கால நேரம், இழப்பு மற்றும் இதர சகல வித துன்பங்களையும் கட்டுப்படுத்தும் சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்தவர். சனியின் பிடியால் அவதியுறுபவர்களுக்கு சனி தோறும் சனி பகவானுக்கு எள்ளு முடிச்சு போட்ட நல்லெண்ணெய் விளக்கேற்றுவது, காக்கைக்கு எள்ளு சாதம் வைப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவுவது என்று பல பரிகாரங்கள் உண்டு. இவற்றுள் உங்களுக்கு எது சௌகரியமோ அதை செய்யுங்கள். தவிர கீழே கூறியுள்ளதை செய்து பாருங்கள்.
ராபர்ட் ஸ்வபோதா என்னும் அமெரிக்கர் THE GREATNESS OF SATURN என்ற (சனியின் மகாத்மியம்) என்னும் நூலை எழுதியிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான இவர் ஆயுர்வேதம் மற்றும் ஜோதிட சாஸ்திரம் குறித்த பல நூல்களை எழுதியிருக்கிறார். நமது நாட்டில் ஆயுர்வேத கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற முதல் மேற்கத்தியர் இவர் தான். மேலும் இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் அளிக்க, அங்கீகாரமும் பெற்றுள்ளார்.
ஸ்வபோதா எழுதியிருக்கும் இந்த நூல் ஒரு THERAPEUTIC MYTH. அதாவது இதை படிப்பதே ஒரு மருந்துபோலத் தான். சனியின் பிறப்பிலிருந்து ஆரம்பித்து அவரது முழு வரலாறு + செயல்பாடுகள், ஒவ்வொரு ராசியிலும் அவரது தாக்கங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை மிக மிக விரிவாக இந்நூலில் அலசியிருக்கிறார் ஸ்வபோதா. இந்த நூலை படிப்பதே பரிகாரம் என்றாலும் தனியாக சனிப் ப்ரீதிக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களையும் பட்டியலிட்டுள்ளார் ராபர்ட் ஸ்வபோதா. அறிவியல் ரீதியாகவும் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிசளித்திருந்தார். ஒரு சில பக்கங்களே படித்திருப்பேன். அதற்குள் நூல் தொலைந்துவிட்டது. நானும் சனியின் பிடியில் சிக்கி நொந்து நூலாகிவிட்டேன். தற்போது நூல் மீண்டும் கிடைத்துவிட மீண்டும் படிக்க துவங்கியிருக்கிறேன். (இந்த நூல உங்கள் கைகளுக்கு அத்துணை சுலபத்தில் வராது. வந்தாலும் படிக்க முடியாது. படித்தே தீருவேன் என மனவுறுதியோடு சனீஸ்வர காயத்ரி உச்சரித்துக்கொண்டே செயலாற்றுங்கள். முடியும்!)
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
நீங்களும் வாங்கிப் படியுங்கள் பலன் பெறுங்கள். சனிப் பெயர்ச்சியால் துன்பப்படும் உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் வேண்டியப்பட்டவர்களுக்கும் இந்த நூலை வாங்கி கொடுங்கள்.
நூலைப் படிக்கும்போதே மாற்றங்களை உணரத் தொடங்குவீர்கள். நூலை படித்து முடிக்கும் போது சனிபகவான் குறித்த உங்கள் அபிப்ராயம் முற்றிலும் மாறியிருக்கும்.
நூலை வாங்க…
கீழ் கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்…
http://www.landmarkonthenet.com/greatness-saturn-therapeutic-myth-by-robert-e-svoboda-books-9781571780324-1370207/
[END]
I have ordered for the book. Hoping for good.
have ordered the book, lets see, what happens
டியர் சார்,
இந்த புத்தகம் ஆர்டர் செய்திருந்தேன் . அது இன்று கிடைத்துள்ளது . இதை படித்து விட்டு கமெண்ட் செய்கிறேன். இந்த நல்ல தகவல்க்கு மிக்க நன்றி. உங்களின் இந்த சைட் மிகவும் உபயோகமாக உள்ளது . இன்னும் பல விஷயங்களை பகுறிந்து கொள்ளவும் . நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யவும் கேட்டுகொள்கிறேன் .
நன்றி
————————————
நல்லது நடக்கட்டும். வாழ்த்துக்கள்.
– சுந்தர்
Good Information . Ordered the book today
thanks
Venkaesh