Home > 2014 > February

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

நேற்றைய (பிப்ரவரி 27, 2014) சிவராத்திரி பொழுது மிக மிக இனிமையாக மின்னொளி அம்பாள் சமேத ஊன்றீஸ்வரரின் அருகில் நமக்கு கழிந்தது. மிகப் பெரிய சேவைக்கு நம்மை ஆளாக்கினான் இறைவன். அதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். விரிவான பதிவு நாளை இடம்பெறும். வாசகர்கள் பலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். குற்றம் குறைகளை பெரிது படுத்த வேண்டாம். அனுபவங்களை மனதில் கொண்டு அடுத்த ஆண்டு  இன்னும் சிறப்பாக முழுமையாக இருக்கவும்.

Read More

சிவராத்திரி சிறப்பு கூட்டு பிரார்த்தனை & சிவராத்திரி விரதம் – சில தகவல்கள்!

இன்று (பிப்ரவரி 27, வியாழன்) மகா சிவராத்திரி. இன்று இரவு சிவாலயங்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டு நான்கு கால பூஜைகள் நடைபெறும். சென்ற ஆண்டு நாம் அளித்த பதிவிலேயே அனைத்தும் மிக மிக தெளிவாக கூறப்பட்டிருந்தாலும் தற்போது மீண்டும் ஒரு முறை நாம் தொகுத்த தகவல்களை அளிக்கிறோம். இயன்றவற்றை பின்பற்றி அவனருள் பெறுங்கள். சிவராத்திரி விரதத்தை முதல் நாளே (நேற்று முதல்)  தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில்

Read More

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

கடந்த ஞாயிறு பிப்ரவரி 23 அன்று, நமது தளம் சார்பாக பூண்டி மின்னொளி அம்பாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு உழவாரப்பணி மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது உழவாரப்பணிக்கு வழக்கமாக வரும் சில அன்பர்கள் வரவில்லையென்றாலும் வேறு சிலரை இறைவன் அனுப்பி வைத்து பணியை சிறப்பாக நடத்திக்கொண்டான். நாம் திட்டமிட்டபடி, ஒட்டடை அடிப்பது, தரையை பெருக்கி அலம்பி விடுவது, பழுதடைந்த பல்புகளை மாற்றி புதிய பிட்டிங்குகளை நிறுவுவது,

Read More

மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

வெறும் படிப்பும், உத்தியோகமும், செல்வமும், தோற்றமும், ஒரு ஆணையோ பெண்ணையோ முழுமையடைச் செய்வதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஒருவரின் படிப்பை மதிப்பவர்கள் அவரின் உத்தியோகத்தை மதிக்கமாட்டார்கள். உத்தியோகத்தை மதிப்பவர்கள் படிப்பை மதிக்கமாட்டார்கள். சரி இரண்டையுமே மதிப்பவர்கள் என்றால் தோற்றத்தை மதிக்கமாட்டார்கள். பணத்தை மதிப்பவர்கள் மற்ற எதையுமே மதிக்கமாட்டார்கள். இந்த மதிப்பீடு நாம் சந்திக்கும் மனிதர்களிடையே கலந்து தான் இருக்கும். எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. காரணம் எல்லாருக்கும்

Read More

எளியோர்க்கு எளியோன் & தலைவர்க்கெல்லாம் தலைவன்! – சிவராத்திரி SPL (4)

தெய்வங்களில் மிக மிக எளிமையானவன் அதே சமயம் மிக மிக வலிமையானவன் யார் தெரியுமா? சாட்சாத் சிவபெருமான் தான். உள்ளன்போடு "ஓம் நம சிவாய" என்று நீங்கள் உருகி கூப்பிட்டாலே ஓடோடி வந்து ஏவல் செய்ய காத்திருப்பான். அவன் அருளை பெற நீங்கள் நாயன்மார்களை போல இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. 'அன்பே சிவம்' என்பதை உணர்ந்த மனிதர்களாக இருந்தால் போதும். நம்மை பொருத்தவரை கடந்த சில மாதங்களாக அவர் மீது ஒரு

Read More

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ? MONDAY MORNING SPL 33

சுமார் 50 பேர் ஒரு செமினாரில் கலந்துகொள்ள சென்றிருந்தனர். அதில் சிறப்புரையாற்ற பேச்சாளர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பலர் தங்கள் கவலைகளை பிரச்னைகளை சோகங்களை பகிர்ந்துகொண்டனர். அவர்களது தேவை என்ன மற்றும் அவர்களின் குறை என்ன என்பதை பேச்சாளர் தெளிவாக புரிந்துகொண்டார். அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தவர் இடையில் திடீரென்று எல்லோருக்கும் தலா ஒரு ஒரு பலூனை கொடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு பலூனிலும் அவரவர் பெயரை எழுதச் சொன்னார். பெயர்கள்

Read More

ஐந்தறிவும் ஆறறிவும்!

இந்த படத்தில் உள்ள ரிஷபத்தை கடந்த வாரம் மாசிமக தீர்த்தவாரியை காண கடற்கரைக்கு சென்றபோது கண்டோம். மிக மிக அடக்கத்தோடு தெய்வாம்சம் பொருந்தி காணப்பட்ட இந்த காளை நம்மை சுண்டி இழுத்தது. சற்று பிரார்த்தனை செய்து, வணங்கிவிட்டு புகைப்படம் எடுத்தோம்.. இதை தளத்தில் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆசை. சும்மா வெறுமனே அளிக்காமல் நம்முடைய கவிதை (?!) ஒன்றையும் சேர்த்து அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. (தளத்திற்கு வருவதால் இந்த தண்டனையை

Read More

எது உண்மையான பக்தி ? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

அவர் ஒரு பிரபல யோகி. கடை வீதியின் வழியே அவர் நடந்து செல்லும்போது, வணிகர்களை நலம் விசாரித்தபடி செல்வார். அவர் தங்களுக்கு மிகவும் வேண்டியவர் என்று அந்த ஊர் பெரிய மனிதர்கள் ஆளாளுக்கு சொல்லி வந்தனர். இதில், ஒரு பலகாரக் கடை வைத்திருக்கும் வணிகன் ஒரு படி மேலே சென்று, "நீங்கள் எல்லாம் என்ன ... சும்மா... நான் நினைத்தால் அவரை என் வீட்டிற்க்கே விருந்து சாப்பிட வரவழைக்க முடியும்!" என்று

Read More

புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?

பூஜையின் போது கோவிலில் மணியடிப்பது போய் தற்போது மின்சார மங்கல வாத்தியம் என்ற பெயரில், மனிதர்கள் செய்ய வேண்டிய ஒரு அரும்பணியை ஒரு இயந்திரத்தை வைத்து, செய்து வருகிறோம். அதே போல, அபிஷேக ஆராதனையின் போது வாசிக்கப்படும் நாதஸ்வரம் மற்றும் தவில் கூட ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த அச்சம் யதார்த்தமானதே. பல தலைமுறைகளாக திருக்கோவில்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்துவந்தவர்கள் தற்போது

Read More

இறைவனை குறைத்து மதிப்பிடுபவர்கள் கவனத்திற்கு..! சிவராத்திரி SPL (3)

சென்ற டிசம்பர் மாதம் நம் தளத்தின் சார்பாக பாரதி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது நினைவிருக்கலாம். பொதுவாக இது போன்ற விழாக்களில் நாம் என்ன பேசவேண்டும் என்று ஓரளவு முன்கூட்டியே தயார் செய்துகொள்வோம். ஆனால் பாரதி விழாவை பொருத்தவரை ஒய்வு ஒழிச்சலின்றி அடுத்தடுத்த பணிகள், எதிர்பாராத சோதனைகள் என்று நாம் அந்த விழாவை எதிர்கொண்டமையால் எதையும் தயார் செய்துகொள்ள நேரமிருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் விழாவில் நாம் உரையாற்றும்போது, இடையே

Read More

பலத்த காவலை மீறி கோட்டையில் இருந்து தப்பிய பெண் – சத்ரபதி சிவாஜி செய்தது என்ன? MUST READ

நீதி மற்றும் நேர்மையுடன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்து மக்களை மிக நல்ல முறையில் பரிபாலனம் செய்த எத்தனையோ மன்னர்களை, சக்கரவர்த்திகளை நம் நாடு கண்டிருக்கிறது. அப்படி அனைவரும் போற்றும் வண்ணம் பொற்கால ஆட்சி புரிந்தவர்களுள் ஒருவர் தான் மராட்டியம் கண்ட மாவீரன் சத்ரபதி சிவாஜி. இன்று அவரது பிறந்த நாள். (பிப்ரவரி 19, 1627). சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை பற்றி நீங்கள் பல்வேறு செய்திகளை படித்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். சிவாஜி என்றுமே தர்மத்தின் பாதையிலேயே

Read More

துறவிக்கு கிடைத்த நரகம்! ராமகிருஷ்ண பரமஹம்சர் B’DAY SPL

சித்துவேலைகளை காட்டியும் மந்திர தந்திரங்கள் செய்துமே ஆன்மீகத்தின் பால் மக்களை ஈர்க்க முடியும் என்பதை உடைத்து, எளிமையான உபதேசங்கள் மூலமும் அவர்களை ஈர்க்கமுடியும் என்பதை நிரூபித்தவர் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர். நமது ஹிந்து மதத்தின் ஜீவநாடியே இறைவனை உணர்தலும் தன்னலமற்ற சேவையும் தான். தன்னை நாடி வருபவர்களிடம் அது பற்றி எடுத்துக்கூறி மனிதர்களை புனிதர்களாக மாற்றியவர் ராமகிருஷ்ணர். வேத உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள அரிய கருத்துக்களை பாமரருக்கும் புரியும் வண்ணம் சிறு

Read More

தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

நமது அடுத்த உழவாரப்பணி நடைபெறவிருக்கும் தலம் பல பெருமைகள் வாய்ந்தது. தஞ்சை மாவட்டத்தில் சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்கள் இருப்பது போல திருவள்ளூர் மாவட்டத்திலும் பஞ்ச ஆரண்ய தலங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது திருவெண்பாக்கம் என்று அழைக்கப்படும் இந்த தலம். ஒரு காலத்தில் இது இலந்தைக் காடாக இருந்தது. தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டு  தலங்களில் 17 வது தலம் இது. இந்த மாதம் உழவாரப்பணியை மேற்கொள்ள விரும்பியபோது சிவராத்திரியை முன்னிட்டு

Read More

கனவில் வந்த கடவுள் – MONDAY MORNING SPL 32

அந்த இளைஞன் மிகுந்த கடவுள் பக்தி மிக்கவன். நல்ல பரோபகாரி. இயன்றவரை பிறருக்கு உதவி செய்பவன். ஆகையால் கடவுளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் பாவம் எண்ணற்ற பிரச்னைகள் அவனை சூழ்ந்திருந்தது. இருப்பினும் அவனது கடவுள் நம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையவில்லை. அவரை வணங்குவதையும் அவன் நிறுத்தவில்லை. சோதனையிலும் தொடர்ந்த அவனது பக்தியை கண்டு மனமிரங்கிய கடவுள், அவனுக்கு திருவருள் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவனது கனவில் ஒரு நாள் தோன்றிய

Read More