இந்த கதை சற்று வித்தியாசமானது. சிவபுண்ணியம் அதை செய்பவருக்குத் தான் சென்று சேரும் என்றில்லை. அவர்களை சார்ந்தவர்களுக்கும் சென்று சேரும் என்று உணர்த்தும் ஒன்று. இதுவொன்றே போதுமே சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை சொல்ல!
இயற்கை எழிலும் செழிப்பும் மிக்கதொரு நாடு சம்பு நாடு. அதில் மாயாபுரம் என்கிற பட்டணம் ஒன்று இருந்தது. அதை சத்புத்தி என்ற அரசன் ஒருவன் நீதி நெறி வழுவாது ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு வீரம் நிறைந்த புதல்வர்களும் ஒரு புதல்வியும் இருந்தனர். ஒரு கட்டத்தில் ராஜ்ஜியத்தை தனது வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு தான் கானகம் புகுந்து பரமேஸ்வரனை நோக்கி தமியற்றி அவரருளால் மோட்சமடைந்தான்.
புதல்வர்கள் அனைவரும் ராஜ்ய பரிபாலனம் செய்ய, புதல்வி மட்டும் அதில் கவனம் கொள்ளாமல், ஈஸ்வர தியானத்திலும், தான தருமங்கள் செய்வதிலும் கவனம் செலுத்தலானாள். ஒரு நாள் சப்த ரிஷிகள் அனைவரும் அவளுடைய அரண்மனைக்கு வந்து அவளை பார்த்து நலம் விசாரிக்க வந்தார்கள்.
“அம்மா.. மண்ணாசையும் பொன்னாசையும் கொண்ட இந்த உலகத்திலே… பருவ வயதினளாய் இருந்தும் கூட சிவபெருமானிடம் அன்பும் பக்தியும் செலுத்தி சிவபுண்ணியம் ஈட்டி வரும் உன்னைப் போன்ற ஒரு பெண்ணை இந்த ஈரேழு உலகிலும் பார்க்க முடியாது. அத்தனை விதமான நன்மைகளும் உனக்கு ஏற்படட்டும்” என்று வாழ்த்தினார்கள்.
அரசகுமாரி அவர்களை வணங்கி, “தவ சிரேஷ்டர்களே என் தந்தையிடம் இருந்த பண்பு எனக்கும் வந்தது. என் மனம் எதில் நாட்டம் கொள்கிறதோ அதை செய்து வருகிறேன். மற்றபடி புண்ணியம் என்றால் என்ன, அதனினும் சிவபுண்ணியம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. சிவபுண்ணியம் என்றால் என்ன, அதை செய்து முக்தியடைந்தவர்களின் வரலாறுகளை நீங்கள் எனக்கு சொல்லவேண்டும். நான் அதை கேட்க சித்தமாக இருக்கிறேன்” என்றாள் பயபக்தியுடன்.
“இதை விட பாக்கியம் எங்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது” என்று உள்ளம் மகிழ்ந்த அந்த முனிவர்கள் ஒவ்வொருவராக அவளுக்கு சிவபுண்ணியக் கதைகளை சொல்ல ஆரம்பித்தார்கள்.
முதலில் காசிப முனிவர் சிவபுண்ணியம் குறித்த கதை ஒன்றை சொன்னார்.
மகன் செய்த சிவபுண்ணியம் தந்தையைப் காப்பாற்றிய கதை!
வேதாரண்யம் என்கிற நாட்டிலே போகாங்கன் என்கிற மன்னன் அரசு செலுத்திவந்தான். கோனாட்சி நடக்கவேண்டிய இடத்திலே கொடுங்கோலாட்சி நடைபெற்று வந்தது. குடிமக்களை பலவாறு துன்புறுத்தி வரிக்கு மேல் வரிபோட்டு மக்களை பலவிதமாக கசக்கி பிழிந்து ஆட்சி செலுத்தி வந்தான். மன்னன் செங்கோல் தவறினால் வான் பொய்த்துவிடும் என்பதால் நாட்டில் பஞ்சம் பிடித்துக்கொண்டது. இந்நிலையில் மேலும் மேலும் மக்களை பலவிதமாக துன்புறுத்தி வந்த போகாங்கன் ஒரு நாள் நோய்வாய்பட்டு படுக்கையில் வீழ்ந்து திடீரென உயிர் துறந்தான்.
அடுத்த நொடி அங்கே தோன்றிய எமதூதர்கள் சிலர் அவனை கட்டியிழுத்துக்கொண்டு போய் நரகில் தள்ளி பல விதங்களில் துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.
========================================================
For earlier episodes…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
========================================================
அப்போது திடீரென கயிலையில் இருந்த வந்த சிவகணங்கள் இருவர் தோன்றி, அவனை எமகிங்கரர்களிடமிருந்து மீட்டு கயிலைக்கு அழைத்துச் செல்ல புஷ்பக விமானத்தில் ஏற்றினார்கள்.
சிவகனங்களிடம் எமதூதர்கள் மிகுந்த மரியாதையுடன் “இவன் மிகப் பெரிய பாபியாயிற்றே. குடிமக்கள் அத்தனை பேரின் சாபமும் இவனுக்கு இருக்கிறதே… இவனுக்கு எப்படி உங்களுடன் கயிலை வரும் பாக்கியம் கிடைத்தது?” என்றனர்.
அதற்கு எமதூதர்கள், “கால்தூதர்களே, இவன் மகன் கனகன் என்பவன் சிறு வயதில் சக தோழர்களுடன் கடற்கரையில் மணலால் சிவலிங்கம் செய்து திருவைந்தெழுத்தை ஓதி பூஜித்து விளையாடினான். அவன் செய்துள்ள அந்த சிவபுண்ணியத்தின் மகிமையால் அவன் தந்தையாகிய இவனுக்கு கொடிய நரகிலிருந்து விடுதலை கிடைத்து கயிலையில் வாசம் செய்யும் ப்ராப்தி கிடைத்திருக்கிறது” என்று கூறினார்கள்.
அதை கேட்டதும் எமதூதர்கள் மறுபேச்சு எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்கள்.
இதிலிருந்து சகல பாவங்களையும் நாசம் செய்யக்கூடிய ஒன்று சிவபுண்ணியம் என்பது விளங்கும். ஒரு துராத்மாவின் மகன் அவனையுமறியாமல் செய்த சிவபுண்ணியத்தால் அவன் தந்தைக்க்கு நரகிலிருந்து விடுதலை கிடைத்து சிவலோகம் செல்ல வாய்ப்பு கிடைத்தது எனும்போது, அதன் மகத்துவத்தை உணர்ந்து பிள்ளைகளானவர்கள் பக்தியோடு சிவபுண்ணியம் செய்தால் அவர்கள் பெற்றோருக்கு விளையக்கூடிய நன்மையை கூறமுடியுமா என்ன?
“உற்றவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் பணம் சேர்க்கவில்லை என்றாலும் புண்ணியம் சேர்க்கவேண்டும்” என்று சொல்வார்கள். அந்த புண்ணியம் வேறு எதுவும் இல்லை. சிவபுண்ணியம் தான்!
உங்கள் பிள்ளைகளுக்கு கஷ்டப்பட்டு கடன்பட்டு கல்வி போதித்தால் மட்டும் போதாது. பக்தியும் போதிக்கவேண்டும். நீங்கள் பக்தி செய்யாமல் கோவில்களுக்கு செல்லாமல் உங்கள் பிள்ளைகளுக்கு அந்த வழக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனவே பெற்றோர்கள் அனைவரும் இவ்விஷயத்தில் உதாரணமாய் இருந்து பிள்ளைகளுக்கு பக்தியை போதித்து வரவேண்டும். நிச்சயம் அந்த சிவபுண்ணியம் உங்களை ஒரு நாள் காக்கும்!
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே
– திருஞானசம்பந்தர் (மூன்றாம் திருமுறை)
பாடல் விளக்கம் : கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்!
….. சிவபுண்ணியக் கதைகள் தொடரும்
==========================================================
“பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.”
– மகா பெரியவா
==========================================================
* To those who are new to this website
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் . தர்மம் தலை காக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே . சிவ புண்ணியம் தலைமுறையை காக்கும் என்பதை அறிந்து கொண்டோம் .சுந்தர காண்டத்தின் நிறைவில் இதை படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் சகல மங்களங்களும் உண்டாகும் என்பது போல் தங்கள் தளத்துக்கு வந்து செல்கிறவர்களும் , படிப்பவர்களும் புண்ணியம் கட்டி கொள்வார்கள் என்பது சர்வ நிச்சயம் ..
நமசிவாய திருப்பதிகத்தை தொடந்து படித்து வந்தால் பாவங்கள் , தோஷங்கள் நீங்கி புண்ணியம் கூடும் .
அவன் அருளாலே சிவன் தாள் வணங்கி