Home > 2015 > February

ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

'திருநாகை காரோணம்' என்று தேவார மூவரால் பாடப்பெற்ற தலம் நாகப்பட்டினம், சப்தவிடங்க தலங்களில் ஒன்று. இங்கு இறைவன் பெயர் காயாரோகண சுவாமி. அம்பாள் நீலாயதாட்சி அம்பிகை. இந்நகரின் மையப் பகுதியில், நீலா தெற்கு வீதியில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமான் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி. (மெய்கண்ட வேலாயுதசுவாமி கோவில்.). தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய அழகுமுத்து புலவர் உருவாகக் காரணமான இந்த சன்னதி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. 'குமரகோயில்' என்று

Read More

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

இன்றைய குழந்தைகள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை தெரிந்துகொள்ளாமல் வளர்கிறார்கள். எதை கற்கவேண்டுமோ அதை கடைசி வரை கற்றுக்கொள்ளாமலேயே பள்ளிபடிப்பையும் முடித்துவிடுகிறார்கள். பொதிமாடு போல மூட்டை மூட்டையாக புத்தகங்களை சுமந்து சென்று அவர்கள் கற்கும் கல்வியில் 5% கூட நிஜ வாழ்க்கைக்கு அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை. நமது கல்வி முறை அப்படி. தமிழகம் முழுதும் பள்ளிக் குழந்தைகளின் நிலை இது தான். இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் எத்தனை பேருக்கு

Read More

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

பொள்ளாச்சியை சேர்ந்த 'அருணாச்சல அக்ஷர மணமாலை' என்கிற அமைப்பின் நிறுவனர் நண்பர் பாலசுப்ரமணியன் என்பவர் நேற்றைக்கு நமது வீட்டுக்கு ஒரு பெரிய கூரியர் அனுப்பியிருந்தார். மாலை சென்றபோது பிரித்துப் பார்க்கிறோம்... பகவான் ரமண மகரிஷியின் 135வது ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள 'ரமண திருவிளையாடற் திரட்டு' மற்றும் 'சிவமணியம்' என்கிற இரண்டு விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள். இரண்டு நூலையுமே ஒரு புரட்டு புரட்டியதில், "நிச்சயம் ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம்

Read More

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

நேற்று செவ்வாய்க் கிழமை என்பதால் நேற்றே இதை அளித்திருக்கவேண்டியது. ஆனால் தட்டச்சு செய்து முடிக்க தாமதமாகிவிட்டதால் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். ஆனால் இன்று காலை எதேச்சையாக எப்.எம். வானொலி ஒன்றில் இன்று கார்த்திகை - முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்றார்கள். 'அடி... தூள் அப்போ இன்னைக்கு ஜமாய்த்துவிடலாம்' என்று குஷிமூடில் அலுவலகம் புறப்பட்டு வந்தோம். வந்த இடத்தில் இங்கே வேறு ஒரு முக்கிய பதிவை

Read More

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

எத்தனை அறப்பணிகள் இருந்தாலும் கோ-சம்ரோக்ஷனத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை. எனவே தான் கோ-சம்ரோக்ஷனம் செய்ய கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் விடுவதில்லை. தனிப்பட்ட முறையில் நாம் அவ்வப்போது கோ-சம்ரோக்ஷனம் செய்து வந்தாலும் உங்களுக்கும் அந்த மகத்தான புண்ணியத்தின் பலன் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான் ஒவ்வொரு நாள் கிழமை விசேஷங்களின் போதும் நம் தளம் சார்பாக கோ-சம்ரோக்ஷனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இது தவிர ஒவ்வொரு மாதமும் காசி விஸ்வநாதர்

Read More

இறைவனுக்கு நிழல் தந்த அன்பு – பெரியகோயில் கட்டும்போது நடைபெற்ற உண்மை சம்பவம் !

தஞ்சை பெரியகோயில் பற்றியும் இராஜராஜன் அதை கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றியும் அதன் புவியியல் சிறப்பு அம்சங்கள் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிசம்பர் மாத நடுவில் தஞ்சை பெரியகோயிலுக்கு நாம் சென்று வந்தோம். கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் ஆழ்ந்து அனுபவித்து ரசித்தோம். பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினருடன் சென்றதால் நாம் நினைத்தது போல கோவிலில் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. எனவே மறுநாள் நாம் தனியாக சென்றோம். மிகப் பெரிய நந்தீஸ்வரர் முதல் கோவிலின்

Read More

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81

ஒரு மன்னன் தனது அமைச்சரை அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். ஒரு வீட்டுத் திண்ணையில் அந்த நாட்டு பிரஜை ஒருவன் ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தான். அரசன் அவனை பார்த்துக்கொண்டே சென்றான். மறுநாள் அதே நேரம் அதே இடம். அந்த மனிதன் முதல் நாளைப் போலவே சிந்தனையிலிருப்பதை பார்க்கிறான். "அமைச்சரே, அந்த மனிதனை நேற்றும் பார்த்தேன். இன்றும் பார்க்கிறேன். ஏனோ தெரியவில்லை அவனை பார்த்ததும் அவனுக்கு ஏதேனும் தண்டனை தரவேண்டும் என்று தோன்றுகிறது. அவனை

Read More

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கலியுகத்தில் கண்கண்ட மருந்தாக விளங்குவது ராமநாமம். எங்கும் எப்போதும் இதைச் சொல்லலாம். இதற்கு எந்த நியம நிஷ்டையும் தேவையில்லை. பகல் இரவு வித்தியாசம் இல்லை. ஆண், பெண் குழந்தைகள் பேதம் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம். திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார், அண்ணாமலையார் மீது எந்தளவு பக்தி வைத்திருந்தாரோ அதைவிட அதிகமாக ராமர் மீது வைத்திருந்தார். தன்னை நாடி வருபவர்களிடம் "ராஜாஜி எழுதிய ராமாயணத்தை படியுங்கள். உங்களை எந்த துன்பமும்

Read More

தூங்கிக்கொண்டிருந்தவரிடம் திருவாழ்மார்பன் புரிந்த திருவிளையாடல் – Rightmantra Prayer Club

பக்தர்களுக்காக பகவான் எதையும் மாற்றுவான். நாம் அவன் மீது வைத்துள்ள அன்பு தான் என்றுமே பிரதானமே தவிர, சடங்குகளும் சம்பிரதாயங்களும் அல்ல. இதை பல முறை பல இடங்களில் இறைவன் பல திருவிளையாடல்கள் மூலம் நிரூபித்திருக்கிறான். பரமேஸ்வரன் இது தொடர்பாக நிகழ்த்திய திருவிளையாடல்களை நாம் அறிவோம். ஆனால் பரந்தாமன் நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்றை பார்ப்போம். கேரளத்தில் உள்ள கோவில் நடைமுறைகள் நமது பாரம்பரியத்திலிருந்து மிகவும் வேறுபட்டவை. அங்கு சுத்தத்திற்கு தான் முதலிடம்.

Read More

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மஹா சிவராத்திரி விரதத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் அனுஷ்டித்து வருகிறோம். பரமேஸ்வரனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்துவைக்கிறார் என்பதை அனுபவப்பூர்வமாக நாம் இந்த இடைப்பட்ட காலங்களில் பல முறை உணர்ந்திருக்கிறோம். சிவராத்திரி விரதம் இருப்பதே ஒரு பாக்கியம் தான். எனவே அதன் பலனைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டதே கிடையாது. கூடுமானவரை நம்மால் இயன்ற அளவு சிரத்தையாக அனுஷ்டிக்க

Read More

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

பழனியில் உள்ள நம் வாசகி ஒருவர் நுழைவுத் தேர்வு தொடர்பான புத்தகம் ஒன்றை வாங்க பழைய புத்தக கடைக்கு சென்றபோது அங்கே ஒரு புத்தகத்தை பார்த்திருக்கிறார். அதை நமக்கு அனுப்ப எண்ணி வாங்கியிருக்கிறார். அது நமக்கு அனுப்ப எஸ்.எம்.எஸ். மூலம் நமது முகவரியை  கேட்டபோது, நம் வீட்டு முகவரியை தருவதா அல்லது நம் தளத்தின் புதிய அலுவலக முகவரியை தருவதா என்ற குழப்பத்திலேயே அவருக்கு உரிய பதிலை தர மறந்துவிட்டோம். "இவரை கேட்டுக்கிட்டுருந்தா

Read More

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சென்ற ஜனவரி 18 அன்று போரூர் பாலமுருகன் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. அன்று மாலை வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பர் முத்துக்குமார் அவர்களுடன் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அன்று பிரதோஷம். அந்த ஆலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ள நாம் நீண்ட நாட்களாக நாம் திட்டமிட்டுவந்தோம். அது தொடர்பாக ஆலய நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேச கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது அவரது அறையில் மகா பெரியவாவின் பெரிய படம் ஒன்று இருப்பதை

Read More

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவபெருமான் நமக்கு அருள்புரிகிறாரா இல்லையா, அவர் நம்மை பார்க்கிறாரா இல்லையா, நமது பக்தியை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறாரா இல்லையா, எந்தளவு நம் பக்தி உயர்வானது என்பதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டதே கிடையாது. சிவபெருமானை தொழுவதே மிகப் பெரிய பாக்கியமாக கருதித்தான் நாம் பக்தி செய்து வருகிறோம். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும்

Read More

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்த விரிவான பதிவை முந்தைய ஆண்டுகளிலேயே நாம் அளித்திருந்தாலும் சில புதிய வாசகர்கள் சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது என்று கேட்கிறார்கள். அவர்கள் சௌகரியத்திற்காக இங்கே ஒரு சுருக்கமான விளக்கத்தை தருகிறோம். சிவராத்திரி விரதம் இருக்குமன்று அதாவது இன்று முழுதும் எதுவும் சாப்பிடக்கூடாது. நாள் முழுதும் உபவாசம் இருந்து மனதை சிவனின் மீது வைத்து, இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து சிவாலயங்களில் நடைபெறும்

Read More