Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

print
மது ‘காலடி நோக்கி ஒரு பயணம்’ தொடரின் எதிர்பாராத ஒரு வரவு இந்த பதிவு. தனியாக அளிப்பதைவிட அந்த தொடருக்கு மத்தியில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே  இத்துடன் அளிக்கிறோம்.

நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து சனாதன தர்மத்தை நிலைநிறுத்தி, காணாபத்யம் (கணபதி), சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), கௌமாரம் (முருகன்), சாக்தம் (சக்தி), சௌரம் (சூரியன்) ஆகிய ஷண்மதங்களை ஸ்தாபித்த பின்னர் ஆதிசங்கரருக்கு சிவசொரூபத்தில் கலப்பதற்கு முன்பு ஒரு முக்கிய பணி இருந்தது. கயிலை சென்று பரமேஸ்வரனையும் பார்வதி தேவியையும் தரிசித்து ஸ்படிக லிங்கங்களை பெற்று வருவது தான் அது.

எனவே காசியிலிருந்து நேராக பத்ரிநாத் சென்று பின்னர் அங்கிருந்து கயிலை சென்றார். கயிலை செல்லும்போது எப்படிச் செல்வது, எப்படிச் சென்றால் சிவனை தரிசிக்கலாம் என்று வழி தெரியாமல் அவதிப்பட்டார். அப்போது, சண்டிகேஸ்வரர் நடந்து சென்ற பாதையில் அவரை அடியொற்றிச் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்தார் சங்கரர்.

அப்போது சங்கரரை பார்த்து புன்னகை பூத்த பரமேஸ்வரன், ஐந்து ஸ்படிக லிங்கங்களை சங்கரருக்கு பரிசளித்தார். கூடவே ஒரு ஓலைச் சுவடியையும் தந்தார்.

“இந்த பஞ்சலிங்கங்களை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்வாயாக. அதன்மூலம் இந்த உலகிற்கும் மிகுந்த நன்மை ஏற்படும். இந்த ஓலைச்சுவடியில் உள்ளவை பார்வதி தேவியை குறித்து நானே இயற்றிய பாடல்கள். இதையும் உலகிற்கு கொண்டுசெல்வாயாக” என்று ஆசிகூறியருளினார்.

(அப்படி நிறுவப்பட்டது தான் காஞ்சியில் மஹா பெரியவா பூஜித்த சந்திரமௌலீஸ்வரர் என்னும் யோகலிங்கம், கேதார்நாத்தில் உள்ள முக்தி லிங்கம், நேபாளத்தில் நீலகண்ட ஷேத்ரத்தில் உள்ள வர லிங்கம், சிருங்கேரியில் போக லிங்கம், சிதம்பரத்தில் மோட்ச லிங்கம்.)

இறைவன் பக்தனுக்கு தந்துவிட்டார். பதிலுக்கு ஏதேனும் அவனுக்கு தரவேண்டும் அல்லவா?

உடனே,

நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீட் பாம்

என்று தொடங்கும் உமா மகேஸ்வர ஸ்தோத்திரத்தை பாடினார்.

(மொத்தம் 13 பாடல்களை கொண்ட இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம் விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும்.)

மேற்படி பாடலை பாடிமுடித்து அம்மையப்பனை நமஸ்கரித்துவிட்டு கையிலையிருந்து புறப்பட்டார் சங்கரர். மனதைவிட்டு பார்வதி பரமேஸ்வரனை தரிசித்த அந்த அற்புதமான காட்சி நீங்க மறுத்தது. ஆத்மானுபவத்தில் திளைத்தபடி வெளியே வந்தார்.

Adi Sankara Nandi encounter
நமது தளத்தின் பிரத்யேக ஓவியர் ரமீஸ் அவர்கள் வரைந்த ஓவியம்

வழியே அவரை கண்ட நந்திகேஸ்வரர், “கையில் இதென்ன ஓலைச்சுவடி?” என்று கேட்டார்.

பரவசத்தில் மூழ்கியிருந்த சங்கரர் பதில் சொல்லவில்லை. அப்படியே மெய்மறந்து நின்றுகொண்டிருந்தார். ஒருவேளை கயிலையிலிருந்து சங்கரர் திருடிக்கொண்டு வந்திருப்பாரோ என்று கருதி, அதை பிடுங்கிக்கொண்டார். மேலும் கயிலையின் உன்னதமான அந்த சொத்து அங்கிருந்து வெளியே செல்ல நந்தி விரும்பவில்லை. சங்கரர் சற்று சுதாரிப்பதற்குள் 100 பாடல்களை கொண்ட அந்த ஓலைச்சுவடியில், 59 பாடல்கள் நந்திகேஸ்வரரிடம் சென்றுவிட்டன. அதை படிக்க ஆரம்பித்த நந்தி அதன் பொருட்செரிவில், இலக்கிய இலக்கண நயத்தில், வார்த்தைகளின் அழகில் மெய்மறந்து போனார். இங்கே செய்வதறியாது திகைத்தார் சங்கரர். இதற்கு மேல் இங்கே நின்றுகொண்டிருந்தால் மீதியையும் நந்தி பறித்துவிடுவார் என்று கருதி அவர் ஆனந்த மயக்கத்திலிருக்கும்போதே வேகவேகமாக வெளியேறினார் சங்கரர்.

(பார்த்தீங்களா உடுக்கைப்பய பண்ணின வேலைய? கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு பிடுங்கிட்டான் பாருங்க!)

ஆனால், மனம் வலித்தது. கயிலையின் எல்லையில் சோகமாக நின்றுகொண்டிருந்தார். மேற்படி சுவடி பறிபோனது ஒருவேளை ஈஸ்வர நிந்தையாக இருக்குமோ என்கிற அச்சம் அவருக்கு…!

பிள்ளை மனம் வாடி  நிற்பது அன்னைக்கு பொறுக்குமா? அடுத்தநொடி அசரீரியாக ஒலித்த்து அம்பிகையின் குரல்.

“சங்கரா… வருந்தவேண்டாம். உன்னிடம் உள்ளது போக நந்தி பறித்த 59 பாடல்களையும் நீயே பாடிவிடு!” என்றாள். (ஓ… இதுக்குத் தான் இந்த நாடகமோ?)

அசரீரி ஒலித்த திக்கை நோக்கி நமஸ்கரித்த சங்கரர், எத்தனை பெரிய பேறு என்று எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்தார். பின்னே… இறைவன் எழுதிய பாடல்களை தொடரும் பணியையல்லவா இவர் செய்யப்போகிறார்…. எத்தனை பெரிய அங்கீகாரம்!!

ஆக… மீதி 59 பாடல்களை ஆதிசங்கரர் இயற்றினாராம்.

சௌந்தர்யலஹரியில் சிவபெருமான் எழுதிய முதல் 41 பாடல்களும் ஆனந்தலஹரி எனப்படும். சௌந்தர்யலஹரியில் முதல் பாடல் என்ன தெரியுமா? (சிவபெருமான் ஒரு அம்பிகையின் பக்தராக இருந்து இந்த பாடலை எழுதியிருக்கவேண்டும்!!)

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசலக ஸ்பந்திது மபி
அதஸ்த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபி ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய பிரபவதி

(“ஜனனி… ஜனனி…” பாடலில் இளையராஜா பாடுவாரே முதலில் அது தான்.)

இதன் பொருள் : தாயே, பரமசிவன் பராசக்தியாகிய உன்னுடன் சேர்ந்து இருந்தால்தான் நீ இந்த உலகை படைக்கமுடியும், காக்க முடியும், அழிக்கமுடியும். நீ அவருக்கு உறுதுணையாக இல்லாவிடில் அந்த இறைவன் அசையவும் முடியாது. எனவே, ஹரி,ஹரன், பிரம்மன், எல்லோரும் போற்றும் பெருமை பெற்ற உன்னை முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவன் எப்படி துதிக்கமுடியும்.

புண்ணியம் செய்தவன் எவனோ, அவனே, அம்பாளை வணங்குவான் என்று கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள்.

அன்னையின் அருள் கூட வேண்டியதில்லை. கடைக்கண் பார்வை போதும். நாம் அத்தனை பேறுகளையும் பெற்று  வாழ. ஆனால் அந்த கருணையை பெற நமக்கு தகுதி வேண்டும் அல்லவா? ஆத்மார்த்தமான பக்தியோடும், ஆத்ம சுத்தியோடும் வணங்கி கீழ்கந்த சௌந்தர்யலஹரியை ஒவ்வொரு வெள்ளி தோறும் நமதும் கிரகங்களில் ஓதி, அவளது அருளை பெறுவோம். அன்னைக்கு அருள் செய்யத் தான் தெரியும். சோதிக்கத் தெரியாது. எனவே பற்றுவோம் அன்னையின் பாதங்களை.

Meenakshi

To dowload the above image, please click the below link :
http://rightmantra.com/wp-content/uploads/2015/07/Meenakshi.jpg

சௌந்தர்யலஹரியும் அதன் பாராயண பலன்களும்

சௌந்தர்யலஹரியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பலன் உண்டு. முழு பாடலும் அடங்கிய PDF FILE டோவுன்லோட் செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://rightmantra.com/wp-content/uploads/2015/07/Soundharyalahari.pdf

சௌந்தர்யலஹரி – ஒலி ஒளி வடிவில் (IN YOUTUBE)

1. ஸர்வவிக்ன நாசம், ஸகல கார்ய ஸித்தி

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வாம்-ஆராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி

2. ‘பாத தூளி மஹிமை’ 

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்
வஹத்யேனம் சௌரி: ஸஹஸ்ரேண சிரஸாம்

ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலன-விதிம்

3. ‘பாத தூளி – முக்தி அளிப்பது’ 

அவித்யானாம் அந்தஸ்திமிர- மிஹிர-த்வீப-நகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதௌ

நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி

4. “ஸகல பய – ரோக நிவ்ருத்தி” 

த்வதன்ய: பாணிப்யாம்-அபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வஞ்சாஸமதிகம்

சரண்யே லோகானாம் தவ கி சரணாவேவ நிபுணௌ

5. “தேவி பூஜையின் மஹிமை – ஸ்த்ரீ புருஷ வசியம்” 

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன-லேஹ்யேன வபுஷா

முனீனா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

6. “கடைக்கன் பார்வை – புத்ர சந்தானம்” 

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸமந்தோ மலயமரு-தாயோகன-ரத:

ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிசுதே காமபி க்ருபாம்
அபாங்கத்தே லப்த்வா ஜதித-மனங்கோ விஜயதே

இப்படி 100 பாடல்கள் வரை உள்ளது. முழு பாடலும் அடங்கிய PDF FILE டவுன்லோட் செய்ய  கீழே தரப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://rightmantra.com/wp-content/uploads/2015/07/Soundharyalahari.pdf

===============================================================================

அடுத்து :

நம் காலடி பயணத்திற்கான வித்து ஊன்றப்பட்டது எங்`கே?

ஆதிசங்கரர் ஜன்ம பூமி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

தங்க நெல்லி மழை பொழிந்த ‘சொர்ணத்து மனை’ – ஒரு நேரடி ரிப்போர்ட்!

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also Check :

செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!

காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!

===============================================================================

[END]

11 thoughts on “சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

  1. சௌந்தர்யலகரி பிறந்த கதை தங்கள் தளத்தின் மூலம் இப்பொழுதான் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன். அதற்கு இறைவனுக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரம்.

    நம் ஈசனே எழுதிய பாடல் அல்லவா. எல்லோரும் படித்து பயன் பெறுவோம்.

    சங்கரர் எழுதிய உமா மகேஸ்வரர் ஸ்லோகத்தையும் பதிவு செய்யவும்.

    ரமீஸ் வரைந்த ஓவியம் அருமையோ அருமை. என் மனம் கயிலைக்கு சென்று விட்டது பாராட்டுக்கள் ரமீஸ் அவர்களுக்கு

    நாங்கள் சௌந்தர்ய லகரி புத்தகத்தை உழவாரப் பணியில் பரிசாக பெற்றதற்கு நன்றி தெரிவிக்கிறேன்

    இந்த பதிவை படிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் .

    வாழ்க வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. சார்,

    உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அம்சமான photos கிடைக்குது. பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு. முந்தய ஒரு பதிவில் அண்ணாமலையாரும் மிக மிக அற்புதம்.

  3. ஆடி மாதம் பிறக்கும் முன்னே அன்னையின் தரிசணம். என் கணினியின் முன் பக்கத்தில் பதிந்து விட்டேன். ஆடி மாதம் முழுக்க அன்னையை தரிசிக்க செய்தமைக்கு நன்றி.
    சௌந்தர்ய லகரி ஆதிசங்கரரால் பூர்த்தியாக இறைவன் செய்த திருவிளையாடலை அறிந்து மகிழ்ந்தேன்.
    இசைஞானி அவர்களால், ஆனந்த லகரியின் ஒருபாடலையாவது பாடும் பேறு பெற்றுள்ளோம்.
    நம் தளத்தின் ஓவியர் வரைந்த ஓவியம் பொருத்தமாக உள்லது, அச்சகோதரருக்கு ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மிகமிக உன்னதமான தகவல்கள், மிக்க நன்றி.

  4. ஆடி மாத வெள்ளிகிழமையில் இன்று – அம்மன் தரிசனம் கிடைக்க பெற்றேன். காலையில் அலுவலகத்திற்கு வரும் வழியில் அம்மன் கோயில்களில் கோலாகலமாக இருந்தது..சற்று மனம் சோர்வுற்றது (அம்மனின் தரிசனம் ஏங்கி? ) .இன்று பதிவை படித்த பின்பு..ஆடி மாத முழு கொண்டாட்டமும் வந்து விட்டது.இது யாம் செய்த பாக்கியம் …

    அதோடு தாங்கள் ஏன் “சௌந்தர்யலகரி” நூல் வாங்க சொன்னீர்கள் என்று இப்போது தான் புரிகிறது. “சௌந்தர்யலகரி” பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.பதிவிற்கு சிறப்பு தருவது சகோதரர் ரமீஸ் வரைந்த ஓவியம்.ஓவியத்தை கண்டிப்பாக மனகண்ணில் நிறுத்தினால் “சௌந்தர்யலகரி” பற்றிய பதிவு நம் மனதை விட்டு அகலாது.

    சகோதரர் ரமீஸ் – தங்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் .

    நன்றி அண்ணா..

  5. டியர் சுந்தர்,

    இப்பதிவில் தாங்கள் வெளியிட்டுள்ள அம்மையின் படத்தையும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தையும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொண்டேன். மிக்க நன்றி.

  6. வணக்கம் சுந்தர். முதலில் திரு ரமிஸ் அவர்களக்கு வாழ்த்துக்கள்,படம் கொள்ளை அழகு.கண்களாலே ஆசிர்வதிக்கும் அன்னை மீனாக்ஷி அழகோ அழகு.நல்ல பதிவுக்கு நன்றி.

  7. திரு ரமீஸ் அவர்களுக்கும், மற்றும் முகமதிய அன்பர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் தின வாழ்த்துக்கள்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  8. இந்த பதிவை படித்தவுடன் வாரா வாரம் வெள்ளிக் கிழமை சௌந்தர்ய லகரி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது . நேற்று காலையில் எஸ் லகரி சுலோகம் சொன்னேன். 20 நிமிடங்கள் ஆனது. நேற்று சொன்னது இரண்டாவது முறை. புத்தகம் பரிசாக கிடைத்தவுடன் ஒரு முறை சொன்னேன், இனிமேல் வாரா வாரம் தொடரும் …. தங்களுக்கு நன்றிகள் பல .

    சௌந்தர்ய லகரி பிறந்த கதையையும் என் அம்மாவிடம் சொன்னேன், அவர்களுக்கும் சிவன் எழுதியது என்று இப்பொழுதான் தெரியும் என்று சொன்னார்கள். தன வாழ்த்தையும் தங்கள் தளத்திற்கு தெரிவித்தார்கள்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  9. சௌந்தர்யலஹரி பிறந்த கதையை தெரிந்து கொண்டோம்… அருமை…

    நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *