Home > 2015 > September

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

நமது கணக்கு வேறு இறைவனின் கணக்கு வேறு என்பதை உணர்த்தும் ஒரு அருமையான சம்பவம் இது. நமக்கு பல பாடங்கள் இதில் ஒளிந்திருக்கின்றன! மகாராஷ்டிர மாநிலத்தில் 16 ஆம் நூற்றாண்டு அவதரித்த மகான் சமர்த்த ராமதாஸர். மாவீரன் சத்ரபதி சிவாஜியின் குரு இவர். தான் வாழ்ந்த காலத்தில் பல அதிசயங்களை இவர் புரிந்திருக்கிறார். தனது யோக சக்தியின் மூலம் சத்ரபதி சிவாஜியை பல ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். பதிமூன்று அட்சரங்கள் கொண்ட ஸ்ரீராமபிரானது

Read More

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) நகரில் அமைந்துள்ள தொன்மையான காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 27/09/2015 ஞாயிறன்று மாலை நமது பௌர்ணமி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பல்வேறு மேடைகளில் நாம் இதுவரை பேசியிருந்தாலும் அவை அனைத்தும் நமது மேடைகள். நாம் நடத்திய விழாவின் மேடைகள். எனவே என்ன பேசவேண்டும் என்பது குறித்த பதட்டம் நம்மிடம் இருந்தது கிடையாது. அரிதாக வெளி மேடைகளில் தோன்றியிருந்தாலும் அவை வரவேற்புரைக்காக மட்டுமே. ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படி

Read More

தெய்வத்தான் ஆகா தெனினும்….

விதியை மதியால் வெல்ல முடியுமா முடியாதா என்று தெரியாது. ஆனால் முயற்சியால் நிச்சயம் முடியும் என்று மட்டும் தெரிகிறது. அதை விளக்கும் விதத்தில் ஒரு அற்புதமான கதை இங்கே பகிரப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வாட்ஸ்ஆப்பில் நாம் கண்ட கதை. உங்களில் சிலர் படித்திருக்கக்கூடும். இருப்பினும் மிக மிக அருமையான கருத்தை கொண்டிருப்பதால் பலரிடம் கொண்டு சேர்க்க வேண்டி இங்கே நம் தளத்தில் பகிர்கிறோம். ஊழையும் உப்பக்கம் காண்பர்... கடற்கரை ஓரமாக பெரிய மரம்

Read More

எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்!

"நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்" என்று கூறுவார்கள். பல சமயங்களில் பிரமிக்கத்தக்க பாடங்களை எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது உண்டு. பொதுவாக மனிதர்களை சரியாக எடைபோடுவதில் நாம் தவறுவதில்லை. காரணம், கடந்து வந்த பாதையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், சந்தித்த நபர்கள்! நமது கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆனால் அரிதினும் அரிதாக சில சமயம் நமது கணிப்புக்கள் உல்டாவாகி போவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்போம். முக்கியப் பிரமுகர்களின்

Read More

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில் ஹவுஸிங் போர்டு குவார்ட்டர்ஸ் ஒன்று உள்ளது. அந்த குவார்ட்டர்ஸில் குடியிருக்கும் ஒருவர் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு செல்லும்போது நமது 'தினசரி பிரார்த்தனை' படத்தை அங்கு பார்த்திருக்கிறார். அந்த பிரார்த்தனை வரிகள் பிடித்துப் போக, அதை மொபைலில் படமெடுத்துக்கொண்டு வந்தவர், அதிலிருந்த அலைபேசி எண் மூலம் நம்மை தொடர்புகொண்டு அந்த படம் தமக்கும் வேண்டும் என்றார். நாம் சாஃப்ட் காப்பியை மின்னஞ்சல் அனுப்பி அவரை பிரிண்ட் எடுத்துக்கொள்ளச்

Read More

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

இரண்டு புத்தகங்கள் வெளியிடும் இந்த மலையை தாண்டும் நிகழ்வு எப்படி நமக்கு சாத்தியமானது என்று உங்களில் பலருக்கு ஒரு சந்தேகம் இருப்பது நமக்கு தெரியும். அதற்கு விடை கூறுவதற்கு முன்பு உங்களிடம் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறோம். நம் தளத்தின் வளர்ச்சி குறித்து நமக்கு மிகப் பெரும் நம்பிக்கை இருக்கும் அதே நேரம், நமக்கு ஒரு அச்சம் அடிமனதில் இருந்து வந்தது. CONCEPT THEFT எனப்படும் 'எண்ணத் திருட்டு' குறித்த பயம் தான்

Read More

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

நமது நூல் வெளியீட்டு விழா பற்றிய செய்திகளுக்கு அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது நமக்கு தெரியும். நூல் வெளியீடு தொடர்பான ஏற்பாடுகளிலும் பணிகளிலும் கடந்த பல நாட்களாக ஒய்வு ஒழிச்சலின்றி ஈடுபட்டு வந்தமையால், ஒரு நாள் ரெஸ்ட் தேவைப்படுகிறது. உடலுக்கு அல்ல. மனதிற்கு. உங்களிடம் பகிர்ந்துகொள்ள வெளியீட்டு விழாவில் எண்ணற்ற விஷயங்கள் நடந்தன. ஒவ்வொன்றும் ஒரு வகையில் ஒரு மாணிக்கம் போன்றது.  சுருங்கச் சொன்னால் உங்களுக்கு ஒரு பெரும் விருந்தே காத்திருக்கிறது. புகைப்பட

Read More

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

எல்லாம் வல்ல இறைவனின் கருணையினாலும் என்றும் நம்மை வழிநடத்தும் நம் குருமார்களின் அருளாலும், தக்க சமயத்தில் கைகொடுத்த நண்பர்களாலும் நம் வாசகர்களின் மகத்தான பிரார்த்தனையாலும் நமது இன்றைய நூல் வெளியீட்டு விழா மிக மிக சிறப்பாக நடந்தேறியது. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வருகை தந்து நமது நூலை வெளியிட்டு நூல்கள் குறித்து தங்கள் பேருரையை ஆற்றி நம்மை பெருமைப்படுத்தினர். நூல்களும் இன்று அரங்கத்தில் நன்கு விற்பனையாகின. இந்த வெற்றியை

Read More

திருநீற்றின் பெருமையை காக்க உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார் – Rightmantra Prayer Club

கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர் ஏனாதிநாத நாயனார். அந்த நாட்களில், சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பேர் இருந்தது. அரசர்கள் சேனாதிபதிக்கு ஏனாதிப்பட்டம் என்னும் ஓர் ஆபரணம் நெற்றியில் அணியத் தருவார்கள். அரசர்களுக் கும், அவருடைய படைவீரர்களுக்கும் வாள் பயிற்சி கற்றுதரும் வீரராக வாழ்ந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். மிகச்சிறப்பான பயிற்சி யின் மூலமாக முதன்மை பெற்று, நல்ல வரு மானமும் பெற்று வாழ்ந்தார். உயர்ந்த

Read More

மரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்ட சில ஜீவன்கள்! – நெகிழ வைக்கும் நிகழ்வு!!

கர்நாடக மாநிலம். கார்வார் நகரம். செப்டம்பர் 13, 2015 ஞாயிறு. மாலை 7.00 மணி. இருள் கவ்வத் தொடங்கிய நேரம். கைகா அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு. முதுநிலை மேலாளர் (Senior Manager) திரு.ரவிச்சந்திரன் தனது மனைவி திருமதி.கலாவதியுடன் அருகேயுள்ள சிவன் கோவிலுக்கு கிளம்புகிறார். கிளம்பும்போதே வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. எனவே குடையுடன் கிளம்புகிறார்கள். மெலிதான தூறல். பக்கத்தில் தானே போய்விடலாம் என்று தம்பதிகள் நடக்கிறார்கள். சில நூறு அடிகள்

Read More

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி…

2014 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி. திருவள்ளூரில் உள்ள நமது நண்பரும் வாசகருமான திரு.மனோகரன் அவர்களின் வீட்டுக்கு அன்று சர்ப்ரைஸ் விஜயம் செய்யலாம் என்று தீர்மானித்தோம். வானம் மழை மேகங்களை போர்த்தியபடி இருந்ததால், அந்தக் குளுமையை அனுபவித்தபடி நமது வீட்டிலிருந்து (ஐயப்பன்தாங்கல்) திரு.மனோகரனின் வீடு உள்ள திருவள்ளூருக்கு டூ-வீலரிலேயே போய்விடலாம் என்று கருதி, நமது பைக்கில் திருவள்ளூர் புறப்படுகிறோம். போகிற வழியில், திடீரென்று ஏதோ தோன்ற திருமழிசை -

Read More

மகத்துவம் மிக்க தமிழக பிள்ளையார்கள் – விநாயகர் சதுர்த்தி SPL 1

விநாயகர் சதுர்த்தி வருகிறது. நம் தளத்திற்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பு நீங்கள் அறிந்ததே. 2012 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாளில் துவக்கப்பட்டது தான் நம் தளம். விநாயகர் என்றாலே மங்களம் என்று பொருள். வெற்றியை தருபவர் என்று பொருள். எனவே தான் எந்த செயலை தொடங்குவதற்கு முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகிறோம். பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு நம் தளத்தில் விசேஷ பதிவுகள் வரவிருக்கின்றன. நீங்கள் எதிர்பார்க்காத கோணத்தில் பதிவு

Read More

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சேர்ந்து ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வழியேச் சென்ற ஒருவர் அங்கு நடந்த பணிகளை ஆர்வத்தோடு பார்த்தார். மரவேலைகள் செய்துகொண்டிருந்த ஒருவரிடம் சென்று, "ஐயா, தாங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "பார்த்தால் தெரியவில்லை மரங்களை இழைத்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஆர்வமற்ற ஒரு பதில் வந்தது. அடுத்து சிற்பம் ஒன்றை வடித்துக் கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்!" என்று சலிப்புடன்

Read More

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்" என்று காலனுக்கே சவால் விட்டவர் பாரதி. அவர் மரணம் இன்னும் ஒரு புரியாத மர்மம் தான். இருப்பினும் பாரதியின் இறுதிக்காலத்தில் அவருடன் இருந்தவர்கள் கூறியதை வைத்து வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சில விஷயங்களை கூறுகின்றனர். இன்று செப்டம்பர் 11 பாரதி நினைவு நாள். அது தொடர்பான பதிவு தான் இது. சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்து

Read More