Home > 2013 > June

வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்!

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம் தளத்தின் கூட்டுப் பிரார்த்தனைக்கான கோரிக்கைகள் வந்து குவிந்துள்ளன. பிரார்த்தனை மீது அனைவருக்கும் உள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது. உங்கள் நம்பிக்கை எதுவும் வீண் போகாது. இறைவனிடம் நாம் செய்யும் நியாயமான பிரார்த்தனைகள், வைக்கும் உண்மையான கோரிக்கைகள் பலன் தராமல் போகவே போகாது. நம்பிக்கை. நம்பிக்கை. நம்பிக்கை. அசைக்க முடியாத நம்பிக்கை. இதுவே நம் உயிர்மூச்சு. அடுத்து மகா பெரியவா அவர்கள் ஒரு முறை கூறியது போல, நமக்கு வந்த

Read More

அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை!

இந்த அவசர உலகில் தான் எத்தனை எத்தனை மனிதர்கள்? பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணடித்து, அதையும் பெருமை பேசுகிறவர்கள் ஒரு புறம். தனது முன்னேற்றம், தங்கள் குடும்பத்தின் முன்னேற்றம் இந்த இரண்டும் மட்டுமே இந்த உலகில் கவனம் செலுத்தக்கூடிய விஷயங்கள்.. மத்ததையெல்லாம் "அந்த பகவான் பார்த்துப்பான்" என்று சுயநல சிந்தனையோடு வாழ்பவர்கள் மறுபுறம். அடுத்தவர்களை கெடுத்து பலவித வன்செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை சக்கரத்தை ஒட்டிகொண்டிருக்கும் வஞ்சகர்கள் கூட்டம் ஒருபுறம். அனைத்தையும் குறை சொல்லிக்கொண்டு அதே

Read More

திவ்ய பிரபந்த பாசுரப்படி இராமாயணம் & ‘சுந்தரகாண்டம்’ நூலை கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு…

'சுந்தரகாண்டம்' நூல் தேவைப்படுகிறவர்கள் நமக்கு மின்னஞ்சல் செய்யும்படியும், நாம் அதை அனுப்பிவைப்பதாகவும் கூறியிருந்தோம். இதையடுத்து பலர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். சென்ற வாரம் சந்தைக்கு சென்று பாராயணதிற்கு ஏற்ற சுந்தரகாண்ட நூல்கள் சிலவற்றை வாங்கி வந்தோம். அவற்றில் எளிய நடையிலும் அதே சமயம் சிறப்பாகவும் விலை சற்று குறைவாகவும் இருக்கக்கூடிய சில நூல்களை ஷார்ட்லிஸ்ட் செய்தோம். அவை தான் அருகே நீங்கள் காண்பது. இந்த நூல்களை தான் அனைவருக்கும் அனுப்பவிருக்கிறோம். 1) வால்மீகி ராமாயணத்தின்

Read More

அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

கடந்த வாரம், இமாலய சாதனையாளர் அருணிமா சின்ஹா அவர்களை பற்றி நாம் அளித்த பதிவில் - அவரை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக நாம் கூறியிருந்தது - நினைவிருக்கலாம். அப்போதே அவரிடம் சென்னை வந்தால் அவசியம் தகவல் தெரிவிக்கும்படியும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறியிருந்தேன். சென்னை வரும் திட்டம் இருக்கிறது என்றும் விரைவில் தேதியை சொல்வதாகவும் கூறினார். எனவே அவரிடம் அடிக்கடி அதை பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தேன். அருணிமாவிடம் பேசுவது எனக்கு சற்று

Read More

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

பிறந்த நோக்கம் அறியாது எது எதையதையோ செய்து வாழ்க்கையின் பெரும்பகுதியை தாம் வீணடிக்க நேர்ந்ததாக கண்ணதாசனுக்கு தமது ஆரம்ப கால செயல்பாடுகள் குறித்து ஒரு மனப்புழுக்கம் இருந்து வந்ததுண்டு. ஆம்.... வையம் தழைக்க வந்த அந்த புனிதன் வழி தவறி எங்கெங்கோ அலைந்தான். கோவில் நந்தவனத்தில் துள்ளி குதித்து விளையாட வேண்டிய அந்த மான் குப்பை மேடுகளிலும் இடுகாடுகளிலும் அலைந்தது. ஆண்டவன் அதை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பானா? இதோ கண்ணதாசன் தன்னிலை உணர்ந்து ஞானத்தின் பக்கம்

Read More

கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல்…

என் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியவர்களுள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். எனது மனசாட்சியை தட்டியெழுப்பி நான் பிறந்ததன் பயனை எனக்கு உணர்த்தியவர் அவர். அவரது பாடல்களுக்கு மிகப் பெரிய ரசிகன் நான். அவரது வாழ்க்கைக்கு அதைவிட பெரிய ரசிகன் நான். எனது பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது அவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்னும் அரும்பெரும் பொக்கிஷம் தான். ஜூன் 24 - அவரது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை

Read More

நாடும் வீடும் நலம் பெற உடனே சுந்தரகாண்ட பாராயணத்தை துவக்குவோம்! (பாராயண வழிமுறைகள்)

இயற்கை சீற்றங்களினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் நம் நாடும் வீடும் சிக்கித் தவிக்கும் ஒரு இக்கட்டான நேரத்தில் தான் நாம் சுந்தரகாண்ட பாராயணத்தை துவக்கவிருக்கிறோம் என்று கருதுகிறேன். அவசியமான நேரத்தில் கிடைக்கும் ஔஷதமாய் சுந்தரகாண்டம் நம்மிடம் வந்துள்ளது. இதை படிக்க படிக்க நமது நிலை உயரும். படிப்போர் எண்ணிக்கை உயர உயர நாட்டின் நிலைமையும் உயரும். எனவே இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு அனைவரும் அவர்களால் இயன்ற முறைகளில் வால்மீகி அருளிய சுந்தரகாண்டத்தையோ

Read More

மழை வெள்ளம் & கடும் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா – நாட்டிற்காக நீங்கள் சில நிமிடங்கள் ஒதுக்கத் தயாரா?

உலகில் எத்தனையோ நாடுகள் இருந்தாலும் நம் பாரதத்துக்கு உள்ள சிறப்பு வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது. ஏனெனில் இது ஒரு புண்ணிய பூமி. உலகின் பழைமையான இதிகாசங்களும், புராணங்களும், உபநிஷத்துகளும், இவற்றையெல்லாம் விட முக்கியமாக நான்கு வேதங்களும் சாஸ்திரங்களும் இந்தியாவில்தான் தோன்றின. இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவை நிகழ்ந்த நாடு நம் நாடு.  இது ஒரு கர்ம பூமி என்பது அறிஞர்கள் கூற்று. மகாவிஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களும், ஈசனின் திருவிளையாடல்கள் அறுபத்தி நான்கும்

Read More

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்…

இந்த புகைப்படங்களில் காணப்படும் இந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் அற்புதமான மிடுக்கான தோற்றத்தின் பின்னணியில் நமது தளம் இருக்கிறது என்பது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் என்றால் மிகையாகாது. சென்னை போரூர்-குன்றத்தூர் சாலையில் கெருகம்பாக்கத்தில் அமைந்துள்ள 'பிரேமவாசம்' - மனநலம் குன்றிய & மாற்றுத்திறன் வாய்ந்த குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பள்ளி செல்லும் சுமார் 140 குழந்தைகளுக்கு நம் தளம் சார்பாக சீருடைகள் மற்றும் ஸ்கூல் பேக் வாங்கித் தரப்பட்டன. (இங்கு

Read More

சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

வாழ்க்கையில் பல சமயம் 'இத்தோடு முடிந்தது... இனி என்ன இருக்கிறது?" என்று நாம் கருதும் சந்தர்ப்பங்களில் தான் இறைவன் இன்னொரு பிரம்மாண்டமான கதவை திறந்து வைக்கிறான். இந்த சூட்சுமத்தை புரிந்துகொண்டவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். புரிந்துகொள்ள மறுப்பவர்கள் விதியென்னும் வெள்ளத்தில் வீழ்ந்து மடிகிறார்கள். அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் பலர் விடாமுயற்சியினாலும் தன்னம்பிக்கையினாலும் சாதனையாளர்களாக மாறி நம் கண் முன்னே மாபெரும் உதாரணங்களாக நடமாடுகின்ற அதே நேரம், எல்லாம் இருந்தும் 'எனக்கு எதுவுமில்லை;

Read More

உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தன்னுயிரை தந்து தட்டி எழுப்பிய மாவீரன் வாஞ்சிநாதன்!

தியாகத்தின் திருவுருவம் அஞ்சாநெஞ்சன் மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள் இன்று. எந்த ஒரு நாட்டில் மக்கள் தேசபக்தியும் தெய்வபக்தியும் கொண்டு ஒழுகுகின்றனரோ அந்நாடு எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. நம் வாசகர்கள் தன்னம்பிக்கை, தெய்வநம்பிக்கை இவை மட்டுமல்லாது சிறந்த தேசபக்தி கொண்டவர்களாகவும் விளங்கவேண்டும் என்பதே நம் விருப்பம். எனவே தான் நாட்டின் விடுதலைக்காக உழைத்த உத்தமர்களை அவர்கள் பிறந்த நாளின்போதும் நினைவு நாளின் போதும் இயன்றவரை மறக்காது

Read More

எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!

சதா சர்வ காலமும் 'ஓம் நமோ நாராயணாய' என்று சொல்லி வரும் நாரத மகரிஷிக்கு, இப்படி எந்நேரமும் நாராயணின் நாமத்தை உச்சரிப்பதால் என்ன பயன்?" என்ற சந்தேகம் வந்து விட்டது. நேராக வைகுண்டம் செல்லும் அவர், அங்கு துயில் கொண்டிருந்த பரந்தாமனை பலவாறாக சேவித்துவிட்டு, "அச்சுதா.. சதா சர்வ காலமும் உன் நாமத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். இதனால் ஏதேனும் பயன் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. தேவரீர் தான் அதை

Read More

குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்!

சுந்தரகாண்ட பாராயணத்தை துவக்கும் முன், இராமாயணம் முழுவதையும் ஒரே நாளில் படித்துவிட்டு பிறகு சுந்தர காண்ட பாராயணத்தை துவக்க வேண்டும் என்று நமது முந்தைய பதிவில் கூறப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரே நாளில் இராமாயணத்தை படிப்பது குறித்து மலைப்படைய வேண்டாம்.. ஒரே நாளில் படிப்பதற்குரிய எளிய வழியை கூறுவதாக தெரிவித்திருந்தோம். சுந்தரகாண்ட பாராயணத்தை உடனடியாக துவக்கிவிட்டபடியால் அதை உடனே அளிக்குமாறு வாசக அன்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ ஒன்றல்ல மூன்று வழிகள் இராமாயணத்தை எளிய

Read More

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

ஒவ்வொரு முறையும் உழவாரப்பணியின் மேன்மை குறித்து விளக்கமளித்து அந்த பணிக்கு அழைப்பு விடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் இது நம் கடமை. சற்று யோசித்து பாருங்கள்.... கோவிலுக்கு சென்று செய்யும் பிரார்த்தனை, பூஜை, அபிஷேகம், அர்ச்சனை இவையெல்லாம் நமது நன்மைக்காக (அதாவது சுயநலத்திற்காக) செய்வது. அதனால் இறைவனுக்கு ஒன்றும் பயனில்லை. ஆனால் உழவாரப்பணி ஒன்றே இறைவனுக்காக நாம் செய்வது. மனிதனாக பிறந்த அனைவரும் தங்களால் இயன்ற போது 'உழவாரப்பணி' எனப்படும் கோவிலை

Read More