Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > திவ்ய பிரபந்த பாசுரப்படி இராமாயணம் & ‘சுந்தரகாண்டம்’ நூலை கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு…

திவ்ய பிரபந்த பாசுரப்படி இராமாயணம் & ‘சுந்தரகாண்டம்’ நூலை கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு…

print
‘சுந்தரகாண்டம்’ நூல் தேவைப்படுகிறவர்கள் நமக்கு மின்னஞ்சல் செய்யும்படியும், நாம் அதை அனுப்பிவைப்பதாகவும் கூறியிருந்தோம். இதையடுத்து பலர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். சென்ற வாரம் சந்தைக்கு சென்று பாராயணதிற்கு ஏற்ற சுந்தரகாண்ட நூல்கள் சிலவற்றை வாங்கி வந்தோம். அவற்றில் எளிய நடையிலும் அதே சமயம் சிறப்பாகவும் விலை சற்று குறைவாகவும் இருக்கக்கூடிய சில நூல்களை ஷார்ட்லிஸ்ட் செய்தோம்.

அவை தான் அருகே நீங்கள் காண்பது. இந்த நூல்களை தான் அனைவருக்கும் அனுப்பவிருக்கிறோம்.

1) வால்மீகி ராமாயணத்தின் சமஸ்க்ருத ஸ்லோகங்கள் – தமிழ் எழுத்தில்
2) வால்மீகி ராமாயணத்தின் உரை நடை வடிவம்
3) கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டம் உரைநடை + தமிழில் பாராயண செய்யுட்களுடன்

எந்த கடையிலும் நான் தேர்வு செய்த நூல்கள் ஒன்றாக கிடைக்கவில்லை. ஒன்றிருந்தால் ஒன்றில்லை. அப்படியே இருந்தாலும் நாம் கேட்கும் பிரதிகள் அவர்களிடம் இல்லை. ‘மூன்று நாளில் வரவழைத்து தருகிறோம்’ என்கிறார்கள். ஏற்கனவே தாமதமாகிவிட்டபடியால் இதற்க்கு மேலும் காத்திருக்க முடியாது என்பதால் நேரடியாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பதிப்பகங்களே சென்று இரண்டு தலைப்புக்களிலும் தேவையான பிரதிகள் வாங்கிவந்துவிட்டேன். மூன்றாவது தலைப்பில் உள்ள நூல் பதிப்பகத்திலேயே ஸ்டாக் இல்லை. இரண்டொரு நாளில்  தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

எனவே நாளை கழித்து தான் அனைவருக்கும் அனுப்ப இயலும். இன்று ஏற்கனவே வியாழக்கிழமை ஆகிவிட்டது. எனவே இந்த வெள்ளி பாராயணம் ஆரம்பிப்பது என்பது இயலாது. நூலை கேட்டவர்கள் அனைவருக்கும் நூல் கிடைத்த பிறகு அவர்களுடன் சேர்ந்து தான் நமது பாராயணத்தை துவக்க நான் விரும்புகிறேன். எனவே ஜூன் 28க்கு பதில் ஜூலை 5 வெள்ளிக்கிழமை பாராயணம் துவங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தள்ளிப்போவதை பற்றி கவலைவேண்டாம். நம்முடன் சேர்த்து பலர் பலர் பாராயணம் செய்யப்போவதை நினைத்துக் கொள்ளுங்கள்.

மேற்படி கூரியருடன் நமது தளத்தின் சார்பாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வரும் ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸும், மகா பெரியவா புகைப்படம் ஒன்றும் அனுப்பப்படும்.

சுந்தரகாண்டத்தை படிக்க உதவும் இந்த கைங்கரியத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது என்று முடிவு செய்த போது, உங்களிடம் நூலுக்கு பணம் எதுவும் பெற்றுக்கொள்ளவேண்டாம் என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் நண்பர்களும் சரி நூலை கேட்டிருந்தவர்களும் சரி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “உங்களுக்கு இருக்கும் பல்வேறு கமிட்மென்ட்டுகளுக்கிடையே இதை வேற எதுக்கு இழுத்து விட்டுக்குறீங்க? இந்த விஷயத்தில் உங்க உழைப்பை நீங்கள் கொடுப்பதே கைங்கரியம் தான்…” என்று கூறினார்கள். இருப்பினும் மனம் சமாதானம் அடையவில்லை. குறைந்தது ஒரு பத்து பதினைந்து பேருக்காவது இலவசமாக அளிக்க விருப்பம்.

இதற்கிடையே நம் வாசகர் ஒருவர் சென்ற வாரம் நம்மை தொடர்புகொண்டு, “சுந்தரகாண்டம் நூலை கேட்பவர்களுக்கு இலவசமாக அனுப்புங்கள். அதற்குரிய தொகை ப்ளஸ் தபால் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” கூறினார். என்னே அனுமனின் கருணை… என்று எண்ணி வியந்தேன். காரணம் நூலை மொத்தமாக (ஒரு 10 அல்லது 15 செட்டாவது) வாங்கி வர கையில் பணம் அதற்க்கென்று தேவையல்லவா?

தொடர்ந்து பேசுகையில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம். எதையும் சுலபமாக பெற்றால் அதன் மதிப்பு நமக்கு தெரியாது. இது மனிதர்களின் சைக்காலஜி. எனவே பணம் கொடுத்து நூலை வாங்கினால் தான் அதை படிக்க மனம் வரும். எனவே இந்த நூலுக்கான விலை + தபால் செலவு ஆகியவற்றை (ரூ.150/-) வாசகர்களிடம் பெற்றுக்கொண்டு அந்த தொகையை அப்படியே கோ-சாலையில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தருவது என முடிவு செய்திருக்கிறோம்.

எனவே சுந்தரகாண்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை ஒரு மகத்தான காரியத்திற்கு பயன்படப்போகிறது. அதில் உங்கள் பங்கும் ஒரு பத்து ரூபாயாவது இருக்கட்டும் என்று தான் செலவில் ஒரு பத்து ரூபாய் ஏற்றி ரூ.150/- என குறிப்பிட்டிருக்கிறேன். (வெளிநாடுகளில் இருந்து கேட்டிருப்பவர்களுக்கு கூரியர் கட்டணம் வேறுபடும்).

(சுந்தரகாண்டத்தை நம் வாசகர்களுக்கு வாங்கித் தரும் இந்த கைங்கரியத்தில் தங்களை இணைத்துக்கொள்ள எவரும் விரும்பினால் எம்மை தொடர்புகொள்ளவும். இனி கேட்பவர்களுக்கு வாங்கித் அனுப்ப உதவியாக இருக்கும்.)

நாளை முதல் நூல் அனுப்பத் துவங்குகிறேன். முதலில் கேட்டவர்களுக்கு முதலில் அனுப்பப்படும்.

(அரசின் விரைவு தபாலை விட தனியார் கூரியர் மலிவாக இருக்கிறது. சாதாரண தபாலில் அனுப்ப விருப்பமில்லை. அதன் அருமை தெரியாது அது அலைகழிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை கூரியர் சென்று சேரவில்லை என்றாலும் நூல் பத்திரமாக எனக்கு ரிட்டர்ன் வந்துவிடும்.)

============================================
பாராயணம் துவங்க இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலையில், இந்த ஒருவாரமும் பாராயணம் செய்ய இதோ ஒரு அற்புதமான இராமாயண சுலோகம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து வாருங்கள். இராமாயணம் + திவ்ய பிரபந்தம் இரண்டையும் படித்த புண்ணியம் கிடைக்கும்.

இராமாயணத்தில் பலவகைகள் இருக்கின்றன. வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம், காயத்ரி இராமாயணம், நாம இராமாயணம் இப்படி பல உண்டு.

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுர வரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இராமாயணம் ஒன்று இருக்கிறது தெரியுமா?

வியாக்கியான சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆசார்யர் தொகுத்தது இது. ‘பாசுரப்படி இராமாயணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இராமாயணத்தைப் பாடினால் ஆழ்வார்களின் பாசுரங்களைப் படித்த பயனும் இராமாயணம் பாடிய பயனும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

பார்க்க சற்று நீளமாக இருப்பது போல தோன்றினாலும் சட்டென்று படித்து முடித்துவிடலாம். இந்த பாசுரத்தில் உள்ள ஒலிகளை உச்சரித்தாலே மனதிற்கு ஒரு வித அமைதி கிட்டும். நல்ல செய்திகள் வரத்துவங்கும். முயற்சி செய்து பாருங்களேன். (நாம் அனுப்பும் கம்பராமாயண சுந்தரகாண்ட நூலில் இந்த பாசுரப்படி இராமாயணம் இடம்பெற்றுள்ளது.)

============================================

திவ்யப் பிரபந்த பாசுரப்படி இராமாயணம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க
கொங்கை வன் கூனி சொற்கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்
பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரகூடத்திருப்ப தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏற
தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து
திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து
மறை முனிவர்க்கு
அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள்
என்னப் பொன்னிறம் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பனகாவை
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய்
வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயிலின்றி
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து
வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரம் ஏழு எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப
சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதின் இருத்தல்
மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும்
கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈது அவன் கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று
அலையார் கடற்கரை வீற்று இருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடி பொடியாக
சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து
மணி முடி பணி தர அடியிணை வணங்க
கோலத் திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேரேறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடி
பொங்கிளவாடை அரையில் சாத்தி
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

============================================

(பாசுரப் படி இராமாயணம் எழுத்துரு உதவி : koodal1.blogspot.in)

 

16 thoughts on “திவ்ய பிரபந்த பாசுரப்படி இராமாயணம் & ‘சுந்தரகாண்டம்’ நூலை கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு…

 1. Hi sir,
  Actually yesterday, I was thinking about it. One day I can ask you a photo of Swami Maha Periyava. But as a coincidence you had written, you will send a Swami Maha Periyava photo along with the Ramayana book courier.

  Thank you so much!!!

  -Uday

 2. சுந்தரகாண்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை ஒரு மகத்தான காரியத்திற்கு பயன்படப்போகிறது -என்பதை நினைக்கும் போது உன்மையிலயெ சைந்தொசமாக உல்லது..எனக்கும் ஒரு பிரதி வேண்டும்.

 3. இராமாயணம் எனும் தேன்,எத்துனை முறை அனுபவித்தாலும் {படித்தாலும் & கேட்டாலும்} மீண்டும் மீண்டும் ஆவல் வரும் .

  இராமாயணம் என்று சொன்னாலே அதற்க்கும் புண்ணியம் .சொல்வதற்கு முன் அந்த வார்த்தையை பார்த்தோம் என்றாலே அதற்க்கும் புண்ணியம் .

  இராமாயணம் என்று எழுத படிக்காதவர்கள் இந்த{இராமாயணம்}வாசகத்தை பார்த்தாலே புண்ணியம் .

  இராமாயணம் புத்தகம் வீட்டில் வைத்திருந்தல் புண்ணியம் .
  இராமாயணம் எனும் வாக்கியத்தை உச்சரிக்க ஆரம்பித்தாலே அனுமன் ஆஜராகிவிடுவார் .

  சுந்தரகண்டம் என்றாலே அழகு என்று பொருள் .சுந்தரகாண்டம் படித்தாலோ படிப்பதை கேட்டாலும் அழகு ,ஆனந்தம் நம் வீட்டை தேடி வரும் .

  மேலும் எவ்வளவு சொல்லிக்கொண்டு போகலாம் .

  இந்த வாய்ப்பினை நமக்கு வழங்கிய Right Mantra Sundar அவர்களுக்கு நன்றி .

  நமக்கு தெரிந்த அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் .

 4. சுந்தரகாண்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை ஒரு மகத்தான காரியத்திற்கு பயன்படப்போகிறது -என்பதை நினைக்கும் போது
  மிகவும் சந்தோசமாக உள்ளது. அதனால் எனக்கும் ஒரு செட் வேண்டும்.

 5. முருகன் சார் சொல்வது அப்படியே உண்மை.
  நான் அனுபவிக்க ஆரம்பித்து விட்டேன்.

 6. மிக பெரிய புண்ணியத்தை செய்து கொண்டு உள்ளீர்கள். வாழ்க வளமுடன்

 7. பூமி எங்கும் மங்களம் பொங்க வேண்டும்.

  புத்தம் புது பூமி வேண்டும்
  நித்தம் உருவாக வேண்டும்

  எங்கும் சாந்தி நிலவ வேண்டும்

  இயற்கையின் சீற்றங்களில் இருந்து உயிரினங்கள் காப்பாற்றப்படவேண்டும்

  இதுவே எனது கோரிக்கை

 8. ஹலோ sir,

  என் பெயர் சிவா. நான் கடந்த சில நாட்களாக சுந்தர காண்டம் புத்தகம் வாங்குவது குறித்து ஆன்லைனில் தேடினேன் . அப்பொழுது எனக்கு இந்த லிங்க் கிடைத்தது.

  Can you to send these books to me by courier. I hope you could tell about the right books to me.

  I am looking forward for your answer.

  Thank you

 9. ஹலோ சார்

  என் பெயர் லாவண்யா

  நான் ஆன்லையில் சுந்தரகாண்டம் பாராயணம் பற்றி பார்த்தேன்

  அதில் 68 அத்தியாம் 68 நாட்கள் படித்து முடிவில் ராமர் பட்டாப்பிஷ்க்ம்

  படித்து முடிக்க வேண்டும் என்று பார்த்தேன் நானும் படிக்க வேண்டும்

  எனக்கு சுந்தரகாண்டம் புக் வாங்கி அணுப்ப முடியுமா சார்

 10. ஹலோ சார்

  என் பெயர் லாவண்யா

  தொந்தரவுக்கு மன்னிக்கவும் சார் தங்களிடம் சுந்தரகாண்டம் புக்

  அனுப்புமாறு கேட்டு இருந்தேன் சார் ஆது பற்றி தாங்களுக்கு

  நினைவுபடுத்துகிறேன் சார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *