Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > மகத்துவம் மிக்க தமிழக பிள்ளையார்கள் – விநாயகர் சதுர்த்தி SPL 1

மகத்துவம் மிக்க தமிழக பிள்ளையார்கள் – விநாயகர் சதுர்த்தி SPL 1

print
விநாயகர் சதுர்த்தி வருகிறது. நம் தளத்திற்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பு நீங்கள் அறிந்ததே. 2012 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாளில் துவக்கப்பட்டது தான் நம் தளம். விநாயகர் என்றாலே மங்களம் என்று பொருள். வெற்றியை தருபவர் என்று பொருள். எனவே தான் எந்த செயலை தொடங்குவதற்கு முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகிறோம்.

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு நம் தளத்தில் விசேஷ பதிவுகள் வரவிருக்கின்றன. நீங்கள் எதிர்பார்க்காத கோணத்தில் பதிவு வரும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? ஆனைமுகன் அருளால் இன்றோ நாளையோ அவை வழங்கப்படும்!

இப்போதைக்கு புத்தக வெளியீட்டு விழா பணிகளில் இருக்கிறோம். இருப்பினும் ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்காக இதோ ஒரு சிறிய அப்டேட். விநாயகரைப் பற்றி படிப்பதே ஒரு சுகானுபவம் தான். எனவே இந்த பதிவு உங்களுக்கு ஒரு மென்மையான இனிமையான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

கோவில்களை பொருத்தவரை நாம் ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட தொன்மையான கோவில்களுக்கு சென்று தரிசிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளோம். அத்தகைய கோவில்களை பற்றியே நமது ‘ஆலய தரிசனம்’ பகுதியில் பதிவுகளும் அளித்து வருகிறோம். உழவாரப்பணியும் செய்து வருகிறோம். ஒரே ஒரு விதிவிலக்கு… பிள்ளையார் கோவில்கள். தோஷமற்ற ஒரே தெய்வம் பிள்ளையார் தான். எந்த தோஷத்தையும் போக்குபவர் இவர். அதாவது ஆகம விதிகளுக்குள் இவர் அடங்கமாட்டார்.

Tirupattoor
திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் – விசாலாட்சி கோவில் குளக்கரை விநாயகர்

குளக்கரையிலும், மரத்தடிகளிலும், முட்டுச் சந்திலும், எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பிள்ளையாருக்கு கோவில் எழுப்பலாம். (சட்டத்தை மீறாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல்!).

தமிழகம் முழுதும் உள்ள பல்வேறு பிரசித்தி பிள்ளையார்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் பழங்காமூரில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நீண்டகாலமாக உள்ள புற்று ஒன்று விநாயகரின் வடிவமாகவே மாறி உள்ளது. இந்த விநாயகர் பக்தர்களின் பாவங்களைப் போக்குகிறார்.

* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் வணங்க வேண்டும். பவழத்தால் விநாயகர் செய்ய வசதியில்லாதவர்ள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம். பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

* திருநெல்வேலியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் காரையாரில் உள்ள அருவிக்கரை விநாயகருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். இடதுபுறம் கங்கையும், வலதுபுறம் பார்வதிதேவியும் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குமாம்.

* மதுரை மீனாட்சி திருக்கோவில் வளாகத்தில் திறந்தவெளியில் வன்னிமரத்தடியில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரை சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் உள்ளன. அவற்றை ஒரே வேளையில் ஒன்றாக தரிசிப்பதால் நவக்கிரக தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பர்.

* ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த இடையன்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் எதிரே உள்ள மூஞ்சூருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

Ganesha
திருஇலம்பையங்கோட்டூர் விநாயகர்

* காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவாலயத்தில் அம்மையப்பனுடன் அருள்புரியும் சோமகணபதியை தரிசிக்கலாம்.

* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்ரம் தணிக்க தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் பொறித்த தாடங்கங்கள் அணிவித்த பிறகும், உக்ரம் தொடர்ந்தது. உடனே ஆதி சங்கரர் அன்னையின் முன் விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய, உடனே தேவி குளிர்ந்தாள். அந்த விநாயகரை இன்றும் தரிசிக்கலாம்.

* சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமத்தில் புவனேஸ்வரி அன்னையின் எதிரே சுவாமிநாதன் எனும் பெயரில் முருகப் பெருமான் அருள, விநாயகர், கமல விநாயகர் எனும் திருநாமத்துடன் தேவியின் கருவறையருகே சந்நதி கொண்டுள்ளார்.

* திருப்பாதிரிப்புலியூர் எனும் கடலூரில் அன்னை பெரிய நாயகியின் தவத்திற்கு உதவிய விநாயகர் கையில் பாதிரி மலர்களை ஏந்தி தரிசனமளிக்கிறார்.

* ஆந்திர மாநில ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு சாட்சி கணபதி அருள்புரிகிறார். கோயிலுக்கு வருவோரை சாட்சியாக குறித்து வைத்துக் கொள்ளவே இவை இரண்டுமாம். இவரை வணங்கியபின்தான் பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனரை தரிசிக்க வேண்டும் என்பது நியதி.

* காஞ்சிபுரம்-வேலூர் பாதையில் உள்ள திருவலம் எனும் திருத்தலத்தில் மாங்கனிக்காக அம்மையப்பனை வலம் வந்த விநாயகரையும் அந்த விநாயகருக்கு மாங்கனியை அளித்த தனுமத்யாம்பாளையும் தரிசித்து மகிழலாம்.

* சென்னையில், நங்கநல்லூர் செல்லும் வழியில் உள்ளகரம் எனும் இடத்தில் விஜய கணபதி கோயில் கொண்டருள்கிறார். இங்கு விஜயகுமாரசுவாமி, விஜயதுர்க்கை, விஜய மணிகண்டன், விஜயமாருதி என எல்லோருமே விஜய எனும் அடைமொழியுடன் வணங்கப்படுகின்றனர். இந்த ஆலயத்தில் தினந்தோறும் கணபதி ஹோமம் நடைபெறுவது சிறப்பு.

* பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது வந்த அமிர்தத்தை, தன்னை வணங்காததால் விநாயகர் மறைத்தார். தவறை உணர்ந்த தேவாசுரர்கள் அவரை வணங்க, அமிர்தத்தை காட்டியருளிய விநாயகரை திருக்கடவூரில் கள்ளவாரணப் பிள்ளையார் எனும் பெயரில் தரிசிக்கலாம்.

* லிங்கம் போன்ற பாணத்தில் வடிவம் பெற்ற வித்தியாசமான விநாயகரை தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் காணலாம். விழுது விடாத மூன்று ஆலமரங்கள் இத்தலத்தில் மும்மூர்த்திகளாக வணங்கப்படுகின்றன.

* திருப்பூவனம் திருத்தலத்தில் மந்திர விநாயகர், கற்பக விநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர் என மூன்று விநாயகப் பெருமான்கள் திருவருள் புரிகின்றனர்.

Thiruppainjeeli
திருப்பைஞ்ஞீலி ஞீலவனேஸ்வரர் கோவில் விநாயகர்

* சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலை சென்றபோது, ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் கணபதி பூஜையை முடித்துவிட்டுத்தான் வருவதாகக் கூறிவிட, அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால், கணபதி விஸ்வரூபம் எடுத்து ஔவையை அவர்களுக்கு முன்பே கயிலையில் சேர்த்தார். அந்த திருவடிவத்தை, பெரியானை கணபதி எனும் பெயரில் திருக்கோவிலூரில் தரிசிக்கலாம்.

* கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி நடைபெற்றது. அப்போது திடீரென மன்னன் கணக்குப்பிள்ளையிடம் சந்தேகப்பட்டு கணக்கு கேட்க, கணக்கெழுதாத அவர் கணபதியிடம் புலம்ப, கணபதி கணக்கு விவரங்களை துல்லியமாக அவனுக்கு அறிவித்தார். அந்த விநாயகர் கணக்கு விநாயகராக இன்றும் அருள் புரிகிறார்.

* காஞ்சிபுரம் காமாட்சி ஆலயத்தில், சிந்தூர கணபதி, விக்ன நிவாரண கணபதி, பிரசன்ன கணபதி, இஷ்டசித்தி கணபதி, துண்டீர மகாராஜ கணபதி, சக்தி கணபதி, சௌபாக்ய கணபதி, சந்தான கணபதி, வரசித்தி கணபதி, திருமஞ்சன கணபதி, மற்றும் சந்நதி வீதியில் ஏலேல விநாயகர் என ஏகப்பட்ட கணபதிகள் அருள்கின்றனர்.

* தன் தந்தையான ஈசனை இஷ்ட தெய்வமாக வழிபட்ட நீலகண்ட விநாயகரை சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தனி சந்நதியிலும், தன் தாயைப் போல் வடிவெடுத்த விக்னேஸ்வரி எனும் விநாயக வடிவை ஆலய தூணிலும் தரிசிக்கலாம்.

Vanni mara vinayagar

* நாவல், பவளமல்லி, வில்வம், அரசு, நெல்லி, அத்தி, மந்தாரை, வேம்பு, வன்னி ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் சூழ வீற்றருளும் விநாயகரை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தரிசிக்கலாம். இவரை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.

* நாட்டரசன்கோட்டை அருகே உள்ள வாணியங்குடி எனும் ஊரில் அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்தில் விநாயகப் பெருமான் அம்பிகை வடிவில் வழிபடப்படுகிறார்.

Vanni mara vinayagar2

* காஞ்சிபுரம் திருவோணகாந்தன் தளி கருவறை மண்டபத்து முகப்பில் விநாயகர் சந்நதி ஒன்று உண்டு. அவரருகில் நமது காதுகளை ஒட்டி வைத்துக் கேட்டால் ஓம் எனும் சத்தம் ஒலிக்கிறது. அதனால் அந்த விநாயகரை ஓங்கார ஒலி விநாயகர் என்றழைக்கிறார்கள்.

* ஓர் அங்குலம் முதல் ஓரடி வரை உள்ள வித விதமான விநாயகர்களை தரிசிக்க கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். சோழர்கால மன்னர்களின் அற்புதப் படைப்பு அவை.

* தன் இரு அன்னையரான கங்கையும், பார்வதியும் இருபுறங்களிலும் வீற்றிருக்க திருவருள் புரியும் விநாயகரை திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில் தரிசிக்கலாம்.

* விடியல் முதல் இரவு வரை சுடச்சுட நெய் அப்பம் தயாரித்து அதை கணபதிக்கு அபிஷேகம் செய்யும் ஆலயம், கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் உள்ளது. பின் அந்த அப்பம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

* மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயக கோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

* ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

* கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத் தடவி அபிஷேகம் செய்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

* மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

* விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் தோன்றும் விநாயகரை தரிசிக்கலாம். பொய் சத்தியம் செய்தால் தீங்கு நேரும் என்பதால் இவர் முன் யாரும் பொய் சத்தியம் செய்வதில்லை.

* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

(கோவில்கள் தகவல் உதவி : தினகரன்.காம்)

==============================================================

Also check :

விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு!

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளிப்பட்ட பெரியவா அருள் – குரு தரிசனம் (9)

==============================================================

[END]

5 thoughts on “மகத்துவம் மிக்க தமிழக பிள்ளையார்கள் – விநாயகர் சதுர்த்தி SPL 1

  1. பலவிதமான விநாயகரைப் பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் ஊரான மதுரை வன்னி மரத்தடி விநாயகரும் இந்த பதிவில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

    தாங்கள் மேலும் மேலும் பல அறிய சாதனையை படைக்க வாழ்த்துக்கள்

    விநாயகரை பற்றிய அறிய தகல்வல்களை அறிய ஆவல்

    வாழ்க வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. முழு முதற் கடவுளான கணபதியை தொழுதே எந்த செயலிலும் இறங்க வேண்டும். விநாயகரை பற்றிய இந்த பதிவு மிக அருமை. அவரின் சிறப்பை இதை விட யாரும் அழகாக விளக்க முடியாது. அவரின் சதுர்த்தி தினத்தில் தொடங்கியதால்தான் நம் தளம் மிக நன்றாக முன்னேறி வருகின்றது. ஆனைமுகனை தொழ அனைத்து துன்பங்களும் பனி போல் விலகி ஓடும்.

    ஓம் கணபதியே நமஹ !

  3. Superb article on Sri vinayagar. Marvelous job in compiling so many vinayagar temples. Normally it is said to give so much of punniyam of having darshan of as many Vinayagar as possible during Vinayagar chathurthi. U given us the opportunity by explaining equivalent to having darshan of So many Vinaga Peruman. Thank u.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *