Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

print
பிள்ளையார் பழம்!

குழுமணி நாராயண சாஸ்திரி தான் எழுதிய வால்மீகி இராமாயண உரையை பகவானிடம் சமர்பிக்க விரும்பினார். வெறுங்கையோடு போகக்கூடாது என்று ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினார்.

Ramana thiruvaliyadal thirattuஒரு விநாயகர் கோவிலை கடந்து தான் வரவேண்டியிருந்தது. கோவிலைக் கடக்கும்போது மானசீகமாக ஒரு பழத்தை விநாயகருக்கு அர்ப்பணம் செய்தார்.

ஆஸ்ரமம் வந்து சேர்ந்தவுடன் பகவானை வணங்கி, அந்த பழங்களை அவர் முன்னே வைத்தார். அங்கிருந்த சேவகர் அதை உள்ளே எடுத்து வைக்க முயன்ற போது,

பகவான், “கொஞ்சம் பொறு! பிள்ளையார் பழத்தை அவர் எடுத்துக்கட்டும்!” என்றார்.

தான் வந்த காரணத்தை சாஸ்திரி கூறும் முன், “ராமாயணத்தை படிங்கோ. கேட்கலாம்!” என்றார்.

இவர் தான் தக்ஷிணாமூர்த்தியோ?
இவர் தான் தக்ஷிணாமூர்த்தியோ?

அதீத சிற்றம்பலம்

ஒரு மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் பகவானிடம், வந்து இன்று இரவு பகவான், தட்சிணாமூர்த்தி அஷ்டகதிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

பகவானும் சரி என்று கூறினார். எல்லோரும் ஓல்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்.

பக்தர்கள் பகவான் விளக்கத்தை ஆரம்பிப்பார் என்று காத்திருந்தனர்.

பகவான் எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்தார்.

ஓர் அசைவும் இல்லை.

ஓல்டு ஹாலில் பரிபூரண மௌனம் விளங்கியது.

ஓல்டு ஹால் அதீதச் சிற்றம்பலமாகியது.

சிறிது நேரம் சென்ற பின், பகவான் எழுந்தார். பக்தர்கள் அப்போது தான் பொழுது புலர்ந்ததை உணர்ந்தார்கள்.

பகவான் மலையில் உலாவச் சென்றார்.

(தொகுப்பு  – ‘ரமண திருவிளையாடற் திரட்டு’)

=================================================================

ரமணர் உணர்த்திய தக்ஷிணாமூர்த்தி தத்துவமும் கந்தபுராணமும்!

வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும்.  ரமணரிடம் தட்சிணாமூர்த்தி அஷ்டகதிற்கு விளக்கம்கேட்டு காத்திருந்த அனைவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதெப்படி அனைவரும் மௌனத்தில் இருந்தபோதே பொழுது புலர்ந்துவிட்டது? அமைதியான இடத்தில ஒரு ஐந்து நிமிடம் கூட நம்ம ஆட்களால் இருக்கமுடியாதே…? என்பது தான் அது.

கந்தபுராணத்தில் அதற்கு ஒரு சம்பவத்தை இங்கே உதாரணமாக கூறமுடியும்.

இந்திரனின் மகன் ஜெயந்தன் உட்பட அனைவரையும் சூரபன்மன் சிறையில் அடைத்துவிட, சூரபன்மனின் கொடுமை தாளாமல், தேவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவின் தலைமையில் சிவபெருமானை காண வந்தனர்.

நந்தி அவர்களை தடுத்து, “இறைவன் மோன நிலையில் இருக்கிறார். அவரை தற்போது தொந்தரவு செய்ய இயலாது, சற்று பொறுங்கள்” என்றார்.

Dakshinamoorthy

சிவபெருமான் கைலாயத்தில் மோன நிலையில் இருந்த அந்த கோலமே தக்ஷிணாமூர்த்தி கோலமாகும். மோன நிலையில் இருந்து சனகாதி முனிவர்களுக்குச் சின் முத்திரையால் சிவஞானம் அருளினார். சிவபெருமான் மவுன யோகத் தோற்றத்தால் அண்டமனைத்திலும் எல்லா உயிர்களுக்கும் காமம் தோன்றாமல் இயக்கம் தடைபட்டது. சிவ-பார்வதி சங்கமத்தால் பிறக்கும் புத்திரனாலேதான் சூரபன்மன் அழிவான் என்று தேவர்களுக்கு தெரியும். சிவபெருமான் இப்படி மோனத்தில் இருந்தால் சிவமைந்தன் எப்படி தோன்றுவான்?

இதற்கிடையே அவரது மோனநிலையை மாற்றவிரும்பிய மன்மதனையும் நெற்றிக் கண் திறந்து எரித்துவிட்டார் சிவபெருமான். ஒரே துருப்புச் சீட்டான மன்மதனின் கதையும் முடிந்துவிட்ட நிலையில் செய்வதறியாது தவித்தனர் தேவர்கள்.

மன்மத தகனம் முடிந்த நிலையில் சிவபெருமான் சனகாதி முனிவர்களிடம் “மோனமே ஞானநிலை, எம்மை மனத்தில் இருத்தி ஒருமையுடன் நினைப்பதே சாந்தி அளிக்கும்” என்று கூறி அவர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பினார். இதற்கிடையே தேவர்கள் காத்திருக்கும் தகவல் நந்தி மூலமாக தெரியவந்தபோது பல யுகங்கள் முடிந்துவிட்டன.

இதன் மூலம், தக்ஷிணாமூர்த்தி வடிவம் என்பது காலவெள்ளத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பது புலப்படும்.

=================================================================

For earlier episodes…

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=================================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

=================================================================

[END]

7 thoughts on “பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

  1. `குரு வாரத்தில் குருவின் மகிமையை இரண்டு பதிவுகளாக படித்ததில் மிக்க மகிழ்ச்சி. குருவிற்கு தெரியாதா தனது சீடன் எதற்க்காக வந்து இருக்கிறார் என்று

    ரமணர் உணர்த்திய தக்ஷிணாமூர்த்தி தத்துவமும் அதை தாங்கள் கந்த புராணத்துடன் compare செய்து புரிய வைத்தது அருமையோ அருமை .

    ரமணர் படம் அருமையோ அருமை

    நன்றி
    உமா வெங்கட்

  2. என்னை அறியாமல் விளையாட்டாக திருவண்ணாமலை மலை மீது பகவான் ரமணர் வாழ்ந்த இடத்தில் ஒரு 15 நிமிடங்கள் இருந்தேன் (18 வருடங்களுக்கு முன்) இப்பொழுதுதான் தெரிகிறது நாம் சென்ற இடம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று ஆனால் அதற்குப்பின் 12 முறை கிரிவலம் சென்றிருக்கிறேன் இன்னும் அந்த இடத்திற்கு (பகவான் வசித்த அந்த குடில்) ஒரு முறை கூட போக முடியவில்லை. எல்லாம் அவன் திருவிளையாடல் இன்று ரமணாஸ்ரமம் இருக்கும் இடத்திற்குப்பின்னால் மலை அடிவாரத்தில் பகவான் வசித்த மலைக்குகைக்கு செல்ல வழி உள்ளது அருகிலேயே ஒரு சுனை உள்ளது (இயற்கை நீரூற்று ) அதுதான் அங்கு குடிநீர் ஒரு 30 நிமிடங்கள் அங்கு இருந்தால் நிச்சயம் நம் துன்பங்கள் எல்லாம் நம்மை விட்டு அகன்று விட்ட ஒரு நிம்மதி கிடைக்கும் நம் வாசகர்கள் பல பேர் அங்கு சென்றிருக்கலாம் நீங்களும் சென்றிருக்கலாம் அதைப்பற்றி தெரியாதவர்களுக்காக இங்கு இதை சொல்கிறேன்.

    நாங்கள் யாரும் அறிந்திராத பல அற்புதங்களை தொகுத்து அளிக்கும் தங்கள் பணிக்கு பகவான் உறுதுணையாக இருக்கிறார். இந்தத்தளம் மென்மேலும் வளர பகவான் மலரடியில் என் பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன். .

    1. மிக முக்கியமான தகவல் பகிர்ந்துள்ளீர்.நன்றி

  3. உள்ளன்போடு குருவின் திருவடி சரணடைவோம். இறையருள் பெறுவோம்

    ரமணரின் படங்கள் தரிசத்தினால் ஏற்பட்ட பரவசத்திற்கு அளவேயில்லை

    திரு சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  4. குருவே சரணம்………… ரமண மகரிஷியின் திருவிளையாடல்களை தெரிந்து கொள்ளும் பேறு கிடைத்தது……….நன்றிகள் பல………..

  5. வாழ்க வளமுடன்

    சுந்தர் சார் சூப்பர்

    நன்றி

  6. வணக்கம் சுந்தர். மிகவும் அருமை . இரண்டு சம்பவங்களையும் தொடர்புபடுதியவிதம் அருமை.
    படமும் நன்றாக உள்ளது . குருவே சரணம். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *