Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, June 14, 2024
Please specify the group
Home > Featured > ஒரு நாள் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா? கடவுளிடம் ஒரு கான்வர்சேஷன்!

ஒரு நாள் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா? கடவுளிடம் ஒரு கான்வர்சேஷன்!

print
ருகி உருகி நான் பிரார்த்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாராளமா …

நான் :  பொறுமையா கோபப்படாம பதில் சொல்வீங்கள்ல?

கடவுள் : சத்தியமா!

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?

கடவுள் : என்ன சொல்றேப்பா நீ?

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்

கடவுள் : ஆமா… அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டே.

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம்… தெரியும்.

நான் : சரி… பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா…. வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல… ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்… தெரியும்.

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு… அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு… கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம்… தெரியும்.

நான் : பேங்க்ல பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம்… தெரியும்.

நான் : அதை பிடிச்சி… இதை பிடிச்சி முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி.  ரிப்பேர் ஆகிவேலை செய்யலே…

இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே… ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?

(கடவுள் பலமா சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து…. பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலைல அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

நான் : (அதிர்ச்சியுடன்) ஓ…

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா… நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.

நான் : (அடக்கத்துடன்) ஓ…

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம்… கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு… யாரும் அதை கவனிக்கலே… அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?

நான் : (கண்கலங்கியபடி) ம்ம்….

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்… அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

நான் : ம்ம்….

கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய்…. ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

நான் : இப்போ புரிகிறது இறைவா.. என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல்  உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கடவுள் : மன்னிப்பு கேட்காதே.. என்னை நம்பு… எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!

நான் : நிச்சயமாக….

கடவுள் : நீ திட்டமிடுவதைவிட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்…

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்.

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!

(அண்மையில் எனக்கு ஃபார்வேர்டிங்கிங்கில் வந்த இந்த அற்புதமான உரையாடலை மொழிபெயர்த்து நம்ம ஊருக்கு ஏற்றார்போல சற்று மாற்றி மெருகேற்றி இங்கு தந்திருக்கிறேன்!)

[END]

22 thoughts on “ஒரு நாள் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா? கடவுளிடம் ஒரு கான்வர்சேஷன்!

 1. அற்புதம் .(சாமி எப்போ கண்ணை திறப்பரோ என சிலர் சொல்வதுண்டு

  சாமி ஒரு நொடி கண்ணை மூடினால் என்னவாகும் என்று தெரியாமல் )

  அவர்கள் எல்லாம் இந்த பதிவை படிக்க வேண்டும் .

  சிவகுமாரன் C V ஆத்ம தர்ஷன சேவா சமிதி

  1. நான் மாங்கு மாங்கு என்று எழுதியதைவிட இரண்டே வரியில் நீங்கள் அளித்த கமெண்ட் தான் உண்மையில் அற்புதம்.

   //சாமி எப்போ கண்ணை திறப்பரோ என சிலர் சொல்வதுண்டு சாமி ஒரு நொடி கண்ணை மூடினால் என்னவாகும் என்று தெரியாமல்//

   What a sentence!

   நன்றி சார்…!

   – சுந்தர்

 2. வாவ்… என்ன ஒரு கான்வெர்செசன் கடவுள் கூடவே… அருமையான மற்றும் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவு… சூப்பர் சுந்தர் அண்ணா …

  -ஜி.உதய்..

 3. இன்பதிற்கும் துன்பத்திற்கும் அனைத்துக்கும் காரணகாரியங்கள் உண்டு .
  எளிமையான உரையாடல்,நாங்களும் முயற்சி செய்யலாமா ???

  எங்களிடத்திலும் பேசுவாரா?

  நல்ல முயற்சி பாராட்டுக்கள் …

  1. நம் எல்லோரிடமும் அவர் பேச தயாராகத் தான் இருக்கிறார். ஆனால் நாம் தான் அவரை உதாசீனப்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன்.
   – சுந்தர்

 4. நாம் கடவுளை நினைக்க மறந்தாலும் கடவுள் என்றுமே நம்மை மறப்பது இல்லை என்பதற்கு இந்த உரையாடல் மிக பெரிய சான்று.

  மனிதன் தான் கஷ்டம் இருக்கும்போது கடவுளை நினைத்து ,சந்தோஷத்தில் கடவுளை மறந்து விடுகிறான் ,எவன் ஒருவன் சந்தோசத்திலும் கடவுளை மறக்காமல் இந்த சந்தோசத்திற்கு நன்றி என்று கடவுளுக்கு நன்றி கூறுகிறானோ அவர்களுக்கு மேலும் மேலும் சந்தோசம் மன நிம்மதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை

 5. நடப்பது எல்லாம் நன்மைக்கே
  அவனன்றி ஓர் அணுவும் அசையாது. எல்லாமே அவர் ஆணை படி தான் நடக்கும். நல்ல உரையாடல். சூப்பர்.

 6. கடவுளிடம், இது தான் உண்மையான மனிதநோடிய உரையாடல்.

 7. வணக்கம் சார், மிகவும் அருமையான பதிவு . நடபதேல்லாம் நன்மைக்கு என்று சொல்ல்வார்கள் . அதை எல்லாரும் தெரிந்து கொண்டால் நன்று . ஜெய் சாய் ராம் .

 8. சார்
  வெரி குட் ஸ்டோரி
  எல்லா காரியத்துக்கும் கண்டிபாக ஒரு கரணம் உண்டு
  நாம்தான் அதை புரிதும்கொள்ள வில்லை
  நமக்கு அது புரிய வில்லை
  புரிந்து விட்டால் ப்ரிசனைகல இல்லை
  செல்வி

 9. யதார்த்தமான உரையாடல். எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியமானது.

  நன்றி
  ப.சங்கரநாராயணன்

 10. சுந்தர்ஜி,

  நிச்சயமான உண்மை. நாம் என்ன வேலை செய்கின்றோம். அவன் ஒரு நிமிடம் கண்ணை மூடினால் அவ்வளவுதான்.

  கடவுளிடம் உரையாடுவது என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயமே. அனால் நாம் எல்லோரும் மகிழ்ச்சியான விஷயங்கள் மட்டுமே விரும்புகின்றோம் .கஷ்டம் வந்தால் அந்த கடவுளை திட்டுகிறோம்.எது வந்தாலும் அவர் அவர் பண்ணிய பாவ புண்ணியமே
  பலன்களாக வருகின்றது. முடிந்த வரை பாவங்கள் செய்யாமல் நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் தினம் தினம் கடவுள் நமக்கு அருள் புரிவார். எது வந்தாலும் ஏற்று கொள்ளும் பக்குவத்தை அந்த பகவான்தான் கொடுக்க வேண்டும். முடியவில்லையே ஏனென்றால் நாமும் சராசரி மனிதர்களாக இருப்பதால் பக்குவப்படவில்லை.

 11. 2009 , ஆகஸ்ட் 22ம் தேதி , இரவு சுமார் 9 மணி அளவில், சென்னை மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலையில் , புல்லட்டில் சென்று கொண்டு இருந்தேன்…எங்கிருந்து வந்தது என்று கூட யோசிக்க கூட முடியவில்லை , அந்த இருட்டில் திடீர் என்று , குறுக்கே ஒரு பெரிய நாய் வந்தது …நாயை காப்பாற்ற வண்டியை நிறுத்த முயற்ச்சித்து கீழ விழுந்தேன் …பலத்த அடி …உயிர் தப்பியது பெரிய விஷயம் … ஒரு சினிமா பார்க்க சென்று கொண்டு இருந்தேன் ….அந்த சினிமா தயாரிப்பாளர் க்கு அடுத்து எனக்கு தான் அந்த சினிமாவால் இழப்பு …மருத்துவ செலவு , ஆபரேஷன் என்று சில லட்சங்கள் செலவாயின … இன்று கூட வேகமாக ஓட இயலாது – மற்றபடி பரவாயில்லை. அம்மா என்னிடம் இதை பற்றி பேசி வருத்தப்பட்ட பொது நான் சொன்னேன் ” அம்மா அன்று சோழிங்கநல்லூர் சிக்னலில் அத்து மீறி ஒரு லாரி வந்து என்னை அடித்திருக்க வேண்டியது …அன்றோடு நான் போயிருப்பேன் …நீ கும்பிட்ட சாமி தான் பைரவரை அனுப்பி என்னை தடுத்து , சிறு இழப்போடு என்னை காப்பாற்றி உள்ளார் ” என்று .

  யோசித்து பார்த்தால் அனைவருக்கும் இப்பொழுது இருக்கும் இடம் தான் சிறந்தது என்று புரியும் ….இறைவன் ப்ளான் என்றுமே அபாரம் தான் !

  1. உங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைப்பது!

   வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் மறுபடியும் வீட்டுக்கு பத்திரமாக வருவோம் என்கிற உத்திரவாதம் எதுவும் இன்று இல்லை.

   அதே போல, தூங்குபவர்கள் அத்தனை பேரும் காலையில் விழிப்பார்கள் என்கிற உத்திரவாதமும் இல்லை.

   ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு போடும் பிச்சை என்பதே உண்மை!

   நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
   பெருமை உடைத்துஇவ் வுலகு.
   (குறள் 336)

   – சுந்தர்

 12. சுந்தர்,
  பதிவு அருமையாக இருக்கிறது. எனக்கும் ஆங்கிலத்தில் வந்தது. ஆனால், தமிழில் அழகாகத் தந்திருக்கிறீர்கள். உங்களது பொறுமையும் உழைப்பும் நல்ல வெற்றியைத் தேடித் தரும்.
  – பி. சுவாமிநாதன்

 13. நாம் கடவுளை நினைக்க மறந்தாலும் அவர் நம்மை கை விடுவதில்லை. நம்பினோர் கைவிடப்படார் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *