Home > 2016 > May

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

ஒரு செல்வந்தன் ஒரு முறை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது சாப்பிட்டே பல நாட்கள் ஆனது போல தோற்றமளித்த ஒரு பிச்சைக்காரனை பார்த்தான். அவனை பரிதாபத்துடன் பார்த்தவன், "பார்க்க வாட்டசாட்டமே இருக்கிறாய்... நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்?" என்று கேட்டான். "சார்... எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள்

Read More

எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு? – Rightmantra Prayer Club

இந்த கதையை நாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருக்கிறோம். எங்கு என்று நினைவில் இல்லை. சமீபத்தில் நமக்கு வாட்ஸ்ஆப்பில் வந்தது. பொதுவாக நம் கதைதான் "இதோ பாருங்க நல்லாயிருகுல்ல..." என்று நமக்கே வாட்ஸ்ஆப்பில் வரும். அதிசயமாக வேறொருவர் கதை வந்தது. இக்கதையில் கூறப்படும் கருத்து அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று. பதிவின் இறுதியில் இந்த பதிவை முதன்முதலில் பகிர்ந்தவர் கூறியிருப்பதை கவனியுங்கள். நம் கருத்தும் அதுவே தான். * பதிவுக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய விஷயம்

Read More

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

பல நதிகள் எப்படி இறுதியில் சமுத்திரத்தை அடைகிறதோ அதே போல இறைவனை அடைவதற்கு பல வழிகள் உண்டு. ஒவ்வொரு ஞானியரும் ஒவ்வொரு மார்க்கத்தை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அவர்களுள் ரமணர் பின்பற்றியது 'ஆன்ம விசாரம்'. ஆன்மவிசாரம் அத்தனை எளிதல்ல. ஆனால் மிக மிக கடினமான கருத்துக்களைகூட மிக மிக அற்புதமாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் அன்றாட ஆஸ்ரம நடவடிக்கைகளை கொண்டே பகவான் ரமணர் புரியவைத்தார். அது தான் ரமணரின் சிறப்பு! கடும்கோடையில்

Read More

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

சிவபுண்ணியம் தொடரில் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் சம்பவம் விராட தேசத்தில் நடைபெற்றது. விராட தேசம் பற்றிய குறிப்புக்கள் மகாபாரதத்தில் நிறைய இடங்களில் காணப்படுகிறது. (அநேகமாக இன்றைய ஜார்கண்ட் மாநிலமாக இருக்கலாம்). இப்போது நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் போல, அந்தக் காலத்தில் (பல ஆயிரம் வருடங்கள் முன்பு) மொத்த 56 தேசங்கள் இருந்தன. இப்போதுள்ள 35 மாநிலங்களும் இந்த 56 தேசத்தில் அடங்கிவிடும். விராட தேசத்தில் சீமந்தபுரம் என்னும் நகரம்

Read More

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை!

வாசகர்களுக்கு வணக்கம். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல, சம்பந்தர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க தற்போது மீண்டும் ஆச்சாள்புரம் (திருநல்லூர் பெருமணம்) புறப்படுகிறோம். இரவு அங்கிருந்து தஞ்சை ஒரத்தநாடு பயணம். ஒரு நாள் முழுக்க அவர்களுடன் இருந்து சம்பந்தர் திருவிழாவை கண்டுரசித்து கவர் செய்யவிருக்கிறோம். புதன்கிழமை காலை தான் சென்னை திரும்புகிறோம். ஈசனருளால் திகட்ட திகட்ட ஒரு மாபெரும் விருந்து உங்களுக்கு அடுத்து வரும் நாட்களில் காத்திருக்கிறது. இந்தப் பதிவு மிக மிக

Read More

பெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை!

இன்று மகா பெரியவா ஜயந்தி. நாட்டின் பல இடங்களில் வெகு விமரிசையாக அது தொடர்பான உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னையில் மட்டும் நான்கைந்து இடங்களில் விமரிசையாக பெரியவா ஜயந்தி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ப்ரீதியான வேத பாராயணம், கோ- பூஜை, விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், ஹோமங்கள், அன்னதானம் போன்றவற்றோடு பல அமைப்புக்கள் இதை விமரிசையாக கொண்டாடிவருகிறார்கள். நாம் ஏதாவது ஒரு நிகழ்வில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று நினைத்தோம்.

Read More

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

யார் பணக்காரன்? யார் ஏழை? - பதிவு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நல்ல கருத்து அனைவருக்கும் சென்று சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்த பதிவின் தொடர்ச்சியாக நாம் அளிக்கவிருக்கும் பதிவுக்காக அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று தெரியும். அது சற்று ஹெவியான பதிவு. எனவே அதற்கு முன்பாக ஒரு மென்மையான பதிவை தர விரும்பி இந்தப் பதிவை அளிக்கிறோம். இதைப் படியுங்கள். ரசியுங்கள். அடுத்து நாம் சொன்ன அந்தப்

Read More

யார் பணக்காரன்? யார் ஏழை?

யார் பணக்காரன்? யார் ஏழை? இதென்ன கேள்வி... பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன். கஷ்டப்படுபவன் ஏழை. அது தானே உங்கள் பதில்? இந்த பதில் சரியா? சம்பவம் 1 ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு செல்கிறாள் புடவை எடுக்க. "எனக்கு கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள். விலை மலிவாக இருக்கட்டும். என் மகனுக்கு திருமணம். என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும்..." என்கிறாள். சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில் மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து பணத்தை கட்டிவிட்டு

Read More

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

சிவபுண்ணியக் கதைகளை நீங்கள் படிக்கும்போது அவை சற்று விசித்திரமாக உங்களுக்கு தோன்றலாம். மிக மிகக் கொடிய பாபங்கள் கூட, சிவபுண்ணியம் என்னும் நெருப்பு படும்போது பொசுங்கி காணாமல் போய்விடுகின்றன. மாபாபிகள் என்று தூஷிக்கப்படும் துராத்மாக்கள் கூட, அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த சிறு சிவபுண்ணியத்தின் மகிமையால் அனைவராலும் வணங்கப்படும் நிலைக்கு உயர்வது இக்கதைகளில் சகஜம். இப்போதெல்லாம் ஹேண்ட்வாஷ் பிரபலமாகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன் அவற்றை கொண்டு கையை அலம்பிக்கொண்டால், நோய்நொடிகள் அண்டாது என்று

Read More

வாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை!

நாளை சட்டப்பேரவை தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலைவிதியை நாட்டின் எதிர்காலத்தை நாமே நிர்ணயம் செய்யும் நாள். வாக்களிப்பது நம் கடமையா என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட. 'தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்' என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே? யாரோ

Read More

சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்! MUST READ

மொத்த குடும்பமும் ஏன் இந்த பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் மட்டும் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருந்துவிட்டால் போதும் அவள் எதையும் எதிர்கொண்டு வென்றுவிடுவாள். அதனால் தான் BETTER HALF அதாவது 'வாழ்க்கைத் துணை' என்று குறிப்பிடுகிறார்கள். பணமும் புகழும் இருந்தால் போதும் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இருக்காது, இல்லறம் நன்றாக நடக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. பிரபல ஹாலிவுட் நட்சத்திர தம்பதிகள் பிராட் பிட் -

Read More

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீராமநவமி சமயத்தின்போது, 'வைதேகி' என்கிற கன்று பிறந்ததை பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா? அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேஷ கோ-சம்ரட்சணம் பற்றிய பதிவு இது. காசி-விஸ்வநாதர் கோவிலில் பிரதிமாதம் நாம் கோ சம்ரட்சணம் செய்துவந்தாலும், முக்கிய பண்டிகை நாட்கள், விஷேட நாள் கிழமைகள், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அங்கு கோ-சாலைப் பசுக்கள் கன்று ஈனும் தருணங்கள் ஆகியவற்றின்

Read More

ஆதிசங்கரரின் ஜன்ம பூமி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? – காலடி பயணம் (6)

இன்று ஆதிசங்கர ஜயந்தி. பாரதத்தில் ஷண்மதங்களை ஸ்தாபித்து நம் இந்து தர்மத்திற்கு புத்துயிர் ஊட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர். ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் காலடியில் அவதரித்தாலும், அவரது ஜன்ம பூமி (பிறந்த மனை) சரியாக அங்கு எந்த இடம் என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இன்று காலடியில் சங்கரர் அவதரித்த இடத்தில் உள்ள கோவில் 1910 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் பின்னே பல சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள உள்ளன. (* இந்த பதிவில் உள்ள

Read More

உடையவரின் அடியாருக்கு அரங்கன் செய்த ஏவல் – ராமானுஜர் ஜயந்தி SPL

ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரின் திரு அவதாரத்தால் 'சைவம்' எப்படி புத்துயிர் பெற்று தழைத்ததோ அதே போன்று பத்தாம் நூற்றாண்டில் ஸ்ரீமத் ராமனுஜரின் அவதாரத்தால் வைணவம் புத்துயிர் பெற்றது. இன்று சித்திரை திருவாதிரை. ராமனுஜரின் ஜயந்தி திருநாள்.  இன்று ஆயிரமாவது ஜயந்தித் திருநாள் என்பது தான் விசேஷமே! ராமானுஜர் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த ஒரு ஆளுமை. பன்மொழிப் புலமை மிக்கவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், உரிமை, சமத்துவம், சாதிமத பேதமில்லாமல் இருக்க

Read More