Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > “மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

print
ம் தள வாசகர் நண்பர் நாராயணன் அவர்கள். இவர் தந்தை திரு.சாரங்கன், காஞ்சியில் ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும், சங்கர மடத்துக்கும் அடிக்கடி செல்வதுண்டு. மடத்திற்கு சென்று மஹா பெரியவாவிடம் அடிக்கடி ஆசி பெற்று வருவார். அப்போது மஹா பெரியவாவின் மாணவர்களில் ஒருவருடன் நன்கு அறிமுகம் ஏற்பட்டது.

நண்பர் நாராயணன் நம்மிடம் ஒரு நாள், “சுந்தர்ஜி, எனக்கு காஞ்சிபுரத்தில் மஹா பெரியவாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற ஒருவரை நன்கு தெரியும். நமது தளத்திற்காக பெரியவாவின் மகிமைகளை அறிந்துகொள்ள அவரை நேரில் சந்திக்கலாம். உங்களின் ‘குரு மகிமை’ தொடருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அவரது அப்பாயிண்ட்மென்ட்டை நான் வாங்கித் தருகிறேன். என்னுடன் அவரை சந்திக்க வாருங்கள்!” என்றார்.

Kanchi Kamakshi Temple

கரும்பு தின்னக் கூலியா? “நிச்சயம் போகலாம் நாராயணன்…” என்றோம்.  சொன்னோமே தவிர நம்மால் அடுத்தடுத்த தொடர்ந்து நமக்கிருந்த பல்வேறு கமிட்மெண்ட்கள் காரணமாக செல்ல முடியவில்லை. மேலும் கையில் ஏற்கனவே மகா பெரியவா தொடர்பாக நாம் சேகரித்து வைத்திருக்கும் விஷயங்களை தளத்தில் அளித்துவிட்டு அதற்கு பிறகு இவரை சந்திக்க செல்லலாம் என்பது நமது எண்ணம். இருப்பதை இறக்கி வைத்தால் தானே புதுவிஷயங்களை உற்சாகமாக எழுதமுடியும்? பதிவுகளை மனதில் வைத்துக்கொண்டு அவற்றை எழுதாமல் இருப்பது ஒரு வித அவஸ்தை. 10 மாதம் சுமந்த பின்னரும் டெலிவரி செய்ய முடியாமல் தவிக்கும் தாய் போல….

இருப்பினும் நண்பர், நம்மை விடாப்பிடியாக அழைத்து வந்ததால், நாமும் சென்ற டிசம்பர் மாத இறுதியில் ஒரு சனிக்கிழமை காலை காஞ்சி புறப்பட்டு சென்றோம்.

நண்பர் நாராயணன் சாஸ்திரிகளுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்!
நண்பர் நாராயணன் சாஸ்திரிகளுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்!

‘நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்’ என்று அழைக்கப்படும் அந்த மாணவருக்கு தற்போது வயது 77. காமாட்சி அம்மன் கோவில் நேரெதிரே தான் இவர் வீடும் அமைந்துள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவருமான சியாமா சாஸ்திரிகளின் தலைமுறையினரின் ஒருவருராவார் இந்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்.

திரு.ராமச்சந்திர சாஸ்திரிகள் அவர்கள் நமக்கு ஒதுக்கிய நேரம் மிக மிக அரிதான ஒன்று. ஏற்கனவே அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயத்தையே அவரிடம் திரும்ப திரும்ப கேட்பதற்கு பதில் பெரியவா குறித்த புதிய விஷயங்களை கேட்டுக்கொள்ளலாம் என்பது நமது எண்ணம்.

ஏனெனில் திரு.சாஸ்திரிகள் குறித்து தினமலரில் திரு.சி.வெங்கடேஸ்வரன் என்பவர் எழுதியதை நாம் ஏற்கனவே படித்திருந்தோம். பதிவுக்காக அதை எடுத்தும் வைத்திருந்தோம்.

நாம் சென்ற நேரம், சாஸ்திரிகள் வீட்டு வாசப்படி அருகே திண்ணையிலே அமர்ந்திருந்தார். நண்பரை பார்த்தவர் சிரித்த முகத்துடன் வரவேற்றார். நம்மையும் வரவேற்று அமரச் சொன்னார்.

நண்பர் ராமச்சந்திர சாஸ்திரிகளுக்கு நம்மை அறிமுகம் செய்து வைத்து, நமது பணிகளைபற்றி எடுத்துக்கூறிய போது, “ரொம்ப நல்ல விஷயம். ரொம்ப சந்தோஷம். இதெல்லாம் பண்றதுக்கு இப்போ யார் இருக்கா?” என்றார்.

நண்பர், நமது தளத்தில் மகா பெரியவாவுக்கென்றே ஒரு தனிப் பகுதி செயல்படுவதாகவும் அதில் அவரை பற்றி பல விஷயங்களை களப்பணி செய்து நாம் திரட்டி தருவதையும் குறிப்பிட்டவர் அண்மையில் நாம் நாகங்குடி சென்று மகா பெரியவா பற்றி பல விஷயங்களை திரட்டி வந்ததை அவரிடம் எடுத்துக் கூறினார்.

“மேன்மேலும் உங்கள் பணி சிறக்க ஆசிகள். மகா பெரியவா என்றும் உங்களுக்கு துணையிருப்பார்!” என்று தனது நமக்கு நல்லாசிகளை வழங்கியருளினார்.

தொடர்ந்து அவருக்கு நம் தளம் சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காலண்டரை கொடுத்து நாம் ஆசிபெற்றபோது...
காலண்டரை கொடுத்து நாம் ஆசிபெற்றபோது…

அடுத்து நமது தளத்தின் சார்பாக வெளியிடப்பட்ட மகா பெரியவா காலண்டரை பரிசளித்தபோது அதை பார்த்தவுடன் அவர் சொன்ன ஒரே வார்த்தை “ஆஹா… ஆஹா…” என்பது தான். அடுத்தநொடி, அதை கண்களில் ஒற்றிக்கொண்டார்.

(நமது தளத்தின் மஹா பெரியவா காலண்டர் வேண்டுவோர் மேற்கு மாம்பலத்தில் உள்ள நமது அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொண்டு செல்லலாம். இலவசம் தான். நன்றி.​)

இதற்கிடையே அவரது திருமதி வந்துவிட அவரை வணங்கி வரவேற்று இருவருக்கும் நம் தளம் சார்பாக பூ, பழம் உள்ளிட்ட தாம்பூலம் வழங்கப்பட்டது. அவரது திருமதியும் சேர்ந்து பெற்றுக்கொண்டு நமக்கு நல்லாசிகளை வழங்கியது நாம் செய்த பாக்கியம்.

“எங்கள் தள வாசகர்களுக்கு உங்கள் நல்லாசிகள் என்றும் வேண்டும். எங்களுக்காக மகா பெரியவாவிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டோம்.

Neelakkal Ramachandra Sasthrigal 3

நிச்சயம் செய்வதாகவும் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று சோதனைகளை வென்று சாதனை படைப்போம் என்றும் கூறி அபய ஹஸ்தம் காண்பித்தருளினார்.

தொடர்ந்து அவரது மகன் சியாமா சாஸ்திரிகள் வர, (இவர் காமாட்சியம்மன் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார்) அவரும் நம்மை வரவேற்று, கோவிலுக்கு வருவதானால் தம்முடன் வரலாம் என்றும் தாம் அருகிலிருந்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

நாம் சாஸ்திரிகளை பார்க்க, அவரும் “பேஷா போய்ட்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வாங்கோ. நானும் கொஞ்ச நேரத்துல ரெடியாடுறேன். அப்புறம் சாவகாசமா உட்கார்ந்து பேசலாம்!” என்றார்.

ஆஹா.... இந்த காட்சிக்கு ஈடு இணை ஏதேனும் உண்டா?
ஆஹா…. இந்த காட்சிக்கு ஈடு இணை ஏதேனும் உண்டா?

உடனே திரு.சியாமா சாஸ்திரிகளுடன் அம்பாளை தரிசிக்க புறப்பட்டோம். திவ்ய தரிசனம். மஹா பெரியவா பல்லாயிரம் முறைகள் தமது வாழ்நாளில் தரிசித்து அமர்ந்து பூஜை செய்த அம்பாள். பிரம்ம ரூபிணி. பார்வையினாலேயே பாவத்தை மாய்ப்பவள். தோஷங்களை துடைத்தெறிபவள். வாசகர்கள் சிலரது பெயர்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, தரிசனம் முடிந்த பிறகு பிரதட்சிணம் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு மீண்டும் சாஸ்திரிகள் அவர்கள் வீட்டுக்கு வந்தோம்.

பெரியவா குறித்து பல நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைவுகூர்ந்தார் சாஸ்திரிகள்.

“மகா பெரியவாவை தரிசித்த ஒவ்வொருத்தருக்கும் இது போல ஏதாவது ஒரு அனுபவம் இருக்கும் போல. அப்போ எத்தனை பேர் அவரை பார்த்திருப்பா… எத்தனை கோடி மகிமைகள்… அப்பப்பா…” நாம் நமது வியப்பை வெளிப்படுத்தினோம்.

“ஆமா… எனக்கே கொஞ்சம் தான் ஞாபகம் இருக்கு!” என்றார்.

மேலும் தொடர்ந்தவர்…. “அவர் சொல்றது பலிக்கும் அப்படி இப்படின்னு சொல்வா. அதை அப்படி சொல்லக்கூடாது. அவர் வாயிலிருந்து வெளிவரும் வாக்கே சத்திய வாக்கு தான். ஈஸ்வர சொரூபம் அவர். தனக்கென்று எதையும் சேர்த்துவைத்துக்கொள்ளாத தகையாளர். மடத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட பெரியவா பணத்தை கையால் தொட்டது இல்லை. தன்னை தேடி வந்து பக்தர்கள், செல்வந்தர்கள் கொட்டும் பணத்தையெல்லாம் கோவில் திருப்பணிகளுக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளால் கஷ்டப்படும் பக்தர்களுக்கும் அப்படியே திருப்பி விட்டுவிடுவார். சன்னியாசிக்கு எதுக்கு பணம் என்பது அவரது கேள்வி….”

திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தம்பதிகளுடன் நாம். பெருமிதமான ஒரு தருணம்!
திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தம்பதிகளுடன் நாம். பெருமிதமான ஒரு தருணம்!

பெரியவரை தங்கள் குல தெய்வமாகவே கொண்டாடிய பல பக்தர்கள் உண்டு. தனது தீர்க்க தரிசனத்தால் தன்னை நாடி வந்தோரின் பல பிரச்சனைகளை ஆபத்பாந்தவனாக தீர்த்து அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியிருக்கிறார். ஒருவர் இந்த சமூகத்துக்கும் ஆன்மீக உலகத்திற்கும்  என்ன செய்கிறார் என்பதே முக்கியமே தவிர, தனக்கு அவர் என்ன செய்கிறார் என்று ஒருபோதும் அவர் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட காரணங்களினால் பெரியவா மீது லட்சகணக்கான பக்தர்கள் பேரன்பும் பக்தியும் கொண்டு அவரை துதித்து வந்தனன்ர்.

“கேட்கவே சிலிர்ப்பாயிருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் நானும் இந்த பூமியில் சில வருடங்கள் வாழ்ந்தேன் என்பதே எங்களுக்கு பெருமை. அவர் சொல்படி நடப்பது மிகவும் சிரமமாயிருக்கிறது. இருப்பினும் எங்களால் இயன்றளவு முயற்சித்து வருகிறோம்”

“முயற்சி திருவினையாக்கும்…!” என்றார்.

அடுத்து திரு.சாஸ்திரிகள் மகா பெரியவா குறித்து நம்மிடம் சொன்ன மகத்துவங்கள் ஒவ்வொன்றும் ஒரு விலை மதிக்க முடியாத முத்து. இந்த ஒரு பதிவிலேயே அனைத்தையும் திணிக்க நாம் விரும்பவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொன்றாக தருகிறோம். வாசகர்கள்  சற்று பொறுமையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்!

பெரியவா தொடர்பான பல அரிய புகைப்படங்கள் இருந்தபடியால், சாஸ்திரிகளிடம் ஆசிபெற்றுவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த அறையை புகைப்படம் எடுத்தோம்.

நாம் வாசகர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒரு நாள் குடும்பத்தோடு காஞ்சி சென்று, அம்பாளை தரிசித்துவிட்டு அப்படியே ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்துவிட்டு அதற்கு பிறகு சங்கர மடம் சென்று மஹா பெரியவாவின் அதிஷ்டானத்தை தரிசித்துவிட்டு வாருங்கள். உங்கள் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு வழி பிறக்கும் என்பது உறுதி. (காஞ்சி செல்பவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். நாம் அளிக்கும் டிப்ஸ்கள் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்!)

மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர், திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளுக்கும் மகா பெரியவருக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம். (தினமலரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரு.சி.வெங்கடேஸ்வரன் எழுதியது இது!)

காஞ்சி மகாபெரியவர் ஒருநாள் காமாட்சி அம்பாள் சந்நிதி தெருவில் பவனி வந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு முதியவர் அவரைத் தரிசிக்க வீட்டு வாசலில் நின்றார். பெரியவர் அவரிடம்,”ஏம்ப்பா! ராமச்சந்திரா! உன்னுடைய ஆறு பிள்ளைகளும் சவுக்கியமா?” என்றார்.

அந்த முதியவர் மகாபெரியவரின் மாணவர். பெரியவரிடம் வேதம் படித்த பெருமை அவருக்குண்டு. மகாபெரியவர் தன்னிடம் இவ்வாறு கேட்டதும் அவர் அசந்து விட்டார். அத்துடன், அவரது இளமைக்கால நினைவுகளும் மனதுக்குள் புரளத் துவங்கின.

அதுபற்றி அவரே சொல்கிறார்.

“மகா பெரியவாளிடம் சில வருடங்கள் பாடம் கற்றுக்கொண்டது என் பாக்கியம். அவருடைய ஞானம் ஆழமானது. அவரிடம் படித்த நாட்கள் எனக்கு இன்னமும் நன்றாக நினைவு இருக்கிறது. ‘நீதி-சதகம்’ எல்லாம் அவர் நேரிடையாக எங்களுக்குச் சொல்லித் தந்ததுதான்.”

“1938ல் பிறந்த எனக்கு 11 வயதில் உபநயனம். கீழம்பி என்ற இடத்திலுள்ள வேத பாடசாலையில் படிப்பு… இந்தியாவின் தலைசிறந்த வேத ஆசிரியர்களான பண்டிதர் வேப்பத்தூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள்,போலகம் ராமா சாஸ்திரிகள், சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள், ஆந்திரா மண்டலி வெங்கடேச சாஸ்திரிகள், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆகியோரிடமெல்லாம் பாடம் படித்தேன். ஆனால், இதையெல்லாம் விட, காஞ்சிபுரத்திலுள்ள ஓரிக்கை கிராமத்தில் மகாபெரியவர் சந்திர சேகரேந்திர மகா சுவாமிகளிடம் “பர்த்ருஹரி’ (வைராக்கிய சதகம்) என்னும் பாடம் படித்தேனே! அதுதான் ஹைலைட்,” என்றார்.

மகா பெரியவாவுடன் திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் (வலது ஓரம்)

“பெரியவரிடமே பாடம் படித்த பெருமைக்குரியவர் தான் நீங்கள். ஆம்..உங்கள் குழந்தைகளைப் பற்றி பெரியவர் ஏதோ சொன்னாரே! அதுபற்றி சொல்லுங்களேன்” என்றதும், “நான் பெரியவரின் மாணவர் என்பது மட்டுமே அவருக்கு தெரியும். மற்றபடி, எனது குடும்பம் பற்றி பெரியவருக்கு தெரியாது. எனக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இப்படி ஆறு பேர் இருப்பது பெரியவருக்கு எப்படி தெரிந்தது? அவர்களை நலம் விசாரிக்கிறாரே! அவர் தெய்வப்பிறவி என்பதால் தான், நமக்குள் நடக்கும் எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரிகின்றன,” என்று வியந்தார்.

இந்த முதியவரின் பெயர் ராமச்சந்திர சாஸ்திரிகள். இவரது குடும்பம் “நீலக்கல்’ வகையறாவைச் சேர்ந்தது. நீலக்கல் என்பது மன்னர் காலத்திய பட்டம். இவரது முன்னோர்களில் ஒருவரான முத்துசுவாமி சாஸ்திரிகளின் துணைவி தர்மசம்வர்த்தினி அம்மையார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்-ஈஸ்வர-அவதாரம். நாங்கள் பரம்பரையாக காமாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்து வருகிறோம். பெரியவா என்னைப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளச் சொன்னது, எனக்குக் கிடைத்த பெரும்பேறு!” என்று பழைய நினைவுகளில் மூழ்கிய நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், தொடர்ந்து பேசினார்…

ஐம்பது ஆண்டுகளாக காமாட்சியம்மனுக்கு சேவை செய்து வருகிறார்.  ஒருமுறை, மகாபெரியவர் இவரை அழைத்து, “உன் வம்சத்தின் பெயருக்கேற்ப, காமாட்சியம்மன் கோயில் தங்க விமானத்தில் ஒரு நீலக்கல் வை,” என்றார். ராமச்சந்திர சாஸ்திரிகளும் அவ்வாறே செய்தார். கோயில் ஆபரணக் கொட்டடிக்கு (பொக்கிஷம்) ஐந்து சாவிகள் உண்டு. இதில் இரண்டு இவரது பொறுப்பில் இருக்கிறது.

அடுத்த வாரம் காவல் துறை உயரதிகாரி ஒருவரின் வாழ்வில் மகா பெரியவா புரிந்த அற்புத மகிமை ஒன்றை பார்ப்போம்.

(… குரு தரிசனம் தொடரும்)

=====================================================================

We are running full-time. Help us to serve you better – Join our ‘Voluntary Subscription’ scheme.

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Articles on Ramana Maharishi

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================

Articles about Yogi Ramsurath Kumar, Gnananda Giri Swamigal, Seshadri Swamigal, Thirumuruga Kripananda Variyar Swamigal and other Gurus in Rightmantra.com

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

=================================================================

[END]

 

12 thoughts on ““மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

  1. குரு வாரத்தில் குருவின் நேரடி மாணவர் ஒருவரை பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    சாஸ்திரிகளின் அபய ஹஸ்த போட்டோ அருமை. நாம் இருக்க கவலை எதற்கு என்று மகா பெரியவரே சொல்வது போல் உள்ளது.

    குருவின் நேரடி மாணவர் ஒருவரை பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    இந்த தொடரின் அடுத்தடுத்த பதிவுகளை படிக்க ஆவலாயிருக்கிறோம்.

    மகா பெரியவா சரணம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. மகா பெரியவா அவர்களை பற்றிய அருமையான பதிவு.
    கோவில் கோபுரம் அருமை.
    குருவாரத்தில் குரு மகிமை சார்ந்த நிகழ்வுகளை படிக்கும் போது மனம் லேசாக உணர்கிறது.
    சாஸ்த்ரிகள் அவர்களின் பெருமையும் அவரின் வம்ச விபரங்களையும் தெரிந்துகொண்டோம்.
    அவரை பற்றிய தகவல்களை படிக்க நங்கள் கொடுத்து வைத்துள்ளோம்.
    இன்னும் நிறைய தகவல்களை வரும் வாரத்தில் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
    நன்றி

    1. Dear Sundar,

      Thanks for sharing the experience about his holiness Sri Sanakracharya and also we know about Neelakal Ramachandra Sastrigal.

      Mr. Narayanan also deserves credit since he is the instrumental for you to take initiative to help you to arrange the interview and the outcome is a wonderful article published in your site. As a regular visitor for your site I am thankful for you and your team to make every article as a grand success.

      Best Regards,

      M.Raghavan

  3. மிக மகிழ்ச்சி. குரு நாதன் கருணை அளவிட முடியாது.

    அவர் கண் கண்ட கடவுள்.

    நன்றி தங்கள் பதிவுக்கு.

    கே. சிவசுப்ரமணியன்.

  4. திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளுக்கு நம் வணக்கங்கள்……… அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்…..ஆனால் இன்றுதான் அவரை தரிசிக்கும் பாக்கியம் நம் தளம் மூலம் கிடைத்திருக்கிறது……

    மஹா பெரியவாவிடம் பாடம் படிக்க சாஸ்திரிகள் எவ்வளவு புண்ணியம் செய்திருப்பார்…… இன்று அவரைப் பற்றி படித்ததில் நமக்கும் புண்ணியம் கிடைத்து விட்டதாக உணர்கிறோம்………..

    சாஸ்திரி தம்பதியரைப் பார்க்கும் போது பார்வதி பரமேஸ்வரனைப் பார்ப்பது போல் உள்ளது…….. அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நீங்கள் பெரும் பேறு பெற்றவர்………

    சாஸ்திரிகள் கூறிய நம் குருவின் மகிமைகளை அறிந்து கொள்ள மிக்க ஆவலாக உள்ளோம்………

  5. குரு சரணம் சரணம்

    மகா பெரியவாவைப்பற்றிய விஷயங்களைத் தேடித் தேடி நீங்கள் அளிக்கும் பதிவுகள் அருமை!! நன்றி.

  6. சுந்தர்ஜி,
    தங்கள் பதிவிற்கு நன்றி.

    குருஅருள் இருந்தால் திருஅருள் தானாக வரும்.

    நன்றிவுடன்,

    எஸ்.நாராயணன்.

  7. சுந்தர்ஜி

    குரு வாரம் கோடி புண்ணியம். மகா பெரியவா அவர்களை பற்றி படிக்க
    நாம் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் .

    நீலக்கல் சாஸ்திரி திரு ராமச்சந்திர அவர்களுக்கு நமஸ்காரம்.
    அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை.

    நன்றி

  8. வணக்கம் சுந்தர்.குருவே சரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை . ஒரே ஒரு முறை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்து இருக்கலாம் . என்ன செய்வுது . கொடுத்து வைத்தது அவள்வுதான். நன்றி

  9. சாஸ்திரி அவர்கள் பற்றி அறிந்து கொண்டதும், அவர்களை தம்பதி சமேதராக சேவித்ததும் மிக பெரிய புண்ணியம்

    படங்கள் யாவும் அருமை.
    இப்பதிவு, தாங்கள் நேரில் விவவரிப்பது போல் சிறப்பாக அமைந்துள்ளது

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *