மாஸத்திலும் கிடைக்காதே?அதனாலே அவனை ஸ்பரிசித்து, ஒட்டிக் கொண்டு, கட்டிக்கொண்டு இருப்பதெல்லாம் வாக்கால்தான் பண்ணியாகணும். இந்த நாக்கிலேதான் அவன் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அவனை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம்.

அதனால் இத்தனை பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம். பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் வஸ்து இருக்கிறது. அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை. நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். கஷ்டமே இல்லை. இரண்டே எழுத்து. தேஹத்தில் உயிர் போலவும், கோயிலில் மஹா லிங்கம் போலவும், வேதங்களின் மத்தியில் ஜீவரத்னமாயிருக்கும் அதை நாம் என்ன பண்ணவேண்டும்? பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா? தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா? மாலைகள், நகைகள் சாத்தணுமா? ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும்!

மநுஷ்யனுக்கு மட்டும் இது birth right (பிறப்புரிமை) ! வேறு எது எதற்கோ பர்த்-ரைட் சொல்கிறோம்! இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே! வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான்! இதைச் செய்யாவிட்டால், ‘வாக்கால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை; இவனுக்குப் இதைக் கொடுத்துப் பிரயோஜனமில்லை’என்று பரமேஸ்வரன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு அடுத்த ஜன்மாவில் வேறே மாதிரி உருட்டி விடுவார்! இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷச ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்துவிடும்.

பரமேஸ்வர ஸ்வரூபத்தை நாம் பார்க்க முடியுமா? விக்ரஹமாக வைத்தால்கூட எப்போதும் பார்க்க முடியுமா? இந்த நாமா இருக்கிறதே, இதுவும் ஸாக்ஷத் அவனேதான். இதை நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.

அதனால் எப்பொழுதெப்பொழுது முடிந்தாலும் ‘சிவ’ என்று இரண்டு அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் சிவம், மங்களம், கல்யாணம் தழைக்கச் செய்ய வேண்டும்.

– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

==========================================================

நரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேஷ பிரார்த்தனை!

நமது தளத்தில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஷேஷ பிரார்த்தனை கிளப் பதிவு அளிக்கப்படவிருக்கிறது. பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார். எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ள வாசகர்கள் தங்கள் பிரார்த்தனையை அவரவர் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் சற்று விரிவாக நமக்கு அனுப்பவும். உங்கள் அலைபேசி  எண்ணை மறக்காமல் குறிப்பிடவேண்டும்.

நரம்பு தொடர்பான பிரார்த்தனை கோரிக்கையை வரும் 20/07/2016 க்குள் editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம். அலைபேசி : 9840169215.

உங்கள் சார்பாக சோளீஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை நடைபெறும் என்பதால் இந்த பிரார்த்தனையை அவரவர் தங்கள் இருப்பிடங்களில் பூஜையறையில் செய்தால் போதுமானது.

இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

சென்ற பிரார்த்தனை கிளப் பதிவுக்கு : திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை! – Rightmantra Prayer Club

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

 

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *