‘கர்மா என்பது மாற்றக்கூடியதே… ஜென்ம ஜென்மாக தொடரும் வல்வினையானாலும் அதை நிச்சயம் நமது அணுகுமுறையாலும், நடவடிக்கைகளாலும் மாற்றிக்கொள்ள முடியும்’ என்பதை ஆணித்தரமாக உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம்.
சரித்திரத்தில் விதி மாற்றி எழுதப்பட்ட பல சம்பவங்கள் உண்டு. மாற்றமுடியாமல் போன வரலாறுகளும் உண்டு. ஆனால் நாம், ‘மாற்றமுடியும்’ என்று நம்புகிறவர்கள். ஏனெனில் சைவநெறி தழைக்க தோன்றிய நம் திருஞானசம்பந்தர் அதை நம்பினார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அதை நம்பினார், திருநாவுக்கரசர் அதை நம்பினார். இவர்கள் அதை நம்பியது மட்டுமல்ல நிரூபித்தும் காட்டினர்.
அப்படியிருக்க, ஷண்மதங்களை ஸ்தாபித்த ஆதிசங்கரர் மட்டும் விதிவிலக்கா என்ன? விதியை அவர் மாற்றிய வரலாறு ஒன்றை பார்ப்போம்!
கர்மாவை வென்ற காருண்யம்!
காலடியில் அவதரித்த நம் ஆதி சங்கரர் குருகுலம் பயின்று வந்த காலத்தே, அப்போதைய வழக்கப்படி பிக்ஷை ஏற்க சென்றார். காலடியில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள பழத்தோட்டம் என்னும் இடத்துக்கு சென்றார். அங்கே அயாசகன் என்கிற ஏழை அந்தணன் ஒருவன் வீட்டு முன் வந்து நின்றார்.
அன்று துவாதசி. ஆனால், அந்த வீட்டிலோ நித்திய ஏகாதசி தான். அந்தளவு அவர்கள் பரம ஏழை. அயாசகன் அப்போது கிரகத்தில் இல்லை. வெளியே சென்றிருந்தான். அவனது இல்லாள் மட்டுமே இருந்தாள்.
“பவதி பிக்ஷாம்தேஹி”
வாசலில் ஏதோ குரல் கேட்கிறதே என்று வெளியே வந்து பார்த்த அந்த மாதரசி, சூரியனை ஒத்த தேஜசை உடைய ஒரு பால சந்நியாசி தன் வீட்டு முன் நின்று பிக்ஷை கேட்பதை பார்த்தாள். துடி துடித்துப் போனாள்.
“இந்த பரம ஏழையின் வீட்டிற்கு வந்து இவர் பிக்ஷை கேட்கிறாரே… நான் என்ன தருவேன்… குண்டுமணி அரிசி கூட வீட்டில் இல்லையே..” என்று அந்த இல்லாள் மனம் புழுங்கினாள்.
வறுமை அவளுடைய கிரகத்தில் தானே தவிர, அவள் அகத்தில் இல்லை. அந்த இல்லத்தரசி உள்ளே சென்று சமையலறையை துழாவினாள். ஒன்றுமே இல்லை.
அவள் கணவர் துவாதசி பாரணை செய்வதற்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டும் கண்ணில் பட்டது. அதை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
கூனிக் குறுகி, “சுவாமி… இந்த ஏழையிடம் இந்த நெல்லிக்கனியை தவிர இப்போது எதுவும் இல்லை” என்று கூறியபடி அவர் பிக்ஷை பாத்திரத்தில் போட்டாள்.
ஞானியர்களை பொறுத்தவரை, ‘ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்’ என்ற கருத்துடையவர்கள் என்பதால், சங்கரர் அதை மனநிறைவோடு ஏற்றுக்கொண்டார்.
அதே நேரம், இத்தனை தர்ம சிந்தனை மிக்க இந்த மாதரசி, வறுமையில் வாடுவதா என்றும் வருந்தினார்.
ஒரு முடிவுக்கு வந்தவராக, மகாலக்ஷ்மியை நோக்கி ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடினார்.
அடுத்த நொடி, வானிலிருந்து அசரீரி வடிவமாக அன்னை மகாலட்சுமி, “சங்கரா, இந்த தம்பதியினர் எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் இந்த ஜென்மத்தில் இவர்கள் அனுபவித்து வரும் தாரித்திரியம். இவர்களின் பாவம் இன்னும் நீங்கவில்லை. பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் என்னால் தனத்தை தர இயலாது!” என்றாள்.
*********************************************************************
For earlier episodes…
பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!
திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!
*********************************************************************
எத்தனை பெரிய குற்றமாக இருந்தாலும், எத்தனை பெரிய கேஸாக இருந்தாலும் திறமையான வக்கீல் ஒருவர் இருந்தால் போதும் ஒருவர் தண்டனையிலிருந்து தப்ப முடிகிறது. இதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.
இந்த பெண்மணியை பொறுத்தவரை இவளுக்காக வாதாடுவது யார்? சாட்சாத் பரமேஸ்வர சொரூபமான ஆதிசங்கரர் அல்லவா?
உடனே சங்கரர், “தாயே… இவர்கள் ஜென்ம ஜென்மாந்திரங்களாகச் செய்த பாவம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் தான் கடும் வறுமையில் கஷ்டத்தில் இருக்கும் நிலையிலும் இத்தனை அன்போடு வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியையும் “இல்லை” என்று சொல்ல மனமின்றி எனக்கு இவள் பிக்ஷையாக போட்டிருக்கிறாளே…. அந்த தயைக்கு காருன்யதிற்கு ஈடு இணை ஏது தாயே? இந்த அன்பும் தியாகமும் எத்தனை புனிதமானவை! எத்தனை பெரிய பாவத்தையும் இந்த இந்த காருண்யம் பொசுக்கி விடாதோ…?” என்றார்.
மேலும்…. “தாயே ஸ்ரீநிதி, இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் பார்க்காமல், அன்பைக் காட்டி இந்த பெண்மணிக்கு அனுக்கிரகம் செய்யவேண்டும் தாயே…” என்று லக்ஷ்மியைப் பிரார்த்தித்தார்.
இப்படி அவர் கூறியபடி ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், அன்னை லக்ஷ்மிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஒரு நெல்லிக் கனிக்கு பதிலாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்து விட்டாள்.
* இது கற்பனை சம்பவம் அல்ல. ஆதி சங்கரர் காலத்தில் உண்மையில் நடந்த ஒன்று. சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை தினத்தை முன்னிட்டு நாம் மேற்கூறிய தங்கநெல்லி மழை பொழிந்த இல்லமான கேரளாவில் உள்ள ‘ஸ்வர்ணத்து மனை’ சென்று வந்ததும், அங்கு அமர்ந்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்ததும் குறிப்பிடத்தக்கது. அது குறித்த விரிவான பதிவு ‘ஸ்வர்ணத்து மனை’யின் பிரத்யேக புகைப்படங்களுடன் விரைவில் நம் தளத்தில் வெளிவரும். இந்த ஆண்டு அக்ஷய திரிதியை வரும் மே 9 ஆம் தேதி வருகிறது!
இப்படி தங்க நெல்லி மழையை பொழிய வைத்தமையால், அந்த ஸ்லோகத்திற்கு கனகதாரா சுலோகம் என்று பெயர் ஏற்பட்டது. கனகதாரா என்ரால் பொன்மழை என்று பெயர்.
இங்கே விதியை வென்றது எது?
மதியா?
நிச்சயம் அல்ல.
காருண்யம்!
எனவே ஒருவர் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்தாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றபடி தான தர்மங்கள் செய்து வரவேண்டும். இயல்பாகவே மனதில் ஈரம் இருந்தால் தான் அது சாத்தியப்படும். எனவே விதியை வெல்ல நினைப்பவர்கள், கர்மாவை உடைக்க நினைப்பவர்கள் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதுவே உங்களுக்கு ஒரு அரணாகி உங்களை காக்கும்!
========================================================
கனகதாரா ஸ்தோத்திரத்தை சங்கரர் சமஸ்கிருதத்தில் பாடினார். சமஸ்கிருத வடிவத்தை படிக்க, பாராயணம் செய்ய சிரமப்படுபவர்களுக்கு இதோ ஒரு அற்புதமான மாற்று வழி!
ஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் பதிப்பு இது. கவிஞர் இயற்றிய அருமையான காவியம்! நூல்வடிவிலும் இது வெளிவந்துள்ளது. இரண்டுமே தி.நகரில் கண்ணதாசன் பதிப்பகத்தில் கிடைக்கும்.
==========================================================
* To those who are new to this website
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
கர்மா Vs கடவுள் முந்தைய அத்தியாயங்கள்…
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
==========================================================
‘காலடியை நோக்கி ஒரு பயணம்’ தொடர் – முந்தைய பாகங்களுக்கு…
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)
சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
====================================================
Similar articles….
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா?
========================================================
[END]
Comment: நன்றி
..வாழ்த்துக்கள்..
கர்மா Vs கடவுள் தொடரின் இந்த பதிவு நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தபோதிலும் நம் தளத்தில் உங்கள் கை வண்ணத்தில் படிக்கும் போது அருமை.
திரு ரமீஸ் அவர்களின் ஓவியம் அருமை.
இரண்டு தொடர்கள் அடுத்தடுத்த இடைவெளிகளில். எங்களுக்கு பெரும் விருந்து தான்.
கர்மாவை வெல்ல வழி இருக்கிறது என்பதை நினைக்கும்போதே மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.
சங்கரர் தங்க நெல்லிக்கனி வரவழைத்த அந்த சம்பவம் தான் எனக்கு தெரியுமே தவிர, அவருக்கும் அன்னை மகா லக்ஷ்மிக்கும் நடைபெற்ற அந்த உரையாடல் எனக்கு புதிது.
பதிவுக்கு பொருத்தமான ஓவியம் வரைந்திருக்கும் ரமீஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் பதிப்பாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ‘பொன்மழை’ என்ற பாடலை இயற்றியிருக்கும் தகவல் புதியது. பொன்மழை பாடலை கேட்க ஆவலாக இருக்கிறேன்.
நம்பிக்கையூட்டும் பதிவுக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
பொன் மழை கனகாதார ஸ்தோத்திரம் தகவலுக்கு நன்றி …அப்படியே சிறு ஆடியோ கிளிப்பை இணைத்திருந்தால் எங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து தினம் கேட்க ஏதுவாக இருந்திருக்கும்…பரவா இல்லை தி நகர் செல்லும் போது நினைவிருந்தால் வாங்கிவிடுகிறோம் நன்றி …
அக்ஷய திரிதியை சிறப்பு பதிவில் நிச்சயம் அளிக்கிறேன்.
சுந்தர்ஜி அவர்களுக்கு காலை வணக்கம் . கர்மா VS கடவுள் தொடர் சிறப்பு . கனக தாரா ஸ்தோத்திரத்தை அகஸ்திய முனி திருமீயசூர் லலிதாம்பிகை சன்னதியில் பாடியுள்ளார் . அந்த லலிதா நவரத்ன மாலை நமது தளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது . எளிய தமிழ் ஸ்லோகம் .அனைவரும் படித்து பலன் பெறலாம் .
அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கராப்ரன வல்லபே சித்யர்த்தம் ஞான மோட்சம் பிக்சாங் ச தேவி பார்வதியை நம – ஆதிசங்கரர்.
அது வேறு. இது சங்கரர் பாடியது. இதை கண்னாதாசனும் எளிய தமிழில் பாடலாக இயற்றியிருக்கிறார். அதன் குறுந்தகடு குறித்த விபரத்தை தான் பதிவில் இணைத்திருக்கிறேன். நன்றி.
மிக அருமை சார்,
சரியான நேரத்தில் தந்த தகவலுக்கு மிக மிக நன்றி.
சோ. ரவிச்சந்திரன்